எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு மாணவர்சேர்க்கைக்கான முதல்நாள்
கலந்தாய்வில் தரவரிசைப் பட்டியலில் முதல் 26 இடங்களை பிடித்தவர்கள்
பங்கேற்கவில்லை. அடுத்த இடங்களில் இருந்த 10 மாணவர்கள் சென்னை மருத்துவக்
கல்லூரியை தேர்வு செய்தனர்.
யுனைடெட் இந்தியா மற்றும் ஓரியண்டல் இன்சூரன்ஸ் ஆகிய நிறுவனங்களில் காலியாக
உள்ள 1500 உதவியாளர் பணியிடங்களுக்கான போட்டி தேர்வுகளுக்கு சென்னையில்
நடக்க உள்ள இலவச பயிற்சி வகுப்புகளில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம்
மாவட்டங்களை சேர்ந்தோர் பங்கேற்கலாம்.
புதிய பாடத்திட்ட தயாரிப்புடன், ஆசிரியர்களுக் கான கற்பித்தல்
முறையை மாற்றவும், அவர்க ளின் பயிற்சிக்கு, புதிய விதிகள் அடங்கிய
புத்தகம் தயாரிக்கவும், பள்ளிக்கல்வித் துறை முடிவு செய்துள்ளது.
பான்' எனப்படும் வருமான வரி நிரந்தர எண்ணுடன், ஆதார் எண்ணை இணைக்க, ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்ட, வரும், 31ம் தேதி வரையிலான காலக்கெடு நீட்டிக்கப்படாது என, ஆதார் ஆணையம் தெரிவித்துள்ளது.
சென்னை: தரவரிசை பட்டியலில் முதல், 26 இடங்களை பெற்றவர்கள், எம்.பி.பி.எஸ்., பொது பிரிவினருக்கான கவுன்சிலிங்கில் பங்கேற்கவில்லை.
அடுத்த இடங்களில் வந்த, 10 பேர், சென்னை அரசு மருத்துவ கல்லுாரியை தேர்வு
செய்தனர்.
தமிழகத்தில் அனைத்து பள்ளிகளிலும் பிளஸ் 1,பிளஸ் 2 மாணவர் சேர்க்கையில்
எஸ்சி, எஸ்டி மாணவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக தமிழக அரசு
1990-ல் பிறப்பித்த அரசாணையை தீவிரமாக அமல்படுத்த வேண்டும் என உயர்
நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருப்பூர்: யூடியூப் இணையதளத்தில் ஒரே ஒரு வீடியோ அப்லோட் செய்த தமிழக மாணவர் ஒருவர் ஆறு மாதங்களில் ரூ.6.5 லட்சம் சம்பாதித்துள்ளார் என்றால் நம்ப முடிகிறதா?
இந்திய ரயில்வேயில் 2017-18 ஆம் ஆண்டுக்கு நிரப்பப்பட உள்ள 19,952 காவலர்கள் (Constable) பணியிடங்களுக்கான அறிவிப்பை
ரயில்வே பாதுகாப்புப் படை (RPF) விரைவில் வெளியிடப்பட உள்ளது.
தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள
அறிக்கை: 2012ல் வெளியிடப்பட்ட 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசு
பள்ளிகளுக்கான ஐசிடி எனப்படும் ஒருங்கிணைந்த கணினி அறிவியல் பாடத்திட்டம்
தற்போது 1,000 பள்ளிகளுக்கு மட்டும் என வரைவு செய்யப்பட்டுள்ளது.
பிளஸ் 1 மாதிரி வினாத்தாளில், 10 மதிப்பெண் போன்ற பெரிய வினாக்கள்
முற்றிலும் நீக்கப் பட்டுள்ளன. கம்ப்யூட்டர் சயின்ஸ், சமஸ் கிருதம் போன்ற
பாடங்களுக்கு மாதிரி வினா வெளியிடப்படவில்லை.
இந்திய அரசியல் சாசனத்தின்படி தனிநபர் சுதந்திரம் அடிப்படை உரிமையே என ஆதார் வழக்கில் உச்சநீதிமன்ற 9 நீதிபதிகள் கொண்ட அமர்வு இன்று (ஆகஸ்ட்,24) தீர்ப்பு வழங்கியுள்ளது.
எம்பிபிஎஸ் எனப்படும் இளநிலை மருத்துவப் படிப்புகளில் மாணவர்களை
சேர்ப்பதற்கான மருத்துவக் கலந்தாய்வு சென்னை ஓமந்தூரார் அரசு
மருத்துவமனையில் இன்று காலை தொடங்கியது.
கல்வி, வேலைவாய்ப்புக்கான இடஒதுக்கீட்டு சலுகையை பெறுவதற்கு,
பிற்படுத்தப்பட்டோரின் வருமான உச்சவரம்பை ரூ.8 லட்சமாக உயர்த்த மத்திய
மந்திரிசபை ஒப்புதல் வழங்கியது.