முதல்-அமைச்சர் ஜெயலலிதா மறைவை யொட்டி
அவருக்கு நேற்று தமிழ்நாடு முழுவதும் அனைத்து பள்ளிகளிலும் மாணவ-மாணவிகள்
பிரார்த்தனை நேரத்தில் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினார்கள்.
மக்கள் நியாயமாக சம்பாதித்த பணத்தை எடுக்கும் விதமாக வாரம் ரூ.24,000 வரை எடுக்கும் வாக்குறுதியை காப்பாற்றுமாறு உச்ச நீதிமன்றம் மத்திய அரசுக்கு அறிவுறுத்தியுள்ளது.
உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு தொடர்பான வழக்கு:
--------------------------------------------
உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் பதவி உயர்வு தொடர்பான வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதியரசர் திரு. சத்தியநாராயணன் அவர்களின் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
முதலமைச்சர் ஜெயலலிதா உடல் நலம் பாதிக்கப்பட்டு கடந்த செப்டம்பர் மாதம் 22
ம் தேதி சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிந்த நிலையில்,
சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.
ரொக்கப் பணமாக இன்றி, டிஜிட்டல் முறையில் (டெபிட்-கிரெடிட்
கார்டுகள், ஆன்லைன், இ-வாலட் மூலமான பரிவர்த்தனை) பணம் செலுத்தும்
பொதுமக்களுக்கு பல்வேறு சலுகைகளை மத்திய அரசு அறிவித்துள்ளது.
குறைந்த மாதம் ஊதியம் பெறுபவர்களுக்கு இ.பி.எஃப். எனப்படும்
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி கட்டாயமில்லை என்ற அதிரடியான உத்தரவை
மத்திய அரசு பிறப்பித்துள்ளது.
குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையத்தின் தலைவராக முன்னாள் துணைவேந்தர்
கல்யாணி மதிவாணனை நியமித்ததை மறுபரிசீலனை செய்து புதிய தலைவரை நியமிக்க
தமிழக அரசுக்கு 2 வார அவகாசம் வழங்கி சென்னை ஐகோர்ட்டு
உத்தரவிட்டுள்ளது.குழந்தைகள் உரிமை
‘செய்தித் தாள்களில், உணவுகளை, ‘பேக்’ செய்வதால் ஏற்படும் ஆரோக்கிய
பாதிப்பு குறித்து, மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்’ என,
இந்திய உணவு தரக் கட்டுப்பாட்டு அமைப்பு, அனைத்து மாநிலங்களின் உணவு
பாதுகாப்பு அமைப்புகளுக்கு கடிதம் எழுதியுள்ளது.
ஒரு நாளில் எனக்கு 24 மணி நேரம் பற்றாக்குறையாக உள்ளது. இன்னும் சில மணி
நேரம் இருந்தால் நிறைய வேலைகளைச் செய்து சாதனை புரிவேன்’ என்று
சொல்பவர்களுக்கு எல்லாம் நற்செய்தி காத்துக்கொண்டிருக்கிறது.
நாட்டில் இன்னும் போதிய பணப்புழக்கம் இல்லாமல் மக்கள் அவதிபட்டு
வருகின்றனர். இந்நிலையில், வங்கிகளுக்கு தொடர்ந்து மூன்று நாட்கள் விடுமுறை
அளிக்கப்படுவதால், மக்கள் இன்னும் சிரமத்தை அனுபவிக்க நேரிடும்.
ரூ.2000 வரையிலான வர்த்தக நடவடிக்கைகளுக்கு டெபிட்/கிரெடிட்
கார்டுகளை பயன்படுத்தி பணம் செலுத்தினால் சேவை வரி கிடையாது என்ற
அறிவிக்கையை அருண் ஜேட்லிநாடாளுமன்றத்தில் விரைவில் தாக்கல்
செய்யவுள்ளார்.