பகுதி நேர சிறப்பு ஆசிரியர்கள் 12,000 பேருக்கு சம்பள உயர்வு மற்றும் பணி நிரந்தரம் செய்யும் தீர்மானம் குறித்து விரைவில் நடைபெறவுள்ள சட்டப் பேரவைக் கூட்டத்தொடரில் முடிவெடுக்கப்படும் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
'ஓராண்டுக்கு மேல் பிறப்பு, இறப்புக்களை பதிவு செய்யாவிட்டாலும், அதற்கான
சான்றிதழ் பெற, நீதிமன்றம் செல்லாமல், கோட்டாட்சியர்களான,
ஆர்.டி.ஓ.,க்களிடம் விண்ணப்பிக்கலாம்' என, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
மத்திய
அரசின் 7-வது ஊதியக்குழு பரிந்துரைகள் தொடர்பாக தமிழக அரசு ஊழியர்
சங்கங்களுடன் அலுவலர் குழுவின் கருத்து கேட்பு கூட்டம் தொடங்கியது. ஜூன்
இறுதியில் அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்யப்படுகிறது.
அனுமதியில்லாத மனைப்பிரிவுகளை
வரைமுறைபடுத்த, புதிய இணையதள வசதியை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என
சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் (சிஎம்டிஏ) தெரிவித்துள்ளது.
கரூரில் மே 31-ம் தேதி மாரியம்மன் கோவில் திருவிழா நடைபெறுவதால் அந்நாளில் கரூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.