கட்டாய கல்வி உரிமை சட்டத்தின், 'ஆல் பாஸ்' திட்டத்தில் மாற்றம் செய்யப்பட உள்ளது. இதுகுறித்த அறிக்கையை, ஒரு மாதத்திற்குள் அனுப்பும்படி, மாநிலங்களுக்கு, மத்திய அரசு கெடு விதித்துள்ளது.
Half Yearly Exam 2024
Latest Updates
'நேதாஜி, விவேகானந்தர் பாடங்கள் பாட புத்தகத்தில் குறைத்தது ஏன்?'
'பாடப் புத்தகங்களில், சுவாமி விவேகானந்தர், நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் ஆகியோர் பற்றிய பாடங்களை குறைத்தது ஏன்' என, தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சிலான, என்.சி.இ.ஆர்.டி.,யிடம், மத்திய தகவல் கமிஷன் கேட்டுள்ளது.
டி.என்.பி.எஸ்.சி., தேர்வு விரைவில் அட்டவணை
'ஆண்டு தேர்வு அட்டவணை ஒரு வாரத்தில் வெளியாகும்' என, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., தெரிவித்துள்ளது. தமிழக அரசுத் துறையில் காலியாக உள்ள, 1947, 'குரூப் 2 - ஏ' இடங்களுக்கான தேர்வு, தமிழகம் முழுவதும், 2,087 மையங்களில் நேற்று நடந்தது.
வேலைக்கு தகுதியில்லாத இன்ஜினியர்கள் ஆய்வில் அதிர்ச்சி தகவல்
இந்தியாவில் உள்ள இன்ஜினியரிங் பட்டதாரிகளில், 80 சதவீதம் பேர், திறமை குறைவானவர்களாக உள்ளதாகவும், அதனால், அவர்களை பணியில்அமர்த்த முடியாத நிலை உள்ளதாகவும், ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
சத்துணவு சாப்பிடும் குழந்தைகள்கணக்கெடுக்க அரசு உத்தரவு
பள்ளிகளில் சத்துணவு சாப்பிடும் குழந்தைகள் விவரத்தை சேகரித்து அனுப்புமாறு, மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. நடப்பு, 2015- - 16ம் கல்வியாண்டில் அரசு பள்ளி கள், அரசு உதவி பெறும் பள்ளிகள், நகராட்சி, மாநகராட்சி பள்ளிகள் மற்றும் ஊராட்சி ஒன்றிய பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை சத்துணவு சாப்பிடும் மாணவ, மாணவியர் விவரத்தை சேகரித்து அனுப்ப, தொடக்கக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
பகுதிநேர ஆசிரியர்களுக்கு சிக்கல்
பகுதிநேர பணியிடத்தை குறைக்கும் நடவடிக்கையில், கல்வித்துறை இறங்கியுள்ளதால், ஆசிரியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். தமிழகம் முழுவதும் உள்ள தொடக்க, நடுநிலை, உயர்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு ஓவியம், இசை, தையல், தொழிற்கல்வி, கம்ப்யூட்டர் பயிற்சி கற்றுத்தர, 16 ஆயிரத்து, 549 பகுதிநேர சிறப்பு ஆசிரியர்கள், 2012ல் நியமிக்கப்பட்டனர்.
வெளிநாடு செல்ல அனுமதி அவசியம்:தொடக்கக்கல்வி இயக்குனர் உத்தரவு
'அரசு பள்ளி ஆசிரியர்கள் வெளிநாடுகளுக்கு செல்ல, இயக்குனரின் அனுமதியை பெற வேண்டும்' என, தொடக்கக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.தமிழகத்தில் அரசு பள்ளி ஆசிரியர்கள் பாஸ்போர்ட் பெறவும், புதுப்பிக்கவும் புதிய நடைமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. இதன்படி, பாஸ்போர்ட் அலுவலகத்துக்கு விண்ணப்பங்களை அனுப்பும் முன், தகவல் படிவத்தை நிரப்பி, உயர் அலுவலர்களுக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
இன்ஜி., படிக்க புதிய திறன் தேர்வு;மத்திய அரசு அடுத்த அதிரடி
தேசிய அளவில், ஐ.ஐ.டி., போன்ற கல்வி நிறுவனங்களில் சேர, அடுத்த ஆண்டு முதல், புதிதாக தேசிய திறன் தகுதி தேர்வு அமலாக உள்ளது.தமிழகத்தில், பிளஸ் 2 முடித்த மாணவர்கள், அண்ணா பல்கலைக்குட்பட்ட இன்ஜி., கல்லுாரிகள் மற்றும் சில நிகர்நிலை பல்கலைகளில் சேர, நுழைவுத்தேர்வு எழுத வேண்டியதில்லை. ஆனால், மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களான. ஐ.ஐ.டி., - ஐ.ஐ.எம்., - ஐ.எம்.எஸ்., - ஐ.ஐ.ஐ.டி.,- என்.ஐ.டி., போன்றவற்றில் சேர, ஜே.இ.இ., எனப்படும் ஒருங்கிணைந்த நுழைவு தேர்வு எழுத வேண்டும்.
குறுஞ்செய்தியில் வாக்காளர் எண்ணைப் பதிவு செய்யுங்கள்
செல்லிடப்பேசி குறுஞ்செய்தி மூலமாக வாக்காளர் எண்ணைப் பதிவு செய்தால், வாக்குச் சாவடி உள்ளிட்ட அனைத்து விவரங்களும் அவ்வப்போது அனுப்பப்படும் என்று தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்தார். இதுகுறித்து, சனிக்கிழமை அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:-
10ம் வகுப்பு தேர்வு ரூ.115 கட்டணம்
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும், தனியார் பள்ளி மாணவர்களுக்கு, 115 ரூபாய் தேர்வு கட்டணம் வசூலிக்க, தேர்வுத் துறை இயக்குனர் வசுந்தரா தேவி உத்தரவிட்டுள்ளார். அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும், உயர் பிரிவு மாணவர்கள் தவிர, மற்றவர்களுக்கு தேர்வு கட்டணத்தில் விலக்கு அளிக்கப்படுகிறது.
அங்கன்வாடி பணியாளர் பணி விண்ணப்பங்கள் வரவேற்பு
அங்கன்வாடி மற்றும் குழந்தைகள் காப்பகப் பணியாளர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப் படுகின்றன.இதுகுறித்து அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:
குரூப் 2ஏ தேர்வு: தமிழகம் முழுவதும் இன்று நடக்கிறது
தமிழகம் முழுவதும் குரூப் 2ஏ தேர்வு ஞாயிற்றுக்கிழமை (ஜன. 24) நடைபெறுகிறது. இது குறித்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய அதிகாரிகள் வெளியிட்ட தகவல்:
குருப் 2 A தேர்வு எழுதும் நண்பர்களுக்கான கடைசி நேர அறிவுரைகள்
தேர்வு எழுதும்போது செய்யகூடாதவை ::
1. அவசரபட்டு தெரிந்த வினாவிற்கு தவறான விடையளிக்க வேண்டாம். கேள்வியை ஒருமுறைக்கு இருமுறை தெளிவாக படித்துவிட்டு விடையளிக்கவும். இதுதான் அனைவரும் செய்யும் பொதுவான பெரிய தவறு.
பிறகு வருத்தபட்டு பயனில்லை. அந்த ஒரு மதிப்பெண் கூட உங்கள் வாழ்க்கையை தீர்மானிக்கலாம்.
அரசு பணியில் உள்ளவர்கள் Passport அலுவலகத்திற்கு விண்ணப்பம் அனுப்புவதற்கு முன்பே அவரவர் appointment authority க்கு மேற்காணும் இணைப்பு படிவத்தை அனுப்பிவிட வேண்டும்
அரசு பணியில் உள்ளவர்கள் Passport அலுவலகத்திற்கு விண்ணப்பம் அனுப்புவதற்கு முன்பே அவரவர் appointmentauthority க்கு மேற்காணும் இணைப்பு படிவத்தை அனுப்பிவிட வேண்டும்.அதன் அசல் கடிதம் ஒன்றை (செராக்ஸ் கூடாது) passport அலுவலகம் செல்லும் போது அங்கு கொடுக்க வேண்டும். இதில் பெறுநர் முகவரி pin code உட்பட முழுமையாக தெரிந்திருக்க வேண்டும்.பெறுநர் பெயரும் தெரிந்திருக்க வேண்டும்.
7 ஆசிரியர்களுக்கு 'ஆப்சென்ட் - முதன்மைக்கல்வி அலுவலர் நடவடிக்கை
பள்ளிக்கு தாமதமாக வந்த ஏழு ஆசிரியர்களுக்கு, ஒருநாள், 'ஆப்சென்ட்' போட்டு, திருவண்ணாமலை முதன்மைக்கல்வி அலுவலர் பொன்குமார் நடவடிக்கை எடுத்தார். திருவண்ணாமலை மாவட்டத்தில், மாணவர்களின் கல்வித்தரத்தை உயர்த்துவதற்காக, கல்வித் துறை அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.
செட்' தேர்வுக்கான கட்டணம் உயர்வு
மாநில அளவிலான கல்லூரி ஆசிரியர் தகுதி (செட்) தேர்வுக்கான கட்டணம், அகில இந்திய அளவில் நடத்தப்படும் "நெட்' தேர்வைக் காட்டிலும் மூன்று மடங்கு அதிகமாக உள்ளது விண்ணப்பதாரர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. கல்லூரி உதவிப் பேராசிரியர் பணிக்கு தேசிய அளவிலும், மாநில அளவிலும் தகுதித் தேர்வுகள் நடத்தப்படுகின்றன.
பள்ளி கழிப்பறை பராமரிப்பு மகளிர் குழுக்களிடம் ஒப்படைப்பு: இம்மாதத்திற்குள் பணியாளர்களை நியமிக்க முடிவு
அரசு பள்ளிகளின் கழிப்பறைகளை துப்புரவு செய்து பராமரிக்கும் பொறுப்பை, ஊரக வளர்ச்சி துறை நிர்வாகம், மகளிர் குழுக்களிடம் ஒப்படைத்து உள்ளது. இந்த மாதம் இறுதிக்குள், புதிய துப்புரவு பணியாளர்கள் நியமிக்கப்படுவர் என, ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
வாடகை வீட்டில் குடியிருக்க விரும்பாத அரசு ஊழியர்கள்
''அரசு ஊழியர்கள், சொந்த வீடு கட்ட, தமிழக அரசு தேவையான கடன் வழங்கியதால், வாடகை வீட்டில் குடியிருக்க, அவர்கள் விரும்புவதில்லை,'' என, வீட்டு வசதித் துறை அமைச்சர் வைத்திலிங்கம் கூறினார்.சட்டசபையில், நேற்று கேள்வி நேரத்தில் நடந்த விவாதம்:
ஆசிரியரா, பேராசிரியரா: பட்டதாரிகள் குழப்பம்
மத்திய அரசின், ஆசிரியர் தகுதித் தேர்வு நடக்க உள்ள அதே நாளில், தமிழக அரசின், உதவிப் பேராசிரியர் தகுதித் தேர்வும் நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளதால், பட்டதாரிகள் குழப்பம் அடைந்துள்ளனர். மத்திய அரசு பள்ளிகளில் ஆசிரியர் பணியில் சேர, மத்திய இடைநிலை கல்வி வாரியமான சி.பி.எஸ்.இ.,யின் சார்பில், 'சிசெட்' தேர்வு நடத்தப்படுகிறது. இதற்கான அறிவிப்பு, கடந்த ஆண்டு, நவ., 3ல் வெளியானது.
சி.இ.ஓ., - டி.இ.ஓ., பணியிடங்கள் 57 காலி: பொதுத்தேர்வு பணிகள் பாதிக்கும் அபாயம்
பள்ளிக் கல்வித் துறையில், 57 உயர் அதிகாரி பணியிடங்கள் காலியாக உள்ளன. இதனால், பொதுத் தேர்வு மற்றும் தேர்தல் பணிகள் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.
10ம் வகுப்பு திருப்ப தேர்வுகள்: பிப்ரவரி 1ல் தொடக்கம்
பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு முதல் மற்றும் இரண்டாம் திருப்பத் தேர்வுகளை பிப்ரவரி மாதம் நடத்த வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. ஒவ்வொரு கல்வி ஆண்டிலும் டிசம்பர் மாதத்தில் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கு அரையாண்டு தேர்வுகள் நடப்பது வழக்கம்.
7th Pay commission - JAN 2016 DA அறிவிப்பதில் என்ன குழப்பம்!!!
Expected DA Calculation will play vital role in determining Fitment Factor of 7th CPC
At the end of the Sixth CPC Regime all the Central Government servants are at the verge of receiving their last installment of Dearness Allowance in Sixth Pay Commission. Almost the DA from January 2016 will be finalized after the release of AICPIN for the month of December 2015. The eleven months AICPIN Points released from January 2015 to November 2015 by Labour Bureau suggests that there is a possibility to get 6 to 7 percent hike in DA from January 2016. But the AICPIN for the Month of December will determine the exact rate of hike in Dearness Allowance from Jan 2016.
மீண்டும் உடைந்தது ஆசிரியர் கூட்டுக்குழு
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களின் கோரிக்கைகளை, அரசிடம் முன்னெடுத்து வைக்கவும், அவர்களை ஒருங்கிணைக்கவும், ஜாக்டோ, ஜாக்டா என்ற அமைப்புகள் செயல்பட்டு வரும் நிலையில், தற்போது, 'டேக்டோ' என்ற புதிய அமைப்பு உருவாகிஉள்ளது.