மாற்றுத் திறனாளிகள் நலனுக்காக பணிபுரிந்தவர்கள் மற்றும் நிறுவனங்களுக்கான
அரசின் விருதுகளைப்பெற வரும் நவம்பர் 12ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு
தமிழக அரசு அழைப்பு விடுத்துள்ளது.இது தொடர்பாக தமிழக மாற்றுத் திறனாளிகள்
நலத்துறை முதன்மைச் செயலாளர், வெளியிட்ட செய்தியில் கூறியிருப்பதாவது:
Half Yearly Exam 2024
Latest Updates
மீன்வளத் துறையில் பணி: விண்ணப்பிக்க அழைப்பு
மீன்வளத் துறையில் புள்ளியியல் சேகரிப்பாளர் பணியிடத்துக்கு விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
Online RTI!
'ஆன்லைனில்' ஆர்.டி.ஐ., மனு மத்திய தகவல் ஆணையர் தகவல்
''தகவல் அறியும் உரிமை சட்டப்படி, விபரங்கள் கோரும் மனுவையும், அதற்கான
பதிலையும், 'ஆன்லைனில்' அனுப்பும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்,'' என,
மத்திய தகவல்ஆணையர் யசோவர்த்தன் ஆசாத் கூறினார்.நெய்வேலி நிலக்கரி கழகமான,
என்.எல்.சி., சார்பில், 'தகவல் அறியும் உரிமை சட்டம் - 2005' என்ற
தலைப்பிலான கருத்தரங்கம், சென்னையில் நேற்று நடந்தது.
ஆசிரியர்களுக்கு பொது மாறுதல்,பதவி உயர்வு கலந்தாய்வு
திருவள்ளூர் மாவட்டத்தில் ஆசிரியர்களுக்கு பொது மாறுதல், பதவி உயர்வு வழங்க
அக்டோபர் 26, 27, 30 ஆகிய தேதிகளில் கலந்தாய்வு நடைபெறவுள்ளது.இதுகுறித்து
மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவ ராவ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
1,500 காலிப் பணியிடங்கள்: தள்ளாடுது கருவூலத்துறை
ராமநாதபுரம்:தமிழக கருவூல கணக்குத்துறையில் 1,500 பணியிடங்கள் காலியாக
இருப்பதால் பணிகளை முடிக்க முடியாமல் ஊழியர்கள்
தத்தளிக்கின்றனர்.தமிழகத்தில் 32 கருவூல அலுவலகங்கள், 229 சார்நிலை
கருவூலங்கள் உள்ளன. இங்கு 5,186 பணியிடங்கள் அனுமதிக்கப்பட்டுள்ளன. தற்போது
3,600 ஊழியர்கள் மட்டுமே பணிபுரிகின்றனர். கண்காணிப்பாளர், கணக்காளர்,
இளநிலை உதவியாளர், இரவு காவலர் பணியிடங்கள் பெரும்பான்மையாக காலியாக உள்ளன.
தீபாவளி முன்பணம்: ஆசிரியர்களுக்கு சந்தேகம்
அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு, ஆண்டுக்கு ஒரு முறை பண்டிகை முன்பணம் என,
5,000 ரூபாய் வழங்கப்படும். தீபாவளியை ஒட்டிதான், ஆசிரியர்கள் மற்றும்
ஊழியர்கள், அதிக அளவில், முன்பணத்துக்கு விண்ணப்பிப்பர். அதேபோல், அனைத்து
பள்ளிகளில் இருந்தும், முதன்மை கல்வி அதிகாரி அலுவலகங்களுக்கு,
விண்ணப்பங்கள் வந்துள்ளன, ஆனால், இதுவரை நிதித் துறை அனுமதி வரவில்லை.
அதனால், முன்பணம் கிடைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
முன்னுதாரணமாக விளங்கும் வடமணப்பாக்கம் அரசு தொடக்கப் பள்ளி
எண்ம முறையில் பாடம் கற்றல், குழந்தைகள் நூல்கள் வாசித்தல், கணினிபயிற்சி
பெறுதல், அறிவியல் ஆய்வகம் என பல சிறப்பு அம்சங்களுடன் சுகாதாரம், ஒழுக்கம்
ஆகியவற்றுடன் சேர்ந்து கல்வி கற்பிக்கப்படுகிறது.
மீன்வளத் துறையில் பணி: விண்ணப்பிக்க அழைப்பு
மீன்வளத் துறையில் புள்ளியியல் சேகரிப்பாளர் பணியிடத்துக்கு விண்ணப்பிக்க
அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து ஆட்சியர் எஸ்.சுரேஷ்குமார்
விடுத்துள்ள செய்திக் குறிப்பு:
தமிழ்வழி பொறியியல் பட்டதாரிகளுக்கு குவியும் அரசு வேலைவாய்ப்புகள்
தனியார் நிறுவனங்களில் வாய்ப்பு மறுக்கப்பட்ட நிலையில், தமிழ்வழி யில்
பொறியியல் படித்தவர்களுக்கு அரசு வேலைவாய்ப்புகள் குவிந்து
வருகின்றன.தமிழ்வழி பொறியியல் கல்வி திட்டம் கடந்த 2010-ம் ஆண்டு திமுக
ஆட்சியில் அறிமுகப்படுத்தப் பட்டது. அதன்படி, அண்ணா பல்கலைக்கழகத்தில்
தமிழ்வழியில் சிவில், மெக்கானிக்கல் பொறியியல் பாடப் பிரிவுகள்
தொடங்கப்பட்டு ஒவ்வொரு பிரிவிலும் தலா 60 இடங்கள் உருவாக்கப்பட்டன.
SABL & ALM Time Table
SABL TIME TABLE
8.50-9.10 CLEANING
9.10-9 .30 PRAYER
9.30-9.35 MEDITATION
9.35-12.10 SUBJECT 1
12.10-12.40 VALUE EDUCATION, YOGA ETC
கரூரில் புதிய அரசு மருத்துவக் கல்லூரி அமைக்க ரூ.229 கோடி நிதி ஒதுக்கீடு: முதல்வர் உத்தரவு
கரூரில் புதிய மருத்துவக் கல்லூரி தொடங்குவதற்கான கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய கட்டடம் கட்டுதல் மற்றும் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அமைப்பதற்காக 229 கோடியே 46 லட்சம் ரூபாய்க்கு நிர்வாக ஒப்புதல் மற்றும் நிதி ஒப்பளிப்பு வழங்கி முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
அரசு பஸ் முதல் பெண் டிரைவர் மாற்றுப்பணி தராததால் தவிப்பு:
தமிழகத்தில், அரசு பஸ்சை இயக்கிய, முதல் பெண் டிரைவர் என்ற பெருமைக்கு
உரியவர் வசந்தகுமாரி, 57. துவக்கத்தில், பஸ் டிரைவர் பணியில் சேர முயன்ற
போது, உயரம் குறைவு எனக்கூறி ஓரம் கட்டப்பட்டார்; தொடர் முயற்சியால், தன்,
34 வயதில், அரசு பஸ் டிரைவரானார்.
தேசிய கொடியில் சாதனைஉ.பி., மாநில அரசு முடிவு:
உ.பி.,யில், நாட்டின் மிகப் பெரிய கொடிக் கம்பத்தில், மிகப் பெரிய தேசிய
கொடியை பறக்க விட, அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது.டில்லி, கன்னாட்
பிளேஸ் என்ற இடத்தில், 207 அடி உயர கொடிக் கம்பத்தில், 60 அடி உயரமும், 90
அடி நீளமும் கொண்ட தேசியக் கொடி பறக்க விடப்படுகிறது.
சபரிமலை மண்டலப் பூஜை நவ. 16-இல் தொடக்கம்: ஜனவரி 12 வரை தரிசனத்துக்கான முன்பதிவு செய்யலாம்:
சபரிமலை ஐயப்பன் கோயிலில் இந்த ஆண்டுக்கான மண்டல பூஜை நவம்பர் 16-ஆம் தேதி
தொடங்குகிறது. இதையடுத்து, நவம்பர் 17 முதல் ஜனவரி 12 வரை தரிசனம் செய்ய
விரும்புவோர் www.sabarimalaq.com என்ற இணையதளத்தில் இப்போதே முன்பதிவு
செய்யலாம்.
2000 ஆயிரம் மாணவர்களுக்கு போட்டித்தேர்வு பயிற்சி
போட்டித்தேர்வில் பங்கேற்பதற்காக 2000 மாணவர்களுக்கு சென்னை மாநகராட்சி கல்வித்துறை பயிற்சி அளித்து வருகிறது. இது
குறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்தி: பொருளாதாரத்தில்
பின்தங்கிய மாணவர்கள் போட்டித் தேர்வுகளில் பங்கேற்கும் வகையில் சென்னை
மாநகராட்சி பயிற்சிகளை அளித்து வருகிறது. இதன்படி, மத்திய தேர்வாணயம்
நடத்தும் போட்டித் தேர்வுக்கு ஷெனாய் நகர் அம்மா அரங்கத்தில் மாணவர்களுக்கு
பயிற்சி அளிக்கப்படுகிறது.
21 வயதுக்குள்பட்டோருக்கு மதுபானங்கள் விற்கப்படாது: உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு உறுதி
மதுபானங்களை 21 வயதுக்குள்பட்டவர்களுக்கு விற்பனை செய்வதைத் தடுக்க
நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு
உறுதியளித்துள்ளது.
ஆராய்ச்சி உதவியாளர் பணியிடங்களுக்கான தேர்வு: டி.என்.பி.எஸ்.சி. அறிவிப்பு
தமிழ்நாடு
அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) சார்பில் தமிழ்நாடு
நகரம் மற்றும் நாடு திட்டமிடல் சார்புநிலை சேவை பிரிவில் ஆராய்ச்சி
உதவியாளர் (புள்ளியியல், பொருளாதாரம், நிலவியல்) பணிகளுக்கான எழுத்துத்
தேர்வு குறித்த அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது.இந்தத் தேர்வு டிசம்பர் 13-ஆம் தேதி காலை, மாலை நடைபெற உள்ளது.
அங்கன்வாடிகளுக்கு 'ஸ்மார்ட் போன்
புதுடில்லி": சிறு குழந்தைகளை பராமரிக்கும் அங்கன்வாடிகளின் தரத்தை
மேம்படுத்த வும், அவற்றின் செயல்பாட்டை தீவிரப்படுத்தவும் மத்திய அரசு
நடவடிக்கை எடுத்து வருகிறது.
அரசு ஊழியர்களுக்கு மாநில தீர்ப்பாயம் சங்க தலைவர் வலியுறுத்தல்
சிவகங்கை: ''அரசு அலுவலர், ஆசிரியர் பிரச்னைகளுக்கு தீர்வு காண மாநில
நிர்வாக தீர்ப்பாயம் மற்றும் சம்பளக்குழுவை உருவாக்க வேண்டும்,'' என
தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய மாநில தலைவர் சண்முகராஜன்
கூறினார்.
நவ.16ம் தேதி முதல் 2ம் பருவ இடைத்தேர்வு துவக்கம்
தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும், 10ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை,
நவ., 16ம் தேதி முதல், இரண்டாம் பருவ இடைத்தேர்வு நடத்த, பள்ளிக்கல்வித்
துறை உத்தரவிட்டு உள்ளது. சமச்சீர் கல்வி பாடத்திட்டத்தில், ஒன்பதாம்
வகுப்பு வரை முப்பருவ தேர்வு மற்றும் கற்பித்தல் முறை அமலாகிறது. 10ம்
வகுப்பு முதல், பிளஸ் 2 வரை ஆண்டு தேர்வு நடத்தப்படுகிறது.
தரம் உயர்த்தப்பட்ட 344 பள்ளிகளில் கட்டடங்கள் கட்டும் பணி தொடக்கம்
தமிழகம் முழுவதும் உயர்நிலைப் பள்ளிகளாகத் தரம் உயர்த்தப்பட்ட 344
பள்ளிகளில் ரூ.555 கோடியில் கட்டடம் கட்டும் பணிகள்
தொடங்கப்பட்டுள்ளன.அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டம் சார்பில்,
2010-11, 2011-12 ஆகிய ஆண்டுகளில் முறையே 344, 710 நடுநிலைப் பள்ளிகள் தரம்
உயர்த்தப்பட்டன. இந்தப் பள்ளிகளுக்குக் கட்டடம் கட்ட தனது 75 சதவீதப்
பங்கான ரூ.518 கோடியை மத்திய அரசு ஒதுக்கியிருந்தது.
பார்வையிழந்த மாணவி சிகிச்சைக்காக தவிப்பு
பார்வை இழந்த, 10ம் வகுப்பு மாணவி, அறுவை சிகிச்சை செய்ய வசதியின்றி
தவிக்கிறார்.திருப்பூர் மாவட்டம், இடுவம்பாளையம், நாச்சம்மாள் காலனியை
சேர்ந்தவர் ஜெயலட்சுமி. கணவரை இழந்த இவர், பனியன் கம்பெனியில் வேலை செய்து
வருகிறார். இவருக்கு, பிரியங்கா, 15, விக்னேஷ், 13, என, இரு குழந்தைகள்.
பிரியங்கா, இடுவம்பாளையம் அரசு பள்ளியில், 10ம் வகுப்பும், விக்னேஷ்
எட்டாம் வகுப்பு படிக்கின்றனர்.
ஆய்வக உதவியாளர் பணி 7 லட்சம் பேர் காத்திருப்பு
பள்ளி ஆய்வக உதவியாளர் பணிக்கான தேர்வு முடிவு கிடப்பில்
போடப்பட்டுள்ளதால், ஏழு லட்சம் பேர், ஐந்து மாதங்களாக காத்திருக்கின்றனர்.
அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் காலியாகஇருந்த, 4,362 ஆய்வக
உதவியாளர் பணியிடங்களுக்கு, மே, 31ல் எழுத்துத் தேர்வு நடந்தது; ஏழு லட்சம்
பேர் பங்கேற்றனர். இந்த தேர்வுக்கான அறிவிப்பே குளறுபடியாக இருந்ததால்,
ஆரம்பத்திலேயே பிரச்னைகள் ஏற்பட்டன.