Half Yearly Exam 2024
Latest Updates
பணிநிரவல் செய்ய உள்ள ஆசிரியர்களின் இறுதி பட்டியல் CEO அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது
பள்ளிக்கல்வித்துறையில் கீழ் உள்ள அரசு / நகராட்சி உயர் / மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணிநிரவல் செய்ய உள்ள ஆசிரியர்களின் இறுதி பட்டியல் அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது
கல்வி உதவி தொகை கையாடல்: நடவடிக்கை எடுக்க கோரி ஐகோர்ட்டு நோட்டீசு
சென்னை ஐகோர்ட்டில், கீழ்மருவத்தூரை சேர்ந்த
கண்ணன் கோவிந்தராஜன் தாக்கல் செய்துள்ள பொது நல மனுவில் கூறியிருப்பதாவது:
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ஆதிதிராவிடர் நல பள்ளிகளில் பணியாற்றும் 77
தலைமை ஆசிரியர்கள், 2011-12 கல்வியாண்டுகளில் ஆதிதிராவிடர் பிரிவை சேர்ந்த
மாணவர்களுக்கு வழங்க வேண்டிய கல்வி உதவி தொகையை வழங்காமல் கையாடல்
செய்துள்ளனர். இதையடுத்து, இந்த 77 தலைமை ஆசிரியர்களை பணி இடைநீக்கம்
செய்து பள்ளிக்கல்வித்துறை கடந்த 2012–ம் ஆண்டு ஆகஸ்ட் 1-ந் தேதி
உத்தரவிட்டது.
காஸ் விலை உயர்வு 3 மாதங்களுக்கு ஒத்திவைப்பு: மத்திய அரசு
சமையல் காஸ் சிலிண்டர் விலை மாதம் தோறும் ரூ.5
உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டதாக தகவல்கள் வெளியாகின.
பள்ளிக்கல்வி பணி நிரவல் / பொது மாறுதல் / பதவி உயர்வு கலந்தாய்வு - கால அட்டவணை சார்பு
பள்ளிக்கல்வி - அரசு / நகராட்சி உயர் / மேல்நிலைப் பள்ளிகள் - 2014-15ம் கல்வியாண்டில் கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள் - பணி நிரவல் / பொது மாறுதல் / பதவி உயர்வு கலந்தாய்வு - கால அட்டவணை சார்பு
தலைமையாசிரியர்களுக்கு இரு நாட்கள் "அகமேற்பார்வை பயிற்சி"
மா.க.ஆ.ப.நி - அரசு / அரசு உதவிப் பெறும் பள்ளிகளில் பணிபுரியும் தலைமையாசிரியர்களுக்கு இரு நாட்கள் "அகமேற்பார்வை பயிற்சி" மாவட்ட அளவில் ஜுலை 8 முதல் ஜுலை 19 வ்ரை நடைபெறவுள்ளது.
பதவி ஏற்ற ஒரு மாதத்தில் மோடியின் சாதனைகளும், சந்தித்த சோதனைகளும்
நரேந்திர மோடி பிரதமராக பதவி ஏற்று இன்றுடன்
ஒரு மாதம் நிறைவடைகிறது. மோடி அரசின் நிர்வாகத் திறமை பற்றியும், அவரது
செயல்பாடுகள் பற்றியும் நடுநிலையாளர்கள், பொது மக்கள் மிகுந்த
எதிர்பார்ப்புடன் உள்ளனர். அதற்கு ஏற்றவாறு மோடியும் பல அதிரடி
நடவடிக்கைகள் மேற்கொண்டார். முந்தைய காங்கிரஸ் ஆட்சியின் போது அரசு துறை
உயர் அதிகாரிகள் சுணக்கத்துடன் செயல்பட்டதாக குறை கூறப்பட்டது.
இளநிலை உதவியாளர்களுக்கு விருப்ப மாறுதல் மாவட்ட கல்வி அலுவலர்கள் வழங்கலாம்.
தமிழ்நாடு அமைச்சுப் பணி - அரசு பள்ளிகள் மற்றும் அலுவலகங்களில் பணிபுரியும் இளநிலை உதவியாளர்களுக்கு விருப்ப மாறுதல் மாவட்ட கல்வி அலுவலர்கள் வழங்கலாம் என இயக்குநர் உத்தரவு
TRB ஏற்க மறுத்த பாடத்தை கல்லூரி நிர்வாகம் மாற்றியமைக்க முடிவு!
ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.,) ஏற்க மறுத்த பாடத்தை, திண்டுக்கல் அரசு மகளிர் கல்லூரி நிர்வாகம் மாற்றியமைக்க முடிவு செய்துள்ளது.
நிரப்பப்படாத பேராசிரியர் பணியிடங்கள்: கலை, அறிவியல் கல்லூரிகளை அரசு கவனிக்குமா?
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில், அதிக எண்ணிக்கையிலான பேராசிரியர் பதவிகள் காலியாக உள்ளதால், மாணவ மாணவிகளின் உயர்கல்வி பாதிக்கப்பட்டுள்ளது.
ஆசிரியர் பட்டய படிப்பு தேர்வு: புதிய முறையில் விடைத்தாள் தயாரிப்பு
ஆசிரியர் கல்வி மற்றும்பயிற்சி நிறுவன பட்டயப்படிப்பு மாணவர்களுக்கான தேர்வு துவங்க உள்ள நிலையில், 40 பக்கத்தில் விடைத்தாள் ஏடுகள் தைக்கும் பணி துவங்கி உள்ளது.
அண்ணாமலை பல்கலை மருத்துவக் கல்லூரி கலந்தாய்வு: தடை கோரி வழக்கு.
மதுரை ஐகோர்ட் கிளையில் ரவிச்சந்திரன் தாக்கல் செய்த மனு:தமிழகத்தில் 19 அரசு, 12 தனியார் மருத்துவக் கல்லூரிகள் உள்ளன.
அரசு பள்ளிகளில் பிளஸ் 1 வகுப்பில் சேர வங்கி கணக்கு அவசியம்.
கல்வி மாவட்டத்தில் 261 அரசு உயர்நிலை மற்றும் மேனிலைப் பள்ளிகள் உள்ளன. தற்போது பத்தாம் வகுப்பு முடித்தவர்கள் பிளஸ் 1 வகுப்புகளில் சேருகின்றனர்.
மாணவர் ஆலோசனைக்குழு என்னாச்சு? செயல்பாடின்றி கிடப்பதாக புகார்
வளர் இளம் பருவத்தில் உள்ள பள்ளி மாணவர்கள், தங்களின் பாதையை நல்வழிப்படுத்த, அரசுப்பள்ளிகளில் துவங்கப்பட்ட மாணவர்களுக்கான ஆலோசனைக் குழு, தற்போது செயல்பாடின்றி இருப்பதாக புகார் எழுந்துள்ளது.
பள்ளிகளில் 13 வகை புதிய விளையாட்டுகள்: உடற்கல்வி ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி.
அரசு பள்ளிகளில் நடப்பு கல்வி ஆண்டில் 13 வகை புதிய விளையாட்டுகள் சேர்க்கப்பட்டுள்ளன. இதுகுறித்து உடற்கல்வி, இயக்குனர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
TNTET: 12 ஆயிரம் ஆசிரியர்களின் இறுதி பட்டியல் விரைவில் வெளியிடப்படுகிறது
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நடைபெற்ற ஆசிரியர்
தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்களின் இறுதி பட்டியல் வரும் வியாழன்
அன்று வெளியிடப்பட வாய்ப்புள்ளது.
TRB PG TAMIL - இன்று (25.06.14) முதுகலை பட்டதாரி தமிழ் ஆசிரியர் மேல்முறையீட்டு வழக்குகள் விசாரணை
TRB PG TAMILசென்னை உயர்நீதிமன்றமதுரைக் கிளையில் இன்று (25.06.14) முதுகலை பட்டதாரி தமிழ் ஆசிரியர் மேல்முறையீட்டு வழக்குகள் விசாரணை
தமிழகம் முழுவதும் 100 அம்மா மருந்தகங்களை முதல்வர் வியாழக்கிழமை (ஜூன் 26) திறந்து வைக்கிறார்
சென்னை உள்பட தமிழகம் முழுவதும் 100 அம்மா மருந்தகங்களை முதல்வர்ஜெயலலிதா
வியாழக்கிழமை (ஜூன் 26) திறந்து வைக்கிறார். அதில்,சென்னையில் 20
மருந்தகங்களும் பிற மாவட்டங்களில் 80 மருந்தகங்களும்அடங்கும்.
ஜூலை இரண்டாம் வாரத்தில் :தமிழக அரசு ஊழியர்களுக்கான 2013-14- ஆம் நிதியாண்டின் ஜிபிஎப்கணக்கு அறிக்கை
நடப்பு நிதியாண்டு முதல், பொது வருங்கால வைப்பு நிதிக்கான(ஜிபிஎப்)ஆண்டு
கணக்கு அறிக்கையை சந்தாதாரர்கள், மாநில கணக்காயர் அலுவலகஇணையதளத்தின் மூலம்
மட்டுமே பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும் என துணை மாநில கணக்காயர்(நிதி)
வர்ஷினி அருண் தெரிவித்துள்ளார்.
பல்கலைக் கழக மானியக்குழுவான - யு.ஜி.சி., இடையே ஏற்பட்டுள்ள மோதல்
பல்கலைக் கழக மானியக்குழுவான - யு.ஜி.சி., இடையே ஏற்பட்டுள்ள மோதல்
விவகாரத்தில் தலையிட, உச்ச நீதிமன்றம்மறுத்து விட்டது.
முதுகலை ஆசிரியர்களுக்கான பணி மாறுதல்கலந்தாய்வு காலியிடங்கள் குறித்த விபரம்வெளியிட தாமதம்!
முதுகலை ஆசிரியர்களுக்கான பணி மாறுதல்கலந்தாய்வு காலியிடங்கள் குறித்த விபரம்வெளியிட தாமதம் ஆனதால் ஆசிரியர்கள் பரிதவித்தனர்.
தேசிய தர மதிப்பீட்டு கவுன்சில் ( NAAC)
நீங்கள் ஒரு குறிப்பிட்ட பல்கலைக்கழகம், கல்லூரியில் (கலை அறிவியல்) சேரக்
காத்திருக்கிறீர்களா? அந்தக் கல்வி நிறுவனத்தின் முழு விவரங்களையும்
அறிந்துகொண்டு விட்டீர்களா? இந்தக் கேள்விகளுக்குப் பலரிடம்
விசாரித்துவிட்டதாகப் பதில் வரும். பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளுக்கென நாக்
எனப்படும் தேசிய தர மதிப்பீட்டு கவுன்சில் ( National Assessment and
Accreditation Council) வழங்கும் தர மதிப்பீட்டு அங்கீகாரப் பட்டியலில்
நீங்கள் சேர விரும்பும் கல்லூரிக்கு எந்த இடம் தரப்பட்டிருக்கிறது என்பதை
முழுமையாக அறிந்திருக்கிறீர்களா? இல்லையென்றால் இனியாவது இணையதளத்தைப்
பாருங்கள். அதற்கு முன்பாக நாக் அமைப்பை பற்றி அறிந்துகொள்வோமா?
அகவிலைப்படி உயர்வு: நிதித்துறை அமைச்சகம் எப்போது பரிந்துரை செய்யும்?
அகவிலைப்படி உயர்வு 7% என்பது கணிப்பு மட்டுமே! நிதித்துறை அமைச்சகம் எப்போது பரிந்துரை செய்யும்?
பெண்களுக்கு கூடுதல் வரி விலக்கு சலுகை பட்ஜெட்டில் அறிவிக்கப்படுகிறது
மத்திய அரசின் பொது பட்ஜெட் அடுத்த மாதம் (ஜூலை) 10–ந்தேதி (வியாழக்கிழமை) தாக்கல் செய்யப்பட உள்ளது.
பட்டதாரி ஆசிரியர் பதவியுர்வு -ஈரோடு மற்றும் திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த ஆசிரியர்கள் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு.
18.06.2014-அன்று நடந்து முடிந்த தொடக்கக்கல்விதுறைக்கான பட்டதாரி ஆசிரியர்கள் பதவியுர்வு கலந்தாய்வில் பட்டதாரி ஆசிரியர்கள் காலிபணியிடங்ககளை காட்டுவதற்கு முன்னரே மாவட்டமாறுதல்மூலம் பணியில் சேர்ந்துள்ள ஆசிரியர்களுக்கு எதிராக ஈரோடு மற்றும் திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த ஆசிரியர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குதொடுத்துள்ளனர்.