Half Yearly Exam 2024
Latest Updates
புதிய தொடக்கப்பள்ளிகள் தொடங்க கருத்துரு கோரி உத்தரவு
மாண்புமிகு தமிழக முதல்வரின் 110 விதியின் கீழ் அறிவிக்கப்பட்ட பள்ளிகள் இல்லாத 54 குடியிருப்பு பகுதிகளில் புதிய தொடக்கப்பள்ளிகள் தொடங்க கருத்துரு கோரி - தொடக்கக்கல்வி இயக்ககம் உத்தரவு
முதுகலை ஆசிரியர், இளநிலை உதவியாளர் பணி நியமன கலந்தாய்வு
பள்ளி கல்வித் துறையில், முதுகலை, தாவரவியல் ஆசிரியர், 196 பேர் மற்றும்
இளநிலை உதவியாளர்கள் 310 பேர் பணி நியமன கலந்தாய்வு, நாளை (27ம்தேதி),
"ஆன்-லைன்" மூலம், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்களில்
நடக்கிறது.
ஆங்கிலத்தில் தேர்வு: கலை அறிவியல் கல்லூரிகளுக்கு உத்தரவு
"மாணவ, மாணவியர், ஆங்கில மொழி தொடர்பு திறனை வளர்த்துக்கொள்ள வேண்டும்,
இதனால், அதிக வேலை வாய்ப்புகளை பெற முடியும்" என, நூதனமாக ஒரு காரணத்தைக்
கூறி, வரும் கல்வி ஆண்டில் இருந்து, அனைத்து கலை, அறிவியல் கல்லூரிகளிலும்,
"அசைன்மென்ட்" மற்றும் தேர்வுகளை, ஆங்கிலத்தில் எழுத வேண்டும் என, தமிழக
அரசு உத்தரவிட்டுள்ளது.
கலை, அறிவியல் படிப்புகளில் சேர மாணவர்கள் ஆர்வம்
தமிழகத்தில் நடப்பாண்டில், கலை மற்றும் அறிவியல் படிப்புகளில் சேர,
மாணவர்களிடையே அதிக ஆர்வம் ஏற்பட்டுள்ளது. கலை அறிவியல் கல்லூரிகளில்,
மாணவர் சேர்க்கை ஓரிரு வாரங்களில் துவங்க உள்ளதால், விண்ணப்ப விற்பனை சூடு
பிடித்துள்ளது.
ஆசிரியர் பயிற்சி: மே 27 முதல் விண்ணப்பம் வினியோகம்
"ஆசிரியர் பயிற்சி படிப்புகளில் சேர்வதற்கு, நாளை (27ம் தேதி) முதல்
விண்ணப்பங்கள் வழங்கப்படும்" என, மாநில கல்வியியல் ஆராய்ச்சி பயிற்சி
நிறுவன இயக்குனர் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
சிவில் சர்வீசஸ் முதல்நிலை தேர்வு
ஐ.ஏ.எஸ்.,- ஐ.பி.எஸ்., உள்ளிட்ட பணிகளுக்காக நடத்தப்படும், சிவில்
சர்வீசஸ் தேர்வு, இன்று நடக்கிறது. இதில், தமிழகத்தில், 30 ஆயிரம் பேர்
உட்பட, நாடு தழுவிய அளவில், 7 லட்சத்துக்கும் அதிகமானோர் தேர்வு எழுத
உள்ளனர்.
மருத்துவம், பொறியியல் படிப்புக்கு ஒரே நாளில் நுழைவு தேர்வு
பொறியியல் மற்றும் மருத்துவ படிப்புகளுக்கு, அகில இந்திய அளவிலான
நுழைவுத் தேர்வுகள், ஒரே நாளில் நடத்தப்படுவதால், போட்டியாளர்கள், ஏதாவதொரு
தேர்வை எழுத முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
பள்ளி துவங்கும் நாளிலேயே (03.06.2013) மாணவர் நலத்திட்ட பொருட்கள் வழங்க ஆணை
1 முதல் 8 வகுப்பு வரையிலான தொடக்கப்பள்ளித் துறைக்கான 2013-14ஆம்
கல்வியாண்டிற்கான விலையில்லா பாடப்புத்தகங்கள், நோட்டுப்புத்தகங்கள்
மற்றும் சீருடைகளை 27.05.2013 முதல் 31.05.2013க்குள் அலுவலர்களுகு அளித்து
பள்ளி துவங்கும் முதல் நாளான 03.06.2013 அன்றே மாணவர்களுக்கு வழங்கி
04.03.2013 அன்றுக்குள் அறிக்கை அனுப்பு தொடக்கக்கல்வி இயக்ககம்
தெரிவித்துள்ளதாக அறியப்படுகிறது.
முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் நியமனம்: தமிழ்வழி முன்னுரிமை கோரியவர்களில் பலர் சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்கவில்லை
2,800-க்கும் அதிகமான முதுநிலைப் பட்டதாரி
ஆசிரியர்கள், உடற்கல்வி இயக்குநர்களை நியமிப்பதற்கான போட்டித் தேர்வு கடந்த
ஆண்டு நடத்தப்பட்டது. இதில் தமிழ் வழி முன்னுரிமை கோரியவர்களுக்காக
சான்றிதழ் சரிபார்ப்பில், பெரும்பாலானோர் உரிய சான்றிதழ்களை
சமர்ப்பிக்கவில்லை. எனவே, தமிழ் வழி முன்னுரிமை இடங்கள் நிரம்பவில்லை.
PG Botany - Appointment Counseling on 27.05.2013
மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி ஆசிரியர் தேர்வு
வாரியத்தால் முதுகலை தாவரவியல் ஆசிரியர் பணியிடங்களுக்காக தேர்வு
செய்யப்பட்ட 196 பணிநாடுநர்களுக்கும், தமிழ்நாடு அரசுப் பணியாளர்
தேர்வாணையத்தால் இளநிலை உதவியாளர் பணியிடத்திற்கு தெரிவு செய்யப்பட்ட 310
பணிநாடுநர்களுக்கும் 27.05.2013 அன்று பணி நியமன கலந்தாய்வு இணையதளத்தில்
(Online) அனைத்து முதன்மைக்கல்வி அலுவலகங்களிலும் நடைபெற உள்ளது.
பிளஸ் 2 மாணவர்கள் கல்வி தகுதியை பள்ளியிலேயே பதிய ஏற்பா
தமிழகம் முழுவதும், பிளஸ் 2 மாணவர்கள், தங்கள் கல்வித் தகுதியை, பள்ளி
வளாகங்களிலேயே, இணையதளம் மூலம், வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்ய,
பள்ளி கல்வித்துறை, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை அதிகாரிகள்
ஏற்பாடு செய்துள்ளனர்.
சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 முடிவுகள் 27ம் தேதி வெளியீடு
சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 தேர்வு முடிவுகள், 27ம் தேதி வெளியாகிறது.
எனினும், சென்னை மண்டலத்திற்கான தேர்வு முடிவுகள் மட்டும், முன்கூட்டியே,
இன்று காலை வெளியாகலாம் என, பள்ளி நிர்வாகிகள் எதிர்பார்க்கின்றனர்.
தமிழகத்தில் புதிதாய் 17 பொறியியல் கல்லூரிகள்: ஏ.ஐ.சி.டி.இ.
"தமிழகத்தில், புதிதாக, 17 பொறியியல் கல்லூரிகளுக்கு அனுமதி
வழங்கப்பட்டுள்ளன" என ஏ.ஐ.சி.டி.இ., தலைவர் மான்தா கூறினார். ஏழு
பாலிடெக்னிக் கல்லூரிகள் மற்றும் பி.பார்ம்., கல்லூரிகள் துவங்கவும்,
அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
அண்ணாமலை பல்கலை விண்ணப்பம்: 27ம் தேதி கடைசி நாள்
அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் நுழைவு தேர்வு விண்ணப்பம் 27ம் தேதி வரை மட்டுமே வினியோகிக்கப்படும்.
வேலூர் மாவட்டம், காட்பாடி தேர்வு மையத்தில் எழுதிய, அண்ணாமலை பல்கலை கழக தேர்வு விடைத்தாள்கள் சாலையில் இருந்தன
சிதம்பரம், அண்ணாமலை பல்கலைக்கழக விடைத்தாள் பண்டல்கள், விருத்தாசலம் அருகே சாலையில் கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
இங்கிலாந்தில் சீக்கியர்களுக்கு இலவச பள்ளி
இங்கிலாந்து நாட்டின் லீசெஸ்டரில், சீக்கியர்களின் வசதிக்காக இலவச
பள்ளிக்கு அனுமதி கிடைத்துள்ளது. இத குறித்து 9 குருத்வாரா தலைவர்கள்
தொடர்ந்து வலியுறுத்தியதை தொடர்ந்து தற்போது அனுமதி கிடைத்துள்ளது.
இப்பள்ளி 2014 செப்டம்பரில் துவக்கப்படும் என தெரியவந்துள்ளது.
மருத்துவக் கல்வியில் முன்னேறிவரும் இந்தியா!
நவீன தொழில்நுட்பம் மற்றும் விரிவான முறையிலான ஆராய்ச்சி போன்ற
காரணங்களால், உலகளாவிய மருத்துவ கல்வியில், இந்தியா முக்கிய இடத்தைப்
பெற்றுள்ளது. இங்கு, நூற்றுக்கணக்காக மருத்துவ கல்லூரிகள் மற்றும்
பல்கலைகள் உள்ளதும் ஒரு காரணம்.
3600 அரசுத் தொடக்கப் பள்ளிகள் ஆங்கில வழிப் பள்ளிகளாக மாற்றம்
தமிழ்நாட்டில்
3600அரசுத் தொடக்கப் பள்ளிகளில் வரும் சூன் மாதம்
ஆங்கிலப் பயிற்று மொழி வகுப்புகள்
தொடங்கப்படவுள்ளன என்று தமிழக அரசு
அறிவித்துள்ளது.
பி.இ., மற்றும் எம்.பி.பி.எஸ்., சேர்க்கைக்கான கலந்தாய்வு பணிகள், மும்முரமாக நடந்து வருகின்றன.
சென்னை:
பி.இ., மற்றும் எம்.பி.பி.எஸ்.,
சேர்க்கைக்கான கலந்தாய்வு பணிகள், மும்முரமாக நடந்து
வருகின்றன. பி.இ.,க்கு
விண்ணப்பித்தமாணவர்களின் எண்ணிக்கை, இறுதியாக, 1.89 லட்சமாக உயர்ந்தது. கடந்த மூன்று
நாளில் மட்டும், 89 ஆயிரம் விண்ணப்பங்களை, அண்ணா
பல்கலை பெற்றுள்ளது.
பள்ளிக்கல்வித்துறை பட்டதாரி ஆசியர் உட்பட பல்வேறு ஆசிரியர்களுக்கான மாறுதல் கலந்தாய்வு ஒத்திவைப்பு
பள்ளிக்கல்வித்துறை
சார்ந்த பட்டதாரி ஆசிரியர்களுக்கான மாறுதல் கலந்தாய்வு இன்று நடைபெறும் என
ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. அதேபோல் மே 24 மற்றும்
25ல் முதுகலை ஆசிரியர் பதவி உயர்வு, பட்டதாரி பணியிட மாற்றம் மற்றும் பதவி
உயர்வுக்கான "கவுன்சிலிங்' நடக்கும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், பின் ஒத்திவைப்பதாக தகவல் வெளியானது.
பள்ளிக்கல்வித்துறை பட்டதாரி ஆசியர்களுக்கான மாறுதல் கலந்தாய்வு ஒத்திவைப்பு
பள்ளிக்கல்வித்துறை சார்ந்த பட்டதாரி
ஆசிரியர்களுக்கான மாறுதல் கலந்தாய்வு நாளை நடைபெறும் என ஏற்கெனவே
அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்பொழுது பட்டதாரி ஆசிரியர் மாறுதல்
கலந்தாய்வு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது, மாறுதல் நடைபெறும்
தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் உத்தரவு
பிறப்பித்துள்ளார்.