Half Yearly Exam 2024
Latest Updates
300 தொடக்க / நடுநிலைப்பள்ளிகளில் மின் இணைப்பு துண்டிப்பு: அதிகாரிகள் தவிப்பு
மதுரை மாவட்டத்தில், 300 பள்ளிகளில், துண்டிக்கப்பட்ட மின் இணைப்புக்களை மீண்டும் பெற, பில் தொகை விவரங்களை பெற முடியாமல், கல்வி துறை அதிகாரிகள் தவிக்கின்றனர். மதுரை மாவட்டத்தில், 16 ஊராட்சி ஒன்றிய பள்ளிகளில், 300 தொடக்க மற்றும் நடுநிலை பள்ளிகளில், 2009ல் இருந்து, மின் கட்டணம் செலுத்தப்படவில்லை. பல லட்ச ரூபாய் நிலுவையானதால், மின்வாரியம், 2012, ஜனவரியில், பள்ளிகளின் இணைப்புக்களை துண்டித்தது.
உயர்நிலை பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு நாள் பள்ளி கல்வி துறை மூலம் அறிவிக்கப்பட்டு உள்ளது.
பள்ளி கல்வி துறையில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு 19.10.12 மற்றும் 20.10.12 ஆகிய தேதிகளில் அரசு / நகராட்சி உயர் நிலை பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தலைமையில் ஆன்லைன் முறை மூலம் நடைபெற இருக்கிறது.
B.T APPOINTMENT ONLINE COUNSELLING | 2008-09, 2009-10, 2010-11 ஆகிய, மூன்று ஆண்டுகளில், நிரப்பப்படாத, தொடக்க கல்வித் துறைக்கு, ஒதுக்கீடு செய்யப்பட்ட 83 பட்டதாரி ஆசிரியர், விரைவில் பணி நியமனம் செய்யப்பட உள்ளனர்.
தொடக்க கல்வித் துறைக்கு, ஒதுக்கீடு செய்யப்பட்ட பட்டதாரி ஆசிரியர், விரைவில் பணி நியமனம் செய்யப்பட உள்ளனர்.
www.communication.tnschools.gov.in | தமிழகத்தில் பள்ளி கல்வி துறையில், அனைத்து பள்ளிகளின் நிலை குறித்த தகவல்கள், பதிவு செய்யப்பட்டு வருகிறது. டிசம்பர் முதல் இந்த தகவல்களை, ஆன்லைனில் பெறலாம்.
தமிழகத்தில் பள்ளி கல்வி துறையில், அனைத்து பள்ளிகளின் நிலை குறித்த தகவல்கள், பதிவு செய்யப்பட்டு வருகிறது. டிசம்பர் முதல் இந்த தகவல்களை, ஆன்லைனில் பெறலாம்.தமிழகத்தில் அனைவருக்கும் கல்வி மற்றும் இடைநிலை கல்வி திட்டம் இணைந்து, கல்வி தகவல் மேலாண்மை முறைக்கான தகவல் சேகரிக்கும் பணியில் இறங்கியுள்ளது. இதற்காக மாவட்டம்தோறும், பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு, படிவங்கள் வழங்கப்பட்டு, பள்ளிகள் குறித்து தகவல் சேகரித்தனர்.
அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான பண்டிகை முன்பணம் ரூ.5000/- ஆக உயர்த்த அரசு முடிவெடுத்து உள்ளதாகவும், முறையான அறிவிப்பு ஓரிரு நாளில் வரும் என்று எதிர்ப்பார்க்கபடுகிறது.
அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான பண்டிகை முன்பணம் ரூ. 2000/- இருந்து ரூ.5000/- உயர்த்தி வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதாகவும் முறையான அறிவிப்பு இன்னும் ஓரிரு நாட்களில் வெளிவரும் என்று
எதிர்ப்பார்க்கப்படுவதாக என தலைமை செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் இது சார்பான கோப்புகளில் முதல்வர் கையெழுத்து இட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
எதிர்ப்பார்க்கப்படுவதாக என தலைமை செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் இது சார்பான கோப்புகளில் முதல்வர் கையெழுத்து இட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆசிரியர் தகுதித் தேர்வு - வெற்றி ரகசியங்கள்
ஆலோசனைகள்: * நீங்கள் தேர்ந்தெடுத்திருக்கும் மொழிப் பாடமான தமிழையும், விருப்பப் பாடமான, அறிவியல் அல்லது சமூக அறிவியல், விடைத்தாளில் அதற்கென ஒதுக்கப்பட்டுள்ள இடத்தில், நிழலிட்டு காட்டுவது அவசியம
* மறுதேர்வு எழுதுவோருக்கு, புதிய பதிவெண் வழங்கப்பட்டுள்ளது. இதை கவனத்தில் கொள்ளவும்.
* தேர்வு மையங்கள் அமைந்துள்ள பள்ளிகள், அதே பெயரில் கிளைகளை கொண்டிருப்பதால், மையம் எது என்பதை முதல் நாளே உறுதி செய்யுங்கள்.
* போட்டோ இல்லாமல் ஹால் டிக்கெட் வந்திருந்தால், அரசிடம் பதிவு பெற்ற அலுவலரிடமிருந்து பெறப்பட்ட, போட்டோ ஒட்டிய, தற்காலிக அடையாள அட்டையை எடுத்துச் செல்லுங்கள்
* விடைத்தாளில், ஒன்றன் பின்ஒன்றாக விடையளிப்பதே நல்லது. தெரிந்த வினாக்களுக்கு முதலில் விடையளித்து, தெரியாதவற்றுக்கு பின்னர் விடையளிக்கலாம் என, நினைப்பது சரியல்ல; விடைத்தாள், ஓ.எம்.ஆர்., தாளாக இருப்பதால், கவனக் குறைவாக, வரிசை மாறிவிட வாய்ப்புண்டு; எல்லா விடைகளுமே தவறாகும் அபாயம் நிகழலாம்.
பத்தாம் வகுப்பு நேரடி தனி தேர்வர் விண்ணப்பங்கள் : ஆயிரக்கணக்கில் நிராகரிப்பு
தமிழகம் முழுவதும், இம்மாதம், 15ம் தேதி முதல், பத்தாம் வகுப்பு தனி தேர்வு துவங்க உள்ள நிலையில், எட்டாம் வகுப்பு முடித்துவிட்டு, நேரடியாக, 10ம் வகுப்பு தனி தேர்வுக்கு விண்ணப்பித்த, ஆயிரக்கணக்கான மாணவ, மாணவியரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.