தலைமையாசிரியர் சத்துணவு சாப்பிட்ட பின் மாணவர்களுக்கு வழங்க வேண்டும்
காணொலி காட்சி ஆய்வு கூட்டத்தில் கலெக்டர் தர்ப்பகராஜ் உத்தரவு
தலைமையாசிரியர் சத்துணவு சாப்பிட்ட பின்னர் தான் மாணவர்களுக்கு வழங்க வேண்டும் என காணொளி காட்சி ஆய்வு கூட்டத்தில் கலெக்டர் உத்தரவிட்டுள் ளார்.
திருப்பத்தூர் மாவட் டத்தில் உள்ள அரசு மற் றும் அரசு உதவி பெறும் தொடக்க, நடுநிலை, உயர் நிலை, மேல்நிலைப்பள்ளி கள் மற்றும் சுயநிதி, நர்சரி, பிரைமரி, நடுநிலை, உயர் நிலை, மேல்நிலை மெட்ரி குலேஷன் பள்ளிகள், சிபி எஸ்சி மற்றும் ஐசிஐசி ஆகிய பள்ளிகளில் மாணவர்க ளின் பாதுகாப்பு நலனை கருதி அரசு வழிகாட்டு விதி முறைகளை பின்பற்றுதல் குறித்து பள்ளிக் கல்வித் துறை உயர்மட்ட அலுவ லர்களுடன் கலெக்டர் தர்ப்பகராஜ், தலைமையில் நேற்று காணொளி காட்சி மூலமாக ஆய்வு கூட்டம் நடந்தது.
பின்னர் கலெக்டர் காணொளி காட்சி வாயி லாக அனைத்து தலைமை ஆசிரியர்களிடம் கலெக் டர் பேசியதாவது: மாவட் டத்தில் உள்ள பள்ளிகளில் மாணவர்களுக்கு அத்தி யாவசிய தேவையான கழிப்பறைகள், கழிப்பிடங் கள், குடிநீர் போன்றவற்றை தூய்மையாக வைத்துக் கொள்வதை உறுதிப்படுத்த வேண்டும் பள்ளிவளாகம் முழுவதும் மின் கசிவற்ற வளாகமாக இருப்பதற்கு தலைமையாசிரியர்கள்
உறுதி செய்ய வேண்டும். மின்கசிவு உடைந்த நிலை யில் உள்ள ஸ்விட்ச் பாக்ஸ் கள் உடனடியாக அகற்றி ஆபத்து இன்றி இயங்கும் ஸ்விட்ச் பாக்ஸ்கள் நிறுவப் பட வேண்டும்.
பள்ளி வளாகத்தில் ஆழ் துளை கிணறுகள் மூடப்ப டாத பழைய கிணறுகள் குழிகள் போன்ற பயன்பா டற்ற தண்ணீர் தேங்கும் தொட்டிகள், கழிப்பிட தொட்டிகள் இருப்பின் அவ்வாறான பயன்பா டற்ற மாணவர்களுக்கு தீங்கு விளைவிக்கும் நிலை யில் உள்ளவற்றை அகற்றப் பட வேண்டும். மேலும் பாதுகாப்பான முறையில் மூடி வைக்க வேண்டும்.
பழுதடைந்த நிலை யில் உள்ள சுற்றுச்சுவர் கள், பள்ளி கட்டடங்கள் கழிப்பறைகள், அறிவியல் ஆய்வகங்கள் நுழைவாயில் மேலும்பள்ளி வளாகத்தில் இதுபோன்ற கட்டடங்கள் இருப்பின் உரிய அலுவல ரின் அனுமதிபெற்று உடன டியாக அதனை கற்றுவதற் கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
பாம்பு, விஷ பூச்சிகள் நடமாடும் வகையில் எக் காரணத்தைக் கொண்டும் பள்ளி வளாகத்தில் புதர் கள் மண்டி கிடக்காமல் உள்ளாட்சி அமைப்பு. பேரூராட்சி அமைப்பு மற் றும் நகராட்சி அமைப்புக ளிடம் தகவல் தெரிவித்து
கலெக்டர் தர்ப்பகராஜ்
உரிய பணியாளர்களை கொண்டு தூய்மையாக பராமரிக்கப்பட வேண் டும்.
மாணவ, மாணவி யர்கள் விளையாட்டு மற்றும் கல்வி சுற்றுலா வின் பொருட்டு வெளி மாவட்டங்களுக்கு வெளி பள்ளிகளுக்கு வெளி மாதி லங்களுக்கு அழைத்து செல்லும்போது உரிய அலுவலர்களிடம் எழுத் துப்பூர்வமான அனுமதி பெற்று உரிய ஆசிரியர்கள் உடன் அனுப்பிவைக்க ஏற் பாடு செய்ய வேண்டும். மாணவிகளை எப்போ தும் பெண் ஆசிரியர்கள் மட்டுமே அனுப்பி வைக்க வேண்டும்.
மாணவர்களோடு எப் போதும் ஆண் ஆசிரியர் களை மட்டுமே அனுப்பி வைக்க வேண்டும். தினந் தோறும் தலைமை ஆசிரி
யர் மற்றும் ஆசிரியர்கள் சுழற்சி முறையில் மதிய உணவை சுவைத்தறிந்த பிறகு சுகாதார முறையில் சமைப்பதை உறுதி செய்து கொண்ட பிறகுதான் மாணவர்கள் சாப்பிட அனுமதி வழங்க வேண் டும். பள்ளி வளாகத்தில் புகார் பெட்டிகளை வைக் கப்பட வேண்டும்.
இதை பெறப்படும் கடிதங்கள் 15 நாட்களுக்கு ஒரு முறை கண்டிப்பாக திறக்கப்பட்டு அதில் தெரி வித்துள்ள புகார்கள் தனி பதிவேட்டில் பதிவு மேற் கொண்டு மாவட்ட கல்வி அலுவலருக்கு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்.
எந்த ஒரு மாணவரை யும் எந்த ஒரு ஆசிரியகும் அவநம்பிக்கை உருவாக்கும் வகையிலான சொற்களை பயன்படுத்தக் கூடாது. பள்ளிகளில் உள்ளூர் காவல் நிலையம்/ மகளிர் காவல் நிலையத்தினுடைய தொலைபேசி எண்கள் மற்றும் குழந்தைகள் பாது காப்பு இலவச தொலை பேசி எண்கள் 1447 மற்றும் 1098, தலைமை ஆசிரியர் தொலைபேசி எண். ஆகி யவை மாணவர்கள் கண் டுகளிக்கும் வகையில் அறி விப்பு பலகை வைக்கப்பட வேண்டும்.
மாணவர்கள் பயணம் செய்யும் பேருந்துகள் மற் றும் பேருந்து நிலையங் கள் போன்ற இடங்களில்
மாணவர்களின் நடமாட் டம் நடவடிக்கைகள் மற்றும் பாதுகாப்பு எவ் வாறு உள்ளது என்பதை யும் ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்கள் அவ்வப்போது கண்கா ணிக்க வேண்டும்.
பள்ளி மாணவர்கள் வகுப்பறையில் மெது வாககற்கும் மாணவர்கள் கொண்டு சிறப்பாக கற் கும் மாணவர்கள் வரை அனைத்து நிலை மாண வர்களிடமும் ஒரே மாதி ரியான கற்பிக்கும் அணு குமுறையை ஆசிரியர்கள் கடைபிடிக்க வேண்டும். எக்காரணத்திற்கொண்டும் மாணவ மாணவியர்களை கழிப்பறைகள் மற்றும் சிறு நீர் கழிப்பிடங்கள் தூய்மை பணிகள் மேற்கொள்ள பயன்படுத்துவது தண்ட னைகுரிய குற்றமாகும்.
பெண் மருத்துவர்களை கொண்டு மாணவியர் களுக்கு உடல் ரீதியான பிரச்சனைகளை எவ்வாறு அணுவது என்பது குறித்தும் சுகாதாரம் பேணுவது குறித்தும் பள்ளிகளில் மருத்துவர்களை கொண்டு மாணவர்களிடையே அவ் வபோது அறிவுரைகளை பகிர்ந்துகொள்ளும் நடவ டிக்கைகளை மேற்கொள் ளப்பட வேண்டும். இவ் வாறு அவர் கூறினார்.
முதன்மை கல்வி அலு வலர் புண்ணியகோட்டி, மாவட்ட கல்வி கலர்கள் மற்றும் துறை சார்ந்த அலு வலர்கள் கலந்துகொண்ட னர்.