Half Yearly Exam 2024
Latest Updates
பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 05.12.2022
திருக்குறள் :
பால் :அறத்துப்பால்
இயல்:இல்லறவியல்
அதிகாரம்: அன்புடைமை
குறள் : 74
அன்புஈனும் ஆர்வம் உடைமை அதுஈனும்
நண்புஎன்னும் நாடாச் சிறப்பு.
அன்புஈனும் ஆர்வம் உடைமை அதுஈனும்
நண்புஎன்னும் நாடாச் சிறப்பு.
பொருள்:
அன்பு பிறரிடம் விருப்பம் உடையவராக வாழும் தன்மையைத் தரும்: அஃது எல்லாரிடத்தும் நட்பு என்றுசொல்லப்படும் அளவற்ற சிறப்பைத் தரும்
பழமொழி :
A rolling stone gathers no moss
அலைபாயும் மனத்தால் எதையும் செய்ய முடியாது
இரண்டொழுக்க பண்புகள் :
1. உலகின் மிக சிறந்த வைரம் நல் எண்ணங்கள்.
2. வைரம் நமக்கு போதிப்பது உறுதியாக இருந்தால் மட்டுமே ஒளிர முடியும். எனவே எந்த சூழ்நிலையிலும் உறுதியாக இருப்பேன்
பொன்மொழி :
ஒரு தேசத்தின் முதன்மையான நம்பிக்கை அதன் இளைஞர்களின் சரியான கல்வியில் உள்ளது. --டிசிடெரியஸ் எராஸ்மஸ்
பொது அறிவு :
1. கண்ணாடியை கண்டுபிடித்தவர் யார்?
ஆக்ஸ்பர்க், 1080 . (ஜெர்மனி ).
2.குளோரினை கண்டுபிடித்தவர் யார்?
கே. ஷீல்லி, 1774.
English words & meanings :
scent -odor, perfume.noun வாசனை. பெயர்ச் சொல். cent - Penny coin. least money value. noun. குறைந்த பணமதிப்பு. பெயர்ச் சொல்
ஆரோக்ய வாழ்வு :
ஒரு முட்டையில் வைட்டமின் ஏ, ஃபோலேட், வைட்டமின் பி 5, வைட்டமின் பி 12, வைட்டமின் டி, இரும்பு, கரோட்டினாய்டுகள், பாஸ்பரஸ், செலினியம் மற்றும் துத்தநாகம் உள்ளன. இதுபோல பல வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்த உணவு எதுவும் இல்லை. மேலும், ஒரு வேகவைத்த முட்டையில் 78 கிலோ கலோரி, ஒரு கிராம் கார்போஹைட்ரேட், 6 கிராம் புரதம், 9 கிராம் கொழுப்பு மற்றும் 187 மில்லிகிராம் கொழுப்பு உள்ளது
NMMS Q
36, 4, 18, 8, 9, 16, ? a)18. b) 32. c) 8. d) 9/2.
விடை: 9/2.
விளக்கம்: 36÷2 =18; 18÷2 = 9; 9÷2= 9/2
டிசம்பர் 05
கல்கி அவர்களின் நினைவுநாள்
கல்கி (9 செப்டம்பர் 1899 – 5 திசம்பர் 1954) புகழ் பெற்ற தமிழ் எழுத்தாளர் ஆவார். இரா. கிருஷ்ணமூர்த்தி என்ற இயற்பெயர் கொண்ட இவர் 35 சிறுகதைத் தொகுதிகள், புதினங்கள், கட்டுரைகள், பயணக்கட்டுரைகள் மற்றும் வாழ்க்கை வரலாற்று நூல்களை எழுதியுள்ளார். எனினும், மிகச் சிறந்த சமூக மற்றும் வரலாற்றுப் புதினங்களை எழுதியதற்காக பரவலாக அறியப்படுகிறார். இவர் எழுதிய பொன்னியின் செல்வன் புதினம் மிகப் புகழ் பெற்றதாகும். தன் படைப்புகள் மூலம் இந்திய தேசிய விடுதலை போராட்டத்திற்கும் பங்களித்திருக்கிறார். தியாகபூமி புதினம் திரைப்படமாகவும் எடுக்கப்பட்டது.
நெல்சன் மண்டேலா அவர்களின் நினைவுநாள்
நெல்சன் மண்டேலா (Nelson Rolihlahla Mandela, 18 சூலை 1918 – 5 திசம்பர் 2013), தென்னாப்பிரிக்காவின் மக்களாட்சி முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் குடியரசுத் தலைவர் ஆவார். அதற்கு முன்னர் நிறவெறிக்கு எதிராகப் போராடிய முக்கிய தலைவர்களுள் ஒருவராக இருந்தார். தொடக்கத்தில் அறப்போர் (வன்முறையற்ற) வழியில் நம்பிக்கை கொண்டிருந்த இவர், பிறகு ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸின் இராணுவப் பிரிவுக்கு தலைமை தாங்கினார். இவர்கள் மரபுசாரா கொரில்லாப் போர்முறைத் தாக்குதலை நிறவெறி அரசுக்கு எதிராக நடத்தினர். மண்டேலாவின் 27 ஆண்டு சிறைவாசம், நிறவெறிக் கொடுமையின் பரவலாக அறியப்பட்ட சாட்சியமாக விளங்குகிறது. சிறையின் பெரும்பாலான காலத்தை இவர் ராபன் தீவில் சிறிய சிறை அறையில் கழித்தார். 1990 இல் அவரது விடுதலைக்கு பிறகு அமைதியான முறையில் புதிய தென்னாப்பிரிக்கக் குடியரசு மலர்ந்தது. மண்டேலா, உலகில் அதிகம் மதிக்கப்படும் தலைவர்களில் ஒருவராக விளங்கினார்
நீதிக்கதை
வல்லவர் யார்?
ஒரு நாள் எறும்பு தரையில் மெல்ல ஊர்ந்து சென்று கொண்டிருந்தது. அப்போது பூரான் அதன் அருகே வந்தது. நண்பா! நான் வருவதைக் கூடக் கவனிக்காமல் எங்கே சென்று கொண்டிருக்கிறாய்? என்று கேட்டது. எறும்பு பூரான் நண்பா! உன்னைக் கவனித்துக் கொண்டிருந்தால் என் கடமையை நான் சரிவரச் செய்ய முடியாதே என்று சொன்னது. அப்படியென்ன முக்கியமான கடமை? என்று பூரான் கேட்டது.
மழைக்காலத்திற்குத் தேவையான உணவை வெயில் காலத்திலேயே தேடிச் சேர்த்து வைப்பது என் கடமை என்றது எறும்பு. உன்னிடம் பேசிக்கொண்டிருந்தால் என் கடமையைச் செய்ய முடியாது என்று கூறி எறும்பு சென்றுவிட்டது. பூரானுக்கு எறும்பின் மேல் வருத்தம். அதனால் எறும்பை மட்டம் தட்டியே தீர வேண்டும் என்று நினைத்துக்கொண்டது.
அடுத்த நாள் எறும்பு வரும் வழியில் நின்று எறும்பே, கடமையை சரிவரச் செய்வதால் மட்டும் நீ வல்லவனாக முடியாது!. உன்னால் என்னைப்போல வேகமாக ஊர்ந்து வர முடியுமா? அப்படி வந்தால் நீ என்னை விட வல்லவன் என்று ஒத்துக்கொள்கிறேன் என்றது. அதற்கு எறும்பு மிக அமைதியுடன் பூரானே, உன் அளவுக்கு வேகமாக என்னால் ஊர முடியாது. அந்த தைரியத்தில் நீ பேசுகிறாய். ஆனால், நான் செய்யும் சில காரியங்களை உன்னாலும் செய்ய முடியாது. அதனால் யார் வலியவன் என்ற பரிட்சையெல்லாம் வேண்டாம் என்று திரும்பவும் கூறியது. பூரானோ அப்படி என்ன சாகசத்தை நீ செய்வாய் என்று கேட்டது.
எறும்பு பூரானை ஒரு தண்ணீர் தொட்டியின் மேல் அமர்ந்து வேடிக்கை பார்க்கச் சொல்லிவிட்டு, கரையின் அருகில் இருந்த ஒரு துரும்பில் ஏறி தண்ணிரில் விழுந்து அந்த துரும்பைப் பிடித்துக்கொண்டு தண்ணீரில் மிதந்தது. பூரானைப் பார்த்து உன்னால் இப்படிச் செய்து காட்ட முடியுமா? என்று கேட்டது. பூரான் அப்போதுதான் தனது தவறினை உணர்ந்தது. பின்பு, பூரான் எறும்பிடம் மன்னிப்புக் கேட்டு சிறந்த நண்பனாகத் திகழ்ந்து வந்தது.
நீதி :
எல்லோருக்கும் சில வல்லமைகளும் சில இயலாமைகளும் இயற்கையிலேயே உண்டு.
இன்றைய செய்திகள்1
05.12.22
* ஜி-20 மாநாடு தொடர்பான ஆலோசனை கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் நாளை நடைபெற உள்ளது. இதில் கலந்துகொள்வதற்காக தமிழக முதல்வர் ஸ்டாலின் நாளை டெல்லி செல்கிறார்.
* பார்வையற்ற மாற்றுத் திறனாளிகள் உள்ளிட்ட 4 லட்சத்து 39,315 பேருக்கான ஓய்வூதியம் ரூ.1,000-ல் இருந்து ரூ.1,500-ஆக உயர்த்தி வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
* அந்தமான் அருகே உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக தமிழகத்தில் வரும் 7-ம் தேதி முதல் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
* ரேஷன் அட்டையுடன் வங்கிக் கணக்கை குடும்ப அட்டைதாரர்கள் இணைக்காவிட்டாலும் பொருட்கள் வழங்குவது நிறுத்தப்படாது என்று கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
* வீரர்கள் மற்றும் பொருட்களை ஏற்றிச் செல்வதற்கு பயன்படுத்தப்படும் பழைய ஏஎன்-32 ரக விமானங்களுக்கு மாற்றாக நவீனசி-295 ரக விமானங்களை வாங்குவது குறித்து இந்திய விமானப்படை பரிசீலித்து வருகிறது.
* கரோனா கட்டுப்பாட்டை நீக்கினால் 20 லட்சம் பேர் உயிரிழப்பர் - சீன மருத்துவ நிபுணர்கள் கணிப்பு.
* சுற்றுச்சூழல் பங்களிப்புக்காக வழங்கப்படும் மதிப்புமிக்க எர்த்ஷாட் பரிசை, இந்த ஆண்டு இந்திய ஸ்டார்ட்அப் நிறுவனம் வென்றுள்ளது.
* தென் மண்டல சீனியர் நீச்சல் போட்டி: தமிழக வீராங்கனை தீக்ஷா 2 தங்கம் வென்றார்.
* இந்தியாவுக்கு எதிரான ஹாக்கி தொடர் : 4-1 என வென்றது ஆஸ்திரேலியா.
Today's Headlines
* A consultative meeting regarding the G-20 summit will be held tomorrow under the chairmanship of Prime Minister Modi. Tamil Nadu Chief Minister Stalin is going to Delhi tomorrow to participate in it.
* Tamil Nadu Chief Minister Stalin has announced that the pension for 4 lakh 39,315 people, including the blind and differently abled, will be increased from Rs.1,000 to Rs.1,500.
*According to the Meteorological Department, there is a possibility of heavy rain in Tamil Nadu from the 7th due to a new low pressure area forming near the Andamans.
*Cooperatives, Food and Consumer Protection Department Secretary J. Radhakrishnan said that even if the family card holders do not link the bank account with the ration card, the supply of goods will not be stopped.
* The Indian Air Force is considering purchasing the modern C-295s to replace the aging AN-32s used to transport personnel and supplies.
* 20 lakh people will die if Corona safety measures removed - Chinese medical experts predict.
*An Indian startup has won the prestigious Earthshot Prize for environmental contribution this year.
* South Zone Senior Swimming Competition: Tamil Nadu's Deeksha wins 2 golds.
*Hockey series against India: Australia won 4-1.
Prepared by
Covai women ICT_போதிமரம்