Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 03.08.2022

    திருக்குறள் :

பால்:பொருட்பால்

இயல்:குடியியல்

அதிகாரம்: நன்றியில் செல்வம்

குறள் : 1005
கொடுப்பதூஉம் துய்ப்பதூஉம் இல்லார்க்கு அடுக்கிய
கோடியுண் டாயினும் இல்.

பொருள்:
கொடுத்து உதவும் பண்பினால் இன்பமுறும் இயல்பு இல்லாதவரிடம், கோடி கோடியாகச் செல்வம் குவிந்தாலும் அதனால் பயன் எதுவுமில்லை

பழமொழி :

Every bird loves to hear itself singing.
தம் புகழைத் தாமே பாடாதார் இல்.

இரண்டொழுக்க பண்புகள் :

1. கடவுள் எல்லோருக்கும் சமமாக வழங்கிய பொதுவான செல்வம் நேரம் அதை வீண் அடித்தவன் ஏழை பயன் படுத்தியவன் பணக்காரன். 

2. நம்மை அடுத்தவரோடு ஒப்பிட்டு பார்க்காமல் நான் கடவுளால் தனித் தன்மையோடு அற்புதமாக படைக்க பட்டவன் என்று எண்ணி வாழுங்கள். வாழ்க்கை சிறக்கும்

பொன்மொழி :

ஒரே ஒரு முறை நடந்தால் அது தடமாக மாறாது. அதே போல் உங்கள் லட்சியத்தை ஒரே ஒருமுறை நினைப்பதன் மூலம் அடைய முடியாது அதற்கு நீங்கள் உழைக்க வேண்டும்....விவேகானந்தர்

பொது அறிவு :

1. இரத்தம் வடிதல் போன்றவற்றால் குறையும் விட்டமின் எது? 

விட்டமின் கே . 

2.இம்மியூனிட்டி என்றால் என்ன ? 

எதிர்பாற்றல்.

English words & meanings :

kitch·en·ware - utensils like pot and pan used in the kitchen. Noun. சமையலறை பாத்திரங்கள். பெயர்ச் சொல்

ஆரோக்ய வாழ்வு :

சிவப்பு திராட்சையில் பிளவனாய்டுகள் உள்ளன. இவற்றில் காணப்படும் ரெஸ்வெராட்ரோல் என்ற ஆன்டி ஆக்ஸிடன்கள் சிறுநீரக வீக்கத்தை குறைக்க உதவுகிறது. அடிக்கடி சிவப்பு திராட்சை எடுத்து வருவது சிறுநீரகத்தை சுத்தம் செய்ய உதவும்.




NMMS Q 38:

அடுத்தடுத்து வரும் மூன்று முழுக்களின் கூடுதல் 39. அதில் இரண்டாவது எண்_______

 விடை: 13

நீதிக்கதை

முதலையும்,நண்டும்

ஒரு காட்டை ஒட்டி ஒரு சிறு நதி ஓடிக்கொண்டிருந்தது. அதில் ஒரு முதலையும் ஒரு நண்டும் இருந்தன. அவை இரண்டும் நதியில் இருந்த மீன்களை உண்டு உயிர் வாழ்ந்தன. மற்ற சில விலங்குகளும் தண்ணீர் அருந்த வருவதுண்டு.

கோடைகாலம் வந்ததது. நதியில் நீர் வரத்தும் குறைய மீன்களே இல்லாத நிலை வந்தது. தண்ணீர் குறைந்ததால், முதலைக்கு பயந்து விலங்குகள் தண்ணீர் அருந்தவும் வருவதில்லை. உண்ண எதுவும் இல்லா நிலையில், ஒரு நாள், முதலை நண்டிடம், நீ விலங்குகளிடம் சென்று நான் இறந்து விட்டதாகச் சொல்.

அதை நம்பி ஏதேனும் விலங்குகள் வந்தால் அதை அடித்து நாம் உண்ணலாம் என்றது. நண்டும் அப்படியே செய்ய. நரி ஒன்று முதலையை உண்ணலாம் என ஆசையுடன் நண்டுடன் வந்தது.

செத்தது போலக்கிடந்த முதலையைப் பார்த்ததும் நரிக்கு சந்தேகம் வந்தது. உடனே தன் மூளையை உபயோகித்து முதலை செத்தது போலத்தெரியவில்லையே! அப்படி இறந்திருந்தால் அதன் வால் ஆடுமே என்றது. இதைக் கேட்டவுடன் முதலை தன் வாலை ஆட்டியது. அதைப் பார்த்த நரி, நண்டிடம் செத்த முதலை எப்படி வாலை ஆட்டும். நீங்கள் இருவரும் பொய் சொல்கிறீர்கள் என கூறிவிட்டு ஓடியது. அறிவில்லாத முதலையும், நண்டும் ஏமாந்தது.

இன்றைய செய்திகள்

03.08.22


ஸ்டார்ட் அப் தமிழ்நாடு திட்டத்தால் வட்டார அளவில் புத்தொழில் நிறுவனங்கள் உருவாவதன் மூலம் 3 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாகும் வாய்ப்புள்ளது  என்று தமிழக நிதியமைச்சர் பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

ரெட் அலர்ட்: நீலகிரி, கன்னியாகுமரி விரைந்தது தேசிய பேரிடர் மீட்புப் படை.

காஞ்சிபுரம் அருகே பரந்தூரில் சென்னையின் 2-வது விமான நிலையம் அமைய உள்ளது. சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் அனுமதி அளித்ததும் அதற்கான பூர்வாங்கப் பணிகள் தொடங்கும் என்று மத்திய இணை அமைச்சர் வி.கே.சிங் தெரிவித்துள்ளார்.

மத்திய மருந்து கட்டுப்பாட்டு வாரிய அனுமதியின்றி முகக்கவசம், பிபிஇ கிட் உபகரணங்கள் தயாரிக்க தடை.

அல்-காய்தா அமைப்பின் தலைவர் அய்மான் அல்- ஜவாஹிரி கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்கப் படை நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்டதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

திருச்சியில் நடைபெற்ற மாநில அளவிலான துப்பாக்கிச் சுடும் போட்டியில் என்சிசி வீரர்கள், வீராங்கனைகள் 22 பதக்கங்களை வென்று சாதனை.

அண்டோரா நாட்டில் நடந்த சர்வதேச சதுரங்க போட்டியில் தமிழ்நாட்டின் கிராண்ட் மாஸ்டர் இனியன் சாம்பியன் பட்டம் வென்றார்.

காமன்வெல்த் போட்டி: இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம் - பளுதூக்குதலில் ஹர்ஜிந்தர் கவுர் வெண்கலப் பதக்கம் வென்று அசத்தல்.

Today's Headlines

Tamil Nadu Finance Minister PDR Palanivel Thiagarajan has said that the start-up Tamil Nadu project is likely to create over 3 lakh jobs by creating a regional level.

Red Alert: Nilgiris, Kanyakumari rushed National Disaster Rescue Force.

The 2nd airport of Chennai will be built at Paranthur near Kanchipuram. Union Minister of State for Aviation VK Singh said that the Ministry of Civil Aviation will begin the preliminary work.

Prohibition of producing facial and PPE kit equipment without the permission of the Central Drug Control Board.

It is reported that Ayman al-Zawahiri, the leader of the al-Qaeda organization, was killed. Reuters news agency reported that the US forces in Afghanistan were killed.

NCC players won 22 medals in the state-level shooting competition in Trichy.

◆Master Iniyan, Grand Master of Tamil Nadu won in the international chess competition in Andora.

Commonwealth Games: One more medal for India - Harjinder Kaur won the bronze medal
 
 Prepared by

Covai women ICT_போதிமரம்

School Calendar - August 2022

 


 

Ennum Ezhuthum - August 1st Week Lesson Plan

 

TRB Polytechnic Lecture - Provisional Selected List Published


Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive