Half Yearly Exam 2024
Latest Updates
பள்ளிக் கல்வி துறையில் தொகுப்பூதியத்தில் பணிபுரியும் மாற்றுத் திறனாளிகள் பணி நிரந்தரம் - SPD Proceedings!
மாற்றுத் திறனாளி இயக்குநரின் கடிதத்தில் அரசாணை நிலை எண் 151 , சமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்டம் ( சந 4 ) த் துறை நாள் 16.10.2008 ன்படி தொகுப்பூதியத்தில் பணிபுரியும் மாற்றுத் திறனாளிகளை பணிவரன்முறைப்படுத்திட கோரும் கோரிக்கை குறித்து 08.04.2022 அன்று மாண்புமிகு ( ச.ந. ( ம ) ம.உ . ) துறை அமைச்சர் முன்னிலையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் இது குறித்து பரிசீலனை செய்யுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து தொகுப்பூதியத்தில் அரசால் ஒப்பளிக்கப்பட்ட பணியிடங்களில் இரண்டு ஆண்டுகளுக்கு மேல் பணிபுரியும் மாற்றுத் திறனாளி விவரங்களை அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின்கீழ் அனைத்து வகை பணியிடங்களிலும் தற்போது பணிபுரிந்து வரும் மாற்றுத் திறனாளிகள் விவரங்களை கீழ்க்கண்ட படிவத்தில் பூர்த்தி செய்து 24.06.2022 - க்குள் மின்னஞ்சல் மூலம் தவறாது அனுப்பி வைக்குமாறு அனைத்து கூடுதல் முதன்மைக் கல்வி அலுவலர்களும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்