திருக்குறள் :
பால்:பொருட்பால்
இயல்: நட்பியல்
அதிகாரம்: சூது
குறள் : 931
வேண்டற்க வென்றிடினும் சூதினை வென்றதூஉம்
தூண்டிற்பொன் மீன்விழுங்கி அற்று.
பொருள்:
வெற்றியே பெறுவதாயினும் சூதாடும் இடத்தை நாடக்கூடாது அந்த வெற்றி, தூண்டிலின் இரும்பு முள்ளில் கோத்த இரையை மட்டும் விழுங்குவதாக நினைத்து மீன்கள் இரும்பு முள்ளையே கௌவிக் கொண்டது போலாகிவிடும்
பழமொழி :
Better buy than borrow.
தனக்கென்று இருந்தால் சமயத்துக்குதவும்.
இரண்டொழுக்க பண்புகள் :
1.நன்மை என்றாலும் தீமை என்றாலும் நான் எதை விதைப்பேனோ அதை அறுப்பேன்.
2. எனவே கீழ்படிதல், அமைதி, பொறுமை போன்ற நல் விதைகளை இம்மாணவ பருவத்தில் விதைக்க முயற்சிப்பேன்
பொன்மொழி :
பிறருடைய குற்றம் காண்பதிலும் பிறரைக் குறை சொல்வதிலும் நேரத்தை செலவிடாதீர்கள்.___சுவாமி விவேகானந்தர்
பொது அறிவு :
1. முசோலினி வெளியிட்ட செய்தித்தாளின் பெயர் என்ன?
அவந்தி.
2." உயிரியல் சொர்க்கம்" என்றழைக்கப்படுவது எது?
மன்னார் வளைகுடா.
English words & meanings :
nodule - small round lump especially on a plant,
Nectarine - deliciously sweet summertime fruit. அமிர்தம் போன்ற சுவையுடய சதைப் பற்று கொண்ட கனி
ஆரோக்ய வாழ்வு :
கற்றாழையை நன்கு சுத்தம் செய்து அதனை தினமும் முகத்தில் தடவி வந்தால் முகத்தில் உள்ள பருக்கள், கண் கருமை, சுருக்கம், முகத்தில் வறட்சி, முகத்தில் எண்ணெய் தன்மை, அனைத்தும் நீங்கிவிடும். 2. தினமும் காலையில் வெறும் வயிற்றில் கற்றாழையை சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் வழிகள், மற்றும் வயிற்றுப்போக்கு, வாயுவு , ஆகியவை சீராகும்தலையில் உள்ள பொடுகு, வறட்சி தன்மை, புண், ஆகியவை நீங்கி கூந்தல் வளர உதவுகிறது.
கணினி யுகம் :
Ctrl + Space - Select Column.
Ctrl + Enter - Fill selection
ஏப்ரல் 23
உலகப் புத்தக நாள் (World Book Day)
உலகப் புத்தக நாள் (World Book Day) அல்லது உலகப் புத்தக மற்றும் பதிப்புரிமை நாள் (World Book and Copyright Day) அல்லது உலக புத்தக நாள், என்பது வாசித்தல், பதிப்பித்தல் மற்றும் பதிப்புரிமையூடாக அறிவுசார் சொத்துக்களைப் பாதுகாத்தல் போன்றவற்றை வளர்க்கும் நோக்குடன் ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல் மற்றும் பண்பாட்டு நிறுவனம் (யுனெஸ்கோ) ஆண்டுதோறும் ஏப்ரல் 23 ஆம் நாளன்று ஒழுங்கு செய்யும் ஒரு நிகழ்வு ஆகும். இது 1995 ஆம் ஆண்டு முதன் முதலாகக் கொண்டாடப்பட்டது. பாரிஸ் நகரில் 1995 ஆகத்து 25 முதல் நவம்பர் 16 வரை நடந்த யுனெஸ்கோவின் 28வது மாநாட்டில் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்படது. அத்தீர்மானம் வருமாறு,
"அறிவைப் பரப்புவதற்கும், உலகெங்கிலும் உள்ள பல்வேறு கலாசாரங்கள் பற்றிய விழிப்புணர்வினைப் பெறுவதற்கும், புரிதல், சகிப்புத்தன்மை போன்றவற்றின் மூலம் மனிதர்களின் ஒழுக்கத்தினை மேம்படுத்தவும், புத்தகம் ஒரு சிறந்த கருவியாக உள்ளதால் ஏப்ரல் 23 உலக புத்தக தினமாக கொண்டாடப்படும்"
நீதிக்கதை
கவலை பறந்தது
குட்டி யானைக்கு தாகம் எடுத்தது. குளத்தை தேடி சென்றது. கரையில் பசுமையான மரங்கள் பூத்துக்குலுங்கின. ஒரு மரத்தில் கிளி ஒன்று வந்து அமர்ந்தது. அதன் பச்சை நிறமும் சிவந்த வாயும் யானை குட்டியை மிகவும் கவர்ந்தது. என்னை மட்டும் கடவுள் இப்படி கருப்பாக படைத்துவிட்டாரே இந்த கிளி இவ்வளவு அழகாக இருக்கிறதே என்று ஏங்கியது. அப்போது குக்கூ என்ற குரல் கேட்டது. குரல் வந்த திக்கில் குயில் ஒன்று பாடியது. கருப்பாக இருந்தாலும் குயில் இனிமையாக பாடுகிறதே என் குரலும் இருக்கிறதே என ஒரு தடவை பிளிறியது. சில வண்ணத்துப்பூச்சிகள் பூக்களில் தேன் குடிப்பதை கண்டதும் ஐயோ என் தும்பிக்கை இந்த பூவின் மீது பட்டாலே அது உதிருமே பின் எப்படி தேன் குடிப்பது? என வருந்தியது.
தன்னைத் தவிர மற்ற அனைவரும் சந்தோஷமாக இருப்பதை எண்ணி கண்ணீர் விட்டது. குட்டியை காணாத தாய் யானை குளத்திற்கு வந்தது. குட்டியின் நிலை கண்ட தாய் யானை கண்ணே உன் குறையை மட்டும் பார்க்கும் நீ நிறைகளை பார்க்க தவறிவிட்டாய். கடவுள் நமக்கு பலமான தும்பிக்கை வெண்ணிற தந்தம் எல்லாம் தந்திருக்கிறார். யானை இருந்தாலும் ஆயிரம் பொன் இறந்தாலும் ஆயிரம் பொன் என்று கூட சொல்வார்கள். சொல்லப்போனால் முதற்கடவுள் பிள்ளையார் கூட ஆனைமுகன் தான் இதோ இந்த மரத்தைக்கூட உன்னால் பிடுங்கி எறிந்துவிட முடியும் அனைவருக்கும் நிறை குறை உண்டு. குறைகளை மறந்து நிறைகளை எடுத்து வாழப் பழக வேண்டும் என்றது. தாயின் பேச்சைக் கேட்ட குட்டியானையின் கவலை பறந்தது.
இன்றைய செய்திகள்
23.04.22
📚275 கல்லூரி விடுதிகளில் 2 கோடியே 20 லட்சம் ரூபாய் செலவில் இணைய வழி நூலகம் (E-Library) அமைக்கப்படும் என்பது உள்ளிட்ட அம்சங்களுடன் தமிழக சட்டப்பேரவையில் பிற்படுத்தப்பட்டோர், மிக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின்போது அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.
📚மே 8-ல் தமிழகத்தில் 1 லட்சம் இடங்களில் சிறப்பு மெகா கரோனா தடுப்பூசி முகாம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்.
📚மாமல்லபுரம் கடற்கரையில் ஒதுங்கிய சங்ககால சிற்ப சிதறல்கள், கல்தூண்கள்: தொல்லியல் துறை அதிகாரிகள் ஆய்வு.
📚அதிகரிக்கும் மின்வெட்டும், நிலக்கரி பற்றாக்குறையும்: மின்சார நெருக்கடி நிலையில் இந்தியா.
📚பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் 2 நாள் பயணமாக இந்தியா வருகை.
📚உக்ரைனின் மரியுபோல் நகரை ரஷ்ய ராணுவம் கைப்பற்றியது.
📚ஆசிய விளையாட்டுக்கான இந்திய பேட்மிண்டன் அணியில் இடம்பெற்ற 14 வயது வீராங்கனை உன்னத்தி ஹூடா.
📚இந்த ஆண்டுக்கான விஸ்டன் இதழின் சிறந்த வீரர்கள் பட்டியலில் இந்திய வீரர்கள் இடம்பிடித்துள்ளனர்.
Today's Headlines
📚Announcements have been made during the debate on the Welfare of Backward and Backward Classes Welfare Grants in the Tamil Nadu Legislative Assembly with features including the setting up of an e-library at a cost of Rs. 2 crore and 20 lakhs in 275 college hostels.
📚 Special mega corona vaccination camps on May 8 in 1 lakh places in Tamil Nadu: information by Minister Ma Subramanian.
📚In the seashore of Mamallapuram, some Sangam Period scatterings of statues and stone pillars surfaced. Now Archaeological Department started their excavations at Mamallapuram beach.
📚Rising power cuts and coal shortages: India in a state of power crisis.
📚British Prime Minister Boris Johnson arrives in India on a two-day visit.
📚The Russian army captured the city of Mariupol in Ukraine.
📚Unnathi Hooda, a 14-year-old member was placed on the Indian badminton team for the Asian Games.
📚The Indian players have been included in this year's Wisden Magazine's "Players of the Year" list.
Prepared by
Covai women ICT_போதிமரம்