Half Yearly Exam 2024
Latest Updates
பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 06.04. 22
திருக்குறள் :
பால்:பொருட்பால்
இயல்: நட்பியல்
அதிகாரம்: பகைத்திறம் தெரிதல்
குறள் : 872
வில்லேர் உழவர் பகைகொளினும் கொள்ளற்க
சொல்லேர் உழவர் பகை.
பொருள்:
படைக்கலன்களை உடைய வீரர்களிடம் கூடப் பகை கொள்ளலாம் ஆனால் சொல்லாற்றல் மிக்க அறிஞர் பெருமக்களுடன் பகை கொள்ளக் கூடாது
பழமொழி :
A tree is known by its fruit
நல்லார் பொல்லாரை நடக்கையால் அறியலாம்.
இரண்டொழுக்க பண்புகள் :
1. எனது நடை, ஆடை மற்றும் ஒழுக்கத்தின் மூலம் நான் ஒரு மதிப்பு மிகு மாணவன் என்பதை மற்றவர்க்கு உணர்த்துவேன்.
2. ஆசிரியர்கள் பெற்றோரிடம் மரியாதை மற்றும் கீழ் படிதல் ஆக நடந்து கொள்வேன்.
பொன்மொழி :
உங்கள் மகனுக்கு 1,000 தங்கக் காசுகளைக் கொடுப்பதை விட திறமையைக் கொடுப்பது சிறந்தது___ சீனப் பழமொழி
பொது அறிவு :
1.இந்தியாவின் தேசிய வருமானத்தில் முக்கிய பங்கு வகிப்பது
- வேளாண்மை
2.மிக அதிக நீளமான கடற்கரையைக் கொண்ட தென் மாநிலம் எது? - ஆந்திரப்பிரதேசம்
English words & meanings :
Consumers - a person buys things and uses it, நுகர்வோர்,
cycle - bicycle a mode of transport, மிதிவண்டி, cycle - facts of events happens repeatedly, நிகழ்வு சுழற்சி
ஆரோக்ய வாழ்வு :
பாசிப்பயறில் நிறைந்துள்ள பொட்டாசியம், மெக்னீசியம், தாமிரம், மற்றும் இரும்புச்சத்து ஆகியவை ரத்தசோகையை சமாளிக்க பெருமளவில் உதவி புரிகிறது. எனவே பாசிப்பயிறு பெண்களுக்கு மிகச் சிறந்த உணவாக பார்க்கப்படுகிறது. பாசிப்பருப்பு ஆன்டிஆக்சிடன்ட் பண்புகளை கொண்டிருக்கிறது. இவை சருமத்தை சுத்தம் செய்து பளிச்சென்று வைக்க உதவுகிறது. பாசிப்பருப்பில் வைட்டமின் ஏ, பி ,சி, ஈ மற்றும் கனிமச்சத்துக்களான கால்சியம், இரும்புச்சத்து மற்றும் பொட்டாசியம் போன்றவை அதிகம் உள்ளது. மேலும் உடல் எடையை குறைக்க உதவுகிறது. இதிலுள்ள அதிகப்படியான புரோட்டின் மற்றும் நார்ச்சத்தால் இது உடலில் உள்ள கொலஸ்ட்ராலின் அளவை குறைக்கிறது. இதில் 24 சதவீத புரோட்டின் உள்ளது.
கணினி யுகம் :
Ctrl + O - Open options.
Ctrl + P - Open the print window.
நீதிக்கதை
முட்டாள் தவளையும், புத்திசாலி தவளையும்
ஒரு நாள் அதிக மழை பெய்தது. ஏரி நிறைந்து வழியும் அளவுக்கு மழை. அந்த ஏரியின் நீர் குளிர்ச்சியை தாங்க முடியாத ஒரு தவளை, மழை நின்றதும் கிணற்று நீர் வெது வெதுப்பாக இருக்குமே என்பதால் கிணற்றிற்குள் குதித்தது.
அந்தக் கிணற்றில் பல காலமாக வாழ்ந்து வந்த ஒரு தவளை இந்தப் புதிய தவளையை கண்டு மகிழ்ந்து வரவேற்றது. பின் பொந்தில் வைத்திருந்த உணவு வகைகளைப் புதிய தவளைக்குத் தந்தது.
இரண்டு தவளைகளும் பேசிக்கொண்டிருந்தன. கிணற்றிலிருந்த மற்ற தவளைகளுக்குப் புதிய தவளை வந்தது பிடிக்கவில்லை. புதிய தவளையை துரத்திவிட முடிவு செய்தன.
இரண்டு தவளைகளும் பேசிக்கொண்டிருப்பதை அருகே சென்று வேடிக்கை பார்த்தன. அப்போது அக்கிணற்றுத் தவளை ஏரித் தவளையிடம், நண்பனே! நீ இத்தனை நாளும் எங்கே தங்கியிருந்தாய்? எனக் கேட்டது.
நான் ஏரியில் தங்கி இருந்தேன் அதில் மீன், ஆமை, முதலை ஆகியவை உண்டு கிணற்றைவிட மிகப்பெரியது ஏரி என்றது, ஏரித் தவளை.
கிணற்றுத் தவளை நம்பவில்லை. நண்பா நீ பொய் சொல்லுகிறாய். இந்த கிணற்றைவிட பெரிய நீர் நிலை உலகத்தில் இருக்க முடியாது என்றது. ஏரித் தவளை எவ்வளவோ எடுத்துச் சொல்லியும், கிணற்றுத் தவளைகள் நம்பவில்லை.
எல்லாத் தவளைகளும் ஏரித் தவளையைப் பார்த்து நீ பொய்யன் என்று கூறி ஏரித் தவளையைத் தாக்க முயன்றன. அப்போது, கிணற்றிலிருந்து நீர் எடுக்க ஒரு பெண் தோண்டியை இறக்கினாள் அதனுள் ஏரித் தவளை, தாவிக்குதித்து தோண்டித் தண்ணீர்ருடன் மேலே சென்று ஏரியை நோக்கிச் சென்றது.
நீதி :
முட்டாள்களிடம் இருப்பதை விட தனியே செல்வதே சிறந்தது.
இன்றைய செய்திகள்
06.04.22
மாநில கல்விக் கொள்கையை உருவாக்க ஓய்வு பெற்ற நீதியரசர் முருகேசன் தலைமையில், 13 பேர் கொண்ட குழு அமைப்பு
விஸ்வநாதன் ஆனந்த், டி.எம்.கிருஷ்ணா உள்ளிட்டோர் அடங்கிய குழு ஓராண்டு காலத்துக்குள் மாநில கல்விக் கொள்கையை வடிவமைக்கும்.
சென்னையில் 2000 அரசு பேருந்துகளில் நவீன தொழில் நுட்ப சிசிடிவி கேமராக்கள் விரைவில் பொருத்தப்படும்.
பெண் பயணிகளின் பாதுகாப்புக்காக விரைவில் புதிய செயல்திட்டம் - அமைச்சர் சிவசங்கர் அறிவிப்பு.
டேபிள் டென்னிஸ் தரவரிசை : இரட்டையர் பிரிவில் இந்தியாவின் மணிகா பத்ரா- அர்ச்சனா காமத் ஜோடி முன்னேற்றம்.
கொரியாவில் நடந்து வரும் கொரியா ஓபன் பேட்மின்டன் போட்டியில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் முதல் சுற்றில் இந்திய வீரர் லக்ஷயா சென் , கொரியாவின் சோய் ஜி ஹூன் மோதினர்
விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் 21-16,21-18 என்ற செட் கணக்கில் லக்ஷயா சென் வெற்றி பெற்றார் .
Today's Headlines
A 13-member panel headed by retired Justice Murugesan to formulate state education policy is formed
A committee including Viswanathan Anand and DM Krishna will formulate the state education policy within a year.
Hitech CCTV cameras will soon be installed in 2000 state government buses in Chennai.
For the safety of female passengers - a new scheme will be implemented soon says Minister Sivasankar's announcement.
Table tennis rankings: India's Manika Bhadra-Archana Kamath pair advance in doubles.
Laxia Sen and Choi Ji Hoon of Korea clash in the first round of the men's singles at the Korea Open Badminton Tournament in Korea. Lakshaya Sen won the set 21-16, 21-18 in a thrilling match.
Prepared by
Covai women ICT_போதிமரம்