Half Yearly Exam 2024
Latest Updates
பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 07.03.22
திருக்குறள் :
பால்:பொருட்பால்
இயல்: நட்பியல்
அதிகாரம்: தீ நட்பு
குறள் எண் : 824
குறள்:
முகத்தின் இனிய நகாஅ அகத்தின்னா
வஞ்சரை அஞ்சப் படும்.
பொருள்:
நாம் காணும்போது முகத்தால் இனிதாகச் சிரித்து, மனத்தால் எப்போதும் பகைவராய் வாழும் வஞ்சகர்களுக்கு அஞ்சவேண்டும்.
பழமொழி :
No leaf moves but God wills it.
அவனின்றி ஓர் அணுவும் அசையாது
இரண்டொழுக்க பண்புகள் :
1. தனித்துவமே மகத்துவம் எனவே எப்போதும் என் தனித் தன்மையை இழக்க மாட்டேன்
2. எனது ஒலி உரக்க ஒலிக்க செய்வேன் பிறரின் எதிரொலியாக இருக்க மாட்டேன்
பொன்மொழி :
அழகு உன்னை ஆளக் கூடாது.. அறிவுதான் ஆளவேண்டும்.. பிரிவு உன்னை ஆளக்கூடாது.. தெளிவு தான் உன்னை ஆளவேண்டும்.!”......? தங்க மாரியப்பன்
பொது அறிவு :
1.மூன்று இதயங்களை கொண்ட உயிரினம் எது?
ஆக்டோபஸ்.
2. உலகின் மிகச் சிறிய நாடு எது?
வத்திக்கான்.
English words & meanings :
A stone's throw - very near, மிக அருகில்.
Blew me away - extremely impressed. அதிகம் கவர படுதல்
ஆரோக்ய வாழ்வு :
ப்ரோக்கோலி நார்ச்சத்து நிறைந்து இருப்பதால் கொழுப்பை குறைக்கும். அலர்ஜியால் ஏற்படும் பிரச்சினைகளைக் குறைக்கும். மார்பகப் புற்றுநோய் வராமல் தடுக்கும். இதயத்தை ஆரோக்கியமாக்கும் .நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். உயர் ரத்த அழுத்தப் பிரச்சினையை சரி செய்யும்.
கணினி யுகம் :
Delete a word - Ctrl Backspace.
Find and Replace - Ctrl F
நீதிக்கதை
புள்ளிமான்கள்
ஒரு காட்டில் இரண்டு புள்ளி மான்கள் ஒரே மாதிரியாக இருந்தன. இணைப்பிரியாத நண்பர்களாக இருந்தன. எங்கு சென்றாலும் சேர்ந்தேதான் செல்லும். ஒரு நாள் மழை பெய்தது. மான்களால் விளையாட முடியவில்லை. மழை நின்ற பிறகு வெளியே சென்று இன்னும் மழை வருமா என்று இரண்டு மான்களும் மேலே பார்த்தன. அப்போது மேகத்திற்குள்ளிருந்து வெளியே வந்தது சூரியன். மான்கள் இரண்டும் சூரியனிடம், இன்னும் மழை வருமா? என்று கேட்டன. அதற்கு சூரியன், நான் வந்து விட்டேனே, இனி எப்படி மழை வரும்? என்று சொல்லி மான்களைப் பார்த்து சிரித்தது.
எங்களைப் பார்த்து ஏன் சிரிக்கிறாய் என்றது ஒரு மான். நீங்கள் இருவரும் ஒரே மாதிரியாக இருக்கிறீர்கள்! அது தான் எனக்குச் சிரிப்பு வந்து விட்டது! தவறாக எடுத்துக்இருக்குாதீர்கள். நீங்கள் யார்? நாங்கள் தான் அழகான இரண்டு புள்ளிமான்கள். நாங்கள் இருவரும் நண்பர்கள் என்றன புள்ளிமான்கள்.
சரி, உங்களில் யார் திறமையானவர்கள்? என்று கேட்டது சூரியன். நாங்கள் இருவருமே திறமையானவர்கள் தான்! என்றது புள்ளிமான்கள். சூரியன் சற்று யோசித்துவிட்டு சரி, அப்படியென்றால் நான் ஒரு போட்டி வைக்கிறேன். அதோ அங்கு ஒரு மரம் இருக்கிறது பாருங்கள். உங்களில் அந்த மரத்தை யார் முதலில் தொடுகிறார்களோ அவர்கள் தான் திறமையானவர்கள். இந்தப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு நான் ஒரு பரிசு தருவேன் என்றது.
சூரியன் பரிசு தருவதாகச் சொன்னதும் இரண்டு மான்களும் ஓடத்தொடங்கின. ஆனால் மரத்தைத் தொடாமல் நின்று கொண்டிருந்தன. சூரியன் ஏன் மரத்தைத் தொடாமல் அப்படியே நின்று கொண்டிருக்கிறீர்கள்? என்று கேட்டது. ஒரு புள்ளி மான் சொன்னது, நான் என் நண்பனுக்கு விட்டுக்கொடுத்து விட்டேன் என்றது. இன்னொரு புள்ளிமானும், நானும் என் நண்பனுக்கு விட்டுக்கொடுத்து விட்டேன் என்று சொன்னது.
இதைக் கேட்டு பெரிதும் மகிழ்ந்த சூரியன் சொன்னது, அழகான இரண்டு புள்ளி மான்களே! உங்கள் ஒற்றுமையைப் பார்த்து நான் மகிழ்ச்சியடைகிறேன். நீங்கள் இருவரும் எப்போதும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். உங்களுக்கு நான் ஒரு வானவில்லை பரிசாகத் தருகிறேன். நீங்கள் எப்போது விரும்புகிறீர்களோ அப்போதெல்லாம் வானவில்லே வருக என்று சொன்னால் போதும். வானத்தில் அழகான வானவில் தோன்றும். நீங்கள் அதைப்பார்த்து ரசிக்கலாம் என்று சொல்லிவிட்டு சூரியன் விடை பெற்றது. மான்கள் இரண்டும் மகிழ்ந்தன. அவற்றிற்கு விருப்பமான நேரத்தில் வானவில்லை வரச்செய்து பார்த்துப் பார்த்து ரசிக்கும்.
நீதி :
நண்பர்களே விட்டுக்கொடுத்து வாழ்ந்தால் வாழ்க்கை வளமாக இருக்கும்
இன்றைய செய்திகள்
07.03.22
★கடலோர மாவட்டங்களில் லேசான மழை முதல் மிதமான மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
★தமிழக விவசாயிகளின் நலன் கருதி, மேகேதாட்டுவில் அணை கட்டும் கர்நாடக அரசின் முயற்சியைதடுக்க அனைத்து நடவடிக்கைகளையும் தமிழக அரசு எடுக்கும் என்று தமிழக நீர்வளத் துறை அமைச்சர் உறுதிபட தெரிவித்துள்ளார்.
★தமிழ்நாட்டில் அருகி வரும் மருத்துவ தாவரங்களை பாதுகாக்க மாநில மூலிகை தாவர வாரியம் மற்றும் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
★வெளிநாடுகளில் மருத்துவம் பயின்று மருத்துவ பயிற்சியை (இன்டெர்ன்ஷிப்) மேற்கொண்டு வரும் இந்திய மாணவர்களின் பயிற்சி தவிர்க்க முடியாத காரணத்தால் தடை படுமாயின் அவர்கள் இந்தியாவில் பயிற்சி மேற்கொள்ளலாம் என்று தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) புதிய வழிகாட்டுதலை வெளியிட்டுள்ளது.
★டிஜிட்டல் பல்கலைக்கழகம் - இந்திய கல்வித் துறையில் புரட்சி: இந்தியாவில் முதன்முதலாக கேரள மாநிலத்தில் உருவாக்கம்.
★ரஷ்யா, உக்ரைன் இடையிலான போர் தீவிரமடைந்திருக்கிறது. இந்த போர் தொடர்பாக ஐ.நா.பாதுகாப்பு கவுன்சிலில் ரஷ்யாவுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட தீர்மானங்கள் மீதான வாக்கெடுப்புகளில் இந்தியா பங்கேற்கவில்லை.
★உக்ரைன் அணு மின் நிலையத்தை ரஷ்யா தாக்கியது அபாயகரமானது: ஐ.நா.பாதுகாப்பு கவுன்சில் எச்சரிக்கை.
★6 முறை உலக சாம்பியனான மேரி கோம் மகளிர் உலக சாம்பியன்ஷிப் மற்றும் ஆசியன் போட்டிகளில் இருந்து விலகும் முடிவை அறிவித்து உள்ளார்.
★டேவிஸ் கோப்பை டென்னிஸ்: உலக குரூப்-1 சுற்றில் நீடிக்கிறது இந்தியா.
Today's Headlines
★The Chennai Meteorological Department has forecast light to moderate rains in the coastal districts.
★ The Tamil Nadu Water Resources Minister has assured that the Government of Tamil Nadu will take all measures to thwart the attempt of the Government of Karnataka to build a dam at Megathattu in the interest of Tamil Nadu farmers.
★ A Memorandum of Understanding has been signed with the State Herbal Plants Board and the Tamil Nadu Agricultural University to protect endangered medicinal plants in Tamil Nadu, said the Minister of People's Welfare, Tamil Nadu.
★ The National Medical Council (NMC) has issued new guidelines for Indian students pursuing medical internships abroad if they are barred from doing so due to unavoidable circumstances.
★ Digital University - Revolution in Indian Education: Creation in Kerala for the first time in India.
★ The war between Russia and Ukraine has intensified. India did not participate in the vote on the resolutions passed against Russia at the UN Security Council on the war.
★ Russia's attack on Ukraine nuclear plant is dangerous: UN Security Council warns.
★ 6-time world champion Mary Kom has announced her decision to withdraw from the Women's World Championships and the Asian Games.
★ Davis Cup Tennis: India continues in the World Group-1 round.
Prepared by
Covai women ICT_போதிமரம்
Plus One / + 1 - 11th Standard - First Revision Test - Time Table - 2021 - 2022 - Download
Plus One / + 1 - 11th Standard - First Revision Test - Time Table - 2021 - 2022 - Download
10th, 11th, 12th - First Revision Test Question Papers & Key Answer Download
10th, 11th, 12th - First Revision Test 2022 - Question Papers & Answer Keys Download