Half Yearly Exam 2024
Latest Updates
பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 30.10.21
திருக்குறள் :
இயல்: அரசியல்
அதிகாரம்: தெரிந்து செயல் வகை
குறள் எண்: 461
குறள்:
அழிவதூஉம் ஆவதூஉம் ஆகி வழிபயக்கும
ஊதியமுஞ் சூழ்ந்து செயல்.
பொருள் :
எந்த அளவுக்கு நன்மை கிடைக்கும் அல்லது தீமை ஏற்படும் என்று விளைவுகளைக் கணக்குப் பார்த்த பிறதே ஒரு செயலில் இறங்க வேண்டும்.
பழமொழி :
Do good to those who harm you
பகைவனை நேசித்துப்பார்
இரண்டொழுக்க பண்புகள் :
1. பெற்ற உதவிக்கு நன்றி சொல்லுவேன். செய்த தவறுக்கு மன்னிப்பு கோருவேன்.
2. இதன் மூலம் மக்கள் மனதில் இடம் பிடித்து என் வாழ்வில் சிறந்த மனிதனாக விளங்குவேன்
பொன்மொழி :
கண்களை மட்டும் கவருவது அழகு! அன்புடன் கூடிய நற்செயல்கள் மனதையும், ஆன்மாவையும் கவரும். ---- அல்க்ஸாண்டர் போவ்
பொது அறிவு :
1. உலகின் அகலமான நதி எது?
அமேசான் நதி.
2. குறைந்த நேரத்தில் சூரியனை சுற்றி வரும் கோள் எது?
புதன் கோள் (மெர்குரி).
English words & meanings :
ஆரோக்ய வாழ்வு :
கண்களைப் பாதுகாப்பதற்கான குறிப்புகள்
- இரண்டு தேக்கரண்டி உப்பை ஒரு லிட்டர் இளம் சூடான நீரில் சேர்த்து, கண்களைக் கழுவினால் கண்கள் பிரகாசமாக இருக்கும்.
- ஒரு சிறிய வெந்நிறத்துண்டை, மஞ்சள் நீரில் நனைத்து நிழலில் உலர்த்தி வைத்து கொள்ள வேண்டும். கண்நோய் உள்ளவர்கள் அந்த வெண்ணிறத் துண்டுகளைக் கொண்டு கண்களை துடைத்துவர கண்சிவப்பு, கண்வலி, கண்ணில் நீர்கோர்த்தல் இவைகள் சரியாகும்.
- உடல் சூட்டினால் அல்லது கண்ணில் அடிபட்டதாலோ கண் சிவந்து காணப்படுவது உண்டு. இதற்கு புளியம்பூவை அரைத்து கண்களைச் சுற்றிப் பற்று போட்டு வந்தால் கண்கள் சிவப்பது சரியாகும்.
- மருதோன்றி இலையை அரைத்து தலையில் தேய்த்து ஒரு மணி நேரம் கழித்து குளித்தால் கண் சிவப்பு நீங்கும்.
- நந்தியாவட்டைப் பூவை கண்களில் ஒற்றிக்கொண்டால் கண்வலி நீங்கும்.
- கண் பார்வைத் தெளிவு பெற கொடி முந்திரிப் பழம் சாப்பிட்டு வர வேண்டும்.
- நெல்லிக்காயை அரைத்து தலையில் தேய்த்து குளித்து வந்தால் கண்கள் குளிர்ச்சிபெறும்.
- மிளகு, சீரகம் இவற்றில் சிறிதளவு எடுத்து பொடி செய்து, எண்ணெயில் காய்ச்சி, அந்த எண்ணெயைத் தலையில் தேய்த்துக் குளித்தால் கண்ணிலிருந்து நீர்வடிதல் மற்றும் கண் எரிச்சல் குணமாகும்.
- பொன்னாங்கண்ணிக் கீரையுடன் நெய்யையும் சேர்த்து வதக்கி அடிக்கடி சாப்பிட்டு வந்தால் கண் நரம்புகள் பலப்படும், பார்வை தெளிவடையும்.
- மல்லித்தழை மற்றும் கேரட்டை தேங்காய்ப்பால் சேர்த்து அரைத்து தினமும் குடித்துவர கண் நரம்புகள் பலப்படும்.

கணினி யுகம் :
நீதிக்கதை
இன்றைய செய்திகள்
அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 2020-21ஆம் ஆண்டிற்கான CPS கணக்கீட்டுத் தாள் வெளியிடப்பட்டுள்ளது!!!
DSE - அரசுப் பணியாளர் ஒவ்வொருவரும் தன்னுடைய சொத்து மற்றும் கடன் விவர அறிக்கையினை சமர்ப்பிக்க பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு.
இணைப்பு:
மனித வள மேலாண்மைத் துறையின் கடிதம்.
அரசுப் பணியாளர்கள் தமது சொத்து மற்றும் கடன் விவர அறிக்கையினை உரிய காலத்தில் சமர்ப்பிக்கும்படி அறிவுறுத்தப்பட்டது.
தமிழ்நாடு அரசு பணியாளர் நடத்தை விதிகள் 1973 ( Tamil Nadu Government Servant Conduct Rules 1973 ) விதி 7 ( 3 ) -ன்படி அரசுப் பணியாளர் ஒவ்வொருவரும் தன்னுடைய சொத்து மற்றும் கடன் விவர அறிக்கையினை அவ்விதியில் குறிப்பிட்டுள்ளவாறு ( அட்டவணை 1 ல் உள்ள படிவம் 1 முதல் V வரையிலான ) உரிய காலத்தில் சமர்ப்பித்தலை உறுதி செய்யுமாறு அனைத்து துறைச் செயலாளர்களும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.