Half Yearly Exam 2024
Latest Updates
பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 27.10.21
திருக்குறள் :
இயல்: அரசியல்
அதிகாரம்: குற்றம் கடிதல்
குறள்:
பற்றுள்ள மென்னும் இவறன்மை எற்றுள்ளும்
எண்ணப் படுவதொன் றன்று.
பொருள்:
எல்லாக் குற்றங்களையும்விடத் தனிப்பெருங் குற்றமாகக் கருதப்படுவது பொருள் சேர்ப்பதில் பற்றுக்கொண்டு எவருக்கும் எதுவும் ஈ.யாமல் வாழ்வதுதான்.
பழமொழி :
A hearty laugh dispels disease.
வாய்விட்டுச் சிரித்தால் நோய்விட்டுப் போகும்
இரண்டொழுக்க பண்புகள் :
1. பெற்ற உதவிக்கு நன்றி சொல்லுவேன். செய்த தவறுக்கு மன்னிப்பு கோருவேன்.
2. இதன் மூலம் மக்கள் மனதில் இடம் பிடித்து என் வாழ்வில் சிறந்த மனிதனாக விளங்குவேன்
பொன்மொழி :
ஒவ்வொருவரின் விதியும் அவனவன் கையில்தான் உள்ளது.விதையின் சக்திதான் மரமாக வளர்கிறது.காற்றும் நீரும் அதற்கு வெறும் உதவி மட்டுமே செய்ய முடியும்
பொது அறிவு :
1.மனிதனின் பற்களிலுள்ள எனாமல் எதனால் ஆனது?
கால்சியம் பாஸ்பேட்.
2. மனிதனின் கால் பாதங்களில் எத்தனை எலும்புகள் உள்ளன?
16 எலும்புகள்.
English words & meanings :
ஆரோக்ய வாழ்வு :
நீங்களே முதல் உதவி செய்யலாம்
பொதுவான விதிகள்
விதி 1: பாதிக்கப்பட்டவருக்குத் தெரிந்தோ, தெரியாமலோ… நம்மால் எந்த ஊறும் நேர்ந்துவிடக் கூடாது. ‘உதவி செய்கிறோம்’ என்று போய், நம்மை அறியாமல் அவர்களுக்கு எந்தக் கூடுதல் கஷ்டத்தையும் ஏற்படுத்திவிடக் கூடாது. சாதாரண எலும்பு முறிவாக இருந்தது, கூட்டு எலும்பு முறிவாக மாறிவிட நாமே காரணமாக இருந்துவிடக் கூடாது.
உதாரணத்துக்கு, ஒரு வாகன விபத்தில் அடிபட்டவரின் ஹெல்மெட்டைக் கழற்றும்போது கூட, மிக மிகக் கவனமாகக் கழற்ற வேண்டும். ஏனெனில், கழுத்தில் எந்தப் பிரச்னையும் இல்லாமல், நிலையாக இருப்பது முக்கியம். அதேபோல் கட்டடத்தின் உயரத்திலிருந்து ஒருவர் விழுந்துவிட்டால், அவரைத் தூக்கும்போது கழுத்துக்கு முக்கியத்துவம் தர வேண்டும்.
விதி 2: பாதுகாப்பு மிக முக்கியம். எந்த ஒரு அவசரகட்டத்திலும் மூன்று நபர்கள் இருப்பார்கள். அதாவது, பாதிக்கப்பட்டவர், உதவச் செல்லும் நாம், நமக்கு அருகில் இருப்பவர்கள்… இந்த மூன்று பேருக்கும் எந்தப் பிரச்னையும் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
விதி 3: பொது அறிவு முக்கியமாகத் தேவை. அங்கே உடனடியாகக் கிடைக்கும் அல்லது இருக்கும் வசதிகளைவைத்து எப்படி உதவலாம் என்ற சமயோசித புத்தியுடன் சாமர்த்தியமாகச் செயல்படும் வேகமும் வேண்டும்.ரத்தக்காயம் / வெட்டுக்காயம்: குழந்தைகள் விளையாடும்போதும் சாதாரணமாக நடக்கும்போதும் கீழே விழுந்து அடிபடுவதும் ரத்தம் வருவதும் சகஜம். அப்போது, காயம்பட்ட இடத்தை, குழாயிலிருந்து வரும் சுத்தமான நீரால் (running water) கழுவ வேண்டும்.
சோப் போட்டுக் கூடக் கழுவலாம்.காயம்பட்ட இடத்தில் ரத்தம் வந்தால், சுத்தமான துணியால் அழுத்திக் கட்டுப்போட வேண்டும். பவுடர், சந்தனம், மஞ்சள், காப்பித் தூள் என்று எந்தப் பொருளையும் காயத்தின் மீது போடக் கூடாது.
சமீபத்தில் ‘டெட்டனஸ் டெக்ஸாய்டு’ தடுப்பூசி போடப்பட்டிருந்தால், திரும்பவும் அது போடத் தேவை இல்லை. இப்போதெல்லாம் எல்லோருமே தொடர்ந்து தடுப்பூசிகள் போட்டு வருவதால், 10 வருடங்களுக்கு ஒருமுறை ‘டி.டி’ போட்டால் போதும்.குழந்தைகளுக்கு உடலில் வலுக்குறைவு என்பதால், வெட்டுக்காயம், பூச்சிக்கடி போன்ற என்ற விபத்தாக இருந்தாலும், அவர்களால் அதிக நேரம் தாக்குப்பிடிக்க முடியாது. எனவே முதல் உதவிக்குப் பிறகு, உடனே மருத்துவமனைக்குச் சென்றுவிட வேண்டும். அலட்சியமாக இருக்கக் கூடாது.
கணினி யுகம் :
Alt + F4 - Close current open program.
Alt + Enter - Open properties window of selected icon or program
அக்டோபர் 27
அக்பர் அவர்களின் நினைவுநாள்
அபுல்-பத் சலால்-உத்-தின் முகம்மத் அக்பர் அக்டோபர் 1542– 27 அக்டோபர் 1605),என்ற இயற்பெயரும், மகா அக்பர் என்று பொதுவாகவும்,(அக்பர்-இ-ஆசம் اکبر اعظم) மேலும் முதலாம் அக்பர் என்றும் அழைக்கப்படும் இவர் மூன்றாவது முகலாயப் பேரரசர் ஆவார். இவர் 1556 முதல் 1605 ஆம் ஆண்டு வரை ஆட்சி புரிந்தார். அக்பர் தனது தந்தை உமாயூனுக்கு பிறகு ஆட்சிக்கு வந்தார். 14 வயதிலேயே ஆட்சிக்கு வந்த அக்பர் பைரம் கான் என்கிற பிரதிநிதியின் உதவியுடன் ஆட்சி புரிந்தார். இந்தியாவில் முகலாயர் பகுதிகளை விரிவாக்கவும் நிலைநிறுத்தவும் இளம் பேரரசருக்கு பைரம் கான் உதவி புரிந்தார்.
நீதிக்கதை
ஒருநாள் அந்த எறும்புங்க செய்ற வேலைய பாத்த அந்த யானை பக்கத்துல இருந்த குளத்துக்கு போயி தண்ணிய தன்னோட துதிக்கையால எடுத்துட்டு வந்து அந்த எறும்புங்க மேல அடிச்சி விட்டுச்சு,அந்த எறும்புங்க தங்களோட சாப்பாடு எல்லாம் நனைஞ்சு போனத பாத்து ரொம்ப வறுத்த பட்டுச்சுங்க. தொடர்ந்து அந்த எறும்புகளுக்கு தொல்லை கொடுத்துகிட்டே இருந்துச்சு அந்த யானை.
ஒருநாள் ரொம்ப கோபமான ஒரு எறும்பு தன்னோட தாத்தா கிட்ட போயி நடந்த சொல்லுச்சு ,அதுக்கு அந்த தாத்தா சொன்னாரு.ரௌத்திரம் பழகு ,அப்படிங்கிற பழமொழிக்கு என்ன அர்த்தம் தெரியுமா ,கோபப்பட வேண்டிய விசயத்துக்கு சகிச்சிக்கிட்டு இருக்க கூடாது அப்படின்னு சொல்லுச்சு.
உடனே அந்த சின்ன எறும்பு அந்த யானை இருக்குற இடத்துக்கு போச்சு ,அங்க அந்த யானை படுத்து தூங்கிக்கிட்டு இருந்துச்சு. அதோட துதிக்கைக்குள்ள போன அந்த எறும்பு மெதுவா கடிக்க ஆரம்பிச்சது.வலிதாங்காத யானை யார் என்னோட துதிக்கைக்குள்ள கடிக்கிறதுன்னு கேட்டு அலறுச்சு.
எங்களை சின்ன விலங்குன்னு தான நீ எங்க மேல தண்ணி ஊத்தி விளையாண்ட இப்ப உன்ன என்ன பண்றேன்னு பாருன்னு சொல்லி திரும்ப திரும்ப கடிச்சது. வலிதாங்க முடியாத யானை, துதிக்கைல இருந்து வெளிய வந்த அந்த எறும்ப பாத்து சொல்லுச்சு தயவு செஞ்சு என்ன மன்னிச்சுடுங்க என்னால உங்களுக்கு இனிமே தொந்தரவு இருக்காதுன்னு சொல்லுச்சு
குழந்தைகளா நாம பலசாலியா இருந்தா அடுத்தவங்கள தொல்லை படுத்தக்கூடாது ,அதே நேரத்துல பலம் குறைவா இருந்தா யார பாத்தும் பயப்பட கூடாது.
இன்றைய செய்திகள்