Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 25.10.21

   திருக்குறள் :

பால்: பொருட்பால். 

இயல்: அரசியல். 

அதிகாரம்: குற்றம் கடிதல்.

குறள் : 435

வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்
வைத்தூறு போலக் கெடும்.


முன்கூட்டியே எச்சரிக்கையாக இருந்து ஒரு தவறான செயலைத் தவிர்த்துக் கொள்ளாதவருடைய வாழ்க்கையானது நெருப்பின் முன்னால் உள்ள வைக்கோல் போர் போலக் கருகிவிடும்.

பழமொழி :

Cut your coat according to your cloth.


விரலுக்கேற்ற வீக்கம் வேண்டும்.

இரண்டொழுக்க பண்புகள் :

1. பெற்ற உதவிக்கு நன்றி சொல்லுவேன். செய்த தவறுக்கு மன்னிப்பு கோருவேன். 

2. இதன் மூலம் மக்கள் மனதில் இடம் பிடித்து என் வாழ்வில் சிறந்த மனிதனாக விளங்குவேன்

பொன்மொழி :

மனிதனுக்குள் புதைந்திருக்கும் பூரணத்தை வெளிப்படுத்துவதே கல்வி ,அறிவு அனைவரிடத்திலும் இயல்பாகவே உள்ளது. தேர்ந்தெடுத்தலையும் வழிநடத்துதலையும் கல்வியே செய்ய முடியும். --------விவேகானந்தர்


பொது அறிவு :

1. முதன் முதலில் இரண்டு முறை நோபல் பரிசு பெற்றவர் யார்? 

மேரிக்கியூரி. 

2.பிரட்டன் நாட்டின் தேசிய மலர் எது? 

ரோஜா.

English words & meanings :

Couch potato - a lazy person, சும்மா உட்கார்ந்து பொழுது போக்கும் சோம்பேறி, 

early bird - a person who gets up early in the morning, அதி காலை எழும்பும் வழக்கம் உள்ளவர்

ஆரோக்ய வாழ்வு :

அவசியமான சில ஆரோக்கிய குறிப்புகள்


  • மாத்திரைகளை சாப்பிடும் போது குளிர்ச்சியான நீரில் எடுப்பதை தவிர்த்து, வெதுவெதுப்பான நீரில் எடுக்க வேண்டும்
  • எப்போதும் 5 மணிக்கு மேல் வயிறு நிறைய உணவை உட்கொள்ளும் பழக்கத்தை கைவிட வேண்டும்.
  • பகல் நேரத்தில் குடிக்கும் தண்ணீரின் அளவை அதிகரித்து, இரவில் நேரத்தில் குறைத்துக் கொள்ள வேண்டும்.
  • தினமும் இரவில் 10 மணிக்கு தூங்கி, அதிகாலையில் 4 மணிக்கு எழும் பழக்கத்தைக் கொண்டால், உடல் ஆரோக்கியமாக இருக்கும்.
  • எப்போதும் உணவை உண்ட பின் தூங்கும் பழக்கத்தை கொண்டவராயின், அவற்றை உடனே தவிர்ப்பது நல்லது.
  • போன் பேசும் போது இடது பக்கம் வைத்து பேசுவது நல்லது.
  • மொபைலை சார்ஜ் போட்டுக் கொண்டே பேசுவதை தவிர்க்க வேண்டும். அதிலும் பேட்டரி மிகவும் குறைவாக இருக்கும் நேரத்தில் சார்ஜ் போட்டிருந்தால், அப்போது எந்த ஒரு அழைப்பு வந்தாலும் பேச வேண்டாம். ஏனெனில் சாதாரண நேரத்தை விட, சார்ஜ் போட்டிருக்கும் நேரத்தில் கதிர்வீச்சு 1000 மடங்கு அதிகமாக இருக்கும்.

கணினி யுகம் :

Ctrl + 5 - 1-5 line spacing. 

Ctrl + Alt + 1 - Change text to heading 1

அக்டோபர் 25





விண்டோஸ் எக்ஸ்பி (Windows XP), என்பது வீடுகளில் உள்ள மற்றும் அலுவலகங்களில் உள்ள கணினிகளை இயக்கும் இன்றியமையாத இயக்கு தளங்களில் ஒன்று. இதன் பெயரின் பின்னே ஒட்டியுள்ள XP எனும் ஆங்கில எழுத்துக்களானது துய்ப்பறிவு அல்லது பட்டறிவு என்னும் பொருள் படும் EXperience என்னும் சொல்லில் இருந்து வந்ததாகும்.[1] விண்டோஸ் எக்ஸ்பியானது விண்டோஸ் 2000 உடன் விண்டோஸ் மில்லேனியம் பதிப்பின் வசதிகளும் ஒருங்கிணைத்து முதன் முதலாக வீட்டுப் பயன்பாடுக்கு என விண்டோஸ் எண்டி கருனியில் (கேர்ணலில், kernal) இருந்து உருவாக்கப்பட்ட இயக்குதளமாக உள்ளது. இப்பதிப்பானது அக்டோபர் 252001 வெளிவிடப்பட்டது. 

நீதிக்கதை

நேரம் தவறாமை

சுனில், ஒரு பள்ளி பருவ மாணவன் ஒரு நாள் கா... கா.... என்று கத்திக்கொண்டு ஒரு காகம் பறந்து வந்து, அவன் வீட்டின் அருகிலுள்ள மரக்கிளையில் அமர்ந்தது.

சுனில், அந்தக் காகத்தைப் பிடிக்க ஆசை, பிடிக்க ஓடினான். உடனே அது பறந்து சென்றது. சுனில் திரும்பி வந்து காத்திருந்தான். அந்தக் காகம் மீண்டும் அங்கு வந்து அங்கும் இங்கும் நடந்தது. சுனில் தான் சாப்பிட்டு கொண்டிருந்த வடையைப் பிய்த்துக் காகத்துகுப் போட்டான். காகம் வேகமாக ஓடி வந்தது.

வடையைக் கொத்திக் கொண்டு பறந்தோடியது. சுனில்க்கு அந்தக் காகத்தைப் பிடிக்க வேண்டும் என்ற ஆசை எழுந்தது. வெகுநேரம் காத்திருந்தான். அந்தக் காகம் மீண்டும் வரவேயில்லை.

இரண்டாம் நாள் அந்த இடத்திற்கு, அதே நேரத்திற்கு அந்தக் காகம் வந்தது. அங்கும் இங்கும் நடந்தது. இன்று அந்தக் காகம் கைக்கு எட்டும் தொலைவிற்குள் நடந்து வந்தது. சுனில் தன்னிடம் இருந்த நிலக்கடலையை காகத்தின் முன் வீசினான்.

காகம் தலையைச் சாய்த்துச் சாய்த்துப் பார்த்துக் கொண்டே ஒவ்வொரு கடலையாகக் கொத்தித் தின்றது. சுனில் அருகில் சென்றதும் உடனே பறந்தோடியது. மூன்றாம் நாளும் அந்தக் காகம் அந்த இடத்துக்கு, அதே நேரத்துக்கு வந்தது. இன்று அச்சப்படாமல் காகம் சுனிலின் அருகில் வந்தது. சுனிலின் கையை ஆவலோடு பார்த்தது.

சுனில் வீட்டிற்குள் சென்று அரிசியை எடுத்து வந்து போட்டான். காகம் பொறுமையாக ஒவ்வொரு அரிசியாகப் பொறுக்கித் தின்றது. சுனில் காகத்தைப் பிடிக்க எழுந்தான். காகம் பறந்தோடியது. ஒவ்வொரு நாளும் காகம் சரியான நேரத்துக்கு வந்தது.

சுனிலும் காகமும் நண்பர்களானார்கள். சுனில் சொல்வதைக் கேட்டுக் காகம் புரிந்து கொண்டது போலத் தலையை ஆட்டும். சரியான நேரத்துக்கு வரும் காகத்தைக் கண்டு சுனில் வியந்தான். காகத்தால் எப்படி முடிகிறது? மணிக்கூடு இல்லை, பேசத் தெரியாத, எழுதத் தெரியாத, ஆனால் சரியான நேரத்துக்கு அந்தக் காகம் எப்படி வந்து போகிறது.

சுனில் வியந்தான். தனது நண்பனான காகத்தைப் போல, தானும் சரியான நேரத்துக்குப் பள்ளிக்குச் செல்வது, அனைத்து வேலைகளையும் சரியான நேரத்தில் தொடங்குவது என முடிவு எடுத்துக் கொண்டான். சரியான நேரத்துக்குப் பள்ளிக்கு வந்து அனைத்தையும் முறையாகச் செய்யும் சுனிலை அனைவரும் பாராட்டினார்கள்

இன்றைய செய்திகள்

25.10.21

★வெளிநாடுகளில் தொற்று அதிகரித்துள்ளதால் கரோனா கட்டுப்பாட்டு விதிகளை பொதுமக்கள் கடைப்பிடிக்க வேண்டும்: சுகாதாரத் துறை செயலாளர் அறிவுறுத்தல்.

★6 மாத கால இடைவெளிக்குப் பின்னர் மேட்டூர் அணை நீர்மட்டம்  மீண்டும் 100 அடியை எட்டியுள்ளது.

★அக்டோபர் 26 ஆம் தேதி முதல் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம்  தெரிவித்துள்ளது.

★ஸ்ரீநகரில் 25 கோடி ஆண்டுகள் பழமையான  “பெர்மியன் ட்ரையாசிக் பேரழிவு”  நிகழ்வினால் ஏற்பட்ட புதைபடிவ களஞ்சியத்தில் ஆய்வு செய்வதற்காக  அகழ்வாராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது.

★ஜம்மு & காஷ்மீரில் கனமழையால் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி 3 பேர் பலி.

★தைவானில் மிதமான நிலநடுக்கம் பதிவாகியது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.5 ஆக பதிவாகியது.

★ஸ்டாய்னிஷ், ஸ்மித் ஆகியோரின் பொறுப்பான பேட்டிங்கால் அபு தாபியில் நடந்த டி20 உலகக் கோப்பைப் போட்டியின் சூப்பர்-12 சுற்றில் குரூப்-1 பிரிவில் தென் ஆப்பிரி்க்க அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது ஆஸ்திரேலிய அணி.

Today's Headlines

★ People should adhere to the Corona Control Rules as there is a steady rise of Corona cases in abroad - advised the Secretary of the   Health  Department. 

 ★ After a gap of 6 months, the water level of Mettur Dam has reached 100 feet again.

 ★ The northeast monsoon is likely to begin in Tamil Nadu from October 26, as per the prediction of Chennai Meteorological Center.

 ★ Excavations have been carried out in Srinagar to examine the "fossil depository" formed by the 250 million-year-old “Permian Triassic Disaster” event.

 ★ 3 killed in landslides caused by heavy rains in Jammu & Kashmir.

 ★ A moderate earthquake was reported in Taiwan.  The quake measured 6.5 on the Richter scale.

 ★ Australia beat South Africa by 5 wickets in Group-1 of the Super-12 round of the T20 World Cup in Abu Dhabi thanks to the responsible batting of Steinish and Smith.
 
 Prepared by

Covai women ICT_போதிமரம்

Polytechnic - Physics - Unit Test Question Papers

 

 

PGTRB Geography - Unit 10 Study Materials

 

 

 

PGTRB Botany - Unit 1 Study Materials

 

 

9th Social - Quarterly Exam Model Question Paper 2021-2022

 

 

11th Economics - Quarterly Exam Model Question Paper 2021-2022

 

12th Economics - Quarterly Exam Model Question Paper 2021-2022

 

 

STRIKE PERIOD-MODEL -BILL & PROCEEDINGS

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 22.10.21

  திருக்குறள் :

அதிகாரம்: அறிவுடைமை 

குறள் : 430

அறிவுடையார் எல்லா முடையார் அறிவிலார்
என்னுடைய ரேனு மிலர்.

பொருள்:
அறிவு இல்லாதவர்களுக்கு வேறு எது இருந்தாலும் பெருமையில்லை; அறிவு உள்ளவர்களுக்கு வேறு எது இல்லாவிட்டாலும் சிறுமை இல்லை.

பழமொழி :

After dinner sit a while


உண்ட களைப்பு தொண்டருக்கு உண்டு

இரண்டொழுக்க பண்புகள் :

1. உள்ளது எதுவோ அது இறைவன் கொடுத்தது என்று மகிழ்ச்சியாய் இருப்போம்.


2. இல்லாதது எதுவோ அது இனி இறைவன் கொடுக்கப் போவது என்று நம்பிக்கையோடு இருப்போம்.

பொன்மொழி :

நாம் அளவுக்கு மீறிய ஆசையால் தூண்டப்படுகிறோம். தூண்டப்பட்டதனால் ஆசைப்படுகிறோம் .----- கௌதம புத்தர்

பொது அறிவு :

1." உயிர் காக்கும் உன்னத உலோகம் " என அழைக்கப்படும் உலோகம் எது? 

ரேடியம்.

2." கருப்பு ஈயம் " என்றழைக்கப்படும் தாது எது? 

கிராபைட்.

English words & meanings :

Palate - The roof of the mouth மேல் வாய், 

Palette - board for mixing colours. வண்ணங்கள் கலக்கும் பலகை

ஆரோக்ய வாழ்வு :

வேர்க்கடலை: பல ஆரோக்கிய நன்மைகளின் கலவை




நிலக்கடலை ஒரு சுவையான உணவு. இது குளிர்காலத்தில் மிகவும் விரும்பி சாப்பிடப்படுகிறது. ஆனால் வேர்க்கடலையில் உள்ள ஏராளமான நன்மைகளால் அது ஒரு சூப்பர்ஃபுட் அதாவது மிகச்சிறந்த உணவாக கருதப்படுகிறது. 

ஆயுர்வேத நிபுணர்களின் கூற்றுப்படி, தினமும் காலையில் ஊறவைத்த வேர்க்கடலையை உட்கொண்டால், பின்வரும் நன்மைகள் கிடைக்கும். 

- தோல் பிரச்சனைகளில் (Skin Problems) இருந்து நிவாரணம் கிடைக்கும்.

- செரிமானம் சரியாகி மூளை திறன் அதிகரிக்கும்.

- இதய ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும்.

- இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்த உதவும்.

- அதிக நேரத்திற்கு வயிறு நிறைவாக இருக்கும். 

கணினி யுகம் :

Ctrl + Shift + # - Format number in date format 

Ctrl + Shift + % - Format number in percentage format

நீதிக்கதை

 ரூபாய் நோட்டு

ஒரு கிராமத்தில் ஒரு பள்ளி இருந்தது. அந்த பள்ளியில் குமார் எனும் சிறுவன் படித்து வந்தான். ஒருநாள் குமார் சோகமாக இருப்பதை கண்ட ஆசிரியர் அவனிடம் காரணம் கேட்டார். அதற்கு பதிலளித்த குமார் தான் ஒரு தவறு செய்துவிட்டதாகவும், அந்த தவறை காரணமாக காட்டி அவனுடைய நண்பர்கள் அவனை வெறுத்து ஒதுக்குவதாகவும் கூறினான்.

செய்த தவறை உணர்ந்த குமார் தன் நண்பர்களை எண்ணி ஏங்குவதை அறிந்துகொண்ட ஆசிரியர் குமாருக்கு உதவி செய்ய நினைத்தார். அடுத்த நாள் வகுப்பிற்கு சென்ற ஆசிரியர், ஒரு 50 ரூபாய் நோட்டை கையில் வைத்து இது யாருக்கு வேண்டும் என்று மாணவர்களிடம் கேட்டார். துள்ளி எழுந்த மாணவர்கள் அனைவரும் கைகளை உயர்த்தினர்.

மாணவர்களின் செய்கையை பார்த்த ஆசிரியர், அந்த நோட்டை கைகளால் கசக்கி இப்போது அந்த ரூபாய் நோட்டு யாருக்கு வேண்டும் என கேட்டார். அப்போதும் மாணவர்கள் கைகளை தூக்கியவாறே நின்றுகொண்டிருந்தனர்.

இம்முறை ரூபாய் நோட்டினை காலில் மிதித்த ஆசிரியர் மாணவர்களிடம் அதே கேள்வியை கேட்டார். மாணவர்களிடம் எந்த ஒரு மாற்றமும் இல்லை. வகுப்பிலிருந்த அனைவருக்கும் அந்த 50 ரூபாய் வேண்டும் என்பது போல் கையை இறக்காமல் நின்றனர்.

கையில் ரூபாய் நோட்டை எடுத்த ஆசிரியர், இந்த 50 ரூபாய் நோட்டு அழுக்காக இருந்தாலும், சரி கசங்கி இருந்தாலும் சரி அதன் மதிப்பு குறைவதில்லை. அதே போல் சில நேரங்களில் நாம் தெரியாமல் செய்யும் தவறுகள் நம் மதிப்பை குறைத்துவிடாது. ஒரு மனிதன் தவறு செய்வது இயல்பு, அவன் தான் செய்த தவறை உணர்ந்துவிட்டாலே அவன் மன்னிக்கப்பட வேண்டும்.

அந்த வகையில் இந்த வகுப்பில் படிக்கும் குமார் சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக ஒரு தவறை செய்துவிட்டான். அந்த தவறு ரூபாய் நோட்டின்மேல் பட்டிருக்கும் அழுக்கை போன்றது. அதனால் குமாரின் மதிப்பு எப்போதும் குறையாது. எனவே, தெரியாமல் செய்த தவறுக்காக குமாரை ஒதுக்காமல் அவனுடன் சேர்ந்து பழகுங்கள் என ஆசிரியர் கூறினார். ஆசிரியர் கூறிய கதையில் இருந்த உண்மையை உணர்ந்த சக மாணவர்கள் குமாரிடம் மன்னிப்பு கேட்டு அவனை தங்களுடன் சேர்த்து கொண்டனர்.

இன்றைய செய்திகள்

22.10.21

★ஆத்தூரை அடுத்த பெத்தநாயக்கன் பாளையத்தில் மேகவெடிப்பு காரணமாக, ஒரே நாளில் 213 மி.மீ. மழை கொட்டித் தீர்த்தது. இதனால், வசிஷ்ட நதியில் வெள்ளம் ஏற்பட்டு, ஆத்தூர் தடுப்பணை நிரம்பியது.


★மாணவர்களிடையே இளம் விஞ்ஞானிகளைத் தேடும் அறிவியல் திறனறித் தேர்வு வரும் நவம்பர் 30, டிசம்பர் 5 ஆகிய தேதிகளில் நடக்கிறது. இத்தேர்வில் பங்கேற்க வரும் அக்டோபர் 31-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

★12-ம் வகுப்பு துணைத்தேர்வு மறுகூட்டல், மறுமதிப்பீடு முடிவுகள் நாளை காலை 11 மணிக்கு வெளியிடப்படும் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது

★கடந்த1990ம் ஆண்டு இந்தியா இருந்ததைவிட, தற்போது 15 சதவீதம் கூடுதலாக வெப்பத்தால் பாதிக்கப்பட அதிகமான வாய்ப்புகள் உள்ளன என்று லான்சென்ட் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

★பிரான்ஸில் புயல் காரணமாக பல்வேறு இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்ததால் 2 லட்சத்துக்கு அதிகமான வீடுகளில் மின்தடை ஏற்பட்டுள்ளது.

★ஜூனியர் உலக கோப்பை ஹாக்கி போட்டிக்கான அட்டவணை வெளியீடு.

Today's Headlines

🌸 213 mm of rain fell in one day due to cloudburst at Bethanayakkan camp next to Athur.  The rain poured down.  As a result, the Vashishta River flooded and the Attur dam overflowed.


 🌸 The science proficiency test looking for young scientists among students will take place on November 30th and December 5th.  You can apply by October 31 to participate in this exam.

 🌸 The Directorate of State Examinations has announced that the results of the Class 12 bye-examination will be released tomorrow at 11 am.

 🌸 The Lancet study found that India is now 15 percent more likely to be affected by heat than it was in 1990.

 🌸More than 2 lakh homes in France have been left without electricity due to the uprooting of trees in various places due to the storm.

 🌸 Schedule released for the Junior World Cup of Hockey.
 
 Prepared by

Covai women ICT_போதிமரம்

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive