Half Yearly Exam 2024
Latest Updates
ஜாக்டோ ஜியோ வேலை நிறுத்தக்காலம் பணிக்காலமாக முறைப்படுத்தி தமிழக அரசு அரசாணை வெளியீடு
அரசு உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் பணியிட விவரங்களை அனுப்பக் கோரி பள்ளிக் கல்வி இயக்ககம் உத்தரவு!
RTE சட்டத்தில் பள்ளிகளில் சேர்ந்த மாணவர்களுக்கு கல்விக் கட்டணம் விடுவிப்பு
Flash News : TRB - ஆசிரியர்களை நேரடி நியமனம் மூலம் தேர்வு செய்ய வயது வரம்பை 5 ஆண்டுகள் நீட்டித்து தமிழக அரசு உத்தரவு
பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 18.10.21
திருக்குறள் :
குறள் : 424
எண்பொருள வாகச் செலச்சொல்லித் தான்பிறர்வாய்
நுண்பொருள் காண்ப தறிவு.
பொருள்:
நாம் சொல்ல வேண்டியவைகளை எளிய முறையில் கேட்போரின் இதயத்தில் பதியுமாறு சொல்லிப் பிறர் சொல்லும் நுட்பமான கருத்துக்களையும் ஆராய்ந்து தெளிவதே அறிவுடைமையாகும்.
பழமொழி :
A willful man will have a way.
மனம் இருந்தால் மார்க்கம் உண்டு
இரண்டொழுக்க பண்புகள் :
1. உள்ளது எதுவோ அது இறைவன் கொடுத்தது என்று மகிழ்ச்சியாய் இருப்போம்.
2. இல்லாதது எதுவோ அது இனி இறைவன் கொடுக்கப் போவது என்று நம்பிக்கையோடு இருப்போம்.
பொன்மொழி :
நன்மைகள் தீமைகள் யாவற்றிற்கும் நீங்களே காரணம் என்பதை உணர்வீர்கள் எனில் உங்கள் செயல்களில் விவேகம் உண்டாகும்.
------ விவேகானந்தர்
பொது அறிவு :
1.நீர் அருந்தாத நீர் வாழ் உயிரினம் எது?
டால்பின்.
2.மீன்கள் இல்லாத ஆறு எது?
ஜோர்டான் ஆறு.
English words & meanings :
ஆரோக்ய வாழ்வு :
இரத்த பிளேட்லெட் அதிகரிக்கும் உணவுகள்
✔பப்பாளி மற்றும் பப்பாளி இலை பிளேட்லெட் எண்ணிக்கையை அதிகரிக்கும்.
✔மாதுளையின் சிவப்பு விதைகளில் ஆக்ஸிஜனேற்ற அழற்சி எதிர்ப்பு மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பண்புகள் கொண்ட சத்துக்கள் நிறைந்துள்ளன. மாதுளை பிளேட்லெட் எண்ணிக்கையை அதிகரிக்க உதவுகிறது.
✔ பூசணிக்காய் வைட்டமின் ஏ நிறைந்துள்ளது. பிளேட்லெட்டுகளின் வளர்ச்சியை ஆதரிக்க செய்கிறது. மேலும் உடல் செல்களால் உற்பத்தி செய்யப்படும் புரதங்களை ஒழுங்குப்படுத்துகிறது.
✔ கீரைகள், முட்டைக்கோஸ் மற்றும் வெந்தயக்கீரை போன்ற இலைக்கீரைகளில் வைட்டமின் கே அதிகமாக உள்ளது. உங்கள் பிளேட்லெட் எண்ணிக்கை கீழே வரும் போது அதிகமாக எடுக்க வேண்டும்.
கணினி யுகம் :
அக்டோபர் 18
தாமசு ஆல்வா எடிசன் அவர்களின் நினைவுநாள்
தாமசு ஆல்வா எடிசன் (Thomas Alva Edison, பெப்ரவரி 11, 1847 – அக்டோபர் 18, 1931) ஒரு அமெரிக்கக் கண்டுபிடிப்பாளரும், தொழிலதிபரும் ஆவார். இவர் ஒளி விளக்கு, ஒலிவரைவி, திரைப் படக்கருவி உள்ளிட்ட பல கருவிகளை உருவாக்கினார். திரள் உற்பத்தி, ஒன்றுபட்ட பெரிய குழுப்பணி ஆகிய கோட்பாடுகளைப் பயன்படுத்திய முதல் கண்டுபிடிப்பாளர்களுள் ஒருவர். ஆக்க மேதை எடிசன் தன் 84 ஆம் வயதில், 1931 அக்டோபர் 18 ஆம் தேதி நியூஜெர்சியில் உள்ள வெஸ்ட் ஆரஞ்ச் நகரில் காலமானார். அமெரிக்க ஜனாதிபதி ஹெர்பர்ட் ஹூவர் எடிசனின் உடல் அடக்கத்தின் போது அமெரிக்காவெங்கும் மின்விளக்குகளை, ஒரு நிமிடம் அணைக்கும்படி ஆணையிட்டிருந்தார். அக்டோபர் 21 ஆம் தேதி மாலை 9:59 மணிக்கு அவரது உடல் அடக்கமானது. அக்டோபர் 21 ஆம் தேதி மாலை நியூ யார்க்கில் 'சுதந்திர தேவி சிலையின்'(Statue of Liberty) கையில் இருந்த தீப்பந்தம் ஒளி இழந்தது!
நீதிக்கதை
இன்றைய செய்திகள்