Half Yearly Exam 2024
Latest Updates
+ 2 மாணவர்கள் கவனத்திற்கு:JEE MAIN 2021 தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளை 16.1. 21 கடைசி
இந்த முறை தமிழில் JEE MAIN 2021 தேர்வை எழுதலாம்.
JEE MAIN EXAM 2021: இந்தியாவின் பொறியியல் படிப்புக்கு புகழ்பெற்ற கல்வி நிறுவனங்களில் சேர ஜே.இ.இ. நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு பகுதியில் உள்ள ஐ.ஐ.டி. நிறுவனம் இந்தத் தேர்வை நாடு முழுவதும் நடத்துகிறது. இந்த ஆண்டு நான்கு முறை இத்தேர்வு நடத்தப்படுகிறது. இந்தியாவில் சிறந்த கல்வி நிறுவனங்களில் படிக்க இடம் அளிப்பதால், இத்தேர்வு இந்தியாவிலும் உலக அளவிலும் கடினமான தேர்வுகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.
20 ஐ.ஐ.டி., 31 என்.ஐ.டி., 19 மத்திய மற்றும் மாநில அரசுகளின் நிதி உதவி பெறும் கல்வி நிறுவனங்கள், பல தனியார் கல்லூரிகள் என பல கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கைக்கு இந்தத் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் இத் தேர்வை பயன்படுத்திக் கொள்ளலாம்.
+ 2 மாணவர்கள் கவனத்திற்கு:
JEE MAIN 2021 தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் விரைவாக விண்ணப்பித்துக் கொள்ளுங்கள். இன்னும் இரண்டு நாட்களே உள்ளன. மறந்து விடாதீர்கள். வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
OBC CERTIFICATE பெற முடியாத மாணவர்கள் UNDERTAKING FORM யை பூர்த்தி செய்து விண்ணப்பிக்கலாம்.
Last date : 16.01.2021
Thanks to Mr. Hendry Sir