Half Yearly Exam 2024
Latest Updates
மழை , வெயிலில் சேதமாகாத பிளாஸ்டிக் ஆதார் கார்டு - ரூ.50 செலுத்தினால் வீட்டுகே கார்டு வரும். இதை எப்படி வாங்குவது?
மத்திய அரசு அரசின் பல்வேறு நலத்திட்டங்களுக்கு ஆதார் அட்டை கட்டாயமாக்கி உள்ளது. ஆனால் தற்போது வழங்கப்படும் ஆதார் அட்ட நீளமானதாகவும் எளிதில் சேதமடையக் கூடிய வகையில் உள்ளது. மக்கள் அவசிய தேவை மற்ற நேரங்களில் வெளியில் எடுத்து செல்வது இல்லை.
இந்நிலையில் உதய் (UIDAI) நிறுவனம் மழை வெயிலில் சேதமாகாத அளவுக்கு பாதுகாப்பு அம்சங்களுடன் ஆதார் அட்டையை பிளாஸ்டிக் (பிவிசி) கார்டு வடிவத்தில் வெளியிட்டுள்ளது. ஸ்கேன் செய்து, ஆதார் எண்ணை பரிசோதிக்கும் நவீன பாதுகாப்பு அம்சங்களும் இடம் பெற்றுள்ளன.
மேலும் ஏடிஎம் கார்டு போல் பிளாஸ்டிக் அட்டையாக பர்சுக்குள் வைக்கும் வகையில் இந்த ஆதார் அட்டை உள்ளது. மழையால் சேதம் ஆகாது. இது குறித்து உதய் நிறுவனம் வெளியிட்ட ட்விபதிவில், ‘பல்வேறு பாதுகாப்பு அம்சங்களுடன் புதிய ஆதார் பிவிசி அட்டை உருவாக்கப்பட்டுள்ளது. இதை ஆப்லைனிலும் இதை உடனடியாக பரிசோதித்து பார்க்க முடியும்,' என கூறியுள்ளது.
ஆதார் பிளாஸ்டிக் கார்டின் சிறப்பு அம்சங்கள்: இந்த பிளாஸ்டிக் ஆதார் கார்டு முற்றிலும் லேமினேசன் செய்யப்பட்டது. தகவல்கள் மிகத் தெளிவாக பிரிண்ட் செய்யப்பட்டிருக்கும்..ஆப்லைனிலும் ஸ்கேன் செய்து, ஆதார் சரியானதா என பரிசோதிக்க முடியும். எனவே, எங்கு வேண்டுமானாலும் முக்கிய ஆவணமாக எடுத்து செல்லலாம். இது முழுக்க முமுக்க பாதுகாப்பானது. மழை, வெயில் எந்த சூழலிலும் சேதமடையாது. ஏடிஎம் அட்டை போல இதையும் பர்சிலேயே எளிதில் வைத்து எடுத்துச் செல்ல முடியும். ரிண்ட் செய்த தேதி மற்றும் வழங்கப்பட்ட தேதியும் இருக்கும். ஆதார் லோகோவும் இடம் பெற்றிருக்கும். இந்த புதிய பிவிசி ஆதார் அட்டையை ரூபாய் 50 மட்டுமே செலுத்தினால் வீட்டிற்கே அனுப்பி வைக்கப்படும்.
உதய் இணையதளத்தில் ‘மை ஆதார்' பிரிவில் சென்றால் ‘ஆர்டர் ஆதார் பிவிசி' என்ற புதிய இணைப்பு உருவாக்கப்பட்டுள்ளத. அதில் சென்று 12 இலக்கு ஆதார் எண் அல்லது 16 இலக்க விர்சுவல் ஐடி அல்லது 28 இலக்க என்ரோல்மென்ட் ஐடி மற்றும் பாதுகாப்பு கோடு பதிவிடுங்கள். நீங்கள் ஒருவேளை உங்கள் செல்போன் போன் எண் பதிவு செய்யப்படவில்லை எனில் அதற்கான பாக்சில் டிக் செய்து, பதிவு செய்யாத அல்லது புதிய மொபைல் எண்ணை குறிப்ப்பிட வேண்டும்
பின்னர், ‘சென்ட் ஓடிபி'யை கிளிக் செய்ய ஒருமுறை பாஸ்வேர்டு வந்ததும் அதை பதிவிட்டு, ஆன்லைனில் கட்டணத்தை செலுத்தி பிவிசி அட்டைக்கு விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பித்ததும் 28 இலக்க சர்வீஸ் கோரிக்கை எண் (எஸ்ஆர்என்) எஸ்எம்எஸ் மூலம் வழங்கப்படும். அதை வைத்து பிவிசி அட்டை எப்போது வரும் என்பதை ஆன்லைனில் அறியலாம்.
CA படிக்க பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றாலே போதுமானது என அறிவிப்பு
பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தாலே பட்டய கணக்காளர் படிப்பில் சேரலாம் என இந்திய பட்டயக் கணக்காளர் மையம் அறிவித்துள்ளது.புதிய நடைமுறையை இந்தாண்டே அமல்படுத்துவதாக பட்டய கணக்காளர் மையம் தெரிவித்துள்ளது. சிஏ எனப்படும் பட்டய கணக்காளர் படிப்பில் சேர 12 ஆம் வகுப்பு தேர்ச்சி என்ற நடைமுறையை மாற்றப்பட்டுள்ளது மாணவர்கள் மற்றும் பெற்றோர் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
11th Bio Botany - Full Guides 2020 - 21
Latest 11th Study Materials
- 11th Bio Botany - Full Guides 2020 - 21
8th Standard - Term 2 - Unit 1 - 5 Study Materials
8th Standard - Term 2 - Unit 1 - 5 Study Materials