- 12th Maths - Centum Coaching Team Question Paper
Half Yearly Exam 2024
Latest Updates
12th Physics - How to get High Marks - Useful Tips
- 12th Physics - How to get High Marks - Useful Tips
12th Computer Science - How to get High Marks - Useful Tips
12th Standard - Useful Exam Tips!
- 12th Computer Science - How to get High Marks - Useful Tips
10th Science - Centum Coaching Team Question Paper
- 10th Science - Centum Coaching Team Question Paper
ஒரு பள்ளிக்கு ₹70,000/− ஒதுக்கீடு!!
ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி , திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நகராட்சி / அரசு நடுநிலைப் பள்ளி வளாகத்தில் இயங்கி வரும் 81 அங்காள்வாடி மையங்களில் 2019 - 2020ஆம் ஆண்டு LKG / UKG வகுப்பு தொடங்கி செயல்பட்டு வருகின்றன .
மேலும் பார்வையில் காணும் கடிதத்தில் 2019 - 2020 ஆம் ஆண்டில் மத்திய மனித வா மேம்பாட்டுத் துறையில் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் கீழ் மழலையர் கல்விக்கு அங்கன்வாடி மையத்தில் பயிலும் குழந்தைகளுக்கு வெளிப்புற விளையாட்டுக் கருவிகள் வழங்குதல் , மழலையர் அரங்கம்
( KG Theatre ) மழலையர் குழந்தைகளுக்கு ஏற்படுத்தி தருதல் மற்றும் குழந்தைகளுக்கும் ஆசிரியர்களுக்கும் மேசை , நாற்காலிகள் , உள்விளையாட்டு உபகரணங்கள் , வெளிவிளையாட்டு உபகரணங்கள் , தொலைக்காட்சிப் பெட்டி மற்றும் DVD Player போன்றவற்றை கொள்முதல் செய்ய ஒரு பள்ளிக்கு ரூ . 70 , 000 வீதம் இந்தப் பள்ளவாறு நிதி ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது .
மேலும் பார்வையில் காணும் கடிதத்தில் 2019 - 2020 ஆம் ஆண்டில் மத்திய மனித வா மேம்பாட்டுத் துறையில் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் கீழ் மழலையர் கல்விக்கு அங்கன்வாடி மையத்தில் பயிலும் குழந்தைகளுக்கு வெளிப்புற விளையாட்டுக் கருவிகள் வழங்குதல் , மழலையர் அரங்கம்
( KG Theatre ) மழலையர் குழந்தைகளுக்கு ஏற்படுத்தி தருதல் மற்றும் குழந்தைகளுக்கும் ஆசிரியர்களுக்கும் மேசை , நாற்காலிகள் , உள்விளையாட்டு உபகரணங்கள் , வெளிவிளையாட்டு உபகரணங்கள் , தொலைக்காட்சிப் பெட்டி மற்றும் DVD Player போன்றவற்றை கொள்முதல் செய்ய ஒரு பள்ளிக்கு ரூ . 70 , 000 வீதம் இந்தப் பள்ளவாறு நிதி ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது .
Wanted Teachers!
A2Z FACULTY HYDERABAD
Physics TRICHI TAMILNADU (NEET) 125000
Physics ZARKHAND (Jee Mains) 100000
Physics ZARKHAND (IIT Advance) 150000
Physics MADHURI TAMILNADU (NEET) 150000
Physics BALLARI KARNATAKA (NEET) 100000
Physics KARUR TAMILNADU (EAMCET) 75000
Physics HYDERABAD (Counsellor) 50000
Physics CHIK MANGULUR KARNATAKA (NEET) 100000
Physics NAMMAKAL TAMILNADU (NEET) 100000
Physics PANDICHERI TAMILNADU (NEET) 100000
Physics HYDERABAD (IIT Advance) 200000
Physics HYDERABAD (Jee Mains) 100000
Physics HASAN KARNATAKA (NEET) 100000
Physics HYDERABAD (IIT Foundation) 40000
Physics TIRUPATI (NEET) 100000
Physics ONGOLE (Jee Mains) 85000
Physics KARUR TAMILNADU (EAMCET) 75000
Physics CHIDAMBRAM TAMILNADU (EAMCET) 75000
Physics AHEMADPUR MAHARASTRA (NEET) 100000
Physics KOLHAPUR MAHARASTRA (IIT Advance) 200000
Physics SELAM TAMILNADU (NEET) 125000
Physics ONGOLE (IIT Advance) 150000
A2Z FACULTY ADITYA ENCLAVE NEELAGIRI BLOCK # 508. BESIDE AMEERPET METRO STATION, HYDERABAD.
CALL US 8AM-5PM ONLY 9912349644
Physics TRICHI TAMILNADU (NEET) 125000
Physics ZARKHAND (Jee Mains) 100000
Physics ZARKHAND (IIT Advance) 150000
Physics MADHURI TAMILNADU (NEET) 150000
Physics BALLARI KARNATAKA (NEET) 100000
Physics KARUR TAMILNADU (EAMCET) 75000
Physics HYDERABAD (Counsellor) 50000
Physics CHIK MANGULUR KARNATAKA (NEET) 100000
Physics NAMMAKAL TAMILNADU (NEET) 100000
Physics PANDICHERI TAMILNADU (NEET) 100000
Physics HYDERABAD (IIT Advance) 200000
Physics HYDERABAD (Jee Mains) 100000
Physics HASAN KARNATAKA (NEET) 100000
Physics HYDERABAD (IIT Foundation) 40000
Physics TIRUPATI (NEET) 100000
Physics ONGOLE (Jee Mains) 85000
Physics KARUR TAMILNADU (EAMCET) 75000
Physics CHIDAMBRAM TAMILNADU (EAMCET) 75000
Physics AHEMADPUR MAHARASTRA (NEET) 100000
Physics KOLHAPUR MAHARASTRA (IIT Advance) 200000
Physics SELAM TAMILNADU (NEET) 125000
Physics ONGOLE (IIT Advance) 150000
A2Z FACULTY ADITYA ENCLAVE NEELAGIRI BLOCK # 508. BESIDE AMEERPET METRO STATION, HYDERABAD.
CALL US 8AM-5PM ONLY 9912349644
Flash News: இணை இயக்குநர்கள் பணியிட மாற்றம்!
திருப்பூர், திருச்சி மற்றும் தஞ்சாவூர் மண்டலங்களில் பணிபுரியும் கல்லூரிக் கல்வி இணை இயக்குனர்கள் பணியிட மாற்றம்.
10, 11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள்: தேர்வுத்துறையின் 10 அறிவுறுத்தல்கள்
10, 11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு வர உள்ள நிலையில் தேர்வெழுதும் மாணவர்கள் ஸ்கெட்ச், வண்ண பென்சில்களைப் பயன்படுத்தக் கூடாது என அரசு தேர்வுத்துறை அறிவுரை வழங்கியுள்ளது.
தமிழகத்தில் மாநிலப் பாடத்திட்டத்தில் படிக்கும் 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு மார்ச் 2-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 13-ம் தேதி வரை நடைபெறுகிறது. இதற்காக மாணவர்கள் தீவிரமாகத் தயாராகி வருகின்றனர். தேர்வுத்துறையும் தேர்வுக்கான ஏற்பாடுகளைச் செய்து வருகிறது.
இதுகுறித்து தேர்வுத்துறை விடுத்துள்ள அறிவிப்பு:
* தேர்வு எழுதும் மாணவர்களுக்கான முக்கிய அறிவுரைகள் போஸ்டராக பள்ளி வளாகத்தில் ஒட்டப்பட்டு இருக்கும்.
இதுமட்டுமின்றி தேர்வின்போது செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை குறித்து அரசு தேர்வுத்துறை தேர்வு நுழைவுச் சீட்டில் (ஹால்டிக்கெட்) அறிவுரையாக அச்சிடப்பட்டுள்ளது.
* மாணவர்களுக்கான ஹால் டிக்கெட்டில் அவர்களின் பெயர் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் புகைப்படத்துடன் அச்சிடப்பட்டுள்ளது. அதில், பிறந்த தேதி, நிரந்தரப் பதிவெண், பதிவெண், தேர்வு மையத்தின் பெயர், முகவரி, மாணவர் பயின்ற பள்ளியின் பெயர் மற்றும் முகவரி உள்ளிட்ட விவரங்கள் அச்சிடப்பட்டுள்ளன.
* தேர்வு அறை கண்காணிப்பாளரிடம் காண்பித்தால் மட்டுமே, தேர்வர்கள் தேர்வெழுத அனுமதிக்கப்படுவர்.
* செல்போன் அல்லது இதர தொலைத்தொடர்பு சாதனங்கள் வளாகத்துக்குள், தேர்வு அறையினுள் எடுத்து வர அனுமதி இல்லை.
* அனைத்து மாற்றுத்திறனாளி தேர்வர்களுக்கும் பொதுத்தேர்வு எழுத கூடுதலாக ஒரு மணி நேரம் (சொல்வதை எழுதுபவர்கள், மொழிப்பாட சலுகை) உள்ளிட்ட அரசாணையின் விதிகளின்படி வழங்கப்படும்.
* தேர்வில் விடைத்தாளில் எக்காரணம் கொண்டும் ஸ்கெட்ச் பேனாக்கள், கலர் பென்சில்களை பயன்படுத்தக் கூடாது.
* தேர்வர்கள் விடைத்தாள் புத்தகத்தில் உள்ள பக்கங்களை எக்காரணம் கொண்டும் கிழிக்கவும் அல்லது தனியாகப் பிரித்து எடுத்துச் செல்லவும் கூடாது.
* தேர்வர்கள் துண்டுத்தாள் வைத்திருத்தல், பிற தேர்வரைப் பார்த்து எழுதுதல், விடைத்தாள்களை பரிமாறிக் கொள்ளுதல், ஆள்மாறாட்டம் செய்தல் கூடவே கூடாது.
* தமது விடைத்தாளில் தாம் எழுதிய அனைத்து விடைகளையும், தாமே கோடிட்டு அடித்தல் போன்ற ஒழுங்கீனச் செயல்களில் ஈடுபடக் கூடாது.
* தேர்வர்கள் அவ்வாறான தவறான செயல்களில் ஈடுபட வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்'.
இவ்வாறு தேர்வுத்துறை தெரிவித்துள்ளது
ஒத்திவைக்கப்பட்ட தேர்தல் தேதியை அறிவித்தது மாநில தேர்தல் ஆணையம்.!
தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் கடந்தாண்டு டிச. 27, 30 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. இந்த உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒன்றிய, மாவட்ட தலைவர், ஒன்றிய, மாவட்ட, ஊராட்சி துணைத் தலைவர் பதவிக்கான மறைமுகத் தேர்தல் ஜன. 11-ல் நடைபெற்றது.
ஜன. 11-ல் நடைபெற்ற மறைமுக தேர்தலின்போது பிரச்சனை ஏற்பட்டதால் பல்வேறு மாவட்ட ஊராட்சி தலைவர் மற்றும் துணைத் தலைவர் பதவி உட்பட106 பதவிக்கான மறைமுக தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.
இந்த நிலையில் ஜனவரி 11, 30ம் தேதி ஒத்திவைக்கப்பட்ட ஊரக உள்ளாட்சிகளுக்கு மறைமுகத் தேர்தல் மார்ச் 4ம் தேதி நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு.
ஒத்திவைக்கப்பட்ட மறைமுக தேர்தலானது காலை 10.30 மணிக்கு ஊராட்சி தலைவர், ஒன்றிய குழு தலைவர், கிராம ஊராட்சி துணை தலைவர், பதவிகளுக்கு மறைமுகத் தேர்தல் நடைபெறும் எனவும் பிற்பகல் 3 மணிக்கு மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர், ஒன்றிய குழு துணை தலைவர் பதவிகளுக்கு மறைமுகத் தேர்தல் நடைபெறும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளத
`இனி வகுப்பிலும் குழந்தைகள் தூங்கலாம்!'- ஃபிட் இந்தியாவின் ஒரு `வாவ்' முன்னெடுப்பு
தினந்தோறும் பள்ளியிலேயே தியானம் செய்ய மாணவர்கள் அனுமதிக்கப்பட வேண்டும்!' - ஃபிட் இந்தியாவின் அறிவுரை.
மத்திய அரசு சார்பில், உடல்நலம் சார்ந்த அக்கறையை மக்கள் மத்தியில் அதிகப்படுத்துவதற்காக `ஃபிட் இந்தியா' என்ற இயக்கம், கடந்த வருடம் தொடங்கப்பட்டது. இந்த இயக்கம் சார்பாக மார்ச் மாதம் முழுக்க, மனநல ஆரோக்கியத்துக்கான மாதமாக அனுசரிக்கப்படவுள்ளது.
இதன் ஓர் அங்கமாக, மார்ச் முழுவதும் பள்ளி மாணவர்களிடையே மனநல ஆரோக்கியத்துக்கான சில முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட உள்ளன. அந்த வகையில், கல்வித்துறை சார்பில் இந்தியா முழுவதிலுமுள்ள பள்ளிகளுக்கு சில வேண்டுகோள்கள் வைக்கப்பட்டுள்ளன. அவை,
* அடுத்த மாதம் முழுக்க, பள்ளி வேலை நாள்களின்போது ஏதேனும் 5 நிமிடங்களுக்கு பள்ளியிலேயே மாணவர்கள் தூங்க அனுமதிக்கப்பட வேண்டும். Power Nap எனப்படும் குட்டித்தூக்கம் கிடைக்கப்பெற்றால், மாணவர்களால் புத்துணர்வோடு செயல்பட முடியும் என்ற அடிப்படையில், இந்தக் கருத்து கூறப்பட்டுள்ளது.
* மூளையை உற்சாகப்படுத்தும் விதத்திலான, இண்டோர் விளையாட்டு வகைகளான குறுக்கெழுத்து, சுடோகோ, வார்த்தை விளையாட்டுகள் போன்றவற்றுக்கு மாணவர்களை அன்றாடம் உட்படுத்த வேண்டும்.
இதே ஃபிட் இந்தியா இயக்கம் சார்பில், இந்த பிப்ரவரி மாதம் முழுக்க திங்கள்கிழமைகள் யாவும் `Majical Mondays' என்ற அடைமொழியுடன் அந்தந்த மாநிலத்தின் பாரம்பர்ய விளையாட்டுகளோடு தொடங்கப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு, அதன்படியே அனைத்தும் பின்தொடரப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதேபோல ஏப்ரல் மாதம் முழுக்க, தினமும் ஏதேனும் 10 நிமிடங்களுக்கு பள்ளியின் அனைத்து மாணவர்களும் பங்கு கொண்டு உடற்பயிற்சி செய்ய அறிவுறுத்தப்பட வேண்டும் என்றும், ஜூனில் இலக்கியம் சார்ந்த விஷயங்களில் குழந்தைகள் ஈடுபடுத்தப்பட வேண்டுமென்றும் இப்போதே அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இவற்றோடு சேர்த்து, எல்லா மாதத்திலும் தினந்தோறும் ஒரு வகுப்பு உடற்பயிற்சி வகுப்பாக இருக்க வேண்டும் என்றும் கூறியுள்ளனர் அதிகாரிகள்!
பள்ளி ஆண்டு விழா கலைநிகழ்ச்சியில் அதிக ஒளி மின் விளக்குகளுக்கு தடை
அரசு மற்றும் தனியார் பள்ளி ஆண்டு விழாவின் போது மாணவ , மாண விகள் பங்கேற்கும் கலை நிகழ்ச்சியில் அதிக ஒளி கொண்டமின் விளக்குகள் பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது .
தமிழகத்தில் அரசு தொடக்க மற்றும் நடுநி லைப்பள்ளிகள் , தனியார் நர்சரி , மெட்ரிக் பள்ளிக ளில் மாணவர்களின் தனித்திறமைகளை மேம்ப டுத்தும் வகையில் ஆண்டு விழாக்கள் நடத்தப்பட்டு பல் வேறு கலை நிகழ்ச்சி கள் மற்றும் விளையாட்டு போட்டிகள் , கலாச்சார விழாக்கள் நடத்தப்படு கிறது . அப்போது , நடன போட்டிக்கான மேடைக ளில் அதிக ஒளி கொண்ட மின் விளக்குகள் பயன்ப டுத்து வதால் மாணவ , மாணவிகளுக்கு கண்கள் பாதிக்கப்படுவதாக புகார் எழுந்தது . இந்த நிலையில் ,
பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது : இந்தாண்டிற்கான கல்வி ஆண்டு இன்னும் ஓரிரு மாதங்களில் முடிய உள்ளதால் தற்போதே பள்ளிகளில் ஆண்டு விழா தொடங்கி உள்ளது . சில ஆண்டுகளுக்கு முன்பு ஆண்டு விழாவில் அதி கபடியான மின் வெளிச் சத்தால் மாணவர்களின் கண்கள் பார்வை பாதிக் கப்பட்டது . இதனால் எதிர்காலத்தில் பள்ளிக ளில் இதுபோன்ற பாதிப் புகள் ஏற்படாமல் இருக்க தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது . இதன்படி அரசு மற் றும் தனியார் பள்ளிகளில் ஆண்டு விழா மற்றும் அனுமதிக்கப்பட்ட இதர விழாக் கள் நடைபெறும் போது , அதிக ஒளி கொண்ட அலங்கார மின் விளக்கு கள் பயன்படுத்தக்கூடாது . பரிந்துரைக்கப்பட்ட மின் சாதன அமைப்புகள் மட் டுமே அமைத்திட வேண் டும் . இது குறித்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவிக்க வேண்டும் .
இந்த நடைமுறைகளை பின் பற்றாமல் விழா நடத்தி , பாதிப்புகள் ஏதாவது ஏற்பட்டால் அதற்கு அந்த பள்ளி தலைமை ஆசிரியரும் பள்ளி நிர் வாகமுமே முழு பொறுப் பேற்க நேரிடும் . எனவே அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்கள் , வட்டா ரக்கல்வி அலுவலர்கள் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர்கள் முழு கவனத் துடன் விழாக்களை நடத்த வேண்டும் . இவ்வாறு அவர்கள் கூறினர் .
தமிழக அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு இம்மாத சம்பளம் கிடைப்பதில் சிக்கல்! ஏன்?
அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு இம் மாதம் முதல் கட்டாயம் ஐஎப்எச்ஆர்எம்எஸ் மூலம் சம்பள பட்டியல் அனுப்ப அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால், சர்வர் பிரச்னை உள்ளிட்ட காரணங்களால் உரிய நேரத்தில் சம்பளம் கிடைக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. தமிழகம் முழுவதும் பணிபுரிந்து வரும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு அந்தந்த துறை மூலம் சம்பள பட்டியல் பெறப்பட்டு, மாவட்ட கருவூலம் மூலம் சம்பளம் வழங்கப்படுகிறது. இது தற்போது முற்றிலும் ஆன்லைனுக்கு மாற்றப்பட்டது. இதற்கென ஐஎப்எச்ஆர்எம்எஸ் சாப்ட்வேர் உருவாக்கப்பட்டு, மாநிலம் முழுவதும் உள்ள பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
இந்த ஐஎப்எச்ஆர்எம்எஸ் நடைமுறை வரும் ஏப்ரல் முதல் முழுமையாக அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இதனிடையே, சேலம், ஈரோடு, நெல்லை உள்பட சில மாவட்டங்களில் நடப்பு மாதம் முதலே, ஐஎப்எச்ஆர்எம்எஸ் மூலம் மட்டுமே சம்பள பட்டியல் அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது. பல இடங்களில் சர்வர் பிரச்னை உள்ளிட்ட காரணங்களால், பட்டியல் அனுப்புவது தடைபட்டுள்ளது. இதனால், நடப்பு மாதம் உரிய நேரத்தில் சம்பளம் கிடைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இது குறித்து பணம் பெற்று வழங்கும் அலுவலர்கள் கூறியதாவது: தற்போது, அளிக்கப்பட்டுள்ள சாப்ட்வேரில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் விவரங்களை பதிவு செய்தால், சர்வர் தாமதமாவதுடன், ஏற்றுக்கொள்ளாமல் டெலிட் ஆகிறது. பல துறையில் உள்ள அலுவலர்களுக்கு ஐஎப்எச்ஆர்எம்எஸ் பதிவேற்றம் குறித்து எந்தவித பயிற்சியும் முழுமையாக அளிக்கப்படவில்லை. மாவட்ட கருவூலத்தில் நேரில் சென்று கேட்டால், அங்குள்ள விப்ரோ பணியாளர்கள், இதை இங்கு சரிசெய்ய முடியாதுஎன சாதாரணமாக கூறுகின்றனர். இதுபோன்ற பல்வேறு பிரச்னைகள் இருக்கும் போது, சம்பள பட்டியலை ஐஎப்எச்ஆர்எம்எஸ் மூலம் போட்டவர்களுக்கு மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும் என்பது வேதனை அளிக்கிறது. ஒவ்வொரு மாதமும் அதிகபட்சம் 25ம் தேதிக்குள் சம்பள பட்டியல் அனுப்பப்பட்டு விடும்.
சர்வர் பிரச்னையால், நடப்பு மாதத்திற்கு இதுவரை பட்டியல் முழுமையாக தயாராகவில்லை. இதனால், ஆயிரக்கணக்கான அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் உரிய நாளில் சம்பளம் பெறமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
பாவங்க நாங்க... வாட்ஸ் அப்பில் புலம்பல்
ஐஎப்எச்ஆர்எம்எஸ் சம்பள பட்டியல் விவகாரம் தொடர்பாக, பணம் பெற்று வழங்கும் அலுவலர்கள் வேதனை தெரிவித்து, வாட்ஸ் அப் தகவல் ஒன்று வேகமாக பரவி வருகிறது. அதில், ‘‘ மேலதிகாரிகளே, மிக்க மகிழ்ச்சி. 24x7 பணிபுரிய நாங்கள் தயார், Wipro விடம் Software தயாரா என கேட்டீர்களா? உங்க உதவாக்கரை சர்வரால், இன்னிக்கு என்ன வேலை நடந்தது? பாவங்க நாங்க. முழுமையாக முடிக்காத ஒரு சர்வரை வைத்துக் கொண்டு, அப்பாவி அரசு ஊழியர்களை திட்டும் அதிகாரிகளே, உங்களால் ஒருவருக்காவது பில் போட்டு காட்ட முடியுமா? என குறிப்பிடப்பட்டுள்ளது
பள்ளிக் கல்வியை உறுதிப்படுத்துவதன் அவசியம் குறித்த தினமணி நாளிதழ் தலையங்கம்!
இந்திய மக்கள்தொகையில் பாதிக்கும் மேற்பட்டோர் 25 வயதுக்கும் கீழே உள்ளவர்கள் எனும் நிலையில், நமது பொருளாதார முன்னேற்றத்தில் கல்வி ஒரு மிக முக்கியமான பங்கு வகிக்கிறது. ஆனால், கவனம் செலுத்தப்படாத, புறக்கணிக்கப்படும் துறையாகக் கல்வி மாறிவருகிறது. தனியார்மயக் கொள்கை அறிமுகப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து கல்வி குறித்த அரசின் கவனம் படிப்படியாகக் குறைந்து வருவது தவறான போக்கு.அவசர நிலைச் சட்டத்தைத் தொடர்ந்து அன்றைய இந்திரா காந்தி அரசு, பொதுப் பட்டியலுக்குக் கல்வியை மாற்றியபோது, மாநில அரசுகள் எதிர்த்துப் பேச முடியாமல் வாயடைத்திருந்தன. ஜனதா ஆட்சி ஏற்பட்டபோது மீண்டும் மாநிலப் பட்டியலுக்குக் கொண்டு செல்ல யாரும் வற்புறுத்தவில்லை.
விடுதலை பெற்றது முதல் நாம் எல்லாத் தளங்களிலும் கல்வியைக் கொண்டு செல்வதில் கவனம் செலுத்தி வந்திருக்கிறோம் என்பது மறுக்க முடியாத உண்மை. உயர் கல்வியில் ஏனைய பல நாடுகளைவிட இந்தியா முன்னேற்றம் கண்டிருக்கிறது. ஆனால், அதே அளவிலான அல்லது திருப்தி அளிக்கும் வகையிலான முன்னேற்றம் தொடக்கக் கல்வி, ஆரம்பக் கல்வி, இடைநிலைக் கல்வி நிலைகளில் ஏற்பட்டிருக்கிறதா என்றால் இல்லை.
தலையங்கம் அதிவேகமாகப் பொருளாதாரம் வளர்ந்தபோதும்கூட, கல்விக்கான ஒதுக்கீடு இந்தியாவின் ஜிடிபியில் 4% அளவைத் தொட்டதில்லை. 2012-இல் ஜிடிபியில் 3.3% கல்விக்காக ஒதுக்கப்பட்டதைத் தொடர்ந்து, இப்போதுவரை அந்த அளவைத் தொட்டது இல்லை. 1966-இல் அமைக்கப்பட்ட கோத்தாரி கமிஷனின் பரிந்துரையான ஜிடிபியில் 6% கல்வி ஒதுக்கீடு என்பது கனவாகத்தான் இன்றுவரை தொடர்கிறது.
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்திருக்கும் நிதிநிலை அறிக்கையில், கல்விக்கான ஒதுக்கீடு வழக்கம்போல போதுமான அளவு வழங்கப்படவில்லை என்கிற ஆதங்கம் ஒருபுறம் இருந்தாலும், நல்ல அறிவிப்புகளும் இல்லாமல் இல்லை. 100 முன்னணி கல்வி நிறுவனங்களுக்கு இணையதள வழிக் கல்விக்கு அனுமதி வழங்க முற்பட்டிருப்பது வரவேற்புக்குரிய முயற்சி. உயர் கல்விச் சாலைகளில் சேர்ந்து படிக்க வசதியாக, சமுதாயத்தில் நலிந்த பிரிவினருக்கு இது வரப்பிரசாதமாக அமையக்கூடும்.
திறன் மேம்பாட்டுக்கு நிதியமைச்சர் ரூ.3,000 கோடி ஒதுக்கீடு செய்திருக்கிறார். கல்விக்கும் வேலைவாய்ப்புக்கும் இடைவெளியை நிரப்பி, இது வேலையில்லாத் திண்டாட்டத்தை சற்று குறைக்க உதவக்கூடும். 150 உயர் கல்வி நிறுவனங்களுக்கு பயிற்சியுடன் இணைந்த பட்ட, பட்டயப் படிப்புகளுக்கு அனுமதி வழங்கப்படுவது வேலைவாய்ப்பை உறுதிப்படுத்த உதவும்
2020-21 நிதிநிலை அறிக்கையில் கல்வித் துறைக்கான மொத்த ஒதுக்கீடு ரூ.99,311.52 கோடி. அதில் உயர் கல்விக்கான ஒதுக்கீடு ரூ.39,466.52 கோடி. கடந்த ஆண்டுக்கான கல்வி ஒதுக்கீட்டில் 3% அதிகரித்து ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பது எந்தப் பயனும் அளிக்கப் போவதில்லை. விலைவாசி உயர்வு அளவுக்குக்கூட அதிகரித்த ஒதுக்கீடு இல்லையென்றால், நிர்வாகச் செலவினங்கள் போக புதிய திட்டங்களுக்கு என்ன கிடைத்துவிடும் என்பதைச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
கல்வியைத் தனியார் துறையின்கீழ் ஒப்படைத்துத் தனது கடமையைத் தட்டிக்கழிப்பது என்று முந்தைய மன்மோகன் சிங் அரசின் கொள்கை முடிவை வார்த்தை பிசகாமல் பின்பற்றுகிறது நரேந்திர மோடி அரசு. அரசின் நேரடிக் கண்காணிப்பும் முனைப்பும் இல்லாமல் கல்வித் துறை தனியார் துறையிடம் விடப்படும்போது, அதனால் பாதிக்கப்படுவது நடுத்தர, சாமானிய மக்கள் என்பது குறித்து அரசு கவலைப்படுவதாகத் தெரியவில்லை.
தில்லி சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி பெற்ற மிகப் பெரிய வெற்றி, அரசுப் பள்ளிக்கூடங்களின் செயல்பாடுகளை மேம்படுத்தி, நல்ல தரமான கல்வியின் மூலம் மக்களின் ஆதரவைப் பெற முடியும் என்பதை ஏனைய மத்திய - மாநில அரசுகள் உணர வேண்டும்.
கல்வித் துறையில் 100% அந்நிய வணிகக் கடனுக்கும், அந்நிய நேரடி முதலீட்டுக்கும் அனுமதி வழங்கப்பட்டும் அதனால் பெரியதொரு மாற்றம் எதுவும் ஏற்பட்டுவிடவில்லை. தொடக்கக் கல்வியிலிருந்து இடைநிலைக் கல்வி வரையிலான கல்வியின் தரம் குறித்து ஆண்டுதோறும் "ஏசர்' அறிக்கை வெளிச்சம் போட்டும்கூட, மத்திய - மாநில அரசுகள் ஒருங்கிணைந்து செயலாற்றிப் பிரச்னைக்குத் தீர்வு காணாமல் இருக்கின்றன. தேசியக் கல்விக் கொள்கையும், அனைவருக்கும் கல்வித் திட்டமும், கல்வி பெறும் உரிமைச் சட்டமும் தீர்வாகிவிடாது.
2013-14 நிதியாண்டில் இந்தியாவில் உள்ள 13 லட்சம் அரசுப் பள்ளிகளில் 9.1% மட்டுமே கல்வி பெறும் உரிமைச் சட்டத்தைப் பயன்படுத்தி மாணவர்கள் சேர்க்கையை அதிகரித்திருக்கின்றன. 2017-18-இல் அதுவே 13% அதிகரித்தது. தற்போது ஆண்டுக்கு 1% அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், நாம் கல்வி பெறும் உரிமைச் சட்டத்தை 100% உறுதிப்படுத்த எத்தனை ஆண்டுகள் தேவைப்படுமோ தெரியவில்லை. இது குறித்து 2020-21 நிதிநிலை அறிக்கை கவலைப்பட்டதாகத் தெரியவில்லை.
சர்வதேசத் தரத்திலான உயர் கல்வியை உறுதிப்படுத்துவதில் முனைப்புக் காட்டுவதில் மகிழ்ச்சி, அதே நேரத்தில் கடையேனுக்கும் கடைத்தேற்றம் வழங்கும் விதத்திலான அடிப்படையில், பள்ளிக் கல்வியை உறுதிப்படுத்துவதும், கல்வி கற்கும் நிலையை மேம்படுத்துவதும் இல்லாமல் போனால், பொருளாதார முன்னேற்றத்துக்கு அர்த்தம் எதுவும் கிடையாது!
11th Computer Applications - 5 Mark Study Materials
Latest 11th Study Materials
- 11th Computer Applications - 5 Mark Study Materials
12th French - Centum Question Paper Model Question Paper
- 12th French - Centum Question Paper Model Question Paper | Mrs. Sheila Desai - French Medium Download Here
12th Biology - Public Exam - 6 Days Study Plan
12th Standard - Public Exam March 2020 - Study Plan Download
- 12th Biology - Public Exam March 2020 - 6 Days Study Plan