Half Yearly Exam 2024
Latest Updates
அரசுப் பள்ளிகளை தவறாக சித்திரிக்கும் நோக்குடன் காட்சிகள்:ராட்சசி படத்துக்கு ஆசிரியர் சங்கம் கண்டனம்
ஒட்டுமொத்த அரசுப் பள்ளிகளின் ஆசிரியர்கள் மீது சேற்றை வாரி இறைப்பது அரசுப் பள்ளிகள் மீது மக்களுக்கு நம்பிக்கையின்மை ஏற்படுத்தும் செயல் என ராட்சசி' படம் குறித்து ஆசிரியர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சங்கத்தின் தலைவர் இளமாறன் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை:
ஜோதிகா நடிப்பில் வெளியாகியுள்ள ராட்சசி' திரைப்படம் அரசுப் பள்ளிகளை சீர்திருத்துவதாகக் கூறி சேற்றை வாரிப் பூசுகிறது. அந்தப் படத்தில் அரசுப் பள்ளி ஆசிரியர்களை இழிவுபடுத்தும் வசனங்களை எழுதியுள்ளனர். பெற்றோர் மத்தியில் தவறான கருத்துக்களைப் பதிவு செய்தால் குழந்தைகளை சேர்ப்பதற்கு எப்படி முன்வருவார்கள்?

B.Ed விண்ணப்ப விநியோகம் அடுத்த வாரம் தொடக்கம்
பி.எட். (ஆசிரியர் கல்வியியல் கல்வி) சேர்க்கைக்கான கலந்தாய்வு ஆகஸ்ட் மாதம் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான விண்ணப்ப விநியோகம் அடுத்த வாரம் தொடங்கப்பட உள்ளது.
அரசு, அரசு உதவி பெறும் கல்லூரிகளில் இடம்பெற்றுள்ள பி.எட். படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வை தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் அல்லது சென்னை காமராஜர் சாலையில் அமைந்துள்ள விலிங்டன் சீமாட்டி கல்வியியல் உயராய்வு நிறுவனம் நடத்தி வருகின்றன.
நிகழாண்டுக்கான (2019-20) கலந்தாய்வை விலிங்டன் சீமாட்டி கல்வியியல் உயராய்வு நிறுவனம் நடத்த உள்ளது. கலந்தாய்வானது வழக்கம் போல ஆகஸ்ட் மாதத்தில் நடத்தப்படுகிறது. இதற்கான விண்ணப்ப விநியோகம் அடுத்த வாரம் தொடங்குகிறது.
விண்ணப்பக் கட்டணம் பொதுப் பிரிவினருக்கு ரூ. 500-ஆகவும், எஸ்.சி., எஸ்.டி., எஸ்சிஏ பிரிவினருக்கு ரூ. 250 என்ற அளவிலும் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.
விண்ணப்ப விநியோக தேதி உள்ளிட்ட விவரங்கள் உயராய்வு நிறுவனத்தின் புதிய இணையதளத்தில் ஓரிரு நாள்களில் வெளியிடப்பட உள்ளன.
உயராய்வு நிறுவனத்தின் வழக்கமான இணையதளம் முடங்கியிருப்பதால், புதிய இணையதளத்தை கல்வி நிறுவனம் உருவாக்கியுள்ளது. இந்தப் புதிய இணையதள விவரம் திங்கள்கிழமை வெளியிடப்படும் என உயராய்வு நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர்
9ம் வகுப்பு மாணவர்களுக்கான திறனாய்வுத் தேர்வு - ஜூலை 15 முதல் விண்ணப்பம்
மருத்துவ கலந்தாய்வு நடைபெறும் மருத்துவமனை முன் பெற்றோர்களுடன் மாணவர்கள் தர்ணா
எம்பிபிஎஸ் மாணவர் சேர்க்கை:பி.சி., ஓ.சி. பிரிவு இடங்கள் முழுவதும் நிரம்பின
மருத்துவ கலந்தாய்வில் 1554 பேர் பங்கேற்கவில்லை - மருத்துவ கல்வி இயக்ககம் தகவல்
பணி நியமனத்திற்கு கூடுதல் கல்வி தகுதியுள்ளவர் உரிமை கோர முடியாது: உயர் நீதிமன்றம் உத்தரவு
மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு : 3 நாள் கலந்தாய்வில் நிரம்பிய 65% எம்.பி.பி.எஸ். இடங்கள்
மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு நடைபெற்றும் வரும் நிலையில், மூன்று நாள் கலந்தாய்விலேயே, அரசு மருத்துவக் கல்லுாரிகளில் உள்ள 3 ஆயிரத்து 968 எம்பிபிஎஸ் இடங்களில், 65 விழுக்காடு இடங்கள் நிரம்பிவிட்டன
மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு நடைபெற்றும் வரும் நிலையில், மூன்று நாள் கலந்தாய்விலேயே, அரசு மருத்துவக் கல்லுாரிகளில் உள்ள 3 ஆயிரத்து 968 எம்பிபிஎஸ் இடங்களில், 65 விழுக்காடு இடங்கள் நிரம்பிவிட்டன. கடந்த 9ஆம் தேதி பொதுப்பிரிவு கலந்தாய்வு தொடங்கியது. இதில் அரசு மற்றும் அரசின் கீழ் செயல்படும் 26 மருத்துவக்கல்லூரிகளில், அகில இந்திய ஒதுக்கீடு போக, மாநில அரசு ஒதுக்கீட்டின் கீழ், எம்பிபிஎஸ் படிப்பில் மட்டும் 3968 இடங்கள் உள்ளன. இதில் 2548 இடங்கள் நிரம்பிவிட்டன. இதேபோல், 13 தனியார் மருத்துவக் கல்லுாரிகளில், அரசு ஒதுக்கீட்டின் கீழ் உள்ள 977 இடங்களில், 687 இடங்களும் நிரம்பிவிட்டன.