Latest 11th Study Materials - English Medium ( Based on New Syllabus )
- 11th Physics - Model Question Paper | Mr. G. Thirumoorthy - English Medium Download Here
- 11th Physics - Model Question Paper | Mr. G. Thirumoorthy - Tamil Medium Download Here
அரசு கல்லூரி உதவி பேராசிரியர் நியமனத்தில் பல்கலைக்கழக மானியக்குழு விதிகளை மீறும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
பல்கலைக்கழக மானியக்குழு கடந்த 2009-ம் ஆண்டு வகுத்துள்ள விதிகளை பின்பற்றி தமிழகத்தில் உள்ள அரசு கலை கல்லூரிகளில் உதவி பேராசிரியர்களை நியமிக்க வேண்டும் என்று உத்தரவிடக்கோரி ராஜேஷ், ஜெஸ்லின் பிரிசில்டா ஆகியோர் மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்குகளை நீதிபதி சுப்பிரமணியன் விசாரித்தார். பின்னர் இந்த வழக்கில் நீதிபதி பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:- ஆசிரியர் பணிஎன்பது உயர்ந்த பணி. வகுப்பறைகளில் கற்பிப்பது என்பது ஒரு திறமையாகும். ஒரு ஆசிரியர், வகுப்பறை கலையை கண்டிப்பாக தெரிந்திருக்க வேண்டும். இதனால் முழு நேர கல்லூரிகளில், கண்டிப்பாக முறையாக கல்வி கற்றவர்களை மட்டுமே உதவி பேராசிரியர்களாக நியமிக்க வேண்டும். கல்லூரிகளுக்கு செல்லாமல் திறந்தவெளி பல்கலைக்கழகம், தொலைநிலை கல்வியில் பட்டம் பெற்றவர்கள் பல்கலைக்கழக மானியக்குழு விதிப்படி உதவி பேராசிரியர்களாக நியமிக்க தகுதியற்றவர்கள்.
இதனால் பல்கலைக்கழக மானியக்குழு விதிப்படி அரசு கல்லூரி உதவி பேராசிரியர் நியமனத்தை மேற்கொள்ள தமிழக உயர் கல்வித்துறை செயலாளர், ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் ஆகியோர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதை மீறும் அதிகாரிகள் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் அரசு கல்லூரிகளின் உதவி பேராசிரியர் நியமனங்கள் பல்கலைக்கழக மானியக்குழு விதிப்படி நடைபெறுவதை மாநில அரசு உறுதிப்படுத்த வேண்டும். இவ்வாறு நீதிபதி தனது உத்தரவில் கூறி உள்ளார்.