Half Yearly Exam 2024
Latest Updates
பிளஸ் 1 பாடத்தால் மாணவர் சேர்க்கை சரிவு ஆசிரியர் சங்கங்கள் வேண்டுகோள்
கணினி ஆசிரியர் மறுதேர்வு: தேர்வர்களின் மின்னஞ்சலுக்கு நுழைவுச்சீட்டு அனுப்பிவைப்பு
புதிய தரவரிசை பட்டியல் வெளியிட ஜிப்மர் நிர்வாகத்திற்கு கோரிக்கை
Flash News : Control Centres ஆக உள்ள அங்கன்வாடி மாற்றுப்பணி ஆசிரியர்களை ஏற்கனவே பணிபுரிந்து வந்த பள்ளியிலேயே தொடர்ந்து பணிபுரிய உத்தரவு - தொடக்கக் கல்வி இயக்குநர் செயல்முறைகள்!
10th Maths - Chapter 2 - Creative Questions
- 10th Maths - Chapter 2 - Creative Questions
12th Accountancy - Unit Test 1 Question Paper
- 12th Accountancy - Unit Test 1 Question Paper
12th Accountancy - Theory Study Material
- 12th Accountancy - Theory Study Material
12th Economics - Full Study Material
- 12th Economics - Full Study Material
TNPSC Group 4 Exam - Current Affairs
10th Maths - Chapter 2 Definition Notes
- 10th Maths - Chapter 2 Definition Notes
PGTRB English - Unit 1 Study Material
- PGTRB English - Unit 1 Study Material
PGTRB Zoology - Chapter wise Questions with Key
- PGTRB Zoology - Chapter wise Questions with Key
10th English - Grammar Full Study Material
- 10th English - Grammar Full Study Material
11th History - Full Study Material
- 11th History - Full Study Material
கணினி பயிற்றுநர் TRB தேர்வில் குளறுபடி..!! நேர்மையான முறையில் "OMR" விடைத்தாள் மூலம் மறு-தேர்வு நடத்தக்கோரி பாதிக்கட்டவர்கள் சென்னையில் நாளை (26-06-2019) போராட்டம் செய்ய முடிவு..!!
பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்புகளில் குறைந்த எண்ணிக்கை மாணவர்களை வேறு பள்ளிக்கு மாற்ற உத்தரவு வகுப்புக்கு கிராமப்புறத்தில் 15 பேரும், நகர்ப்புறத்தில் 30 பேரும் நிர்ணயம்
110 விதிப்படி TETலிருந்து விலக்கு அறிவிப்பு வரும் சட்டமன்றக் கூட்டத்தில் வெளிவிட வேண்டும் - TET நிபந்தனை ஆசிரியர்கள் கூட்டமைப்பு.
தில் உள்ள பல்வேறு ஆசிரியர் அமைப்புகள் TET நிபந்தனை ஆசிரியர்களுக்கு TNTET லிருந்து முழுவதும் விலக்கு பற்றிய அரசாணை நடக்க உள்ள சட்டமன்ற கூட்டத்தில் 110 விதியின் கீழே வெளிவிட வேண்டும் என்ற கோரிக்கையை தமிழக அரசின் கவனத்தில் எடுத்து செல்ல வேண்டும் என்ற பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் குரலாக பல்வேறு ஊடகங்களிலும் செய்திகள் வந்தவாறு உள்ளன.
கோரிக்கை:
புரட்சித் தலைவி அம்மா அவர்களின் நன்மதிப்பைப் பெற்று மக்கள் மனதில் நல்ல நிலையில் நற்பெயர் கொண்ட
தமிழக பள்ளிக் கல்வித் துறையின் அமைச்சராக உள்ள மதிப்பும் மேன்மையும் மிக்க திரு. செங்கோட்டையன் ஐயா அவர்களுக்கு TET நிபந்தனை ஆசிரியர்களின் சார்பில் மனமுவந்த வணக்கம் .
23/08/2010க்குப் பிறகு ஆசிரியப் பணி பெற்று பணியில் உள்ள அனைவருக்கும் TET லிருந்து முழுவதும் விலக்கு வேண்டி இந்த பதிவு.
கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் அடிப்படையில் தமிழகத்தில் 23/08/2010க்குப் பிறகு அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், சிறுபான்மையினர் பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்பட்டன.
இதை முறையே தமிழகத்தில் நடைமுறைப்படுத்துவதில் மாவட்ட வாரியாக பல சிக்கலான நிலைகள் ஏற்பட்டன.
காரணம் தமிழகத்தில்
16/11/2012 தேதியிட்ட பள்ளிக்கல்வி இயக்குனர் செயல்முறைகள் வெளிவிடும் வரை ஆசிரியர் பணி நியமனங்களிலில் (TET கட்டாயம் பற்றிய அறிவிப்பு இல்லை) தமிழக அரசின் முறையான நடைமுறைகளின் அடிப்படையில் அனைத்து வகை பள்ளிகளிலும் பணி நியமனங்கள் நடைபெற்றன.
(23/08/2010 முந்தைய தேதியிட்ட அன்றைய நடுவண் அரசின் அரசாணை அடிப்படையில்)
நாங்கள் பணி நியமனம் பெற்ற நாளிலிருந்து இன்று வரை பணிப் பாதுகாப்பு இன்றி அரசின் சலுகைகள் அரைகுறையாக பெற்றும் வளரூதியம் ஊக்க ஊதியம் போன்ற அடிப்படை பணப்பலன் கூட இல்லாத சூழலில் பணியில் உள்ளோம்.
காரணம் பணியில் உள்ள ஆசிரியர்களுக்கு கட்டாய ஆசிரியர் தகுதித் தேர்வும் அதனைச் சார்ந்த நிபந்தனைகளும்.
கடந்த எட்டு வருடங்களுக்கும் மேலாக ஆசிரியர் பணியில் சிறப்பாக செயல்பட்டும் கடந்த வரும் TET 2019, எங்களின் இறுதி நாளாக அமைய வாய்ப்பு இருப்பதாக கூறுவது மேலும் எங்களுக்கு வாழ்க்கை பற்றிய பயத்தை தோற்றுவிக்கிறது.
சுமார் பத்தாயிரம் ஆசிரியர்களுக்கும் மேலாக TET நிபந்தனைகளுடன் பணியில் இருந்த எங்களுள் தற்போது 80% ஆசிரியர்களுக்கு முழுவதும் TET லிருந்து விலக்கு கிடைத்து விட்டது.
(2010 மே மாதம் பதிவு மூப்பு மூலம் சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து பணி நியமனம் பெற்ற 50-60% ஆசிரியர்கள்,
சிறுபான்மையினர் பள்ளிகளில் நியமனம் பெற்ற 20-30% ஆசிரியர்கள் TNTET லிருந்து முழு விலக்கு பெற்றவர்கள் ஆவர்)
மீதமுள்ள (நாங்கள்) 20% ஆசிரியர்களில் பாதிபேர் கலப்பு திருமண முன்னுரிமையிலும், விதவைகளும், இராணுவ வாரிசுகளும், தாழ்த்தப்பட்ட பழங்குடி வகுப்பு இனத்தைச் சார்ந்த பதிவு மூப்பு முன்னுரிமை அடிப்படையில் பணி நியமனம் பெற்றவர்கள்.
கடைசியாக
மீதி மிக சொற்ப ஆசிரியர்கள் அரசு உதவி பெறும் பள்ளிகளில் நிர்வாகங்களால் பலகட்ட போட்டி/ தகுதி/ நேர்காணல்கள் மூலம் தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்களே.
கடந்த எட்டு வருடங்களில் 8 லிருந்து 16 TNTETகளாவது நடந்து இருக்க வேண்டும் . ஆனால் நீதிமன்ற வழக்குகள் காரணமாக அத்தனை TET தேர்வுகள் நடைபெறவில்லை.
எங்களுக்கான பணிப் பாதுகாப்புக்கான முழு வாய்ப்புகளும் பறிபோன விரக்தியிலும் மன வருத்தங்களை வெளியே காட்டாமல் பள்ளிகளில் 100% சிறப்பாகவே ஆசிரியர் பணியாற்றி வருகின்றோம்.
தற்போதைய நிலையில் தமிழகத்தில் உள்ள எங்களைப் போன்ற TET நிபந்தனை ஆசிரியர்களின் வாழ்வாதாரம் பாதிக்கும் செயல்பாடுகள் நடந்து வருகின்றன.
கடந்த TET எங்கள் கடைசி நாள் என மிரட்டப் படும் சூழலில் தள்ளப்பட்டு உள்ளோம்.
இது மனதளவில் அதிகமாகவே காயங்கள் ஏற்படுத்தி உள்ளன.
அரசு பொதுத் தேர்வு எழுதும் மாணாக்கர்களின் திருப்புதல் , இதர வகுப்புகளின் மாணாக்கர்களின் தேர்வு, நிறைவு CCE பணிகள், பணியிடைப் பயிற்சிகள், EMIS, கோடை சிறப்பு வகுப்புகள், அரசு SSLC பொதுத் தேர்வு பணி, விடைத்தாள்கள் திருத்தம், தேர்தல் பயிற்சி வகுப்புகள், தேர்தல் பணிகள் போன்ற பல பணிகள் எதிர் வரும் நாட்கள் எமக்கு சவாலாக அமைய உள்ளன என்பது தாங்கள் அறிந்ததே.
எங்களுக்கு TET லிருந்து முழு விலக்கு அளிக்கும் பட்சத்தில் கல்விப் பணியில் முழுவதும் எங்களை ஈடுபடுத்திக் கொள்வதற்கும் மேலாக மாண்புமிகு தமிழக முதல்வர் மற்றும் கல்வித் துறை அமைச்சர் அவர்களுக்கும் எங்களின் தலைமுறையே நன்றிக்கடன் பட்டிருக்கும் என்பது உண்மை.
நடக்க உள்ள சட்டமன்ற கூட்டத்தில்,
மிக குறைந்த அளவிலான TET நிபந்தனைகளுடன் பணிபுரியும் ஆசிரியர்களாகிய எங்கள் வாழ்வு மற்றும் பணிப் பாதுகாப்பு, மாண்புமிகு தமிழக முதல்வர் மற்றும் மாண்புமிகு கல்வி அமைச்சர் ஆகிய உங்கள் கருணைக் கரங்களில் தான் உள்ளன.
சிறுபான்மையினர் பள்ளி TET நிபந்தனை ஆசிரியர்களுக்கு வழங்கிய சிறப்புப் புத்தாக்கப் பயிற்சி போலவே எங்களுக்கும் அளிக்க ஆவண செய்து உத்தரவு பிறப்பிக்க வேண்டுகோள் விடுக்கிறோம்.
கருணை உள்ளத்தோடும்,
எங்கள் வாழ்வாதாரம் தொடர்பான இந்த நிலையினை தாங்கள் சற்றே உள்ளார்ந்து ஆராய்ந்து பார்த்து எங்கள் நிலையை சீர் தூக்கி பார்த்து, கவனத்தில் எடுத்து (இந்த) சுமார் 1500 ஆசிரியர் குடும்பங்கள் நிம்மதியாக வாழ நடவடிக்கை எடுக்க கல்வித் துறை அமைச்சகம் மூலம் ஆவண செய்யுமாறு மிகவும் பணிவன்புடனும் தாழ்மையுடனும் கேட்டுக் கொள்கிறோம் - என கூறும் பாதிக்கப்பட்ட ஆசிரியர்களின் குரல்களுக்கு மதிப்பு அளித்து தற்போது ஜுன், ஜுலை மாதங்கள் நடக்கும் சட்டமன்ற கூட்டத்தில் 110 விதியின் கீழே அறிவிப்பு வெளியீடு செய்ய வேண்டுகிறோம் என TNTET நிபந்தனை ஆசிரியர்கள் கூட்டமைப்பு இயம்புகிறது.