எம்.பி.பி.எஸ். படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வை எழுதியோர் தங்களின்
விண்ணப்பங்களில் ஏதேனும் தவறுகள் இழைத்திருந்தால் அதனைத் திருத்திக்
கொள்ளலாம் என்று மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ)
அறிவித்துள்ளது.
பாரத ஸ்டேட் வங்கி வாடிக்கையாளர்களின்கணக்கிலிருந்து 3 மாதத்துக்கு ஒருமுறை
15 ரூபாய் பிடித்தம் செய்யும் முறை தொடரும் என வங்கியின் தலைவர்
ரஜனீஷ்குமார் தெரிவித்துள்ளார்.
'மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வூதியம் பெறுவதற்கு, ஆதார் அடையாள
எண் அவசியம் இல்லை,'' என, மத்திய பணியாளர் நலத்துறை இணையமைச்சர்,
ஜிதேந்திர சிங் கூறியுள்ளார்.
தமிழக அரசு தாய்மொழி வழிக் கல்வி மழலையர் பள்ளிகளை உருவாக்க வேண்டும் என்று
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர், கலைஞர்கள் சங்க மாவட்ட மாநாட்டில்
வலியுறுத்தப்பட்டது.
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின்
பல்வேறு சலுகைகளுக்கு போட்டியாக பிஎஸ்என்எல் தொலைத்தொடர்பு நிறுவனம்
ரூ.39க்கு காலிங் சலுகையை வாடிக்கையாளர்களுக்கு அறிமுகம் செய்துள்ளது.