பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொது
தேர்வில் கேள்விகள் குறைக்கப்பட்டுள்ளது என்றும் இதனால் தேர்வு ேநரமும்
குறையும் என்றும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்கள் சிலருக்கு, ஹால் டிக்கெட்டில்
தவறான புகைப்படம், பெயர் இடம் பெற்றுள்ளதால், தேர்வு எழுத முடியுமா என,
அவர்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
ஓய்வூதிய வல்லுநர் குழுவின் அறிக்கையை தமிழக அரசிடம் தாக்கல் செய்யக்கோரி திண்டுக்கல் எங்கெல்ஸ்
அவர்களால் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் தொடுக்கப்பட்ட வழக்கு இன்று
21.02.2018 விசாரணைக்கு வருகிறது.
பள்ளி, கல்லூரிகளில் ஆசிரியர் -மாணவர்களுக்கு இடையிலான உறவில் விரிசல்
அதிகரித்து வரும் போக்கைச் சீரமைக்க உரிய நடவடிக்கைகள் மேற்கொள்வது அவசியம்
என்று தனலட்சுமி பொறியியல் கல்லூரி தலைவர் பேராசிரியர் ராமூர்த்தி
கூறினார்.
மாற்றுத் திறனாளிகளுக்கு 75 சதவிகித மானியத்துடன் ஸ்கூட்டர் வழங்கக் கோரி தொடரப்பட்ட வழக்கை நாளை (பிப்ரவரி 21) விசாரிக்கவுள்ளதாகச் சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
சென்னை : தமிழக அரசின் பணியிடங்களில் தேவையற்ற இடங்களை கண்டறிந்து குறைக்க
குழு அமைக்க முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி ஆதிசேஷையா தலைமையில் குழு
அமைக்கப்பட்டுள்ளது.