கோவை:மூன்றே மாதத்தில் மக்கும் தன்மை இருப்பதால், பிளாஸ்டிக்கிற்கு
மாற்றாக, மக்காச்சோள கழிவில் தயாரிக்கப்பட்ட 'கேரி பேக்' பயன்படுத்த, கோவை
மாநகராட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.
ராமநாதபுரம், ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி சுரேஷ் சுதா அழகன் அரசு
மேல்நிலைப்பள்ளி தொன்மை பாதுகாப்பு மன்ற மாணவர்கள் பாண்டியர்,சோழர் காலத்தை
சேர்ந்த செப்பு காசுகளை கண்டெடுத்து, ஆவணப்படுத்தியுள்ளனர்.
தமிழகத்தில், 578 சார் பதிவாளர் அலுவலகங்களிலும், ஆன் லைன் முறையில்
பத்திரப்பதிவு செய்யும் நடைமுறை, நவ., 15ல் துவக்கப்பட உள்ளது. இதனால்,
பதிவு முடிந்த சில நிமிடங்களிலேயே பத்திரங்களை பெறலாம்.
மாற்றுத்திறனாளிகளின் உணர்வுகளுக்கும், உரிமைகளுக்கும் மதிப்பளிக்கும் வகையில் அடுத்த கல்வியாண்டு முதல் பள்ளிகளில்
புதிய பாடத்திட்டத்தை அரசு உருவாக்க வேண்டும் என்று ஐகோர்ட்டு
உத்தரவிட்டுள்ளது.
தனி தேர்வர்களுக்கான, 8ம் வகுப்பு
பொதுத்தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர், இணையதளம் வாயிலாக, பதிவு
செய்யலாம்' என, அரசு தேர்வுகள் இயக்குனர், வசுந்தராதேவி தெரிவித்து
உள்ளார்.
பிளஸ் 2 துணை தேர்வெழுதிய மாணவர்கள் நாளை
முதல் இணையதளத்தில் விடைத்தாள் நகல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று
அரசு தேர்வுகள் இயக்குனர் தெரிவித்துள்ளார்.