தமிழகத்தில், ஹிந்தி எதிர்ப்பால், துவக்க முடியாமல் முடங்கிய, நவோதயா
பள்ளிகள், 3௦ ஆண்டுகளுக்குப் பின் துளிர் விடுகின்றன. 32 மாவட்டங்களிலும்,
இந்த பள்ளிகளை துவக்க, நவம்பர், 20க்குள் தடையில்லா சான்று வழங்க, தமிழக
அரசு முடிவு செய்துள்ளது.
அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் படிக்கும் சிறுபான்மை மாணவர்கள்,
கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கும் தேதி செப்.,30ல் இருந்து அக்.,31 வரை
நீட்டிக்கப்பட்டுள்ளது.
வருமான வரி செலுத்துவோருக்கு அனுப்பப்படும் தகவல், சரியாக சென்றடைவதற்காக, தனி நபர்கள், தங்களின் விபரங்களை, இணையதளத்தில் பதிவு செய்ய, அத்துறை அறிவுறுத்தியுள்ளது.
ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் பயன்படுத்துவோருக்கு, ரூட் செய்யப்பட்ட ஆண்ட்ராய்டு சாதனங்களை சைபர் தாக்குதல்களில் இருந்து தங்களது சாதனங்களை பாதுகாப்பாக வைத்துக் கொள்வது எப்படி என்பதை இங்கு தொகுத்திருக்கிறோம்.
சென்னை, மேம்பட்ட வசதிகளுடன், சென்னை பறக்கும் ரெயில்கள், மெட்ரோ ரெயில் நிறுவனம் வசம் வருகிறது. எனவே ரெயில் கட்டணம் உயர வாய்ப்பு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
விரைவில் அமலாகும் புதிய பாடத்திட்டத்தில், பி.எட்., படித்து
காத்திருக்கும்,39 ஆயிரத்துக்கும் மேற்பட்ட, கணினி ஆசிரியர்களுக்கு, வேலை
வாய்ப்புகிடைக்கும்என்ற, எதிர்பார்ப்பு மேலோங்கியுள்ளது.
'பாடங்களை புரிந்து கொள்ளாத பள்ளிப் படிப்புகள் வீண். இந்தியா போன்ற
குறைந்த மற்றும் நடுத்தர வருவாய் உள்ள நாடுகளில், துவக்கக் கல்வி முறை
மிகவும் மோசமாக உள்ளது; இது, மாணவர்களின் எதிர்காலத்தைபாதிக்கும்' என, உலக
வங்கி குறிப்பிட்டுள்ளது.
'சித்தா, ஆயுர்வேதம் உள்ளிட்ட, இந்திய முறை மருத்துவ படிப்புகளுக்கான
கவுன்சிலிங், அக்., இரண்டாம் வாரத்தில் துவங்கும்' என, இந்திய முறை
மருத்துவ அதிகாரிகள் தெரிவித்தனர்.