தீபாவளியை முன்னிட்டு பல நிறுவனங்கள் சலுகைகளை வழங்கி வருகிறது. மொபைல்
ரீசார்ஜ் கட்டணம் முதல் ஸ்மார்ட்போன் கட்டணம் வரை அனைத்தும் சலுகை
விலையில் வழங்கப்படவுள்ளது.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 4,820 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என
மாநில போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அறிவித்துள்ளார்.
சென்னை பல்லவன் இல்லத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இத்தகவலை
தெரிவித்தார்.
அனைத்து கிராமப்புறக் குடும்பங்களுக்கும் 24 மணி நேர மின்சார வசதி வழங்கும்
திட்டத்தைப் பிரதமர் மோடி அறிவிப்பார் என்று மின்சக்தித்துறை அமைச்சர்
தெரிவித்துள்ளார்.
மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் மூலம் 744 சிறப்பு மருத்துவர்கள்
தேர்வு செய்யப்படுகின்றனர் என்று சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர்
தெரிவித்துள்ளார்.
மதுரை:மதுரையில் அதிக எண்ணிக்கையில் பள்ளிகள் கொண்ட மதுரை கல்வி மாவட்டத்தை
(டி.இ.ஓ.,) இரண்டாக பிரிக்க வேண்டும் என்ற திட்டம் 10 ஆண்டுகளாக கிடப்பில்
போடப்பட்டுள்ளது.
தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி அறிவித்தபடி ஊதிய மாற்று அறிக்கையைப்
பெற்று அக். 15-ஆம் தேதிக்குள் அமல்படுத்த வேண்டும் என அரசுப் பணியாளர்
சங்க கூட்டுக் குழு மாநில சிறப்புத் தலைவர் கு. பாலசுப்பிரமணியன் கூறினார்.