சமூக வலைதளங்களில் நீதித்துறையை விமர்சித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும், இதுகுறித்து ஏற்கனவே பெருங்களத்தூரை சேர்ந்த ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சுபாஷ் சந்திரபோஸ் என்பவர் கைது
செய்யப்பட்டுள்ளார் என்று,தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் முதல் வகுப்பில் சுமை அதிகம் என்று
தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கிருபாகரன்,
குழந்தைப் பருவத்தை வீணடிக்கிறோம் என்று கவலை தெரிவித்தார்.
பினாமி சொத்துக்களை பதுக்கி வைத்து இருப்பவர்கள் குறித்து விசாரணை அமைப்புகளான சி.பி.ஐ.வருமான வரித் துறைக்கு ரகசியமாக தகவல் அளிக்கும்
நபர்களுக்கு குறைந்த பட்சம் ரூ.15 லட்சம் முதல் ரூ. ஒரு கோடி வரை பரிசு
அளிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
2 மாதத்தில் கணினி ஆசிரியர்கள் தேர்வு; ஒரே மாதத்தில் முடிவு வெளியிடப்படும்: பள்ளிக் கல்வி அமைச்சர் செங்கோட்டையன் தகவல் அரசு பள்ளிகளில் 2 மாதத்தில் கணினி ஆசிரியர்கள் தேர்வுசெய்யப்பட உள்ளனர்.
''மாவட்டத்திற்கு, தலா, ஆறு ஆசிரியர்களை தேர்வு செய்து, அவர்களுக்கு, 'கனவு ஆசிரியர்' என்ற விருதும், தலா, 10 ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகையும், இந்த ஆண்டு முதல் வழங்கப்படும்,'' என, முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.
முதுகலை பட்டதாரி ஆசிரியர் நியமன பணிக்கான தேர்வு நடத்திய இரண்டு மாத்ததில்
இறுதி பட்டியல் தயார். மேலும் ஆசிரியர் பணியாளர் தேர்வு மையம் அடுத்த
தேர்வுகள் நடத்தவும் திட்டமிட்டுள்ளது.