தமிழகத்தில் தனியார் பள்ளிகள் விடுமுறை நாட்களில் பயிற்சி வகுப்புகளை
நடத்தினால் முதன்மை கல்வி அலுவலர் மூலம் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்
என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
மாணவர்களுக்கு கல்வி கடன் அளித்த வங்கிகள், அதற்கான வட்டித் தொகையை
பெற்றுக் கொள்ளலாம்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. வங்கிகள் தவறினால்,
அது மாணவர்களை பாதிக்கும்.
ஏஜன்சிகளின் முறைகேட்டை தடுக்க, விரும்பிய நிறுவனத்திற்கு மாறும் திட்டம்
குறித்து, சமையல் காஸ் சிலிண்டர் வாடிக்கையாளர்களிடம், எண்ணெய் நிறுவனங்கள்
விழிப்புணர்வு ஏற்படுத்த முடிவு செய்துள்ளன.
பிளஸ் 1 பொதுத்தேர்வின் புதிய விதிகள் மற்றும் வினாத்தாள்
குறித்து, மாணவர்களுக்கு தேர்வு நடத்தி, விழிப்புணர்வு ஏற்படுத்துமாறு,
தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
தில்லி அரசின் கல்வித்துறைகளில் காலியாக உள்ள 15 ஆயிரத்து 54
ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாத பணியிடங்களுக்கான அறிவிப்பை தில்லி துணை
சேவை தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.
எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு மாணவர்சேர்க்கைக்கான முதல்நாள்
கலந்தாய்வில் தரவரிசைப் பட்டியலில் முதல் 26 இடங்களை பிடித்தவர்கள்
பங்கேற்கவில்லை. அடுத்த இடங்களில் இருந்த 10 மாணவர்கள் சென்னை மருத்துவக்
கல்லூரியை தேர்வு செய்தனர்.
யுனைடெட் இந்தியா மற்றும் ஓரியண்டல் இன்சூரன்ஸ் ஆகிய நிறுவனங்களில் காலியாக
உள்ள 1500 உதவியாளர் பணியிடங்களுக்கான போட்டி தேர்வுகளுக்கு சென்னையில்
நடக்க உள்ள இலவச பயிற்சி வகுப்புகளில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம்
மாவட்டங்களை சேர்ந்தோர் பங்கேற்கலாம்.
புதிய பாடத்திட்ட தயாரிப்புடன், ஆசிரியர்களுக் கான கற்பித்தல்
முறையை மாற்றவும், அவர்க ளின் பயிற்சிக்கு, புதிய விதிகள் அடங்கிய
புத்தகம் தயாரிக்கவும், பள்ளிக்கல்வித் துறை முடிவு செய்துள்ளது.