தேர்தல்களில் பிளாஸ்டிக் கொடிகள், பதாகைகள் (பேனர்கள்) பயன்படுத்தப்படுவதை
முறைப்படுத்த வேண்டும் என்று மத்திய அரசுக்கு தேசிய பசுமைத் தீர்ப்பாயம்
உத்தரவிட்டுள்ளது.
செல்லாத ரூபாய் நோட்டுகளை மாற்றியதில் நடந்த முறைகேடுகள் குறித்து, அஞ்சல்
துறை அதிகாரிகளின் வீடு மற்றும் அலுவலகங்களில், வருமான வரித்துறை,
சி.பி.ஐ., அதிகாரிகள் சோதனை நடத்துவர் என, தெரிகிறது.
TNPSC தேர்விற்கு அல்லும், பகலும் படித்து தேர்வு எழுதிவிட்டு வேலை
கிடைக்காதா ? என்று ஏங்கும் தமிழ்நாடு போட்டி தேர்வாளர்களே சற்று உங்கள்
பார்வையை RRB(Railway Recruitment Board)பக்கம் திருப்புங்கள்.
தேவையான அளவுக்கு புதிய ரூபாய் நோட்டுகள் அச்சடிக்காததால் வங்கிகள்,
ஏ.டி.எம்.களில் இருந்து பணம் எடுப்பதற்கான கட்டுப்பாடுகள் 30-ந் தேதிக்கு
பின்னரும்நீடிக்கும் என தெரியவந்துள்ளது.
இந்திய உயர் கல்வி நிறுவனங்கள் மற்றும் பல்கலைகளில், முதுநிலை
பட்டப்படிப்பு முடித்த பின், பிஎச்.டி., படிக்க வேண்டும். அதற்கு, முதுநிலை
படித்த பின், 'நெட்' என்ற தேசிய தகுதி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.
அலுவலகரீதியாக எடுக்கப்படும் முடிவுகளையும், முக்கியத் தகவல்களையும் சமூக
வலைதளங்களில் விவாதிக்க வேண்டாம் என்று வருமான வரித் துறை அதிகாரிகளுக்கு
மத்திய நேரடி வரிவிதிப்பு வாரியம் அறிவுறுத்தியுள்ளது.
ஊழலை நாட்டில் இருந்து வேரோடு ஒழிக்கும் வரையிலும் கறுப்பு
பணத்திற்கு எதிரான போர் தொடரும் எனவும், நேர்மையற்ற நபர்களுக்கு டிசம்பர்
30-ம் தேதிக்குப் பிறகு பிரச்சனைகள் அதிகரிக்கும் என்றும் பிரதமர் நரேந்திர
மோடி தெரிவித்துள்ளார்.