Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

சிறப்பாகச் செயல்படும் பல்கலை.களுக்கு தன்னாட்சி அதிகாரம்: மத்திய அரசு திட்டம்

சிறப்பாகச் செயல்படும் பல்கலைக்கழகங்களுக்கு தன்னாட்சி அதிகாரம் வழங்குவதற்கு மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் தெரிவித்தார்.

நாளை 3-ஆம் கட்ட மருத்துவக் கலந்தாய்வு

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., படிப்பில் காலியிடங்களுக்கான 3-ஆம் கட்ட கலந்தாய்வு புதன்கிழமை (செப். 28) நடைபெறவுள்ளது.

துணை மருத்துவப் படிப்புகளுக்கு இன்று கலந்தாய்வு

தமிழகத்தில் துணை மருத்துவப் படிப்புகளுக்கான 2 -ஆம் கட்ட கலந்தாய்வு செவ்வாய்க்கிழமை (செப்.27) நடைபெறவுள்ளது.

துணைத் தேர்வு எழுதிய பிளஸ் 2 மாணவர்களுக்கு 29-இல் அசல் சான்றிதழ்

கடந்த ஜூன் மாதம் மேல்நிலை சிறப்புத் துணைத் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு வரும் 29-ஆம் தேதி அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட உள்ளது.

டிஎன்பிஎஸ்சி அரசுப் பணி தேர்வுகளுக்கான மாதிரி வினா-விடை

1. "புன்னகை நாடு" என வருணிக்கப்படும் நாடு - தாய்லாந்து
2. பெளத்தர்களின் சமய நூல் - திரிபீடம்
3. எதிரி நாடுகளுடன் போரிட்டு தீரச் செயல் புரிந்தவருக்கு வழங்கப்படும் உயர்ந்த விருது - பரம்வீர்சக்ரா

அரசுப்பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள்பொதுத்தேர்வுக்கான முன்தயாரிப்பு!

முக்கிய பாடங்களில் பின்தங்கும் மாணவர்களுக்கு, பயிற்சி அளிக்கும் நோக்கில், காலாண்டு விடுமுறையில், அரசு பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடக்கின்றன.

பிஎப் பணம் எடுக்க மொபைல் ஆப் வருகிறது

பிஎப் பணத்தை எடுக்க மொபைல் ஆப் அறிமுகம் செய்ய பிஎப் நிறுவனம் முடிவு செய்துள்ளது.  பிஎப் பணத்தை எடுக்க வசதியாக மொபைல் ஆப் வர உள்ளது. இது அடுத்த ஆண்டு துவக்கத்தில் அறிமுகம் செய்யப்படும்.

90 நாளுக்கு 30ஜிபி சிறப்பு திட்டம்: ஜியோவுக்கு போட்டியாக ஏர்டெல் 4ஜி டேட்டா சலுகை

ஜியோவுக்கு போட்டியாக ஏர்டெல் நிறுவனமும் 4ஜி டேட்டா சேவையில் புதிய சலுகையை அறிவித்துள்ளது. இத்திட்டத்தின்படி, 90 நாட்களுக்கு 30ஜிபி 4ஜி டேட்டாவை வழங்குகிறது.

தேர்தல் செலவுக்கு ரூ.183 கோடி ஒதுக்கீடு: தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வந்தது

உள்ளாட்சி தேர்தல் தேதி உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிமிடத்தில் இருந்து தமிழகம் முழுவதும் தேர்தல் நன்னடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துவிட்டதாக மாநில தேர்தல் ஆணையர் பெ.சீத்தாராமன் தெரிவித்தார்.

இனிமேல் தங்கள் அதிகார எல்லைக்குள் மட்டுமே பல்கலைக்கழகங்கள் தொலைதூரக்கல்வி படிப்புகளை நடத்த முடியும் 

பல்கலைக்கழகங்கள் தங்கள் அதிகார எல்லைக்குள் மட்டுமே தொலைதூரக்கல்வி படிப்புகளை நடத்த வேண்டும் என்று யுஜிசி உத்தரவு பிறப்பித்துள்ளது.

புதிய விண்வெளி அவதாரம்!

தலையாலங் கானத்துச் செரு வென்ற பாண்டிய நெடுஞ்செழியன் என்ற சுருக்கமான பெயர் மாதிரியே, "ஏரோபிக் வெஹிக்கிள் ஃபார் டிரான்ஸட்மாஸ்ஃபெரிக் ஹைப்பர்சானிக் ஏரோஸ்பேஸ் டிரான்ஸ்போர்ட்டேஷன்' என்ற நெடுநீண்ட ஆங்கிலச் சொற்கோவைச் சுருக்கமே "அவதார்'.

தமிழக அரசில் துணை ஆய்வாளர், ஃபோர்மேன் பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு

தமிழக அரசின் மீன்வளத்துறையில் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்பட உள்ள துணை ஆய்வாளர், ஃபோர்மேன்பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும்உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

ஜிசாட் 18 செயற்கைகோள் அக்டோபர் 4-ம் தேதி விண்ணில் ஏவப்படும்: இஸ்ரோ தலைவர் கிரண் குமார்

ஸ்ரீஹரிகோட்டா: தகவல் தொடர்பு செயற்கைக்கோள் ஜிசாட் 18 செயற்கைகோள் அக்டோபர் 4-ம் தேதி விண்ணில் ஏவப்படும் என்று இஸ்ரோ தலைவர் 
ஏ.எஸ் கிரண் குமார் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் கூறினார். 

8 செயற்கைக்கோள்களுடன் இன்று விண்ணில் பாய்கிறது பி.எஸ்.எல்.வி. சி 35 ராக்கெட்

எட்டு செயற்கைக்கோள்களுடன் பி.எஸ்.எல்.வி. சி-35 ராக்கெட் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவன் விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் இருந்து திங்கள்கிழமை (செப்டம்பர் 26) காலை 9.12 மணிக்கு விண்ணில் ஏவப்படுகிறது.

பள்ளிகளின் கல்வித் தரத்தை அறிய மாணவர்களிடையே தேர்வு: மத்திய அரசு முடிவு

பள்ளிகளின் கல்வித் தரமறிய, மாணவர்களிடையே மத்திய அரசு மதிப்பீட்டுத் தேர்வு நடத்தும் என்று மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் தெரிவித்தார்.

10ம் வகுப்பு தனித்தேர்வர் 27 முதல் விண்ணப்பம்

சென்னை: பத்தாம் வகுப்பு தேர்வு எழுத உள்ள தனித்தேர்வர்கள், செப்., 27 முதல்,அறிவியல் செய்முறை பயிற்சிக்குவிண்ணப்பிக்கலாம்.

உள்ளாட்சி தேர்தல்: தமிழகத்தில் 5.80 கோடி வாக்காளர்கள்

சென்னை, தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் பெ.சீத்தாராமன் வெளியிட்ட அறிவிப்பு வருமாறு:

2-ம் கட்ட உள்ளாட்சி தேர்தல்: சென்னை மாநகராட்சிக்கு 19-ந்தேதி வாக்குப்பதிவு

சென்னை,சென்னை மாநகராட்சிக்கு 2-ம் கட்டமாக 19-ந்தேதி வாக்குப்பதிவு நடக்கிறது.2-ம் கட்ட வாக்குப்பதிவுஉள்ளாட்சி தேர்தலில் திருச்சி, நெல்லை, திண்டுக்கல், மதுரை, கோவை ஆகிய 5 மாநகராட்சி மேயர் பதவிகள் பெண்களுக்கு(பொது) ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தமிழக உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிப்பு:அக்டோபர் 17 மற்றும் 19ம் தேதி 2 கட்டங்களாக நடைபெறுகிறது

சென்னை,மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, கிராம பஞ்சாயத்து உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளின் பதவி காலம் வருகிற அக்டோபர் மாதம் 24-ந்தேதியுடன் முடிவடைகிறது. இந்நிலையில் தமிழக உள்ளாட்சி தேர்தல் தேதியை மாநில தேர்தல் கமிஷனர் சீத்தாராமன் அறிவித்துள்ளார். 

செவ்வாய் கிரகத்தை ஆராய அனுப்பப்பட்ட மங்கள்யானுக்கு கிரகணத்தால் பாதிப்பு ஏற்படாமல் தடுக்க நடவடிக்கை இஸ்ரோ தலைவர் கிரண்குமார் பேட்டி

சென்னைசெவ்வாய் கிரகத்தை ஆராய அனுப்பப்பட்ட மங்கள்யான் விண்கலத்துக்கு கிரகணத்தால் பாதிப்பு ஏற்படாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என இஸ்ரோ தலைவர் கிரண்குமார் கூறினார்.

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் அக்டோபர் 17, 19-ம் தேதிகளில் இருக்கட்டமாக நடைபெறும்

சென்னை: தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் அக்டோபர் 17 மற்றும் 19-ம் தேதிகளில் இருக்கட்டமாக நடைபெறுகிறது.

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் தேதி இன்று மாலை அறிவிப்பு

சென்னை, மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, கிராம பஞ்சாயத்து உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளின் பதவி காலம் வருகிற அக்டோபர் மாதம் 24-ந்தேதியுடன் முடிவடைகிறது. அதற்குள் உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தலை நடத்துவதற்கான பணிகளில் மாநில தேர்தல் கமிஷன் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

முறைகேடு நடக்காமல் தடுக்க விரைவில் டி.ஆர்.பி., 'ரிசல்ட்'

272 விரிவுரையாளர் பணியிடத்திற்கான தேர்வில், முறைகேடுகளை தவிர்க்க, தேர்வு முடிவை விரைந்து வெளியிட, தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., முடிவு செய்துள்ளது.

துப்புரவாளர்களுக்கு ரூ.15 ஆயிரம் சம்பளம் : வழங்க கோரி போராட சிவகாமி முடிவு

துப்புரவு ஊழியர்களுக்கு குறைந்தபட்ச சம்பளமாக, 15 ஆயிரம் ரூபாய் வழங்கக்கோரி, சமூக சமத்துவ அரசு ஊழியர்கள் கூட்டமைப்பு நிறுவனர், சிவகாமி போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளார். சேலத்தில், சமூக சமத்துவ அரசு ஊழியர்கள் கூட்டமைப்பு சார்பில், எஸ்.சி., - எஸ்.டி., அரசு ஊழியர்கள் கோரிக்கைகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம், நேற்று நடந்தது. இதில், நிறுவன தலைவர் சிவகாமி ஐ.ஏ.எஸ்., பேசினார்.



பின், அவர் நிருபர்களிடம் கூறியதாவது: துப்புரவு ஊழியர்களுக்கு, குறைந்தபட்ச அடிப்படை சம்பளமாக, 15 ஆயிரம் ரூபாய் வழங்கி, அவர்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி, வரும், நவ., 21ல், சேலத்தில், மிகப்பெரிய போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம். பள்ளி கல்வித் துறையில், ஆதிதிராவிடர்களுக்கென தனி கல்வி இயக்குனரகம் ஏற்படுத்த வேண்டும். முதியோர் மற்றும் விதவை உதவித்தொகை கேட்டு, 100க்கும் மேற்பட்டோர் மனு கொடுத்துள்ளனர். நில அபகரிப்பு தொடர்பாக, ஆதிதிராவிடர் புகார் கொடுத்தால், அவர்கள் மீதே, வழக்கு பதியும் நிலை உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

இன்னும் சில தினங்களில் அறிவிப்பு வரும் 1,620 முதுகலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப முடிவு: பள்ளி கல்வி இயக்குனர் தகவல்

நாகர்கோவில் : ``1620 முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்பட உள்ளன’’ என்று பள்ளி கல்வி இயக்குனர் கண்ணப்பன் கூறினார்.

வாட்ஸ் அப்: தனி உரிமை பாதுகாப்பு-உயர் நீதிமன்றம் உத்தரவு!

         வாட்ஸ் அப் ஃபேஸ்புக்குடன் இணைந்த பிறகு, வாட்ஸ் அப்பை பயன்படுத்துபவர்களின் தகவல்கள், ஃபேஸ்புக்கில் பகிர்ந்து கொள்ளலாம். பகிர்ந்துகொள்ள விரும்பாதவர்கள் வெளியேற செப்டம்பர் 25ஆம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டது. புதிய தனிநபர் கொள்கையை எதிர்த்து

வங்கிகளுக்கு 5 நாள் விடுமுறை

           அடுத்த மாதம், பொதுத் துறை வங்கிகள், ஐந்து நாட்கள் இயங்காது. வங்கிகளுக்கு,ஒவ்வொரு மாதமும், இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமை விடுமுறை தினம்.
 

2,000 ஆசிரியர் இடம் காலி மத்திய அரசு பள்ளிகளில்: தமிழக பட்டதாரிகளுக்கு வாய்ப்பு

           மத்திய அரசின் நவோதயா பள்ளிகளில், 2,072 காலியிடங்களில், புதிய ஆசிரியர்கள் மற்றும் அதிகாரிகள் நியமிக்கப்பட உள்ளனர். 
 

'இன்ஸ்பையர்' விருது பதிவு : அரசு பள்ளிகளுக்கு சிக்கல்.

            மத்திய அரசின், அறிவியல் விருதுக்கான பதிவுக்கு, உரிய வழிகாட்டுதல் இல்லாததால், தமிழக பள்ளிகள் பதிவு செய்யமுடியாமல் தவிக்கின்றன. 
 

'அரசு ஊழியர் ஓய்வூதியமா; எங்களுக்கு தெரியாது': கைவிரித்தது ஆணையம்.

          'புதிய ஓய்வூதிய திட்டத்தில் மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியம் குறித்த விபரம் எங்களுக்கு தெரியாது' என, ஓய்வூதிய நிதி ஒழுங்கற்று மேம்பாட்டு ஆணையம் (பி.எப்.ஆர்.டி.ஏ.,) கைவிரித்துள்ளது.
 

டெங்கு, சிக் குன் குனியாவை தடுக்க தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுரை.

           பள்ளி மாணவர்களுக்கு, 'டெங்கு, சிக் குன் குனியா' போன்ற காய்ச்சல்கள் வராமல் தடுக்க, முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கும்படி, பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

புதிய ஓய்வூதிய திட்ட விவகாரம் : அரசு பணியாளர்கள் எச்சரிக்கை.

         ''புதிய ஓய்வூதிய திட்டத்தை, ரத்துசெய்ய நடவடிக்கை எடுக்காத பட்சத்தில், போராட்டம் நடத்தப்படும்,'' என, தமிழ்நாடு அரசு பணியாளர்கள் சங்க தலைவர் செல்வராஜ் தெரிவித்தார்.
 

தனியார் பள்ளி வாகனங்களுக்கு கிடுக்கிப்பிடி கட்டுப்பாடுகள்

            மாணவர்களை ஏற்றிச் செல்லும் தனியார் வாகனங்களுக்கு, கிடுக்கிப்பிடி விதிமுறைகள் கொண்டு வர, பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளது. 
 

சட்டசபை தேர்தல் பணி மதிப்பூதியம் : தமிழகத்துக்கு ரூ.64.70 கோடி ஒதுக்கீடு.

 சட்டசபை தேர்தல் பணியில் ஈடுபட்ட, கலெக்டர் முதல், கடைநிலை ஊழியர்களுக்கு, மதிப்பூதியமாக, 64.70 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து, தேர்தல் ஆணையம் உத்தரவிட்டு உள்ளது.

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive