பள்ளி வாகன விதிகளை தளர்த்துவது தொடர்பாக பள்ளிகளின் கருத்து
கேட்பு குழுவின் பரிந்துரை மீது முடிவை தெரிவிக்க தமிழக அரசுக்கு சென்னை
உயர் நீதிமன்றம் 4 வாரம் அவகாசம் அளித்துள்ளது.
பத்தாம் வகுப்பு துணைத்தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தனித்தேர்வர்கள்
செப்டம்பர் 9க்குள் விண்ணப்பிக்க வேண்டும் என அரசுத் தேர்வுகள் இயக்கம்
தெரிவித்துள்ளது.
முன்னணி பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கியின் மும்பையிஸ் நிரப்பப்பட
உள்ள 33 சிறப்பு அதிகாரி பணிக்கு தகுதியும் விருப்பமும்
உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வியியல் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின்
கீழ் உள்ள 1,777 பி.எட். இடங்களை நிரப்பு வதற்கான கலந்தாய்வு ஆகஸ்ட் மாதம்
22-ம் தேதி சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள லேடி வெலிங்டன் கல்வியியல்
மேம்பாட்டு நிறுவனத்தில் தொடங் கியது.
மத்திய சுகாதார அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் தேசிய சுகாதார மிஷனில்
2016-ஆம் ஆண்டிற்கான 5550 ஆய்வக உதவியாளர், வார்டு பாய்,
பிசியோதெரபிஸ்ட், மருத்துவ உதவி, காசாளர் போன்ற பணியிடங்களுக்கு
அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
மத்திய அரசு ஊழியர்களுக்கு 2 ஆண்டு போனஸ் விரைவில் வழங்கப்படும் என்று
மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி அறிவித்துள்ளார் மேலும் குறைந்த பட்ச
ஊதியம் அதிகரிக்கப்படும் என்றும் கூறினார்.
Enhancement of calculation ceiling for the purpose of payment of PLB and
Ad-hoc Bonus in case of Central Government Employees for the Accounting
year 2014-15.
வாக்காளர் பட்டியலில் திருத்தங்கள்
மேற்கொள்ளவும், புதிதாக பெயர் சேர்க்கவும் வரும் வியாழக்கிழமை (செப்டம்பர்
1) முதல் விண்ணப்பங்களை பொதுமக்கள் அளிக்கலாம்.
திண்டுக்கல், எஸ்.எஸ்.எம்., பொறியியல்
கல்லுாரி மாணவர்களால் நவீன தொழில் நுட்பத்தில் உருவாக்கப்பட்ட பெட்ரோல்
மற்றும் மின்சாரத்தில் இயங்கும் கார், தேசிய அளவில், 'ஹைபிரிட் கார்'
தொழில் நுட்பத்திற்கான, மூன்றாம் இடத்தை பெற்றுள்ளது.
தமிழகத்தில், முதன் முதலாக, 'ராஜிவ் கேல்
அபியான்' திட்டத்தின் கீழ், தேனி மாவட்டத்தில், இரு இடங்களில், 1.60 கோடி
ரூபாயில் உள்விளையாட்டரங்கம் அமைக்க விளையாட்டு மேம்பாட்டு ஆணையம்
உத்தரவிட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டத்தில், அரசு பள்ளி
ஆசிரியர்களுக்கு, கலெக்டரும், கல்வி அதிகாரிகளும் மாற்றி மாற்றி
உத்தரவிடுவதால், யார் உத்தரவை பின்பற்றுவது என, ஆசிரியர்கள் குழப்பத்தில்
உள்ளனர். ராமநாதபுரம் மாவட்டத்தில், அரசு பள்ளி மாணவர்களை, இன்ஜி., மற்றும்
மருத்துவ படிப்பில் சேர்க்க, 'எலைட்' என்ற திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.
விவசாயம்
சாராத தொழிலாளர்கள் குறைந்த பட்ச தினக்கூலியை ரூ.246லிருந்து ரூ.350 ஆக
உயர்த்த வேண்டுமென்ற நிபுணரின் அறிக்கையை மத்திய அரசு ஏற்றுக்கொண்டுள்ளதாக
நிதியமைச்சர் அருண் ஜெட்லி கூறியுள்ளார்.
எப்படா மணியடிக்கும் புத்தகப் பையைத் தூக்கிக்கிட்டு
வீட்டுக்கு ஓடலாம் என்றுதான் மாணவர்கள் காத்துக் கொண்டிருப்பார்கள். ஆனால்,
ஆசிரியர் பா.சத்தியவேலிடம் படிக்கும் மாணவர்களிடம், “நேரம் ஆகிருச்சு
கிளம்புங்கப்பா” என்று சொல்லித்தான் வீட்டுக்கு அனுப்ப வேண்டியிருக்கிறது.