Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பணி நிரந்தரம் ஆசிரியர் அதிருப்தி

          பணி நிரந்தர அறிவிப்பை, எப்போது அரசு வெளியிடும் என்ற எதிர்பார்ப்பில், 10 ஆயிரம் சிறப்பு ஆசிரியர்கள் மாநிலம் முவதும் காத்திருக்கின்றனர்.
 

மின் வாரிய தேர்வு 'ஹால் டிக்கெட்' வெளியீடு.

          மின் வாரியம், உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப, எழுத்து தேர்வுக்கான, 'ஹால் டிக்கெட்டை' வெளியிட்டு உள்ளது.இதுகுறித்து, மின் வாரிய செய்திக் குறிப்பு:
 

TNPSC:குரூப்-1 தேர்வில் வெற்றி பெற்ற 79 பேருக்கு பணி நியமன ஆணை-அரசு பணியாளர் தேர்வாணைய தலைவர் அருள்மொழி பணி ஆணை வழங்கினார்.

           மனிதநேய மையத்தில் படித்து குரூப்-1 தேர்வில் வெற்றி பெற்று பணி ஆணை பெற்ற காதல் தம்பதி சுரேஷ், வாசுகி ஆகியோரை படத்தில் காணலாம். குரூப்-1 தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய தலைவர் அருள்மொழி பணி ஆணை வழங்கினார்.
 

குழந்தைநேயப் பள்ளிகளாகும் 200 அரசுப் பள்ளிகள்: ஐ.நா.வின் யுனிசெப் சார்பில் ஆசிரியர்களுக்கு பயிற்சி

          தமிழகத்தில் 200 அரசுப் பள்ளிகள் குழந்தைநேயப் பள்ளிகளாக மாற்றப்பட உள்ளன. இதற்காக அந்தப் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
 

பதவி உயர்வு பட்டியல் வெளியிடாமல் கவுன்சலிங் : வரலாறு ஆசிரியர்கள் கொதிப்பு.

         பதவி உயர்வு பட்டியல் வெளியிடாமல் கவுன்சலிங் தேதி அறிவிக்கப்பட்டதால் வரலாறு ஆசிரியர்கள் குழப்பத்திலும், கொந்தளிப்பிலும் உள்ளனர்.தமிழகம் முழுவதும் அரசுப்பள்ளி ஆசிரியர் இடமாறுதல், பதவி உயர்வு கவுன்சலிங் நடந்து வருகிறது.
 

TET தேர்வு நடக்காத பின்னணி என்ன? - மனஉளைச்சலில் ஒரு லட்சம் ஆசிரியர் பட்டதாரிகள்

          தமிழகத்தில் மூன்று ஆண்டுகளாக ஆசிரியர் தகுதி தேர்வு (டி.இ.டி.,) நடக்காதததால், ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர் பட்டதாரிகள் மனஉளைச்சலில் உள்ளனர்.

32 ஆயிரம் மாணவிகளுக்கு தற்காப்பு கலை பயிற்சி : ரூ.60 லட்சம் ஒதுக்கீடு

          தமிழகத்தில் மாவட்டத்திற்கு ஆயிரம் மாணவிகள் வீதம், 32 ஆயிரம் மாணவிகளுக்கு தற்காப்பு கலை பயிற்சியளிக்க 60 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுஉள்ளது.அனைவருக்கும் கல்வி இயக்க மாநில திட்ட இயக்குனர் பூஜா குல்கர்னி கூறியிருப்பதாவது:

ஆதார் முகாம் நடத்துவதில் இழுபறி : தனியார் பள்ளி மாணவர்கள் அவதி

           ஆதார் முகாம் நடத்துவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால், தனியார் பள்ளி மாணவர்கள் அவதிக்கு ஆளாகியுள்ளனர். 
 

தொழிற்கல்வி ஆசிரியர்கள் கோரிக்கை

          அரசு பள்ளிகளில் பணியாற்றும், அனைத்து வகை ஆசிரியர்களும், உயர் கல்வியில் வேறு பாடங்கள் படித்தாலும், அவர்களுக்கு, இரண்டு ஊக்க ஊதியம் வழங்கப்படுகிறது. 
 

தேசிய கல்வி உதவி தொகை 65 லட்சம் பேர் பதிவு

         கல்வி உதவித் தொகைக்கான, 'ஆன்லைன்' பதிவு திட்டத்தில், 65 லட்சம் பேர் பதிவு செய்துள்ளனர். 
 

ஒலிம்பிக்கில் வெள்ளி வென்று சரித்திரம் படைத்தார் இந்தியாவின் தங்க மகள் சிந்து!

கோடிக்கணக்கான  மக்களின் பிரதிநிதியாக சென்று இந்தியாவுக்காக வெள்ளி வென்று சரித்திரம் படைத்திருக்கிறார் பி.வி.சிந்து. ரியோ ஒலிம்பிக்கில் இன்றைய தினம் இந்தியாவின் பி.வி சிந்துவும், ஸ்பெயினின் கரோலினா மரினும்  ஒற்றையர் பேட்மின்டன் இறுதிப்போட்டியில் நேருக்கு நேர் மோதினர். 

மருத்துவ நுழைவுத் தேர்வு தரவரிசைப் பட்டியலில் மாணவர்களை விட அதிக அளவில் இடம் பிடித்த மாணவிகள்: 3.21 லட்சம் பேர் தகுதி பெறவில்லை

தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வில் மாணவர்களை விட மாணவிகள் அதிக அளவில் தரவரிசைப் பட்டியலில் இடம் பிடித்துள்ளனர்.நாடு முழுவதும் அரசு மருத்துவம் மற்றும் பல் மருத்துவக்கல்லூரிகளில் உள்ள 15 சதவீதம் இடங்கள், தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள நிர்வாக ஒதுக்கீட்டு இடங்கள், நிகர்நிலை பல்கலைக்கழகங்களில் உள்ள எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களை தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (NEET) மூலம் நிரப்ப உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

தலைமை ஆசிரியை பணியிடை நீக்கம்

சுதந்திர தினத்தன்று மாணவர்களுக்கும், பெற்றோருக்கும் தகவல் தெரிவிக்காமல் காலதாமதமாக வந்து தேசியக் கொடி ஏற்றியதாக, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளித் தலைமை ஆசிரியை பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.


பள்ளி மாணவர்களுக்கு எரிசக்தி சேமிப்பு : விழிப்புணர்வு ஓவிய போட்டி நடத்த உத்தரவு

பள்ளி மாணவர்களுக்கு, எரிசக்தி சேமிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், ஓவியப்போட்டி நடத்த பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

TRB:-உதவி பேராசிரியர் பணிக்கு, விண்ணப்பித்தவர்களின் நிலை குறித்த பட்டியல் வெளியீடு.

இன்ஜி., கல்லுாரிகளில் உதவி பேராசிரியர் பணிக்கு, விண்ணப்பித்தவர்களின் நிலை குறித்த பட்டியலை, தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., வெளியிட்டு உள்ளது.அரசு இன்ஜி., கல்லுாரிகளில், 192 உதவி பேராசிரியர் இடங்களுக்கு, அக்., 22ல் எழுத்துத்தேர்வு அறிவிக்கப்பட்டு உள்ளது.


பத்தாம் வகுப்பை தனித்தேர்வராக எழுதிய மாணவியை சட்டக் கல்லூரியில் சேர்க்க உயர் நீதிமன்றம் உத்தரவு.

பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வை தனித் தேர்வராக எழுதிய மாணவிக்கு சட்டக் கல்லூரியில் பயில அனுமதி அளிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை வியாழக்கிழமை உத்தரவிட்டது.

ஏழு ஆண்டுகளாகியும் ஊதிய உயர்வில்லை : ஆர்.எம்.எஸ்.ஏ., பணியாளர் புலம்பல்.

பணியில் சேர்ந்து ஏழு ஆண்டுகளாகியும் இதுவரை ஊதிய உயர்வு அளிக்கப்படவில்லை என, ஆர்.எம்.எஸ்.ஏ., பணியாளர்கள் புலம்புகின்றனர். 2009ல் ஆர்.எம்.எஸ்.ஏ.,எனப்படும் அனைவருக்கும் இடைநிலை கல்வித் திட்டத்தை மத்திய அரசு அறிவித்தது.

வீட்டுவசதி வாரிய வீடுகளுக்கு ஆன்-லைனில் இனிவிண்ணப்பிக்கலாம்: அமைச்சர் உடுமலை கே. ராதாகிருஷ்ணன் அறிவிப்பு.

வீட்டு வசதி வாரிய வீடுகள் ஒதுக்கீட்டுக்கு ஆன்-லைனில் விண்ணப்பிக்கும் புதிய முறை அறிமுகப்படுத்தப்படும் என்று வீட்டுவசதி-நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் அறிவித்தார்.சட்டப் பேரவையில், வீட்டுவசதி-நகர்ப்புற வளர்ச்சித் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதங்களுக்கு பதிலளித்து அவர் வியாழக்கிழமை வெளியிட்ட அறிவிப்புகள்:

பி.எஸ்.என்.எல்., 'சண்டே ஜாலி' சலுகை : இணையதள இணைப்புக்கு கிடையாது

பி.எஸ்.என்.எல்., தொலைபேசி (தரைவழி) வாடிக்கையாளர்களுக்கான ஞாயிற்று கிழமைகளில் இலவச அழைப்பு சலுகை, அலைபேசி மற்றும் இணையதள இணைப்புகளுக்கு பொருந்தாது' என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

நீட்' தேர்வுக்கு சிறப்பு பயிற்சி : தனியார் பள்ளிகளில் துவக்கம்

அடுத்த ஆண்டு, 'நீட்' தேர்வு கட்டாயமாகும் நிலையில், தனியார் பள்ளிகளில், சிறப்பு பயிற்சி வகுப்புகள் துவங்கப்பட்டுள்ளன. எம்.பி.பி.எஸ்., மற்றும் பி.டி.எஸ்.,ஆகிய மருத்துவ படிப்புகளில் சேர, அனைத்து மாநிலங்களிலும், அடுத்த ஆண்டு முதல், 'நீட்' எனப்படும் தேசிய பொது நுழைவுத் தேர்வு நடத்துவது கட்டாயம் ஆகியுள்ளது.

பள்ளி மாணவர்களுக்கு அறிவியல் திறனறித் தேர்வு - பயன்கள்

அன்பாசிரியர்களே 

முயற்சிப்போம் முன்னேற்றுவோம் ...

பள்ளி மாணவர்களுக்கு
அறிவியல் திறனறித் தேர்வு ...

இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் கீழ் இயங்கும் விஞ்ஞான் பிரச்சார் நிறுவனம், விபா நிறுவனம், என்.சி,இ,ஆர்,டி ( NCERT, GOVT.OF INDIA) இணைந்து தேசிய அளவிலான அறிவியல் விழிப்புணர்வுத் தேர்வை நடத்தி வருகிறது. அறிவியல் மனப்பான்மையை, மாணாக்கர்களிடம் வளர்ப்பதோடு அறிவியலில் ஆராய்ச்சித் துறையில் ஈடுபாட்டை அதிகரிக்கவும் இத்தேர்வு நடத்தப்படுகிறது. இத்தேர்வு இந்தியா முழுவதும் ஒரே நாளில் நடைபெறுகிறது.


8 ஆயிரம் ஆசிரியர் பணியிடம் அறிவிப்பு: ஆன்லைனில் விண்ணப்பிக்க அழைப்பு.

ஆர்மி பப்ளிக் பள்ளிகளில் நிரப்பப்பட உள்ள 8 ஆசிரியர் பணியிடங்களுக்கான அறிப்பை இராணுவ நலன் கல்வி அமைப்பு Army Welfare Education Society(AWES) வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

ரியோ ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு முதல் பதக்கம்

ரியோ ஒலிம்பிக் 2016-ல் இந்தியா தனது முதல் பதக்கத்தை வென்று கணக்கைத் தொடங்கியுள்ளது. மகளிர் 58 கிலோ எடைப் பிரிவு மல்யுத்தப் போட்டியில் சாக்‌ஷி மாலிக் வெண்கலப் பதக்கம் வென்று இந்தியாவின் பதக்க தாகத்தை தணித்தார்.


வெள்ளிதோறும் கதர் ஆடை : அரசு ஊழியர்களுக்கு உத்தரவு வருமா

மத்திய அரசின் கதர் கிராமத் தொழில்கள் ஆணையம், கதர் பயன்பாட்டை அதிகரிக்க, முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு கட்டமாக, 'தமிழக அரசு பள்ளிகளில், கதர் சீருடைகள் வழங்க வேண்டும்' என, வேண்டுகோள் விடுத்துள்ளது.

தேசிய திறனறி தேர்வு: இன்று முதல் விண்ணப்பம்

பிளஸ் 1 முதல் ஆராய்ச்சி படிப்பு வரை உதவி தொகை வழங்கும், 'தேசிய திறனறி தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்' என, அறிவிக்கப்பட்டுள்ளது.

பி.எட்., 'கட் - ஆப்' வெளியீடு

பி.எட்., படிப்பில் சேர்வதற்கான, 'கட் - ஆப்' மதிப்பெண் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது. தமிழகத்திலுள்ள, ஏழு அரசு பி.எட்., கல்லுாரிகள் மற்றும், 14 அரசு உதவிபெறும் கல்லுாரிகளில், 1,777 இடங்களுக்கு, தமிழக அரசு சார்பில், சென்னை, லேடி வெலிங்டன் கல்லுாரியில், கவுன்சிலிங் நடத்தப்படுகிறது.

வேலையில்லா பட்டதாரிகள் , ஆசிரியர்கள் 18 லட்சம் பேர்

தமிழகத்தில் கலை, அறிவியல் பட்டம் பெற்ற, 14 லட்சம் பேர் வேலை இல்லாமல் உள்ளனர்; அதேபோல், நான்கு லட்சம் பட்டதாரி ஆசிரியர்களும் வேலைக்காக காத்திருக்கின்றனர்.

போதையில் பள்ளிக்கு வந்த 2 ஆசிரியர்கள் 'சஸ்பெண்ட்'

திருவண்ணாமலையில், போதையில் பள்ளிக்கு வந்த இரு ஆசிரியர்கள், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டனர். திருவண்ணாமலை மாவட்டம், கருமாரப்பட்டி அரசு நடுநிலைப் பள்ளியில், நேற்று முன்தினம், குடிபோதையில் பணிக்கு வந்த, ஆசிரியர் கருணாநிதியை கண்டித்து, மாணவர்கள் மற்றும் பெற்றோர் போராட்டம் நடத்தினர்.

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive