Half Yearly Exam 2024
Latest Updates
இந்த ஆண்டில் டிசம்பர் மாதம் ஒரு விநாடி கூடுதலாக இருக்கும்!
இந்த ஆண்டில் கூடுதலாக ஒரு விநாடியை சேர்க்க
சர்வதேச நேரத்தைக் கணக்கிட்டு வரும் அமெரிக்கக் கடற்படை வானாய்வு அமைப்பு
முடிவு செய்துள்ளது.
ஒருங்கிணைக்கப்பட்ட சர்வதேச நேரமும்,
அணுவியல் நேரமும் மாறாமல் இருக்க வேண்டியது அவசியம். அதனால் பூமியின்
மெதுவான சுழற்சியால் ஏற்படும் தாமதத்தை சர்வதேச நேரத்தில் சேர்க்கிறார்கள்.
அரசு பணியாளர் மருத்துவ காப்பீட்டு திட்டம்: 2020ம் ஆண்டு வரை நீட்டித்து முதல்வர் உத்தரவு
அரசு பணியாளர்களுக்கான மருத்துவ காப்பீட்டு திட்டத்தை, 2020ம் ஆண்டு வரை நீட்டித்து முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
மத்திய அரசு ஊழியர் 'ஸ்டிரைக்': 4 மாதங்களுக்கு ஒத்திவைப்பு
மத்திய அரசின், ஏழாவது ஊதிய கமிஷன்
பரிந்துரைகள் மீது ஏற்பட்ட அதிருப்தி காரணமாக அறிவித்திருந்த வேலை
நிறுத்தத்தை, ஊழியர்கள், தற்காலிகமாக, நான்கு மாதங்களுக்கு ஒத்தி
வைத்துள்ளனர்.
வேளாண் பல்கலையில் கலந்தாய்வு
வேளாண் பல்கலையில் நடந்த, நான்காம் நாள்
கலந்தாய்வில், 432 இடங்கள் நிரப்பப்பட்டன. கோவை, தமிழ்நாடு வேளாண்
பல்கலையில், பொதுப்பிரிவு, நான்காம் நாள் கலந்தாய்வுநேற்று நடந்தது; 1,154 பேர் அழைக்கப்பட்டதில், 439 பேர் பங்கேற்ற நிலையில், 432 பேர், விருப்பமான பாடங்களை தேர்வு செய்தனர்.
மாணவியருக்கான 'உதான்' திட்டம் - ஜூலை 13 வரை அவகாசம்
பிளஸ் 2 தேர்வில் சிறந்த மதிப்பெண் பெறும்,
1,000 மாணவியரை தேர்வு செய்து, அவர்கள் மத்திய அரசின் உயர்கல்வி
நிறுவனங்களான, ஐ.ஐ.டி., - என்.ஐ.டி., போன்றவற்றில், பி.இ., - பி.டெக்.,
போன்ற இன்ஜி., படிப்புகளில் சேர்ந்து, இலவசமாக படிக்க ஏற்பாடு
செய்யப்படுகிறது.இதற்காகவே, மத்திய அரசில், 'உதான்' என்ற திட்டம் செயல் படுத்தப்படுகிறது.
மெட்ரிக் பள்ளிகள் இயக்குனராக கருப்பசாமி நியமனம்
தமிழக பள்ளிக் கல்வித் துறையில், மெட்ரிக்
பள்ளிகள் இயக்ககத்துக்கு, புதிய இயக்குனராக கருப்பசாமி
நியமிக்கப்பட்டுள்ளார்.
வாக்காளர்கள் விபரம் சரிபார்க்கும் பணி துவக்கம்
தமிழகத்தில், வாக்காளர் பட்டியலை செம்மைப்படுத்தும் பணி, மே மாதம் துவக்கப்பட்டது. அதன்படி, 'தகுதியுள்ள அனைவரையும், வாக்காளர் பட்டியலில் சேர்க்க வேண்டும்; தவறுகளை களைய வேண்டும்;
குளிர்காலத்திற்கு ஏற்ற பானம் என்றால் அது மோர்தான்.
மோரில் உள்ள சத்துக்கள் மோரில் விட்டமின் பி காம்ப்ளக்ஸ், புரோட்டீன் மற்றும் பொட்டாசியம் அதிகம் உள்ளது. அதில் வைட்டமின் பி, அதாவது ரிபோப்ளேவின் தான் உணவை எனர்ஜியாக மாற்றவும், செரிமானத்தை அதிகரிக்கவும், ஹார்மோனை சீராக சுரக்கவும் உதவி புரிகிறது.
ரூ.10 ஆயிரத்திற்கு எல்இடி டிவி... 'ஃப்ரீடம் 251' ஸ்மார்ட் போனை அறிவித்த நிறுவனம் அறிமுகம்!
உலகிலேயே மிக குறைவான விலைக்கு செல்போனை விற்பனை செய்வதாக
கூறி, ரூ. 251 க்கு செல்போனை அறிமுகப்படுத்திய ரிங்கிங்பெல் நிறுவனம்,
தற்போது குறைந்த விலையில் எல்இடி டிவியை அறிமுகப்படுத்துவதாக
அறிவித்துள்ளது.
வகுப்பறையில் செல்போன் பயன்படுத்தினால் ரூ. 10,000 அபராதம்!
சென்னை;வகுப்பறையில் செல்போன் பயன்படுத்தினால் 10 ஆயிரம்
ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று கிண்டி பொறியியல் கல்லூரி நிர்வாகம்
மாணவர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.மாணவர்களுக்கு செல்போன், உடை
கட்டுப்பாடு போன்றவற்றை பள்ளி, கல்லுாரிகள் விதித்து வருகின்றன.
இருப்பினும் அவை மாணவர்களால் கடைபிடிக்கப்படுவதில்லை.
NHIS - அவசர சிகிச்சையாக அங்கீகரிக்கப்படாத மருத்துவமனையில் மேற்கொண்டிருப்பினும் காப்பீடு உண்டு
NHIS-அவசர சிகிச்சையாக அங்கீகரிக்கப்படாத மருத்துவமனையில் மேற்கொண்டிருப்பின், பணியாளர் பயன்பெறவும் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது
பேஸ்புக்கில் வெளியிடப்படும் ஆபாச புகைப்படங்களை அழிப்பது எப்படி?
பள்ளி ஆசிரியை வினுபிரியா தற்கொலை எதிரொலியாக பேஸ்புக்கில் வெளியிடப்படும்
ஆபாச புகைப்படங்களை அழிப்பது எப்படி என பெண்களுக்கு சைபர் கிரைம் போலீசார்
ஆலோசனை வழங்கியுள்ளனர்.
அரசுப் பள்ளிகளில் பணிபுரிய 1062 முதுகலைப் பட்டதாரிகளுக்கு தேர்வு எப்போது ? பட்டதாரிகள் எதிர்பார்ப்பு
சென்னை, ஜூலை 4 & தமிழகத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிகளில்
பணிபுரிவதற்கு முதுகலை ஆசிரியர்கள் தேர்வுக்கான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு
வாரியம் எப்பொழுது வெளியிடும் என பட்டதாரிகள் எதிர்பார்த்துள்ளனர்.
புதிய கல்வி கொள்கை - முக்கிய தொகுப்புகள்....
கல்வி முறையில் மாற்றம், தரம் வேண்டும் என்பதில் யாருக்கும் சந்ேதகமில்லை.
மத்தியில் நரேந்திரமோடி தலைமையிலான அரசு அமைந்த பின்னர் புதிய கல்வி கொள்கை
வகுப்பதற்காக மத்திய அரசின் கேபினட் செயலராக இருந்த டிஎஸ்ஆர் சுப்ரமணியம்
தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது.
பாட புத்தகங்கள் வினியோகத்தில் தாமதம் - அரசு உதவி பெறும் பள்ளிகளில் சிரமம்
ஊட்டி: கல்வியாண்டு துவங்கி, ஒரு மாதம் முடிந்தும், பல அரசு மற்றும் உதவி
பெறும் பள்ளிகளுக்கு பாட புத்தகங்கள் வந்து சேராததால், மாணவ, மாணவியர்
பாதிக்கப்பட்டுள்ளனர்.
மாணவர்களின் தனித்திறனை ஆசிரியர்கள் வெளிக்கொணர வேண்டும்
பாடப் புத்தகங்களை பயிற்றுவித்தல் என்ற எல்லையைத் தாண்டி, மாணவர்களின்
தனித்திறனை வெளிப்படுத்த ஆசிரியர்கள் முனைப்புக்காட்ட வேண்டும் என்றார்
நாகை மாவட்ட ஆட்சியர் சு. பழனிசாமி.
பணி நிரந்தரம் கோரி பகுதிநேர சிறப்பாசிரியர்கள் ஜூலை 22இல் பேரணி
பகுதிநேர சிறப்பாசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி இம்மாதம்
22இல் சென்னையில் பேரணி நடத்த ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
PGTRB soon - ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் 1,062 முதுகலை பட்டதாரிஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன
ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் 1,062 முதுகலை பட்டதாரிஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு தொடக்கப்பள்ளிகள், அரசு நடுநிலைப்பள்ளிகள், அரசு உயர்நிலைப்பள்ளிகள், அரசு மேல்நிலைப்பள்ளிகள் ஆகியவற்றில் காலியாகக்கிடக்கும் ஆசிரியர் பணியிடங்களை ஆசிரியர் தேர்வு வாரியம் தேர்வு நடத்தி நிரப்பி வருகிறது.
பெட்ரோல், டீசல் விலை: வல்லுனர் குழு பரிந்துரைகளை அரசு ஏற்கக் கூடாது!
உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்த போது, உள்நாட்டில்
உயர்த்தப்பட்ட பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை, உடனடியாக குறைக்கத்
தேவையில்லை என்று மத்திய நிதித் துறைக்கு மத்திய அரசின் தலைமைப் பொருளாதார
ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன் பரிந்துரைத்திருக்கிறார்.
நாடு முழுவதும் முக்கிய பாடங்களுக்கு ஒரே ’சிலபஸ்’
மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் சமீபத்தில் வெளியிட்ட,புதிய கல்விக்
கொள்கையில்,முக்கிய பாடங்களுக்கு நாடு முழுவதும் ஒரே பாடத்திட்டம் கொண்டு
வரப்படும் என அறிவித்துள்ளது.இது,கல்வியாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை
பெற்றுள்ளது.
திருமணமான அரசு ஊழியர் பணப் பலன்களில் தாயாருக்கும் பங்கு: உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு.
பணிப்பதிவேட்டில் வாரிசுதாரராக இல்லாத நிலையிலும் அரசுஊழியர்களின் இறுதி
பணப் பலன்களில் அவரது தாயாருக்கு பங்கு வழங்க வேண்டும் என உயர் நீதிமன்றம்
கூறியுள்ளது.ராமநாதபுரம் மாவட்டம், குமுழியேந்தலை சேர்ந்த
எம்.முத்துலெட்சுமி (72) உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு:
பாரதியார் பல்கலைக்கழக பிஎச்.டி., எம்.ஃபில். நுழைவுத் தேர்வு: தேர்வு மையங்கள் அறிவிப்பு.
பாரதியார் பல்கலைக்கழகத்தில் பிஎச்.டி., எம்.ஃபில். படிப்புகளில்
சேருவதற்கான பொது நுழைவுத் தேர்வு ஜூலை 17-ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கான
தேர்வு மையங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
மத்திய அரசு ஊழியர்களின் வேலைநிறுத்தம் ஒத்திவைப்பு
7 வது ஊதியக் குழுவின் பரிந்துரைகளில் உள்ள குறைபாடுகள் குறித்து ஆய்வு
செய்ய உயர்மட்டக் குழு அமைக்கப்படும் என்று மத்திய அரசு புதன்கிழமை
உறுதியளித்தது.
பள்ளி கழிப்பறையில் பெருக்கெடுத்த மணல் ஊற்று : டன் கணக்கில் வெளியேறியதால் 'லீவு'
சென்னை, எழும்பூர் ரயில் நிலையம் அருகில்
உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியின் கழிப்பறை தரைப் பகுதியில் இருந்து, டன்
கணக்கில் கிளம்பிய மணல் ஊற்றால், மாணவ, மாணவியர் பீதி அடைந்தனர். பள்ளிக்கு
விடுமுறை விடப்பட்டது.
தமிழ்ப் பல்கலை. தேர்வு முடிவுகள் வெளியீடு
தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் தொலைநிலைக் கல்வித் தேர்வு முடிவுகள் புதன்கிழமை வெளியிடப்பட்டன.
புத்தாக்கக் கற்பித்தல் பயிற்சி ஆசிரியர்களுக்கு தேவை:ஆளுநர் ரோசய்யா
புத்தாக்கக் கற்பித்தல் பயிற்சியே ஆசிரியர்களின் தற்போதைய தேவையாக இருக்கிறது என ஆளுநர் கே.ரோசய்யா கூறினார்.
ஆசிரியர் பயிற்சிக்கு மாணவர்களிடையே... ஆர்வமில்லை! மூன்று நாள் கவுன்சிலிங்கில் 4 பேர் சேர்க்கை
கடலுார் மாவட்டத்தில் செயல்பட்டு வரும்
ஆசிரியர் பயிற்சி பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை இந்த ஆண்டு 'டல்' அடித்து
வருகிறது. மூன்று நாள் நடந்த கவுன்சிலிங்கில் 4 மாணவர்கள் மட்டுமே
சேர்ந்துள்ளனர்.
ஒரே நாளில் 2 பல்கலையில் கவுன்சிலிங் : தொழிற்கல்வி மாணவர்கள் குழப்பம்
வேளாண் பல்கலை அறிவித்த நாளிலேயே, கால்நடை பல்கலையும் கவுன்சிலிங்அறிவித்துள்ளதால்,
மாணவர்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.அரசு பள்ளிகளில், பிளஸ் 2வில்
தொழிற்கல்வியில் படித்த மாணவர்களுக்கு, தமிழக வேளாண் பல்கலையில் பி.எஸ்சி.,
படிப்புக்கும்; கால்நடை மருத்துவ பல்கலையில், பி.வி.எஸ்சி.,
படிப்பிற்கும், மாணவர் சேர்க்கையில், 5 சதவீத இடம் ஒதுக்கப்படுகிறது.