தமிழக அரசு பள்ளிகளின், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்ச்சி விவரங்களை,
பள்ளிக்கல்வித்துறை மாவட்ட வாரியாக கணக்கு எடுத்துள்ளது. இந்த விவரங்கள்,
பள்ளிக்கல்வி துறை செயலகத்துக்கு அனுப்பப்பட்டு, 'சாப்ட்வேர்' மூலம்,
கணினியில் பதிவு செய்யப்படுகின்றன.
Half Yearly Exam 2024
Latest Updates
பள்ளி மாணவர்களுக்கு சுயமருத்துவம் செய்ய தடை
'பள்ளிக்கு வரும் மாணவர்கள், காய்ச்சல், இருமல் போன்றவற்றால்
பாதிக்கப்பட்டால் அவர்களுக்கு ஆசிரியர்கள் மருத்துவம் அளிக்கக் கூடாது' என,
உத்தரவிடப்பட்டுள்ளது.
பெட்டிக்கடைகளை கண்காணிக்க தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவு :
'கஞ்சா சாக்லேட்' விபரீதத்தை உணர்ந்த தமிழக அரசு, மாநிலம்முழுவதும், உணவு
பாதுகாப்புத்துறை மூலம் அதிரடி நடவடிக்கையை துவக்கி உள்ளது.பள்ளிகள் அருகே
உள்ள கடைகளில் சோதனை நடத்தி, போதை சாக்லேட், 'குட்கா, ஜர்தா' உள்ளிட்ட
புகையிலை பொருட்களும்பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன.
தேசிய சட்ட பள்ளியில் நேரடி மாணவர் சேர்க்கை அறிவிப்பு.
தமிழ்நாடு தேசிய சட்டப் பள்ளியில், ஐந்து ஆண்டு ஒருங்கிணைந்த
சட்டப்படிப்புக்கு, நேரடி மாணவர் சேர்க்கை அறிவிக்கப்பட்டு உள்ளது.
திருச்சியில் இயங்கும் தமிழ்நாடு தேசியசட்டப் பள்ளியில், பி.ஏ., மற்றும்
பி.காம்., ஆகியவற்றுடன்,எல்.எல்.பி., படிப்பு, ஒருங்கிணைந்த ஐந்து ஆண்டு
படிப்பாக கற்று தரப்படுகிறது.
உள்ளாட்சி தேர்தல் சட்டத்திருத்தம் : தமிழ்நாடு அரசிதழில் வெளியீடு
உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக, சட்டசபையில் நிறைவேற்றப்பட்டசட்டத்திருத்தம்,
தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்பட்டது. தமிழகத்தில், உள்ளாட்சி தேர்தல்,
அக்., 24ம் தேதிக்குள் நடந்தாக வேண்டும்.
பி.ஆர்க்., விண்ணப்ப தேதி நீட்டிப்பு.
பி.ஆர்க்., படிப்புக்கான விண்ணப்ப தேதி, ஜூலை, 9ம் தேதி வரை
நீட்டிக்கப்பட்டுள்ளது.அண்ணா பல்கலையின் இணைப்பிலுள்ள, 41 இன்ஜி.,
கல்லுாரிகளின் பி.ஆர்க்., படிப்பில், 2,400 இடங்களுக்கு, தேசிய,
'ஆர்கிடெக்' நுழைவு தேர்வு எனப்படும், 'நாட்டா' தேர்வு மதிப்பெண் மற்றும்
பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில், மாணவர் சேர்க்கப்படுகின்றனர்.
தேசிய சிறார் விருது: ஜூலை 31-க்குள் விண்ணப்பிக்க அழைப்பு.
தேசிய சிறார் விருதுக்கு தகுதியுடையவர்கள் இம்மாதம் 31-ம் தேதிக்குள்
விண்ணப்பிக்க வேண்டும் என சென்னை மாவட்ட ஆட்சியர் கு.கோவிந்தராஜ்
தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில்,
சிறுவர்கள் மற்றும் குழந்தைகளுக்கான இதழ்கள் & விவரங்கள்
இன்றைய பெரும்பாலான வாசகர்களும் எழுத்தாளர்களும் சிறுவர்கள் இதழ்கள் வழியே
தான் வாசிப்பினை துவங்கினர். தற்சமயம் வந்துகொண்டிருக்கும் இதழ்களின்
தொகுப்பு. உங்கள் குழந்தைகளுக்கு/மாணவர்களுக்கு இயன்ற அளவு இந்த இதழ்களை
அறிமுக செய்யுங்கள்.
இயக்குநராக பதவி உயர்வு
பள்ளிக்கல்வி இணை இயக்குநர் திரு.அ. கருப்பசாமி அவர்கள் மெட்ரிக் பள்ளி இயக்குநராகவும், திரு.முத்து பழனிச்சாமி அவர்கள் முறை சாரா பள்ளி இயக்குநராகவும் பதவி உயர்வு
பட்டதாரி ஆசிரியர் நியமனம் இந்த ஆண்டு கிடையாது.
அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர்களில் பணி ஓய்வு பெறுவோர் சொற்ப அளவில் உள்ளதாலும், காலிப் பணியிடங்களும் இல்லை என்பதாலும் புதியதாக இந்த ஆண்டு பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்க முடியாத நிலையில் பள்ளிக் கல்வித்துறை உள்ளது.
வேலை வாய்ப்புக்காக காத்திருப்போர் எண்ணிக்கை தமிழக அரசு வெளியீடு
தமிழகத்தில் வேலை வாய்ப்புக்காக காத்திருப்போரின் விபரப்பட்டியலை வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி இயக்ககம் வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-
TET தேர்வை உடனடியாக நடத்த வேண்டும்: ஸ்டாலின்
ஆசிரியர் தகுதி தேர்வை நடத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும்
பள்ளிக் கல்வித் துறையில் காலி பணியிடங்களை உடனடியாக நிரப்பட வேண்டும்
என்றும் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
'கவுன்சிலிங்' கவலையில் ஆசிரியர்கள்
தமிழகத்தில் இக்கல்வியாண்டில் பள்ளிகள் திறக்கப்பட்டு ஒரு மாதம் கடந்த
நிலையிலும், ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் 'கவுன்சிலிங்' அறிவிப்பு
அறிகுறி இல்லாததால், இந்தாண்டும் 'காலம் கடந்து 'கவுன்சிலிங்'
நடத்தப்படுமோ' என ஆசிரியர்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.
தமிழக அரசு, நாளை (7.7.2016) ரம்ஜான் விடுமுறை அறிவிப்பு.
உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்கள், ஒரு மாதமாக, ரம்ஜான் நோன்பு
கடைபிடித்து வருகின்றனர். ஷவ்வால் மாதத்தின் பிறை, நேற்று தென்படும் என,
எதிர்பார்க்கப்பட்டது.''பிறை தென்படாததால், இன்றும் நோன்பு தொடரும்; நாளை
ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும்,'' என, தமிழக அரசின் தலைமை ஹாஜி முகமது
சலாவுதீன் அயூப் தெரிவித்து உள்ளார்.
DTEd :டிப்ளமோ ஆசிரியர் படிப்பு 10 ஆயிரம் இடங்கள் காலி
டி.டி.எட்., எனப்படும் டிப்ளமோ ஆசிரியர் பயிற்சி படிப்பில் சேர்வதற்கான
ஆர்வம், மாணவர்களிடம் குறைந்து வருகிறது.தமிழகத்தில் அரசு, அரசு உதவி
மற்றும் சுயநிதி என, 396 டிப்ளமோ ஆசிரியர் பயிற்சி கல்லுாரிகள் உள்ளன.
தொடக்க, நடுநிலை அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கான பயிற்சிகள் தயார்...!
அனைவருக்கும் கல்வி இயக்கம் (எஸ்எஸ்ஏ), மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி
நிறுவனம் ஆகியன சார்பில் தொடக்க, நடுநிலை அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கான
பணியிடைப் பயிற்சி மாவட்ட வாரியாக வழங்கப்படுகிறது. இதுகுறித்து எஸ்எஸ்ஏ
மாநிலத் திட்ட இயக்குநர் பூஜா குல்கர்னி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்
மேலும்கூறியிருப்பதாவது:
மருத்துவ படிப்பு தரவரிசை மாற்றம்.
மருத்துவ படிப்புகளுக்கான முதற்கட்ட கலந்தாய்வு முடிந்துள்ளது. மறு திருத்த
மதிப்பெண் அடிப்படையில், தரவரிசையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்.,படிப்புகளுக்கான முதற்கட்ட
கலந்தாய்வு, ஜூன், 25ல் முடிந்தது. அரசு மருத்துவக் கல்லுாரிகளில் அனைத்து
இடங்களும் நிரம்பின.
ஐ.ஏ.எஸ்., தேர்வுக்கு 'ஹால் டிக்கெட்' வெளியீடு.
ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., போன்ற, 24 உயர் பதவிகளுக்கு, ஆக., 7ம் தேதி நடக்க
உள்ள, 'சிவில் சர்வீசஸ்' தேர்வுக்கான, 'ஹால் டிக்கெட்' வெளியிடப்பட்டு
உள்ளது.இந்திய அரசு பணியில், ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., - ஐ.எப்.எஸ்., -
ஐ.ஆர்.எஸ்., போன்ற, 24 வகை உயர் பதவிகளில், 1,049 இடங்கள் காலியாக உள்ளன.
பொதுத்தேர்வில் 2வது முறை மறுமதிப்பீடு கோர முடியாது : ஐகோர்ட் கிளை உத்தரவு
அரசு பொதுத்தேர்வில் இரண்டாம் முறையாக மறு மதிப்பீடு கோர முடியாது
எனக்கூறி மனுவை ஐகோர்ட் கிளை தள்ளுபடி செய்தது. திண்டுக்கல் மாவட்டம்
பழநியைச் சேர்ந்த பொன்ராஜ், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில்,
என் மகன் செல்வேந்திரன் நாமக்கல் தனியார் பள்ளியில் படித்தான். 2015-16
பிளஸ் 2 தேர்வில் 1140 மதிப்பெண் பெற்றான். உயிரியல் பாடத்தில் 195
மதிப்பெண் பெற்றான்.
ஒற்றை இலக்க மாணவர்களோடு செயல்படும் அரசுப் பள்ளிகள்
செய்யாறு பகுதியில் ஒற்றை இலக்க எண் மாணவர்கள் எண்ணிக்கையோடு 3 அரசுப் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன.
திருவண்ணாமலையில் ஆகஸ்ட 19-இல் ராணுவத்துக்கு ஆள் சேர்ப்பு
திருவண்ணாமலையில் ராணுவத்துக்கு ஆள் சேர்ப்பு முகாம் ஆகஸ்ட் 19-இல் தொடங்கி, 31-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
ஊழியர்களுக்கு தொழில்வரியை நீக்க வலியுறுத்தல்
ஊழியர்களுக்குத் தொழில்வரியை நீக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்
என சிட்டி யூனியன் வங்கி ஊழியர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
உடற்கல்வி ஆசிரியர், இயக்குநர் பணியிடங்களை நிரப்பக் கோரிக்கை
தமிழகத்தில் காலியாக இருக்கும் உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப
வேண்டும் என திருநெல்வேலியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற உடற்கல்வி
ஆசிரியர்கள், இயக்குநர்கள் சங்கக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
பிளஸ் 2 சிறப்புத் துணைத் தேர்வுத்தாள் திருத்தும் பணி மதுரையில் தொடக்கம்
மதுரையில் தென்மாவட்டங்களுக்கான பிளஸ் 2 சிறப்புத் துணைத் தேர்வுத் தாள்கள் திருத்தும் பணி திங்கள்கிழமை தொடங்கியது.
மத்திய அரசு ஊழியர் போராட்டத்துக்கு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் ஆதரவு
மத்திய அரசு ஊழியர்கள் நடத்தவுள்ள போராட்டத்துக்கு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் ஆதரவு அளிப்பது என தீர்மானிக்கப்பட்டுள்ளது.
பி.ஆர்க். சேர்க்கை: ஜூலை 9 வரை விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு
சென்னை: ஐந்தாண்டு பி.ஆர்க். (கட்டடவியல் பொறியியல்) சேர்க்கைக்கு
ஆன்-லைனில் பதிவு செய்வதற்கான கால அவகாசம் ஜூலை 9-ம் தேதி வரை
நீட்டிக்கப்பட்டுள்ளது.
பள்ளிக்குள் புகுந்த பாம்பு: மாணவர்கள் அலறி ஓட்டம்
ஆம்பூர் அருகே பள்ளிக்குள் பாம்பு புகுந்ததால் மாணவர்கள் வகுப்பறையை விட்டு அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.
வங்கி, ஏடிஎம்களில் பணம் எடுக்கும்போது கடைபிடிக்க வேண்டிய பாதுகாப்பு அம்சங்கள்: காவல்துறை அறிவுறுத்தல்கள்
சென்னை பட்டினப்பாக்கத்தில் நேற்று இரவு வங்கி ஏடிஎம்மில் பணம் எடுத்து
வாகனத்தில் வீடு திரும்பிய நந்தினி, நஜ்ஜு ஆகியோரிடம் இருந்து பணப்பையை
கொள்ளையன் பறிக்க முயன்றான். இதில், வாகனத்தில் இருந்து விழுந்த நந்தினி
உயிரிழந்தார். சாலையில் சென்ற முதியவர் ஒருவரும் உயிரிழந்தார்.