தொடக்கக் கல்வி ஆசிரியர்களுக்கான பட்டயத்
தேர்வுக்கு தனித் தேர்வர்களாக தேர்வெழுத விண்ணப்பிக்கத் தவறியவர்கள்,
சிறப்பு அனுமதித் திட்டத்தின் (தத்கால்) மூலம் விண்ணப்பிக்கலாம் என அரசு
தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு முழுவதும் உள்ள கல்லூரிகளில்
எம்.சி.ஏ., எம்.பி.ஏ., எம்.இ. ஆகிய படிப்புகளில் சேருவதற்கு ‘டான்செட்’
என்ற பொது நுழைவுத்தேர்வு அவசியம். இதில் எம்.சி.ஏ., எம்.பி.ஏ.
படிப்புகளில் சேருவதற்கான பொது நுழைவுத்தேர்வு நேற்று நடந்தது.
பீகாரில் பிளஸ் 2 பொதுத் தேர்வில் முறைகேடு
தொடர்பாக, பிஷன் ராய் கல்லூரி செயலாளர் மற்றும் தலைமை ஆசிரியரான பச்சா ராய்
என அழைக்கப்படும் அமித்குமாரை வைசாலி மாவட்டதில் உள்ள பகவான்பூர் போலீசார்
கைது செய்தனர்.
தேசிய காற்றாலை நிறுவனத்தில் காலியாக உள்ள திட்ட உதவியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களின் கோரிக்கை மனுக்கள் மீது 5
நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட தொடக்கக் கல்வி
அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கோவை, தமிழ்நாடு வேளாண் பல்கலைக்குஉட்பட்ட கல்லுாரிகளில் படிக்க, 35 ஆயிரம்
மாணவ, மாணவியர் விண்ணப்பித்து உள்ளனர். ஆன்லைனில் விண்ணப்பிக்க,
இன்றேகடைசி நாள்.
மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் 6ம்
வகுப்பில் மாணவர் சேர்க்கை குறைந்துள்ள நிலையில், பிளஸ் 1 சேர்க்கையில்
கூட்டம் அலைமோதுவதால் தலைமை ஆசிரியர்கள் செய்வதறியாமல் தவித்து
வருகின்றனர்.
அண்ணா பல்கலையைத் தொடர்ந்து, இந்திய
உயர்கல்வி தொழில்நுட்ப நிறுவனமான ஐ.ஐ.டி.,யிலும், சுரங்கவியல் படிப்புக்கு,
இந்த ஆண்டு முதல், மாணவியர் சேர்க்கப்படுகின்றனர்.
தமிழக அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு,
அரசு சார்பில், 14 வகை நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன. இதில், எந்த
பள்ளி மாணவர்களுக்கும் இதுவரை நோட்டு புத்தகங்கள் வழங்கப்படவில்லை.
உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிப்பை, ஆக., மாத இறுதியில் வெளியிட, மாநில
தேர்தல் கமிஷன் முடிவெடுத்து உள்ளது.தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை,
திருச்சி உள்ளிட்ட, 12 மாநகராட்சிகள், 125 நகராட்சிகள், 529 பேரூராட்சிகள்,
6,471 ஊராட்சி ஒன்றியங்கள், 12,524 ஊராட்சிகள் உள்ளன.
தமிழகத்தில், வரும் 16ம் தேதி, அரசு கலை, அறிவியல் கல்லுாரிகள் திறக்கப்பட
உள்ளன. இதில், முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு, 'பிரிட்ஜ் கோர்ஸ்' என்ற
அணுகுமுறை பயிற்சி நடத்த உத்தரவிடப்பட்டு உள்ளது.
ஜாதிச் சான்றிதழ் வழங்காததால் “கல்விக்கு முழுக்கு”
போட்டுவிட்டு, குடுகுடுப்பை சமுதாயத்தைச் சேர்ந்த சிறுவர்கள் குலத்தொழிலை
பார்க்க புறப்படும் அவலம் தொடர்கிறது.
ரயில் பயணிகளின் வசதிக்காக, ரயில்வே விதிமுறைகளில்
செய்யப்பட்ட மாற்றங்கள் மற்றும் வசதிகள், வரும் ஜூலை, 1ம் தேதி முதல்
அமலுக்கு வருவதாக, ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஜூலை 1 முதல் அமலுக்கு வரும் மாற்றங்கள் மற்றும் வசதிகள்:
தொடக்கக்கல்வி - பழுதடைந்த பள்ளி கட்டிடங்களை MG நிதி கொண்டு உடனடியாக
சரிசெய்ய வேண்டும் - மிகவும் பழுதடைந்த கட்டிடங்களை இடிக்க வேண்டும் -
இயக்குனர் உத்தரவு - செயல்முறைகள்