எங்காவது அரசுப் பள்ளியில் அட்மிஷனுக்கு அடிதடி நடந்திருக்கிறதா? மதுரை மாவட்டம் யா.ஒத்தக் கடையில் உள்ள ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் அந்த அதிசயம் நடந்திருக்கிறது.
உயர் கல்விக்கான விண்ணப்பங்கள் வழங்கும் பணி தொடங்கியதையடுத்து, பிளஸ்-2 பொதுத் தேர்வு முடிவுகளை உடனடியாக வெளியிட வேண்டும் என பெற்றோர்களும், ஆசிரியர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மதுரை, வேதியியல் பாடத்துக்கு கருணை மதிப்பெண் வழங்கக்கூடாது என்று
உத்தரவிட வேண்டும் என்றும், அதுவரை பிளஸ்-2 தேர்வு முடிவை வெளியிட தடை
விதிக்க வேண்டும் என்றும் தொடர்ந்த வழக்கில் அரசு தேர்வுத்துறை இயக்குனர்
பதிலளிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
வேதியியல் பாடத்தில் இரு கேள்விகளுக்கு கருணை மதிப்பெண் வழங்குவதற்கு
எதிரான மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம் விடுமுறை கால அமர்வு, பிளஸ் 2
பொதுத்தேர்வு முடிவுகளை நிறுத்தி வைக்க மறுப்பு தெரிவித்து விசாரணையை ஜூன்
மாதத்துக்கு ஒத்திவைத்தது.
விதிமுறைகளை பின்பற்றாத 746 பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை நடத்த
அனுமதிக்கக்கூடாது என்றும், அந்த பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்கக்கூடாது
என்றும் தொடரப்பட்ட வழக்கிற்கு பதிலளிக்கும்படி தமிழக அரசுக்கு, ஐகோர்ட்டு
நோட்டீசு அனுப்பியுள்ளது.
சென்னை ஓய்வூதியம் வழங்கும் அலுவலகத்தில், ஓய்வூதியர்கள் ஆதார் அட்டை பெற,
சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது' என, கருவூலம் மற்றும் கணக்கு துறை
இயக்குனர் முனியநாதன் தெரிவித்துள்ளார்.
தேர்தல் தினத்தன்று தொழிலாளர்களுக்கு விடுமுறை அளிக்காத நிறுவனங்கள்
குறித்து புகார் தெரிவிக்கலாம் என சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரி
தெரிவித்துள்ளார்.தமிழக சட்டப்பேரவைக்கான தேர்தல் மே 16-ம் தேதியன்று
நடைபெற உள்ளது.
சென்னை மாவட்டத்தில் முதல்கட்ட தேர்தல் பயிற்சியில் பங்கேற்காத 2 ஆயிரத்து 707 ஊழியர்களுக்கு, மாவட்ட தேர்தல் நிர்வாகம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
'அக்னி நட்சத்திரம் என்ற கடும் கோடை காலம், இன்று துவங்கி மே, 28ம்
தேதி முடிகிறது. தமிழகம் முழுவதும் இயல்பை விட, 3 டிகிரி, 'செல்சியஸ்'
வெப்பம் அதிகரிக்கும்' என, சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தில்லியில் 535 பள்ளிகள் மாணவர்களிடம் கூடுதலாக வசூலித்த கல்விக் கட்டணம்
ரூ.300 கோடியை திருப்பி அளிக்க வேண்டும் என்று உயர் நீதிமன்ற உத்தரவின்
பேரில் அமைக்கப்பட்ட விசாரணைக் குழு பரிந்துரைத்துள்ளது.