Half Yearly Exam 2024
Latest Updates
DA Hike GO - PDF Format Download
G.O - 117-நாள்-20.04.2016- நிதித்துறை : 6% அகவிலைப்படி உயர்வுக்கான அரசாணை வெளியீடு
தேர்தல் பணி உத்தரவை வாங்க மறுக்கும் அரசு ஊழியர்கள் மீது நடவடிக்கை: ஆட்சியர் எச்சரிக்கை.
தேர்தல் பணி உத்தரவை வாங்க மறுக்கும் அரசு ஊழியர்கள் மீது துறை வாரியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஈரோடு மாவட்ட ஆட்சியர் எஸ்.பிரபாகர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து அவர் வியாழக்கிழமை விடுத்த செய்தி:
இ - சேவை மையங்கள் மூலம் பள்ளி மாணவர்களுக்கான புத்தகங்களை பெறலாம்: தமிழக அரசு
வாட்ஸ்அப் குரூப் தொடங்க லைசென்சு பெற வேண்டும்.
தேர்தல் பணியில் ஈடுபடும் ஊழியர்களுக்கு தபால் ஓட்டு போட படிவம் 7 ம் தேதி நடைபெறும் இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்பின் போது ஓட்டுச் சீட்டு வழங்கப்படும்.
மே இறுதிக்குள் பள்ளி பஸ்கள் ஆய்வு.
WHATSAPP MESSAGES SENT TO WRONG PERSON? HERE'S HOW YOU CAN DELETE IT
SSLC- ஆங்கில விடைத்தாளை வேறு பாட ஆசிரியர்கள் திருத்தம் செய்ய நிர்ப்பந்தம
தேர்தல் பயிற்சிக்கென ஒரு ஆன்ட்ராய்டு செயலி
அரசுப் பள்ளி ஆசிரியர் இட மாற்றத்தைக் கண்டித்து பள்ளி மாணவர்கள் வகுப்புப் புறக்கணிப்பு
புத்தக சுமையை குறைக்க சி.பி.எஸ்.இ., புது உத்தரவு
தேனி, குமரிக்கு இன்று உள்ளூர் விடுமுறை.
அங்கன்வாடி, சத்துணவு மையங்கள் வசதிகள் ஏற்படுத்துவது என்னாச்சு? - கானல் நீராகிய 110 விதி
பல்கலை தேர்வு தேதி நீட்டிப்பு
தனித்தேர்வர்கள் 'பிட்' அடித்து உற்சாகம்: கல்வித்துறை உடந்தை?
10, பிளஸ்-2 புத்தகம் விநியோகம்
தமிழ்நாடு பாடநுால் மற்றும் கல்வியியல் பணிகள் நிறுவன மேலாண்மை இயக்குனர் மைதிலி ராஜேந்திரன்மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:
வரும் கல்வி ஆண்டில் அரசு பள்ளிகள், உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளில் படிக்கும் பிளஸ் 2 மாணவர்களுக்காக 82 லட்சம் பாடப்புத்தகங்கள் தமிழ்நாடு அரசு பாடநுால் நிறுவனத்தால் அச்சடிக்கப்பட்டு வழங்கப்பட்டு வருகின்றன.இதில், தனியாக விண்ணப்பித்து பெறும் பள்ளிகளுக்கும் வழங்கப்படுகிறது. அதுபோல் 10 ஆயிரத்து 900 பள்ளிகள் இதுவரை பதிவு செய்துள்ளன. அரசு பள்ளிகளுக்கு வழங்க வேண்டிய புத்தகங்கள் அந்தந்த மாவட்ட கல்வி அலுவலகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
இதே போல், பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு வழங்குவதற்காக 58 லட்சம் பாடப்புத்தகங்கள் அச்சிடப்பட்டு வழங்கப்படுகின்றன. மாணவர்கள் தாலுகா அலுவலகங்கள், கேபிள் டிவி பொது இ-சேவை மையங்களிலும் பதிவு செய்து புத்தகங்களை பெறலாம்.ஆன்-லைனில் பதிவு செய்து பெற விரும்புவோர் www.textbookcorp.in என்ற இணையதளத்தில் புத்தகங்களின் இருப்பை அறிந்து பணம் செலுத்தி பதிவு செய்தும் பெறலாம். 72 மணி நேரத்தில் மாணவர்களுக்கு புத்தகங்கள் கிடைக்கும்.இவ்வாறு கூறியுள்ளார்.---
புத்தக சுமையை குறைக்க சி.பி.எஸ்.இ., புது உத்தரவ
மாணவர்களின் புத்தகச் சுமையைக் குறைக்க, சி.பி.எஸ்.இ., எனப்படும் மத்திய கல்வி வாரியம், பல்வேறு ஆலோசனைகளை வழங்கியுள்ளது.இது தொடர்பாக சி.பி.எஸ்.இ., வெளியிட்டுள்ள அறிவிப்பாணையில் கூறப்பட்டுள்ளதாவது:
* இரண்டாம் வகுப்பு வரை, புத்தகங்களை பள்ளியிலேயே வைத்திருக்க வேண்டும்
* மேல்நிலைப் பள்ளி மாணவர்கள், அதிக எடையுள்ள குறிப்பு புத்தகங்கள் கொண்டு வருவதை தடுக்க வேண்டும்
* கால அட்டவணைக்கு ஏற்ப, அதற்குண்டானபுத்தகங்களை மட்டுமே எடுத்து வருவதை ஆசிரியர்கள் உறுதி செய்ய வேண்டும்
* பாடத்திட்டங்கள், கலந்துரையாடும் வகையிலும், மாணவர்கள் புரிந்து கொள்ளும் வகையிலும் எளிமையானதாக இருக்க வேண்டும்
* வீட்டுப் பாடங்களை ஆண்டு முழுவதுக்கும் பகிர்ந்து, பரவலாக்க வேண்டும்; திணிக்கக் கூடாது
* பாடத்திட்டத்துடன் சேர்ந்த மற்ற நடவடிக்கைகளை, தினமும் நடத்த வேண்டும்; இதன் மூலம் புத்தகச் சுமை குறையும்
* பாடச் சுமையைக் குறைப்பது குறித்தும், மாணவர்களுக்கு வலியை ஏற்படுத்தாத பைகள் கொண்டு வருவது குறித்தும் பெற்றோருடனும் பள்ளி நிர்வாகம் ஆலோசிக்க வேண்டும்
* புத்தகங்கள், நோட்டுப் புத்தகங்களுக்கு, எளிதில் மக்காத உறைகளை பயன்படுத்துவதை தடுக்க வேண்டும்
* வகுப்பறையில், குறிப்பு புத்தகங்கள், சீருடை, விளையாட்டு உபகரணங்களை மாணவர்கள் வைத்திருக்க வசதி செய்ய வேண்டும்.இது போன்று பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன. இவற்றை நடைமுறைபடுத்துவதை, பள்ளி நிர்வாகம், ஆசிரியர்கள் உறுதிப்படுத்த வேண்டும்.இவ்வாறு அறிவிப்பாணையில் கூறப்பட்டு உள்ளது.
தேர்தல் பயிற்சிக்கென ஒரு ஆன்ட்ராய்டு செயலி
தேர்தல் பணியில் ஈடுபடவிருக்கும் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் ஆகியோருக்கு உதவும் வகையில் ஒரு ஆன்ட்ராய்டு செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
வாக்குப்பதிவின் போது பல்வேறு நிலைகளில் பணிபுரியும் ( Zonal Officer, Presiding Officer, Polling Officer I, Polling Officer II , Polling Officer III மற்றும் BLO ) அலுவலர்களுக்கு பயனளிக்கும் தகவல்கள், பயிற்சிக் கட்டகங்கள், Manuals, வீடியோ இணைப்புகள், வினாக்கள் மற்றும் பிற விரிவான தகவல்களை உள்ளடக்கிய செயலியாக இது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
தஞ்சை மாவட்ட தேர்தல் அலுவலர் (ஆட்சியர்) அவர்கள் வெளியிட்டுள்ள “Thanjavur Election" என்ற இச்செயலி தஞ்சை மாவட்டம் மட்டுமன்றி, அனைவருக்கும் பயன்படும் வகையில் உள்ளது. நீங்கள் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளீர்களா? நீங்கள் எந்த மாவட்டமாக இருந்தாலும், அவசியம் தேர்தல் நாள் வரையிலும் உங்கள் செல்பேசியில் இருக்க வேண்டிய செயலி இது. Be Informative and be Efficient.
கூகுள் பிளே ஸ்டோரில் இலவசமாக பதிவிறக்கம் செய்ய இணைப்பு - https://goo.gl/wZ4Qjc