தொழிலாளர்கள் தரப்பில் இருந்து கடும்
எதிர்ப்பு எழுந்ததையடுத்து, தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியை (பிஎஃப்)
திரும்பப் பெறுவதற்கு விதிக்கப்பட்ட புதிய கட்டுப்பாடுகளை மத்திய அரசு
செவ்வாய்க்கிழமை ரத்து செய்தது.
பொறியியல் படிப்புக்கு மாணவர்கள் இலவசமாக பதிவுசெய்யும் வகையில் சென்னையில்
உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த
மையத்தில் ஆன்லைன் பதிவு தொடர்பான விவரங்களை மாணவர்கள் தொலைபேசி மூலமாகவும்
அறிந்துகொள்ளலாம்.
விருதுநகர் சுகாதார மாவட்டத்தில் உள்ள கர்ப்பிணி பெண்கள் இரும்புச் சத்து மாத்திரைகள் உட்கொள்வதால் பிரசவ கால இறப்பு பெருமளவு குறைந்துள்ளதாக சுகாதாரத்துறை இணை இயக்குனர் பழனிச்சாமி தெரிவித்தார்.
தமிழகத்தில்,பத்தாம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணிகள்,நேற்று முதல் முழுவீச்சில் தொடங்கியது.ஆசிரியர்கள் சங்கம் சார்பில்,வாயில் கூட்டம் நடத்த அனுமதிக்கக்கூடாதுஎன,இயக்குனரகம் தடை விதித்துள்ளது
பள்ளி மாணவர்களுக்கான மதிய உணவு திட்டத்தின் கீழ், தரமான உணவு வழங்கப்படுவதை உறுதி செய்யும் வகையில், தரப் பரிசோதனையை கட்டாயமாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது
'ஸ்மார்ட்போனில்' இருந்து, எஸ்.எம்.எஸ்., அனுப்புவது போல், மிகவும் சுலபமாக, பணத்தை பரிமாறிக் கொள்ளும், யு.பி.ஐ., எனப்படும் ஒருங்கிணைந்த பணம் செலுத்தும் முறை அறிமுகம் செய்யப்பட்டது
தமிழகத்தில் எ முழுவதும்
ஸ்.எஸ்.எல்.சி. அரசு பொதுத் தேர்வு கடந்த வாரத்துடன் முடிந்தது. 16-ஆம்
தேதி முதல் விடைத் தாள் திருத்தும் பணி தமிழகம் தொடங்கியது. ஒவ்வொரு
மாவட்டத்திலும் இரு மையங்களில் விடைத் தாள் திருத்தப்படுகிறது.
வரும் ஏப்ரல் 22-ஆம் தேதி கள்ளழகர் ஆற்றில் இறங்கி அருள்பாலிக்கும்
சித்திரை திருவிழா மதுரையில் நடைபெறுவதால் அன்று அம்மாவட்டத்திற்கு
உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு.
மருத்துவ படிப்புகளுக்கு, 'ஆன்லைன்' விண்ணப்பமுறை, அமலுக்கு வருகிறது.
குழப்பங்களை தடுக்க, வழக்கமான காகித விண்ணப்ப முறையையும் தொடர, மருத்துவ
கல்விஇயக்ககம் திட்டமிட்டுள்ளது.