Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

இந்திய அரசின் பட்ஜெட் தயாரிக்கும் முறை..!

       அதிநவீன அச்சக இயந்திரங்கள் மூலம் தலா 2500 பிரதிகள் கொண்ட நிதிநிலை அறிக்கைகள் தயாரிக்கப்படும்

"பள்ளிகளில் பணிபுரிவோருக்கு மாற்றுப் பணி கூடாது'

         எவ்வித ஆணையும் இல்லாமல் பள்ளிகளில் பணிபுரியும் பணியாளர்களுக்கு உயர் அலுவலர்கள் மாற்று பணி அளிக்கக்கூடாதென பள்ளிக் கல்வித் துறை நிர்வாக அலுவலர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. புதுக்கோட்டையில் அண்மையில் நடைபெற்ற அச்சங்கத்தின் மாநிலத் தலைவர் ஏ.எஸ். ராஜேந்திரபிரசாத் தலைமையில் மாநில செயற்குழுக் கூட்டத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பிளஸ் 2 வினாத்தாள் மையங்களுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு

          விருதுநகர் மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுதும் மாணவ, மாணவிகளுக்கான வினாத் தாள்கள் வியாழக்கிழமை வந்தடைந்தது. மாவட்டத்தில் உள்ள 6 மையங்களில் சீல் வைத்த அறைகளில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள வினாத்தாள்களுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

12 மையங்களில் பாதுகாக்கப்படும் பிளஸ் 2 தேர்வு வினாத்தாள்கள்

        மதுரையில் பிளஸ் 2 தேர்வுகளுக்கான வினாத்தாள்கள் பாதுகாக்கப்படும் 12 மையங்களுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

அரசு ஊழியர்கள் போராட்டத்தை எதிர்த்து ஓய்வுபெற்ற அரசு ஊழியர் அறப்போராட்டம்

        ஆசிரியர், அரசு ஊழியர்கள் போராட்டத்தை எதிர்த்து நாமக்கல்லில் ஓய்வுபெற்ற அரசு ஊழியர் அறப் போராட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை ஈடுபட்டார்.

பொது தேர்வெழுதும் மாணவர்களுக்கு 'செக்': தேர்வு துறை நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்பு

            அரசு பொதுத் தேர்வில், நுாற்றுக்கு நுாறு மதிப்பெண் பெறுவதற்காக, மாணவர்கள் சில குறுக்கு வழிகளை கடைபிடிக்கின்றனர். இதை தடுக்கும் வகையில், தேர்வுத் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. இதற்கு, பெற்றோர் மற்றும் மாணவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

தலைமை செயலக ஊழியர்கள் அரசுக்கு எதிராக போர்க்கொடி

      சென்னை, தலைமைச் செயலகத்தில் பணிபுரியும் உதவிப் பிரிவு அலுவலர்கள், நேற்று திடீர் போராட்டத்தில் குதித்ததால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
 

ஊழியர் 'ஸ்டிரைக்' நீடிப்பு ரூ.4,000 கோடி வரி வசூல் பாதிப்பு

       அரசு ஊழியர்கள் பணிக்கு திரும்பிய நிலையில், வணிக வரி ஊழியர்களின், வேலை நிறுத்தம், 20 நாட்களாக நீடிக்கிறது. 'திருத்திய முதுநிலை பட்டியலை வெளியிட வேண்டும்; காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும்' என்பது உட்பட, பல கோரிக்கைகளை வலியுறுத்தி, வணிக வரித்துறை ஊழியர்கள், பிப்., 3 முதல், போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். 

வலுக்கிறது போராட்டம் திணறும் டி.பி.ஐ., வளாகம்

பள்ளிக்கல்வி தலைமை அலுவலகங்கள் அமைந்துள்ள, சென்னை, டி.பி.ஐ., வளாகத்தில், கல்வித் துறை ஊழியர் சங்கங்கள் பல்வேறு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. 

பிளஸ்–2 தேர்வுக்கு தட்கல் மூலம் விண்ணப்பித்த தனித்தேர்வர்கள் இன்று முதல் ‘ஹால்டிக்கெட்’ பதிவிறக்கம் செய்யலாம்


        அரசு தேர்வுகள் இயக்ககத்தின் இயக்குனர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:–மேல்நிலை பொதுத்தேர்வு (பிளஸ்–2) எழுத, சிறப்பு அனுமதி திட்டத்தின் கீழ் (தட்கல்) மூலம் கடந்த 2–ந்தேதி முதல் 4–ந்தேதி வரை விண்ணப்பித்த தனித்தேர்வர்கள் 23–ந்தேதி (இன்று) முதல் 25–ந்தேதி வரை www.tndge.com என்ற இணையதளத்தின் மூலம் தேர்வுக் கூட நுழைவுச் சீட்டுகளை (ஹால்டிக்கெட்) பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

ரூ.251க்கு ஸ்மார்ட் போன்: முன்பதிவு செய்தவர்களின் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா?


         ஏழை, எளிய மக்களும் வாங்கும் வகையில் ரூ.251க்கு ஸ்மார்போனை அறிமுகப்படுத்திய ரிங்கிங் பெல் நிறுவனத்தில் சுமார் 7 கோடி பேர் முன்பதிவு செய்திருப்பதாக நிறுவனர் மோஹித் கோயல் தெரிவித்துள்ளார்.

போராட்ட களமான டி.பி.ஐ., வளாகம்: இரு சங்கங்கள் தொடர் உண்ணாவிரதம்!!!

            ஊதிய உயர்வு கோரி, பள்ளி கல்வித்துறை தலைமை அலுவலகமான, டி.பி.ஐ., வளாகத்தில், இரண்டு சங்கங்கள் காலவரையற்ற உண்ணாவிரதம், முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. 
 

சத்துணவு அமைப்பாளர் பணியிடங்கள்: பிப்ரவரி 24, 25, 26-ம் தேதிகளில் நேர்க்காணல்

       திருவண்ணாமலை மாவட்டத்தில் நிர்வாகக் காரணங்களால் ஒத்திவைக்கப்பட்ட சத்துணவு அமைப்பாளர், சமையல் உதவியாளர் பணியிடங்களுக்கான நேர்க்காணல் வரும் 24, 25, 26-ம் தேதிகளில் நடைபெறும் என்று மாவட்ட ஆட்சியர் அ.ஞானசேகரன் தெரிவித்துள்ளார்.


‘தி இந்து - யங் வேர்ல்டு’ சார்பில் பள்ளி மாணவர்களுக்கு ஓவியப் போட்டி

‘தி இந்து’ ஆங்கில நாளிதழின் இணைப்பிதழான ‘யங் வேர்ல்டு’ சார்பில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு ஓவியப் போட்டி நடத்தப்படுகிறது. சென்னை, கோவை, மதுரை, திருச்சி, சேலம், திருநெல்வேலி, பாண்டிச்சேரி உட்பட நாடு முழுவதும் 21 நகரங் களில் இப்போட்டி நடத்தப்படுகிறது.இதில் ‘ஜூனியர்ஸ்’ பிரிவில் 4, 5, 6-ம் வகுப்பு மாணவர்களும், ‘சீனி யர்ஸ்’ பிரிவில் 7, 8, 9-ம் வகுப்பு மாணவர்களும் பங்கேற்கலாம்.

சிறு வழக்குகள் நீதிமன்றத்தில் பத்தாம் வகுப்பு கல்வித்தகுதியில் பல்வேறு காலிப்பணியிடகளை நிரப்புவதற்கான அறிவிப்பு

        சென்னை, உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள சிறு வழக்குகள் நீதிமன்றத்தில் பத்தாம் வகுப்பு கல்வித்தகுதியில் பல்வேறு காலிப்பணியிடகளை நிரப்புவதற்கான அறிவிப்பு  வெளியாகி  உள்ளது. கடைசி தேதி 11.3.2016

இன்று பணிக்கு திரும்பும் அரசு ஊழியர்கள்

          காலவரையற்ற, 'ஸ்டிரைக்' நடத்தி வந்த, 4.5 லட்சம் அரசுப்பணியாளர்கள், 12 நாட்களுக்குப்பின், இன்று பணிக்கு திரும்புகின்றனர்.பல கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழக அரசு ஊழியர் சங்கத்தினர், பிப்., 10 முதல், காலவரையற்ற ஸ்டிரைக் நடத்தி வந்தனர்; மறியல், கலெக்டர் அலுவலகங்களில் காத்திருப்பு போராட்டங்கள் தொடர்ந்தன. இந்த போராட்டங்களில், 4.5 லட்சம் பேர் ஈடுபட்டிருந்தனர்.

மத்திய அரசு ஊழியர்களுக்கு எல்.டி.சி., விடுமுறை சலுகை

         புதுடில்லி:மத்திய அரசு ஊழியர்களுக்கான, எல்.டி.சி., எனப்படும் விடுமுறை பயண சலுகை பெறுவதற்கான நெறிமுறைகள் எளிமையாக்கப்பட்டுள்ளன. 
 

இன்ஸ்பயர் விருது கண்டுபிடிப்பில் மாற்றம்

       காரைக்குடி:மாணவர்களிடம் அறிவியல் ஆர்வத்தை வளர்க்க வேண்டும், என்ற அடிப்படையில் மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறை சார்பில் புத்தாக்க அறிவியல் ஆய்வு விருது (இன்ஸ்பயர்) வழங்கப்படுகிறது.
 

அண்ணா பல்கலையில் அறிமுகம்:போலி சான்றிதழ் கண்டுபிடிக்க வசதி

         போலி சான்றிதழ் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்க, அண்ணா பல்கலையில் நேரடி சான்றிதழ் சரிபார்ப்பு வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 
 

கட்டாய தமிழ் தேர்வு மாணவர்கள் தேர்ச்சி பாதிக்கும் அபாயம்

      பிறமொழி மாணவர்களுக்கான, 10ம் வகுப்பு தமிழ் தேர்வு பிரச்னையில், குறிப்பிட்ட மாணவர்களுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளதால் மீண்டும் குளறுபடி ஏற்பட்டுள்ளது.
 

தேர்வர்கள் கடும் அதிர்ச்சி:'செட்' தேர்வு வினாத்தாள் எடுத்து வர தடை

       உதவிப் பேராசிரியர்களுக்கான, மாநில அரசின், 'செட்' தகுதித்தேர்வின் இறுதியில், தேர்வர்கள் வினாத்தாள் எடுத்துச் செல்ல அனுமதி வழங்கப்படாததால், அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
 

விஜய் டி.வி யில்ஒரு வார்த்தை ஒரு இலட்சம் நி்கழ்ச்சி - அரசுப்பள்ளிக்கு கிடைத்த அங்கீகாரம்

        விஜய் டி.வி யில்ஒரு வார்த்தை ஒரு இலட்சம் நி்கழ்ச்சியில் முன் இறுதிப்போட்டிக்கு தேர்வாகியுள்ள மூலந்துறை, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவர்களை வாழ்த்துவோம்....அரசுப்பள்ளிக்கு கிடைத்த அங்கீகாரம்... பயிற்சி அளித்த ஆசிரியப் பெருமக்களை வாழ்த்தி வணங்குகிறோம்..


கணினி ஆசிரியர் பணியிடங்களை விரைவில் நிரப்ப வேண்டும்-ஜி.கே.வாசன் அறிக்கை.

         கணினி ஆசிரியர் பணியிடங்களை விரைவில் நிரப்ப வேண்டும்: ஜி.கே.வாசன்வலியுறுத்தல்அரசு பள்ளிகளில் காலியாக உள்ள கணினி ஆசிரியர் பணியிடங்களை விரைவில்நிரப்பவேண்டும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

'குரூப் பி, குரூப் சி' பணி-விண்ணப்பிக்க மார்ச் 10 கடைசி.

       நாடு முழுவதும் உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு, 'குரூப் பி' மற்றும் 'குரூப் சி' பணியாளர்களை 'ஸ்டாப் செலக் ஷன் கமிஷன்' (எஸ்.எஸ்.சி.,) தேர்ந்தெடுக்க உள்ளது. 

NMMS Exam Study Materials

வெளிநாட்டு மாணவர்கள் ஐ.ஐ.டி.,யில் படிக்க வாய்ப்பு

      வெளிநாடுகளை சேர்ந்த மாணவர்கள், இந்திய ஐ.ஐ.டி.,க்களில் சேர்ந்து படிக்கும் வகையில், அவர்களுக்கு தனி நுழைவுத் தேர்வு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

ஒரே கோரிக்கையை வலியுறுத்தி SSTA தொடர் உண்ணாவிரதம்

      இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள்( SSTA) சார்பாக,மாநில இடைநிலை ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம்( மத்திய அரசுக்கு இணையானது அல்ல) ஒரே கோரிக்கையை வலியுறுத்தி தற்போது (20.02.2016) தொடங்கி காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம் DPI அலுவலகத்தில் தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கிறது..

TET தேர்வை நீக்க வலியுறுத்தி ஆசிரியர் இயக்கம் மனித சங்கிலி.

        தமிழ்நாடு ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில், ஆசிரியர் தகுதி தேர்வை நீக்க கோரி மனித சங்கிலி போராட்டம் விழுப்புரத்தில் நடந்தது.

மொபைலில் பேச பெண்களுக்கு தடை!

        உத்தர பிரதேச மாநிலம், அலிகார் மாவட்ட கிராமம் ஒன்றில், 18 வயதிற்கு குறைவான இளம் பெண்கள், மொபைல் போன் மற்றும் சமூக வலைதளங்களை பயன்படுத்த, கிராம பஞ்சாயத்து தடை விதித்துள்ளது. 
 

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive