தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் மூலம் புதிதாக தேர்வு
செய்யப்பட்ட எஸ்.ஐ.,களுக்கு, இம்மாதம் 26 முதல் சென்னை போலீஸ் அகாடமியில்
பயிற்சியளிக்கப்பட உள்ளது.
Half Yearly Exam 2024
Latest Updates
அரசு ஊழியர் போராட்டம் ஒத்திவைப்பு
சென்னை,: பல கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர்,
பிப்., 10 முதல், காலவரையற்ற, 'ஸ்டிரைக்' நடத்தி வந்தனர். மறியல், கலெக்டர்
அலுவலகங்களில் காத்திருப்பு போராட்டங்களை நடத்தினர்.
பொதுத்தேர்வு பணி சுணக்கம் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க திட்டம்
அரசுக்கு எதிரான போராட்டத்தால், பொதுத்தேர்வு பணிக்கு ஒத்துழைக்காத
ஆசிரியர்கள் மீது, பொதுத்தேர்வுக்கு பின் நடவடிக்கை எடுக்க, தேர்வுத்துறை
முடிவு செய்துள்ளது.
மத்திய அரசின் 'குரூப் பி', 'குரூப் சி' பணி: மார்ச் 10 கடைசி தேதி
மதுரை:நாடு முழுவதும் உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு 'குரூப் பி' மற்றும்
'குரூப் சி' பணியாளர்களை 'ஸ்டாப் செலக் ஷன் கமிஷன்' (எஸ்.எஸ்.சி.,)
தேர்ந்தெடுக்க உள்ளது. பட்டதாரி நிலை ஒருங்கிணைந்த தேர்வுக்கு
(சி.ஜி.எல்.,) இணையதளம் மூலம் மார்ச் ௧௦ க்குள் விண்ணப்பிக்க
வேண்டும்.எஸ்.எஸ்.சி., சார்பில் விஜிலென்ஸ், ரயில்வே, வெளியுறவு, நிதி
உள்ளிட்ட துறைகளில் துணை அலுவலர், இன்ஸ்பெக்டர், ஆடிட்டர் பதவிகளுக்காக
பட்டதாரிகள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.
ஓய்வூதியம் பெறுவோருக்கு உயிர் சான்று அளிக்க உத்தரவு
சென்னை,: ஓய்வூதியம் பெறுவோருக்கு உயிர் சான்று அளிக்க, மாநகராட்சி
உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து மாநகராட்சி வெளியிட்ட அறிவிப்பு:சென்னை
மாநகராட்சியில் ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் பெறுவோர், 2016-17ம்
ஆண்டிற்கான உயிர் சான்று, வரும், மார்ச் 1ம் தேதி முதல் ஜூன், 30ம் தேதி
வரை, அலுவலக வேலை நாட்களில், காலை, 10:30 மணிமுதல், மாலை, 4:00 மணி வரை,
மாநகராட்சி ஓய்வூதிய பிரிவில் வழங்க வேண்டும்.
புத்தாக்க அறிவியல் ஆய்வு விருது செயல்முறைகளில் மாற்றம்
மத்திய அரசு நிதியுதவி வழங்கும், 'புத்தாக்க அறிவியல் ஆய்வு விருது'க்கான
செயல்முறைகளில், மத்திய அரசு மாற்றம் செய்துள்ளது.பள்ளி மாணவ, மாணவியரிடையே
அறிவியல் ஆர்வம் அதிகரிக்க வேண்டும் என்பதற்காக, மத்திய அரசின் அறிவியல்
மற்றும் தொழில்நுட்ப துறை சார்பில், ஆண்டுதோறும் புத்தாக்க அறிவியல் ஆய்வு-
- இன்ஸ்பயர்) விருது வழங்கப்படுகிறது.
மதுரையில் 'எய்ம்ஸ்' கிளை மத்திய பட்ஜெட்டில் அறிவிப்பு?
டில்லியில்
உள்ள, அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகம் எனப்படும், 'எய்ம்ஸ்'
மருத்துவமனையின் கிளையை, மதுரையில் அமைக்க, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு, மத்திய பட்ஜெட்டில் வெளியாகும் எனவும்
தகவல் வெளியாகியுள்ளது.
வியாழனை போலவே உள்ள 5 கோள்கள் கண்டுபிடிப்பு!
சூரிய மண்டலத்திற்கு அப்பால் ஐந்து புதிய கோள்களை, வானியல் வல்லுனர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
இங்கிலாந்தின்,
தெற்கு வான் பகுதியை, 'வாஸ்ப் சவுத்' என்ற எட்டு கேமராக்களைக் கொண்ட சாதனம்
மூலம், 'கீல்' பல்கலைக் கழக ஆய்வாளர்கள் ஆராய்ந்து வந்தனர். அதன்
மூலம்தான் சமீபத்தில் இந்த ஐந்து கோள்களையும் அவர்கள் கண்டுபிடித்தனர்.
இன்று போலியோ சொட்டு மருந்து முகாம்
நாடு முழுவதும், இரண்டாம் கட்ட போலியோ தடுப்பு சொட்டு மருந்து முகாம்,
இன்று நடக்கிறது. தமிழகத்தில், 70 லட்சம் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து தர
இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.குழந்தைகளுக்கு, இளம்பிள்ளை வாத நோய்
வராமல் தடுக்கும் வகையில், நாடு முழுவதும் போலியோ தடுப்புக்கான முதற்கட்ட
முகாம், ஜன., 17ம் தேதி நடந்தது.
இன்ஜினியரிங் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு... 'மேக் இன் இந்தியா'வால் மாணவர்கள் உற்சாகம்:
அனைத்து இன்ஜி., கல்லுாரிகளிலும்,
விருப்ப பாடமான சி.பி.சி.எஸ்., திட்டம் அறிமுகமாவதால், இன்ஜி.,
பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்புகள் இரட்டிப்பாகி உள்ளன. வெளிநாட்டு
நிறுவனங்கள், இந்தியாவில் அதிக அளவில் முதலீடு செய்வதும், இன்ஜி., துறைக்கு
புத்துணர்வை அளித்துள்ளது.
5 மாணவர்களுக்காக 5 ஊழியர்கள்தொடக்கப்பள்ளியில்தான் இந்த கூத்து
கொளத்துார்: மாணவ, மாணவியர், ஐந்து பேர் பயிலும் தொடக்கப்பள்ளியில், 2
ஆசிரியர்கள் உட்பட, 5 பேர் பணியில் நியமிக்கப்பட்டுள்ளது அனைவரையும்
அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
மாற்றுத்திறனாளிகளுக்காக சலுகைகளை அறிவித்துள்ளார் முதல்வர் ஜெயலலிதா
தமிழகத்தில் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து போராடி வரும் மாற்றுத்திறனாளிகளுக்காக சில முக்கிய சலுகைகளை தமிழக முதல்வர் ஜெயலலிதா இன்று அறிவித்தார்.
மதிய உணவு கண்காணிப்பு குழுவை மாற்றியது அரசு
பள்ளிகளில்
செயல்படுத்தப்படும் மதிய உணவு திட்டத்தை, கண்காணிக்கும் குழுவில்,
முதன்முறையாக, சமூக அமைப்பு மற்றும் தொண்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள்
இடம் பெற்றுள்ளனர்.
பெரிய ஏமாற்றம் போராட்டம் தொடரும்!
'முதல்வரின் அறிவிப்பு கண்துடைப்பு; போராட்டத்தை திசை திருப்பும் முயற்சி'
என, தெரிவித்துள்ள ஆசிரியர், ஊழியர் சங்கங்கள் போராட்டத்தை
தீவிரப்படுத்தப்போவதாக அறிவித்துள்ளன.
படியில் மாணவர்கள் பயணம்: அரசு பேருந்து ஓட்டுநருக்கு ஆட்சியர் கண்டிப்பு
ஏராளமான மாணவர்கள் படியில் தொங்கிக் கொண்டு வந்த அரசுப் பேருந்தை நிறுத்திய
ஆட்சியர் கொ.வீரராகவ ராவ், ஓட்டுநரை அழைத்து எச்சரித்து அறிவுரை கூறினார்.
பொதுத்தேர்வு பணிகள்: ஆசிரியர்கள் விடுப்பு எடுக்க தடை!
ஆசிரியர்களின் போராட்டத்தால், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வு
பணிகள் முடங்கி உள்ளன. இதனால், தனியார் பள்ளி ஆசிரியர்கள் விடுப்பு எடுக்க
தடை விதிக்கப்பட்டு உள்ளது.
சிவில் சர்வீசஸ் தேர்வுகளுக்கான மெயின் தேர்வு முடிவுகள் வெளியீடு.
சிவில் சர்வீசஸ் மெயின் தேர்வு முடிவு வெளியிடப்பட்டுள்ளது. சைதை
துரைசாமியின் மனிதநேய மையத்தில் பயிற்சி பெற்றவர்களில் 83 பேர் தேர்வுபெற்றுள்ளனர்.
BE சான்றிதழின் உண்மைத் தன்மை: இணையதளத்தில் அறியலாம்.
பொறியியல் பட்டச் சான்றிதழின் உண்மைத் தன்மையை www.annauniv.edu என்ற
இணையதளத்தில் அறிய அண்ணா பல்கலைக்கழகம் ஏற்பாடு செய்துள்ளது.
எட்டாம் வகுப்பு தனித்தேர்வர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.
எட்டாம் வகுப்புப் பொதுத் தேர்வு எழுத விரும்பும் தனித்தேர்வர்கள், வரும்
29-ஆம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம்
அறிவித்துள்ளது.
LKG க்கு ரூ.42 ஆயிரம் 'பீஸ்'சிங்காரவேலர் கமிட்டி அறிவிப்பு.
தமிழகத்தில் உள்ள தனியார் சுயநிதி பள்ளிகளில், கல்வி கட்டணம் நிர்ணயம்
செய்ய, அரசு சார்பில், நீதிபதி சிங்காரவேலர் தலைமையில், கல்வி கட்டண நிர்ணய கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது.
ஏராளமான உயர்வுகள், சலுகைகள்: பட்டியலிட்டார் ஜெ.,
சட்டசபையில் 110 விதியின் கீழ் நேற்று 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு இலவச பஸ் பாஸ் திட்டத்தை அறிவித்த தமிழக முதல்வர் ஜெயலலிதா, இன்று அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு சில சலுகைகளை அறிவித்துள்ளார்.
Flash News:அரசு ஊழியர்களுக்கு புதிய சலுகைகள் உட்பட 11 அறிவிப்புகள்: சட்டப்பேரவையில் ஜெயலலிதா பட்டியல்
அரசு ஊழியர்கள் போராட்டம் தமிழகம் முழுவதும் தீவிரமடைந்து வரும் நிலையில்,
அவர்களுக்கான குடும்ப நல நிதி உயர்வு, கவுரவ விரைவுரையாளர்களுக்கான ஊதிய
உயர்வு உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை தமிழக முதல்வர் ஜெயலலிதா
அறிவித்துள்ளார்.
Flsah News: அரசு ஊழியர்களுக்கு பல்வேறு சலுகைகளை வழங்க அரசு முடிவு: 110 விதியின் கீழ் முதல்வர் அறிவிப்பு
- குடும்ப நல ஒய்வூதியம் 3 லட்சம்
- கெளரவ விரிவுரையார் சம்பளம் 15000
- சத்துணவு ஊழியர் ஒய்வூதியம் 1500
- 110 விதியில் முதல்வர் அறிவிப்பு
அரசு ஊழியர்களுக்கான குடும்ப நல நிதி ரூ.3 லட்சமாக உயர்வு: முதல்வர் அறிவிப்பு
தமிழக அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த குடும்ப நலநிதி ரூ.3 லட்சமாக
உயர்த்தப்படுவதாக தமிழக முதல்வர் ஜெயலலிதா இன்று பேரவையில்
அறிவித்தார்.