Half Yearly Exam 2024
Latest Updates
ரூ.251க்கு ஸ்மார்ட் போன்!
இந்தியாவில் தயாரிப்போம் திட்டத்தின் கீழ் இந்தியாவின்'ரிங்கிங் பெல்ஸ்' எனும் நிறுவணம் ரூ. 251க்கு ஸ்மார்ட் போனை அறிமுகம் செய்துள்ளது.
அரசு ஊழியர்கள்,ஆசிரியர்கள் போராட்டம் குறித்து பேச அனுமதி மறுப்பு--எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு.
அரசு ஊழியர்கள் போராட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்து பேச
அனுமதி மறுக்கப்பட்டதாகக் கூறி திமுக, தேமுதிக, பாமக, புதிய தமிழகம்
உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தன.தமிழக சட்டப்பேரவையில் இன்று
முக்கிய நிகழ்வாக இடைக்கால பட்ஜெட் மீது பொது விவாதம் நடைபெறுகிறது.
இடைக்கால நிதிநிலை அறிக்கை: பொது விவாதம் துவங்கியது
இடைக்கால பட்ஜெட் மீதான பொது விவாதம் சட்டப்பேரவையில் இன்று காலை
துவங்கியது.2016-17ம் ஆண்டுக்கான தமிழகத்தின் இடைக்கால நிதிநிலை அறிக்கையை,
நிதித் துறை அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் நேற்று தாக்கல்
செய்தார்.
எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 தேர்வுகளில் மாணவர்கள் விடைத்தாளில் எழுதிய எல்லா விடைகளையும் அடித்தால் தண்டனை; அரசு தேர்வுத்துறை புதிய உத்தரவு
10 மற்றும் 12ம் வகுப்பு பொது தேர்வுகளில் விடைத்தாளில், எழுதியவிடைகள்
அனைத்தையும் கோடிட்டு அடித்தால் அவர்கள் 2 பருவங்களுக்கு தேர்வு எழுத
முடியாது என்று பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் புதிய உத்தரவை
பிறப்பித்துள்ளார்.
இளநிலை பயிற்சி அலுவலர் பணிக்கு எழுத்துத் தேர்வு
வேலைவாய்ப்புத் துறையில் காலியாக உள்ள இளநிலை பயிற்சி அலுவலர்
பணியிடத்துக்கான எழுத்துத் தேர்வு ஞாயிற்றுக்கிழமை (பிப்.21)
நடைபெறவுள்ளது.இதுகுறித்து, அரசினர் தொழில் பயிற்சி நிலைய அலுவலகம்
செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
போராட்டம் தொடரும்: ஆசிரியர்கள்
இடைக்கால நிதி நிலை அறிக்கையில் எந்தவித அறிவிப்பையும் தமிழக அரசு
வெளியிடாததால், போராட்டம் தொடரும் என்று "ஜாக்டோ' (ஆசிரியர்கள்) அமைப்பினர்
தெரிவித்தனர்.பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்துதல், மத்திய அரசுக்கு
இணையான ஊதியம் என்பன உள்ளிட்ட 15 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி,
ஆசிரியர்களின் சங்கங்கள் இணைந்து "ஜாக்டோ' வாயிலாகத் தொடர் போராட்டம்
நடத்திவருகிறது.
பட்ஜெட்டில் அறிவிப்பு இல்லை, 110 விதியின் கீழ் அறிவிப்பு?
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அரசு ஊழியர் சங்கத்தினர், 10ம் தேதி
முதல், காலவரையற்ற, 'ஸ்டிரைக்' நடத்தி வருகின்றனர். இந்நிலையில்,
சட்டசபையில் நேற்றுதாக்கல் செய்யப்பட்ட இடைக்கால பட்ஜெட்டில், முக்கிய
அறிவிப்புகள் ஏதும் இடம் பெறாததால், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசு
ஊழியர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
PF., வட்டி அதிகரிப்பு
''நடப்பு நிதியாண்டில், பி.எப்., எனப்படும், வருங்கால வைப்பு நிதிக்கான
வட்டி வீதம், 8.75 சதவீதத்தில் இருந்து, 8.8 சதவீதமாக
உயர்த்தப்பட்டுள்ளது,'' என,மத்திய தொழிலாளர் நலன் மற்றும் வேலைவாய்ப்புத்
துறை அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா தெரிவித்தார்.
பிளஸ் 2 தேர்வு இருவித விடைத்தாள் வழங்க திட்டம்
பிளஸ்
2 பொதுத்தேர்வில், கோடிட்டவை, கோடிடப்படாதவை என, இருவிதமான விடைத்தாள்கள்
வழங்கப்பட உள்ளன. அனைத்து பாடங்களுக்கும், நான்கு பக்கங்கள் மட்டுமே,
கூடுதல் விடைத்தாளாகவும் வழங்கப்பட உள்ளது. பிளஸ் 2 பொதுத்தேர்வு, மார்ச்
4ம் தேதி முதல் துவங்க உள்ளது. இதற்கான ஆயத்த பணிகள் தீவிரமாக நடந்து
வருகின்றன.
EIGHTH STANDARD PUBLIC EXAMINATION (PRIVATE CANDIDATE) - APRIL 2016
Applications
are invited for admission to the Eighth Standard Public Examination
(Private study) to be held in April 2016 only from Private
Candidates who have completed 12\ years of age as on 01.04.2016.
தேர்தல் செலவு 35 சதவீதம் உயர்வு
தேர்தல் பணி அலுவலர்களுக்கு வழங்கப்படும் ‘படி’ மற்றும் போக்குவரத்து போலீஸ் செலவுகள் அதிகரித்துள்ளதால் தேர்தல் செலவு 35 சதவீதம் உயர்வு
பள்ளிகள் விதிமுறை மீறல் 10, பிளஸ் 2 புத்தக விற்பனைக்கு தடை.
தமிழகத்தில்,
10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெறுவது;
அதிக தேர்ச்சி காட்டுவது என்ற இலக்கை நோக்கியே பள்ளிகள்இயங்குகின்றன.
குறிப்பாக, சில தனியார் பள்ளிகள், பொதுத் தேர்வு மதிப்பெண்ணை தான், தங்கள்
வணிக நோக்கத்துக்கு பயன்படுத்துகின்றன.
சகோதரர் கொலை சகோதரிக்கு அரசு பணி
மணப்பாறையில் சகோதரர் கொலை செய்யப்பட்டதால், அவரது சகோதரிக்கு அரசு பணி
நியமனம் வழங்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.திருச்சி மாவட்டம்
மணப்பாறை சுதா, 'எனது சகோதரர் முத்துக்குமார் 2015 ஏப்.,26ல் கொலை
செய்யப்பட்டார்.நான் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவள்.
2016 - 17 பட்ஜெட் : பள்ளி கல்வித்துறைக்கு ரூ.24,820 கோடி நிதி ஒதுக்கீடு.
பள்ளி கல்வித்துறைக்கு ரூ.24,820 கோடி நிதி ஒதுக்கீடு. கடந்த 5 ஆண்டுகளில் பள்ளிக்கல்வித் துறைக்கு ரூ.86,193 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தமிழக சட்டப்பேரவை இன்று கூடுகிறது
சென்னை : சட்டப் பேரவையின் 11வது கூட்டத் தொடர் ஜனவரி 20ல் கவர்னர்
உரையுடன் துவங்கி, 23ம் தேதி வரை நடைபெற்று, பின் தேதி குறிப்பிடாமல்
ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், அடுத்த கூட்டம் இன்று(பிப்., 16)
கூடுகிறது.
மகளிர் குழுவினர் மூலம் மாணவர்களுக்கு சத்துணவு
தேனி,:சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்களின் வேலைநிறுத்தத்தால் பள்ளிகளில்
மகளிர் சுயஉதவிக்குழுவினரின் மூலம் மாணவர்களுக்கு சத்துணவு சமைத்து
வழங்கப்படுகிறது.
30 அரசுப் பள்ளிகளைத் தரம் உயர்த்த அடிக்கல்
தில்லியில் 30 அரசுப் பள்ளிகளைத் தரம் உயர்த்துவதற்கான திட்டங்களுக்கான அடிக்கல் நாட்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது.
"ஆசிரியர் சங்க கூட்டமைப்பு அரசுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் திருப்தி' - dinamani
தமிழ்நாடு ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு (டேக்டோ) சார்பில் அரசுடன்
நடத்திய பேச்சுவார்த்தை திருப்திகரமாக அமைந்தது என அந்த அமைப்பின் மாநில
ஒருங்கிணைப்பாளர் பா.ஆரோக்கியதாஸ் கூறியுள்ளார்.
தமிழக சட்டசபை நாளை கூடுகிறது: இடைக்கால பட்ஜெட் தாக்கல்
தமிழக சட்டசபை நாளை (செவ்வாய்க்கிழமை) கூடுகிறது.தற்போதைய அ.தி.மு.க.
அரசின் கடைசி கூட்டத்தொடர் இதுவாகும்.தமிழக சட்டசபைக்கு மே மாதம் தேர்தல்
நடைபெற உள்ளதால் தற்போது முழுமையான பட்ஜெட்டை தாக்கல் செய்ய இயலாது. எனவே
அரசு செலவுகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யவும், ஏற்கனவே அறிவித்த
திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யவும் இடைக்கால பட்ஜெட் தாக்கல்
செய்யப்படும்.
வருவாய் துறை அதிகாரிகளை தேட வேண்டிய அவசியமில்லை:டூ'ஆன் -லைனில்' பட்டா பெயர் மாற்றம் துவக்கம்!
இன்று முதல், இணையத்தில் (ஆன் -லைன்) பட்டா பெயர் மாற்றம் செய்யும் பணி
துவங்குவதால், அதிகாரிகளை தேடி அலைய வேண்டிய சூழல், விண்ணப்பதார்களுக்கு
ஏற்படாது என, வருவாய் துறை தெரிவித்து உள்ளது.காஞ்சிபுரம் மாவட்டத்தில், 12
தாலுகா அலுவலகங்களில்,3,512 கிராமங்கள் உள்ளன. அக்கிராமங்களில்
இருக்கும்புஞ்சை, நஞ்சை மற்றும் நத்தம் ஆகிய நிலங்களின், பட்டா பெயர்
மாற்றம்,தாலுகா அலுவலகங்களில் செய்யப்பட்டு வந்தன.
ஆசிரியர் 'ஸ்டிரைக்': பிளஸ் 2 தேர்வு நடக்குமா?-DINAMALAR
ஆசிரியர்
சங்கங்களின் கூட்டமைப்பான 'ஜாக்டோ' நிர்வாகிகளுடன் அமைச்சர்கள் குழு
பேச்சு நடத்தியது; ஆனால் எந்த உறுதியும் அளிக்கவில்லை. எனவே ஜாக்டோவில்
உள்ள ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி நேற்று முதல் காலவரையற்ற போராட்டத்தை
துவக்கினர். 'முதல் நாளில், 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள்
பணிக்கு செல்லவில்லை' என ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி பொதுச் செயலர்
பாலசந்தர் தெரிவித்தார்.
நீதிமன்ற ஊழியர்களும் போராட முடிவு!
அரசு ஊழியர்கள் போராட்டத்துக்கு ஆத-ரவு தெரி-விக்கும் வகையில், நீதி-மன்ற
ஊழியர்-களும் வரும், 17ம் தேதி முதல், வேலை நிறுத்த போராட்டத்தில் -ஈடுபட
முடிவு செய்துள்-ளனர்.தமிழ்-நாடு நீதித்துறை ஊழியர் சங்-கத்தின், மாநில
மற்றும் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், கோவையில்நடந்தது. மாநில தலைவர்
கருணாகரன், தலைமை வகித்தார்.
அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள்: மறியல் செய்த ஆயிரக்கணக்கானோர் கைது
சென்னை: 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் சாலை மறியல்
போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் ஆயிரக்கணக்கானோர்
கைது செய்யப்பட்டுள்ளனர்.புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்தல், காலி பணி
இடங்களை நிரப்புதல் உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகளை முன் வைத்து அரசு ஊழியர்
சங்கத்தினர் கடந்த 10ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில்
ஈடுபட்டு வருகின்றனர்.