Half Yearly Exam 2024
Latest Updates
"பள்ளி செல்லும் குழந்தைகளில் 10 சதவீதம் பேருக்கு கற்றலில் குறைபாடு'
பள்ளி
செல்லும் குழந்தைகளில் 10 சதவீதம் பேரிடம் கற்றலில் குறைபாடு
காணப்படுகிறது என சென்னை டிஸ்லெக்சியா(கற்றலில் குறைபாடு) சங்கத் தலைவர்
டி.சந்திரசேகர் கூறினார்.
கோரிக்கைகள் நிறைவேறும்வரை போராட்டம் தொடரும்: அரசு ஊழியர் சங்க மாநிலச் செயலர் கண்ணன்
அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்வரை போராட்டங்கள் தொடரும் என அரசு ஊழியர் சங்க மாநிலச் செயலர் கண்ணன் தெரிவித்தார்.
சட்டசபையில் முதல்வர் நல்ல முடிவு அறிவிப்பார்: சத்துணவு ஊழியர்கள் போராட்டம் ஒத்திவைப்பு
சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்கள் கடந்த 4 நாட்களாக தொடர் வேலைநிறுத்த
போராட்டத்தில் ஈடுபட்டனர்.தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி
கூட்டமைப்பில் இடம்பெற்ற சங்கங்கள் ஒன்று சேர்ந்து தமிழகம் முழுவதும்
போராட்டத்தை நடத்தின.
சுகாதார புள்ளியியல் அதிகாரி பணி: TNPSC அறிவிப்பு.
தமிழக அரசின் குடும்ப நலத்துறையில் Block Health Statistician
பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது தமிழ்நாடு அரசுபணியாளர்
தேர்வாணையம்.இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன்
மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
PG TRB:ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் 1,062 முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கப்படுகிறார்கள்.
இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள், முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள்,
கல்லூரி உதவி பேராசிரியர்கள் உள்ளிட்ட ஆசிரியர்கள் ஆசிரியர் தேர்வு
வாரியம் மூலம் தேர்ந்து எடுக்கப்படுகிறார்கள்.புதிதாக 1,062 முதுகலை
பட்டதாரி ஆசிரியர்களை ஆசிரியர் தேர்வு வாரியம் எழுத்துத்தேர்வு மூலம்
தேர்ந்து எடுக்க உள்ளது.
வேலைநிறுத்த அறிவிப்பு: 'ஜாக்டோ'வில் குழப்பம்
ஆசிரியர்கள்
வேலைநிறுத்த போராட்ட அறிவிப்பு தொடர்பாக, 'ஜாக்டோ' அமைப்பில் குழப்பம்
ஏற்பட்டுள்ளது.தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பான, 'ஜியோ'
மற்றும் ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பான, 'ஜாக்டோ' இணைந்து, 15
ஆண்டுகளாக, பல போராட்டங்களை நடத்தி உள்ளன.
தேர்வர்கள் வழக்கு: 'செட்' தேர்வு நடப்பதில் சிக்கல்
கல்லுாரி
உதவி பேராசிரியர் தகுதித் தேர்வான, 'செட்' தேர்வை நடத்துவதில், திடீர்
சிக்கல் ஏற்பட்டுள்ளது. தேர்வு நடைமுறைகளில் குளறுபடி உள்ளதாகக் கூறி,
தேர்வர்கள் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
சேமிப்பு கணக்கில் அளவுக்கு மீறினால்... பாரத ஸ்டேட் வங்கி விளக்கம்
வாடிக்கையாளர்களுக்கு
கூடுதல் வட்டி அளிக்கவே, சேமிப்பு கணக்கில் இருக்கும் தொகை, 'டேர்ம்
டிபாசிட்' எனப்படும், பருவ கால வைப்புத் தொகையாக மாற்றப்படுகிறது; இதன்
மூலம் வாடிக்கையாளர்களே பயன் அடைகின்றனர்' என, எஸ்.பி.ஐ.,
என்றழைக்கப்படும், பாரத ஸ்டேட் வங்கி தெரிவித்துள்ளது.
4 முக்கிய கோரிக்கைகள் நிறைவேறும் வரை அரசு ஊழியர்கள் போராட்டம் தொடரும்: மாநில தலைவர் அறிவிப்பு
தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தினர் 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி
கடந்த 10–ந் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு
வருகின்றனர்.நேற்று தமிழகம் முழுவதும் மறியலில் ஈடுபட்டனர்.
பாமக ஆட்சிக்கு வந்தால் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்: அன்புமணி
பாமக ஆட்சிக்கு வந்தால் சில மாதங்களில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின்
எல்லா கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும் என்று அக்கட்சியின் முதல்வர்
வேட்பாளர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.இது தொடர்பாக இன்று அவர்
வெளியிட்ட அறிக்கையில், ''தமிழ்நாட்டில் கிட்டத்தட்ட அனைத்துத்துறை அரசு
ஊழியர்களுமே தங்களின் கோரிக்கைகளை முன்வைத்து வேலை நிறுத்தம் உள்ளிட்ட
போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
போட்டித்தேர்வு அறிவுரை மையமாக மாறும் வேலை வாய்ப்பு அலுவலகம் பதிவு செய்து காத்திருப்போர் நிலை?
மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிந்து, வேலைக்காக காத்திருக்கும்
இளைஞர்களை அழைத்து, பல்வேறு போட்டித் தேர்வுகளை எழுத அறிவுறுத்த வேண்டும்
என, அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் 32 மாவட்டத்திலும்
படித்த லட்சக்கணக்கான இளைஞர்கள் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிந்து,அரசு
வேலைக்காக காத்திருக்கின்றனர்.
'உதவி பொறியாளர் தேர்வை மத்திய ஆணையம் நடத்தணும்
' தமிழ்நாடு மின் வாரியம், எலக்ட்ரிக்கல், 300; சிவில்,50; மெக்கானிக்கல்,
25 என, 375 உதவி பொறியாளர் பணியிடங்களை, எழுத்து மற்றும் நேர்முக தேர்வு
மூலம் நியமிக்க முடிவு செய்துள்ளது. ஜன., 31ல், எழுத்து தேர்வு நடந்தது;
ஒரு லட்சம் இன்ஜினியரிங் பட்டதாரிகள்தேர்வெழுதினர்.
சான்றிதழ்களை அரசிடம் ஒப்படைக்கும் போராட்டம் -தமிழ்நாடு பி.எட்., கணினி அறிவியல்வேலையில்லா பட்டதாரி ஆசிரியர் சங்கம்
சமச்சீர் கல்வி பாடத்திட்டத்தில், 9ம் வகுப்பு வரை அறிமுகம் செய்யப்பட்ட,
'கம்ப்யூட்டர் சயின்ஸ்' என்ற கணினி அறிவியல் பாடம், ஐந்து ஆண்டுகளாக
மாயமாகி விட்டது. அதனால், அச்சடிக்கப்பட்ட கணினி அறிவியல் புத்தகங்கள்,
பாடநுால் கழக கிடங்கில் மக்கி போகும் நிலையில் உள்ளன.தமிழகத்தில், 2011ல்,
சமச்சீர் கல்வி பாடத்திட்டம், 1ம் வகுப்பு முதல், 9ம் வகுப்பு வரை
அறிமுகமானது.
தொடக்க கல்வி பட்டயத் தேர்வர்கள் விடைத்தாள் நகல் பெற 16 முதல் விண்ணப்பிக்கலாம்
2015-ஆம் ஆண்டு மே மாதம் நடைபெற்ற தொடக்கக் கல்விப் பட்டயத் தேர்வு எழுதிய
பயிற்சி மாணவர்கள், தனித் தேர்வர்கள் விடைத்தாளின் மறுகூட்டல், நகல் கோரி
செவ்வாய்கிழமை (பிப்ரவரி 16) முதல் 20 வரை விண்ணப்பிக்கலாம் என்று அரசு
தேர்வுகள் துறை இயக்குநர் வசுந்தரா தேவி கூறியுள்ளார்.இதுகுறித்து அவர்
வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் மேலும் கூறியிருப்பதாவது:-
படிப்பைக் காரணம் காட்டி மாற்றுச் சான்றிதழ்வழங்கினால் கடும் நடவடிக்கை: தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக் கல்வி இயக்குநர் எச்சரிக்கை
அரசுப் பொதுத்தேர்வு எழுதவுள்ள அரசுப் பள்ளிகளில் படிக்கும் சில
மாணவர்களுக்கு மாற்றுச் சான்றிதழ் (டி.சி.) அளிக்கும் தலைமை ஆசிரியர்கள்
மீது கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக் கல்வி இயக்குநர்
ச.கண்ணப்பன் எச்சரித்துள்ளார்.
கும்பகோணத்தில் 10 நாட்களுக்கு பள்ளிகளுக்கு விடுமுறை
கும்பகோணத்தில் மகாமகம் பெருவிழாவையொட்டி10நாட்களுக்கு பள்ளிகளுக்கு
விடுமுறைஅறிவிக்கப்பட்டுள்ளது. இன்று முதல் பிப்ரவரி 24ஆம்தேதிவரைவிடுமுறை
அளித்துமாவட்ட நிர்வாகம்உத்தரவிட்டுள்ளது.
Centum Coaching Team - Special Question Paper - 10th Maths
Prepared by Mr. A. BALAIAH , M.Sc., B.Ed.,
5 மாணவர்களுக்கு இளம் விஞ்ஞானி விருது: கால்சியம் ஆய்வுக்கு கிடைத்தது
கடல் சங்குகளில் கிடைக்கும் கால்சியத்தை இயற்கை உரமாக பயன்படுத்த முடியும்'
என, ஆய்வு செய்த ராமநாதபுரம் மாணவர்கள் ௫ பேருக்கு 'இளம் விஞ்ஞானி' விருது
கிடைத்தது.தேசிய அறிவியல் இயக்கம் சார்பில் சண்டிகாரில் 23வது தேசிய
குழந்தைகள் அறிவியல் மாநாடுநடந்தது. இதில் ராமநாதபுரம் வேலுமாணிக்கம்
மெட்ரிக் பள்ளி மாணவர்கள் ஜோஸன்ஹாரிஸ், ரங்கராஜா, சிவமதிபிரியா,அமிர்தா,
கவியரசன் 'இளம் விஞ்ஞானி' விருது பெற்றனர்.
தனியார் பள்ளி கட்டணம் 40 சதவீதம் உயர்வு
தனியார் பள்ளிகளின் அடுத்த, மூன்று ஆண்டுகளுக்கான கல்விக் கட்டணத்தை, அரசு
வெளியிட்டு உள்ளது. இதில், கடந்த ஆண்டை விட, 40 சதவீதம் அதிக கட்டணம்
நிர்ணயிக்கப்பட்டுள்ளது.தனியார் சுயநிதி பள்ளிகளுக்கு கல்விக் கட்டணம்
நிர்ணயிக்க, நீதிபதி சிங்காரவேலர் தலைமையில், கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது.
தொடரும் அரசு ஊழியர் 'ஸ்டிரைக்': மாநிலம் முழுவதும் இன்று மறியல்.
தமிழக அரசு ஊழியர் சங்கத்தினரின் காலவரையற்ற, 'ஸ்டிரைக்' இரண்டாவது நாளாக,
நேற்றும் நீடித்தது. அரசிடம் இருந்து உறுதியான பதில் கிடைக்காததால்,
மாநிலம் முழுவதும், இன்று மறியல் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர்.
தொழிலாளர் நல அலுவலகத்தில் ஆசிரியர்கள் நூதன போராட்டம்
கல்வித் தகுதிக்கு ஏற்ப மாற்றுப்பணி கோரி, குழந்தை தொழிலாளர் திட்ட
ஆசிரியர்கள், தொழிலாளர் நலத்துறை அலுவலகத்தில், காலவரையின்றி
காத்திருக்கும் நுாதன போராட்டத்தை துவக்கி உள்ளனர்.தமிழகத்தில், குழந்தை
தொழிலாளர் திட்ட பள்ளிகளில், ஆசிரியர், பள்ளி எழுத்தர்என, 1,254 பேர்
பணியாற்றி வருகின்றனர்.
70 துறைகளைக் கைவிட 30 பொறியியல் கல்லூரிகள்முடிவு
மாணவர்கள் சேர்க்கை ஆண்டுக்கு ஆண்டு குறைந்து வருவதைத் தொடர்ந்து, வருகிற
2016-17 கல்வியாண்டில் 70 துறைகளைக் கைவிட 30 பொறியியல் கல்லூரிகள் அண்ணா
பல்கலைக்கழகத்திடம் விண்ணப்பித்திருப்பது தெரியவந்துள்ளது.இதுபோல, மாணவர்
சேர்க்கை இடங்களைக் குறைக்க 20-க்கும்மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள்
விண்ணப்பித்துள்ளன.
8ம் வகுப்பு தனித்தேர்வு அறிவிப்பு
தனித்தேர்வர்களுக்கு 8ம்வகுப்பு பொதுத்தேர்வு ஏப்ரலில் நடக்கவுள்ளது. இதை
எழுத விரும்புவோர் பிப்.18 முதல் 29 வரைwww.tndge.inஎன்ற இணையளத்தில் பதிவு
செய்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.பனிரெண்டரை வயது பூர்த்தியடைந்த
தனித்தேர்வர்கள் இத்தேர்வு எழுதலாம்.
விரைவில் ஆன்லைனில் பி.எப்., பணம் பெறும் வசதி
தொழிலாளர்களின் சம்பளத்தில் இருந்து பிடிக்கப்படும்பி.எப்., பணத்தை
ஆன்லைனில் திரும்ப பெறும் வசதியை மத்திய அரசு விரைவில்
அறிமுகப்படுத்தவுள்ளது.தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம்
(இ.பி.எ.ப்.ஓ.,), ஆரக்கிள் ஓ.எஸ்., மூலம் ஒருங்கிணைந்த டேட்டா சென்டர்களை
செகந்திராபாத், கர்கூன், துவாரகா ஆகிய இடங்களில் அமைக்கவுள்ளது.