Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பள்ளியை திறந்து பாடம் நடத்த சத்துணவு ஊழியர் சங்கம் எதிர்ப்பு!

பள்ளியை திறந்து பாடம் நடத்தும்படி அதிகாரிகள் கூறுவதற்கு சத்துணவு ஊழியர் சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.தமிழ்நாடு ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு, 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த, 30ம் தேதி முதல் தொடர் மறியல் போராட்டம் நடத்தி வருகிறது. பிப்., 1ம் தேதி அனைத்து பள்ளிகளையும் மூடி மறியல் போராட்டத்தில் பங்கேற்பதாக அறிவித்துள்ளது.


கட்டுமான பணி நிதியை கேட்கும் கட்சியினர் திணறும் அரசு பள்ளி தலைமையாசிரியர்கள்

மதுரையில் அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டத்தில் (ஆர்.எம்.எஸ்.ஏ.) கூடுதல் வகுப்பறைகள் கட்டும் பணிகளுக்கு ஒதுக்கப்பட்ட நிதியில், 'கட்டிங்' கொடுக்கும் பிரச்னையை சமாளிக்க முடியாமல் தலைமையாசிரியர்கள் திணறுகின்றனர்.

பொதுத் தேர்வு மாணவர்களுக்கு 'யுனிக் ஐ.டி.,' : தேர்வுத்துறை ஏற்பாடு

''பத்தாம் வகுப்பு, பிளஸ்2 பொது தேர்வு எழுதும் மாணவர்களுக்கு 'யுனிக் ஐ.டி.,' எண்கள் (தனித்துவ அடையாள எண்) வழங்கப்படவுள்ளது,'' என தேர்வுத்துறை இணை இயக்குனர் அமுதவல்லி தெரிவித்தார். மதுரையில் அவர் கூறியதாவது:

மக்கள் தொகை பதிவேடு பணி: ஆசிரியர்களுக்கு தடை கோரி வழக்கு: அறிக்கை கோரும் உயர்நீதிமன்றம்

'ஆதார்' எண்களை, தேசிய மக்கள் தொகை பதிவேட்டுடன் இணைக்கும் பணியில் ஆசிரியர்களை ஈடுபடுத்த தடை கோரிய வழக்கில், 'அரசு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்' என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

வி.ஏ.ஓ., விண்ணப்பம் பிப்., 7 வரை வாய்ப்பு

அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி ஷோபனா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:கிராம நிர்வாக அலுவலரான, வி.ஏ.ஓ., பதவியில், 813 காலியிடங்களுக்கு, 28ம் தேதி, தேர்வு நடக்க உள்ளது. இதற்கு, 10 லட்சம் பேர் விண்ணப்பித்து உள்ளனர்.அதன் விவரம், இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது; சரிபார்த்துக் கொள்ளலாம்.

10th Study Material - Social Science

பெட்ரோல் -4, டீசல் -3: ரூபாய் அல்ல காசுகள் குறைப்பு!

      சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி அடைந்துவரும் நிலையில் மத்திய அரசு பெட்ரோலுக்கு 4 காசுகளும், டீசலுக்கு 3 காசுகளும் குறைத்துள்ளது.கடந்த இரு வாரங்களில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை 4 அமெரிக்க டாலர் வரை குறைந்துள்ளது. 
 

ஜெயலலிதா தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம்: இடைக்கால பட்ஜெட்டுக்கு ஒப்புதல்

       முதல்வர் ஜெயலலிதா தலைமையில் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில், இடைக்கால பட்ஜெட்டுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.தமிழக சட்டப்பேரவையின் நடப்பு ஆண்டுக்கான முதல் கூட்டம், ஆளுநர் உரையுடன் கடந்த 20-ம் தேதி தொடங்கியது.இதைத்தொடர்ந்து, ஆளுநர் உரை மீதான விவாதம் 23-ம் தேதி வரை நடைபெற்றது. விவாதத்துக்கு பதிலளித்து முதல்வர் ஜெயலலிதா பேசினார். இதையடுத்து, மறுதேதி குறிப்பிடப்படாமல் பேரவை ஒத்திவைக்கப்பட்டது.


ஆசிரியர்கள் போராட்டத்துக்கு முழு ஆதரவு: மக்கள் நலக் கூட்டணி அறிவிப்பு

     மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்கிட கோரி ஆசிரியர்கள் நடத்தும் போராட்டத்திற்கு மக்கள் நலக் கூட்டணி முழு ஆதரவு தெரிவித்துள்ளது.இது தொடர்பாக மக்கள் நலக் கூட்டணி தலைவர்கள் வெளியிட்டுள்ள கூட்டறிகையில், 

ஜாக்டோ அமைப்பினரின் போராட்டத்தால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படாது என பள்ளி கல்வி துறை அறிவிப்பு

        தமிழ்நாடு ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு (ஜாக்டோ) அமைப்பு தங்களின் 15 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி கடந்த மூன்று நாட்களாக தமிழகமெங்கும் போராட்டம் நடத்தி வருகிறது.ஆறாவது ஊதியக்குழுவில், தமிழகத்தில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு மத்திய அரசில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு வழங்கப்படுகின்ற ஊதியம் போல் சமமாக வழங்கப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட தங்களின் 15 அம்ச கோரிக்கையை அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று ஜாக்டோ அமைப்பினர் வலியுறுத்தி உள்ளனர்.


How You Can Save an Extra Rs.15,000 in Taxes This Year

images (Copy)        How You Can Save an Extra Rs.15,000 in Taxes – Individuals can open two types of accounts under NPS -tier-I and tier-II. Tier-I is the primary account.



The onset of tax-saving season leads to a mad scramble for investment instruments to cut down tax liabilities. This financial year, tax payers can save an additional Rs.15,000 in taxes courtesy the New Pension Scheme (NPS).
 

பகுதிநேர ஆசிரியர்களின் மாநில அளவில் நடைபெறும் மாபெரும் உண்ணவிரத அறப்போராட்டம்.

      காவல் துறையினர் அனுமதியுடன் விழுப்புரம் மாவட்டத்தில் 07.02.2016 அன்றுமாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகி பட்டை நாமம் போட்டு மொட்டையடித்து தூக்குக்கயிறுடன் மாநில அளவில் நடைபெறும் மாபெரும் உண்ணவிரத அறப்போராட்டம் அனைத்துமாவட்ட பகுதிநேர ஆசிரியர்களையும் வருக என வரவேற்று அழைக்கின்றோம்.மாவட்ட நிர்வாக குழுவிழுப்புரம் மாவட்டம்

Half Yearly Exam - Centum Answer Scripts - 10th Social Science

அன்புள்ள ஆசிரியர்களே!

                வணக்கம். அரையாண்டு பொதுத்தேர்விற்கான விடைக்குறிப்புகள் வழங்கியதை தொடர்ந்து 100க்கு 100 மதிப்பெண் பெற்ற விடைத்தாள்களை நமது பாடசாலை வலைதளத்தில் பதிவேற்றம் செய்ய உள்ளோம். இதேபோன்று தங்கள் பள்ளி மாணவர்கள் எவரேனும் முழு மதிப்பெண் பெற்றிருந்தால் அவற்றை ஸ்கேன் செய்து நமக்கு அனுப்பி வைக்கவும். குறிப்பாக விடைத்தாளின் இறுதியில் சார்ந்த மாணவர்களின் பெயர், வகுப்பு, பள்ளியின் பெயர், மாவட்டம், மாணவர்களின் புகைப்படம் போன்றவையும் - மதிப்பீடு செய்த ஆசிரியர் புகைப்படம், இதர விவரங்கள் இணைத்து பிறகு ஸ்கேன் செய்யவும். இதனால் சார்ந்த மாணவர்களை நாம் ஊக்கப்படுத்தலாம். மேலும் இதர மாணவர்களுக்கும் ஒரு முன் மாதிரி விடைத்தாளாக அவை அமையும். 

அனுப்ப வேண்டிய இமெயில் ஐடி - padasalai.net@gmail.com

நன்றி!
அன்புடன் - பாடசாலை.

உதவி பொறியாளர் தேர்வு ஒரு லட்சம் பேர் எழுதினர்

      தமிழ்நாடு மின் வாரியத்தில், உதவிப் பொறியாளர் பணிக்கான தேர்வை, ஒரு லட்சம் பேர் எழுதினர். 
 

அடுத்த 5 ஆண்டுகளில் அரசு சேவைகள் அனைத்தும் செல்போனில் கிடைக்கும்

அடுத்த 5 ஆண்டுகளில் அரசு சேவைகள் அனைத்தும் செல்போனில் கிடைக்கும் பல்வேறு அரசுத் துறைகளின் அனைத்து சேவைகளும் அடுத்த 5 ஆண்டுகளில் மக்களுக்கு செல்போனில் கிடைக்கும் விதத்தில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது என மத்திய அரசு அறிவித்துள்ளது.

கல்வி உதவித் தொகை: மின்னஞ்சலில் புகார் அனுப்பலாம்

மத்திய அரசின் கல்வி உதவித் தொகை பெறும்போது ஏற்படும்பிரச்னைகள் குறித்து புகார்களை மின்னஞ்சலில் தெரிவிக்கும் வசதியை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.பொருளாதாரத்தில் நலிந்த பிரினர் உயர் கல்வி பெற கல்விஉதவித்தொகையை மத்திய அரசு வழங்கிவருகிறது.

'தமிழில் படித்தவர்களுக்கான முன்னுரிமை, பணியில் இருப்பவர்கள் கேட்க முடியாது'- சென்னை உயர் நீதிமன்றம்

எஸ்.ஐ., பணிக்கான தேர்வில், தமிழில் படித்தவர்களுக்கான முன்னுரிமையை வழங்கக் கோரி, போலீஸ் துறையில் பணியாற்றுபவர்கள் தாக்கல் செய்த மனுவை, சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. எஸ்.ஐ., பதவிக்கான தேர்வு தொடர்பாக, 2015 பிப்ரவரியில், தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம், அறிவிப்பாணை வெளியிட்டது. ஏற்கனவே போலீஸ் துறையில் பணியாற்றுபவர்களும், இத்தேர்வில் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டனர். எழுத்துத் தேர்வில் பங்கேற்ற இவர்களுக்கு, உடல் தகுதித் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டது.

'செட் தேர்வு குளறுபடி நீக்காவிட்டால் வழக்கு'

கல்லுாரிகளில், உதவிப் பேராசிரியர் பணிக்கான, 'செட்' தகுதித்தேர்வு, பிப்., 21ல் நடக்கிறது. இந்த தேர்வு நடைமுறையிலுள்ள குளறுபடிகளை நீக்க, முதுகலை பட்டதாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.இதுகுறித்து, தமிழ்நாடு, 'நெட், ஸ்லெட்' சங்க தலைவர் தங்க முனியாண்டி, பொதுச் செயலர் நாகராஜன் உட்பட சிலர்,தமிழக அரசு மற்றும் பல்கலை மானிய குழுவான, யு.ஜி.சி.,க்கு மனு அனுப்பியுள்ளனர்.
அதில் கூறியுள்ளதாவது:

சி.பி.எஸ்.இ., பள்ளி மாணவர்களுக்கு கவுன்சிலிங்

பிளஸ் 2 மற்றும், 10ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள், பொதுத் தேர்வு எழுதும் போது ஏற்படும் தேர்வு பயம் மற்றும் பதற்றத்தை போக்க, பள்ளிகள் மற்றும் தனியார் அமைப்புகள் சார்பில் ஆலோசனைகள் வழங்கப்படும். சி.பி.எஸ்.இ., மாணவர்களுக்கு, 19 ஆண்டுகளாக மத்திய அரசுசார்பில், கவுன்சிலிங் வழங்கப்படுகிறது.இந்த ஆண்டுக்கான கவுன்சிலிங், இன்று துவங்கி, ஏப்., 22ல் முடிகிறது.

மருந்தாளுனர் வேலை விண்ணப்பம் வரவேற்பு

சுகாதார துறையில் காலியாக உள்ள, 333 மருந்தாளுனர் தற்காலிக பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.இதற்கான அறிவிப்பை, மருத்துவ பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. விருப்பம் உள்ளவர்கள், www.mrb.tn.gov.in இணையதளத்தில், ஆன்லைன் மூலம் பிப்., 17க்குள் விண்ணப்பிக்கலாம்.

12th Study Material - Computer Science


Prepared by Mr. R.RAMESH,B.A(Eng).,M.Com.,B.Ed.,M.Phil.,PGDCA.,

10th Study Material - Science

கள்ளக்குறிச்சி எஸ்.வி.எஸ். மாணவர்களை அரசு கல்லூரிக்கு மாற்றி முதல்வர் ஜெயலலிதா உத்தரவு

        விழுப்புரம் எஸ்.வி.எஸ். யோகா மற்றும் இயற்கை மருத்துவக்கல்லூரியில் பயின்று வரும் மாணவர்களை அரசு யோகா மற்றும்இயற்கை மருத்துவக் கல்லூரிக்கு மாற்றம் செய்து முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
 

TNPSC : 2016ம் ஆண்டிற்கான தேர்வுகள் (ANNUAL PLANNER)அட்டவணை வெளியீடு

        2016ம் ஆண்டு டிஎன்பிஎஸ்சி சார்பில் 9 தேர்வுகள் நடைபெற உள்ளதாக அதன் தலைவர் அருள்மொழி கூறியுள்ளார். சென்னையில், 2016ம் ஆண்டு நடைபெற உள்ள டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் குறித்த அட்டவணை வெளியிடப்பட்டது. 

வி.ஏ.ஓ., தேர்வு இருப்பதோ 800; 10 லட்சம் பேர் போட்டிடி.என்.பி.எஸ்.சி., வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

      டி.என்.பி.எஸ்.சி., வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: வி.ஏ.ஓ., பதவியில், 813 காலியிடங் களுக்கு, பிப்., 28ம்தேதி தேர்வு நடக்க உள்ளது. இந்த தேர்வுக்கு, 10 லட்சம் விண்ணப்பங்கள் வந்துள்ளன.இதில், சரியான முறையில் விவரங்கள் அளித்து, தேர்வுக்கட்டணம் செலுத்திய மற்றும் கட்டண சலுகை பெற்ற விண்ணப்பதார்களின் விவரம், www.tnpscexams.net இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது.


ஆசிரியர்கள் தொடர் போராட்டம்: வாக்காளர் சிறப்பு முகாம் நடக்குமா?

      ஆசிரியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபடுவதால், நாளை நடைபெறும் வாக்காளர் சிறப்பு முகாம் நடத்துவதில் சிக்கல் உருவாகியுள்ளது.ஆசிரியர்கள் சங்க கூட்டமைப்பான ஜாக்டோ சார்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜனவரி, 30, 31, பிப்ரவரி, 1 ஆகிய தேதிகளில், மாவட்ட தலைநகரங்களில் மறியல் நடத்தி போராட முடிவு செய்துள்ளது.


Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive