அரசு, அரசு உதவி பெறும், அரச உதவி பெறாத கலை மற்றும் அறிவியல் ககல்லூரிகளில் மாணவர் சேர்கையில் போது பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறிப்பிட்டுள்ளன.
Half Yearly Exam 2024
Latest Updates
மாணவர்கள் தாங்களாக முன்வந்து வெள்ள நிவாரண நிதி வழங்கினால் மட்டுமே பள்ளிகள் ஏற்றுக்கொள்ள வேண்டும், கட்டாயப்படுத்தாதீர் - தலைமையாசிரியர்களுக்கு எச்சரிக்கை
'வெள்ள நிவாரணத்திற்காக பணம் வசூலிக்க
மாணவர்களை கட்டாயப்படுத்தக் கூடாது,' என, தலைமையாசிரியர்களுக்கு
கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. கனமழையால் பெரிதும் பாதிக்கப்பட்ட
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலுார் மாவட்ட மக்களுக்கு பல்வேறு
தரப்பினரும் பொருள் உதவி, முதல்வர் பெயரில் வெள்ள நிவாரண நிதி அனுப்பி
வருகின்றனர்.
தள்ளிப்போகும் TET - அடுத்த அடி...
அடுத்த அடி... (வளரூதியம், ஊக்க ஊதியம்)
ஆசிரியர் தகுதி தேர்வு நிபந்தனைகளுடன் பணியில் உள்ள பட்டதாரி ஆசிரியர்களின் வளரூதியம், ஊக்க ஊதியம் (increments and incentives) முறையான அறிவிப்பு இல்லாமல் திடீரென நிறுத்தப்பட்டுள்ளது.
மனநல ஆலோசனை கூற10 நடமாடும் மருத்துவ குழு
பள்ளி மாணவர்களுக்கு, மனநல ஆலோசனை வழங்கும் பணியில், 10 நடமாடும்
மருத்துவக் குழுக்கள் ஈடுபட்டுள்ளன.வெள்ளம் பாதித்த சென்னை, திருவள்ளூர்,
காஞ்சிபுரம், கடலுார் மாவட்டங்களில், நோய் பாதிப்புகளைத் தடுக்க, சிறப்பு
மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
SSA - பயிற்சி முக்கியம் பாடம் முக்கியமல்ல!
அனைவருக்கும் கல்வி இயக்கக திட்டம் என்ற,
எஸ்.எஸ்.ஏ., மூலம், 8ம் வகுப்பு வரையிலான ஆசிரியர்கள்; அனைவருக்கும்
இடைநிலைக் கல்வி திட்டம் என்ற, ஆர்.எம்.எஸ்.ஏ., மூலம், 9, 10ம் வகுப்பு
ஆசிரியர்கள்; மாநில கல்வியியல் ஆராய்ச்சி பயிற்சி நிறுவனம் மூலம், பிளஸ் 1,
பிளஸ் 2 ஆசிரியர்களுக்கு, சிறப்பு பயிற்சிகள் தரப்படுகின்றன.
இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணி - மாற்று திறனாளிகளுக்குஅவகாசம்
மாற்றுத்திறனாளிகள்
நலத்துறையின் கீழ் உள்ள, காது கேளாதோர் மற்றும் பார்வையற்றோர் அரசு
சிறப்புப் பள்ளிகளில், இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் மற்றும் துணை
விடுதி காப்பாளர் பணியிடங்களுக்கு, விண்ணப்பங்கள் அனுப்ப, கடைசி தேதி, 15ம்
தேதி என, அறிவிக்கப்பட்டிருந்தது. இப்போது, 21ம் தேதி வரை
நீட்டிக்கப்பட்டு உள்ளது.
பி.எப்., பணத்தை உடனே எடுக்கலாம்!
பி.எப்.,
சந்தாதாரர்கள், அவர்களது கணக்கில் இருந்து பணம் எடுக்க, புது வசதி
அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.இதுகுறித்து, பி.எப்., எனப்படும் தொழிலாளர்
வருங்கால வைப்பு நிதி அலுவலக வட்டாரம் கூறியதாவது:ஊதியத்தில் பிடித்தம்
செய்யப்படும், பி.எப்., தொகைக்கு, பொது கணக்கு எண் எனப்படும், யு.ஏ.என்.,
வழங்கப்படுகிறது.
மனநல ஆலோசனை கூற10 நடமாடும் மருத்துவ குழு
பள்ளி மாணவர்களுக்கு, மனநல ஆலோசனை
வழங்கும் பணியில், 10 நடமாடும் மருத்துவக் குழுக்கள் ஈடுபட்டுள்ளன.வெள்ளம்
பாதித்த சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலுார் மாவட்டங்களில், நோய்
பாதிப்புகளைத் தடுக்க, சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்த மாவட்டங்களில், நீண்ட விடுமுறைக்கு பின், பள்ளிகள் திறந்துள்ளன.
பிப்.28-இல் VAO தேர்வு
கிராம நிர்வாக அலுவலர் (வி.ஏ.ஓ.,) தேர்வு
வரும் பிப்ரவரி 28-ஆம் தேதி நடைபெறும் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர்
தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.,) அறிவித்துள்ளது. இது குறித்து,
டி.என்.பி.எஸ்.சி., புதன்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:
12 மாவட்டங்களில் மழை பெய்யும்
வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள மேலடுக்கு சுழற்சி காரணமாக 12 மாவட்டங்களில் இன்று மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயில் நிலவிவருகிறது. இந்நிலையில், வங்கக் கடலில் தென் மேற்கு திசையில் இலங்கையை ஒட்டிய பகுதியில் மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.
வீட்டு முகவரிக்கே பாடப் புத்தகங்கள்: தமிழக அரசு புதிய ஏற்பாடு
மழையால் பாட நூல்களை இழந்த மாணவர்களுக்கு,
அவர்களின் வீட்டு முகவரிக்கே அவற்றைப் பெற்றுக் கொள்ள வசதி
செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழக அரசு புதன்கிழமை வெளியிட்ட
அறிவிப்பு:
அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை குறைக்கும் திட்டமில்லை: மத்திய அரசு
மத்திய அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை 58 ஆக குறைக்கும் திட்டம் ஏதும்
இல்லை என மத்திய அரசு அறிவித்துள்ளது.மத்திய பணியாளர் துறை இணை அமைச்சர்
ஜித்தேந்திர சிங், மக்களவையில் இன்று அளித்த எழுத்துபூர்வமான பதிலில் இதை
தெரிவித்துள்ளார்.மத்திய அரசு ஊழியர்களின் ஓய்வு வயதை 58 ஆக குறைப்பது,
ஊழியர்களின் பணிக் காலத்தை 33 ஆண்டுகளாக நிர்ணயம் செய்வது உள்ளிட்ட எந்த
திட்டமும் தற்போது அரசின் பரிசீலனையில் இல்லை என்றார்.
Flash News-TNPSC :VAO தேர்வு ஒத்திவைப்பு
பிப்ரவரி14 நடக்கவிருந்த VAO தேர்வு பிப் 28 க்கு ஒத்திவைப்பு.
முதலமைச்சர் உத்தரவை மீறி அரையாண்டு தேர்வை நடத்தினால் தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை: பள்ளிக்கல்வி துறை
வரலாறு காணாத பருவ மழை காரணமாக
தமிழகத்தின் ஒரு சில மாவட்டங்களில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டது.சென்னை,
காஞ்சீபுரம், திருவள்ளூர், கடலூர் மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில்
பொதுமக்களுக்கு பெருமளவு இழப்பு ஏற்பட்டது.இது தவிர பிற மாவட்டங்களில்
இயல்பான அளவு மழை பெய்தாலும் கன மழை காரணமாக தமிழகத்தின் பல மாவட்டங்களில்
பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது.
பள்ளி மாணவர்களுக்கு கிறிஸ்துமஸ் விடுமுறை நாட்கள் குறைகிறது
வெள்ளம் பாதிப்புக்கு பிறகு கடந்த
14–ந்தேதி முதல் சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர், கடலூர் மாவட்டங்களில்
பள்ளிகள் திறக்கப்பட்டு செயல்படுகின்றன. 4 சனிக்கிழமைகள் மற்றும் 24 வேலை
நாட்கள் என மொத்தம் 28 நாட்கள் பள்ளிகள் மூடப்பட்டு இருந்ததால்
பொதுத்தேர்வு எழுதும் 10–ம் வகுப்பு, 12–ம் வகுப்பு மாணவர்கள்
பாதிக்கப்பட்டுள்ளனர். அரையாண்டு தேர்வு நடைபெறுமா? அல்லது ரத்து
செய்யப்படுமா? என்ற கவலையுடன் மாணவர்கள் பள்ளிக்கு சென்று வருகின்றனர்.
அடுத்த வாரம் மீண்டும் கன மழை? தனியார் வானிலை நிறுவனங்கள் எச்சரிக்கை
'கிறிஸ்துமஸ் பண்டிகை காலத்தில், தமிழகத்தில் மீண்டும் கன மழைபெய்யலாம்' என, தனியார் வானிலை ஆய்வு மையங்கள் எச்சரித்துள்ளன.
தமிழ்நாடு அரசு மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகங்களில் பல்வேறு பணி
மாற்றுத்திறனாளிகளுக்கான நல ஆணையரக கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வரும் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகங்களில் காலியாக உள்ள செவித்திறன் நிபுணர் (ம) பேச்சு பயிற்சியாளர், பல்நோக்கு மறுவாழ்வு உதவியாளர் மற்றும் மூடநீக்கு தொழிற்நுட்பர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
குமரி மாவட்டத்தில் வருகிற 24-ம் தேதி உள்ளூர் விடுமுறை
குமரி மாவட்டத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடும் பொருட்டு, பண்டிகைக்கு முதல்நாள், அதாவது வருகிற 24-ம் தேதி மாவட்டம் முழுவதும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும், அரசு அலுவலகங்களுக்கும் உள்ளூர் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
கல்லூரி கட்டடங்களை ஆய்வு செய்ய குழு..
வெள்ளம் சூழ்ந்த கல்லுாரி கட்டடங்களை ஆய்வு செய்ய, குழு அமைக்கப்படும்' என, உயர்கல்வித் துறை அறிவித்துள்ளது.
பத்தாம் வகுப்பு தனித் தேர்வர்களுக்கு செய்முறை தேர்வு மையங்கள்அறிவிப்பு
விழுப்புரம் மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு தனித் தேர்வுகளுக்கான செய்முறை தேர்வு நடைபெறும் மையங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து விழுப்புரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சா.மார்ஸ் வெளியிட்ட செய்திக் குறிப்பு: