Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

SSA - பயிற்சி முக்கியம் பாடம் முக்கியமல்ல!

         அனைவருக்கும் கல்வி இயக்கக திட்டம் என்ற, எஸ்.எஸ்.ஏ., மூலம், 8ம் வகுப்பு வரையிலான ஆசிரியர்கள்; அனைவருக்கும் இடைநிலைக் கல்வி திட்டம் என்ற, ஆர்.எம்.எஸ்.ஏ., மூலம், 9, 10ம் வகுப்பு ஆசிரியர்கள்; மாநில கல்வியியல் ஆராய்ச்சி பயிற்சி நிறுவனம் மூலம், பிளஸ் 1, பிளஸ் 2 ஆசிரியர்களுக்கு, சிறப்பு பயிற்சிகள் தரப்படுகின்றன.

NMMS ஊக்கத்தொகை தேர்வில் சிக்கல்

      பள்ளிக் கல்வி முடிக்கும் வரை, இடைநிற்றல் இல்லாமல் படிக்க, உதவித்தொகைகள் வழங்கப்படுகின்றன. இதற்காக, தேசிய திறன் படிப்பு உதவித்தொகை தேர்வு, எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு நடத்தப்படுகிறது. இதில் தேர்ச்சி பெறுவோருக்கு, மாதம், 500 ரூபாய் வீதம், பிளஸ் 2 முடிக்கும் வரை வழங்கப்படும். 

இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணி - மாற்று திறனாளிகளுக்குஅவகாசம்

           மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் கீழ் உள்ள, காது கேளாதோர் மற்றும் பார்வையற்றோர் அரசு சிறப்புப் பள்ளிகளில், இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் மற்றும் துணை விடுதி காப்பாளர் பணியிடங்களுக்கு, விண்ணப்பங்கள் அனுப்ப, கடைசி தேதி, 15ம் தேதி என, அறிவிக்கப்பட்டிருந்தது.  இப்போது, 21ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.

பி.எப்., பணத்தை உடனே எடுக்கலாம்!

         பி.எப்., சந்தாதாரர்கள், அவர்களது கணக்கில் இருந்து பணம் எடுக்க, புது வசதி அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.இதுகுறித்து, பி.எப்., எனப்படும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அலுவலக வட்டாரம் கூறியதாவது:ஊதியத்தில் பிடித்தம் செய்யப்படும், பி.எப்., தொகைக்கு, பொது கணக்கு எண் எனப்படும், யு.ஏ.என்., வழங்கப்படுகிறது. 

மனநல ஆலோசனை கூற10 நடமாடும் மருத்துவ குழு

     பள்ளி மாணவர்களுக்கு, மனநல ஆலோசனை வழங்கும் பணியில், 10 நடமாடும் மருத்துவக் குழுக்கள் ஈடுபட்டுள்ளன.வெள்ளம் பாதித்த சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலுார் மாவட்டங்களில், நோய் பாதிப்புகளைத் தடுக்க, சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த மாவட்டங்களில், நீண்ட விடுமுறைக்கு பின், பள்ளிகள் திறந்துள்ளன. 

சத்துணவு அமைப்பாளர் பணிக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

       வேலூர் மாவட்ட சத்துணவு மையங்களில் அமைப்பாளர் பணிக்கு தகுதியானவர்கள் வியாழக்கிழமை (டிச.17) முதல் விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் இரா.நந்தகோபால் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

பாதிக்கப்பட்டவர்கள் வங்கி கணக்கில் 10 நாட்களுக்குள் நிவாரண தொகை

      வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, 10 நாட்களுக்குள், வங்கி கணக்கில் நிவாரண தொகை வழங்குவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. சென்னை மாவட்டத்தில், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு, தலா, 5,000 ரூபாய் வழங்கப்படும் என, தமிழக முதல்வர் அறிவித்து இருந்தார். 

பிப்.28-இல் VAO தேர்வு

            கிராம நிர்வாக அலுவலர் (வி.ஏ.ஓ.,) தேர்வு வரும் பிப்ரவரி 28-ஆம் தேதி நடைபெறும் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.,) அறிவித்துள்ளது. இது குறித்து, டி.என்.பி.எஸ்.சி., புதன்கிழமை வெளியிட்ட அறிவிப்பு: 

12 மாவட்டங்களில் மழை பெய்யும்

          வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள மேலடுக்கு சுழற்சி காரணமாக 12 மாவட்டங்களில் இன்று மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயில் நிலவிவருகிறது. இந்நிலையில், வங்கக் கடலில் தென் மேற்கு திசையில்  இலங்கையை ஒட்டிய பகுதியில் மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. 

வீட்டு முகவரிக்கே பாடப் புத்தகங்கள்: தமிழக அரசு புதிய ஏற்பாடு

       மழையால் பாட நூல்களை இழந்த மாணவர்களுக்கு, அவர்களின் வீட்டு முகவரிக்கே அவற்றைப் பெற்றுக் கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழக அரசு புதன்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:

யு.பி.எஸ்.சி தேர்வு தேதியை மாற்ற முடியாது: மத்திய அரசு

      மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வுகளை, தமிழக வெள்ளம் காரணமாக மாற்றி அமைக்க முடியாது என மத்திய அரசு கூறியுள்ளது.

பாடப் புத்தகங்கள் இழந்த சுயநிதி பள்ளி மாணவர்களுக்கு புதிய வசதி

        மழையால் பாட நூல்களை இழந்த சுயநிதி பள்ளி மாணவர்கள், இணையதளம் வாயிலாக புத்தகங்களை பதிவு செய்து தபால் மூலம் வீட்டு முகவரியிலேயே பெற்றுக் கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது.

நீங்கள் ஆசிரியராக வாழ்பவரா..? ஆசிரியப் பணியாளரா..?

        குழந்தைகள் உங்கள் மீது எத்தகைய அணுகுமுறையோடு இருக்கிறார்கள் என்பதே கற்றலுக்கான முக்கிய பாதையை வகுக்கிறது. அவர்கள் உங்கள் மீது கொண்டிருப்பது நம்பிக்கையா..? அச்ச உணர்வா..? என்பதை வைத்து கற்றல் வேறுபடும். - ஆப்ரகாம் மாஸ்லோ, உளவியல் அறிஞர்

Centum Question Paper - 12th Accountancy

  1. Accountancy | Mr. A. Boopathy - Tamil Medium Question Paper Download
Mr. A. Boopathy, M.Com, B.Ed.,

12th Study Materials - Physics

அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை குறைக்கும் திட்டமில்லை: மத்திய அரசு

        மத்திய அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை 58 ஆக குறைக்கும் திட்டம் ஏதும் இல்லை என மத்திய அரசு அறிவித்துள்ளது.மத்திய பணியாளர் துறை இணை அமைச்சர் ஜித்தேந்திர சிங், மக்களவையில் இன்று அளித்த எழுத்துபூர்வமான பதிலில் இதை தெரிவித்துள்ளார்.மத்திய அரசு ஊழியர்களின் ஓய்வு வயதை 58 ஆக குறைப்பது, ஊழியர்களின் பணிக் காலத்தை 33 ஆண்டுகளாக நிர்ணயம் செய்வது உள்ளிட்ட எந்த திட்டமும் தற்போது அரசின் பரிசீலனையில் இல்லை என்றார்.


Flash News-TNPSC :VAO தேர்வு ஒத்திவைப்பு

பிப்ரவரி14 நடக்கவிருந்த VAO தேர்வு பிப் 28 க்கு ஒத்திவைப்பு.

முதலமைச்சர் உத்தரவை மீறி அரையாண்டு தேர்வை நடத்தினால் தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை: பள்ளிக்கல்வி துறை

      வரலாறு காணாத பருவ மழை காரணமாக தமிழகத்தின் ஒரு சில மாவட்டங்களில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டது.சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர், கடலூர் மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் பொதுமக்களுக்கு பெருமளவு இழப்பு ஏற்பட்டது.இது தவிர பிற மாவட்டங்களில் இயல்பான அளவு மழை பெய்தாலும் கன மழை காரணமாக தமிழகத்தின் பல மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது.


பள்ளி மாணவர்களுக்கு கிறிஸ்துமஸ் விடுமுறை நாட்கள் குறைகிறது

        வெள்ளம் பாதிப்புக்கு பிறகு கடந்த 14–ந்தேதி முதல் சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர், கடலூர் மாவட்டங்களில் பள்ளிகள் திறக்கப்பட்டு செயல்படுகின்றன. 4 சனிக்கிழமைகள் மற்றும் 24 வேலை நாட்கள் என மொத்தம் 28 நாட்கள் பள்ளிகள் மூடப்பட்டு இருந்ததால் பொதுத்தேர்வு எழுதும் 10–ம் வகுப்பு, 12–ம் வகுப்பு மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அரையாண்டு தேர்வு நடைபெறுமா? அல்லது ரத்து செய்யப்படுமா? என்ற கவலையுடன் மாணவர்கள் பள்ளிக்கு சென்று வருகின்றனர்.

அடுத்த வாரம் மீண்டும் கன மழை? தனியார் வானிலை நிறுவனங்கள் எச்சரிக்கை

   'கிறிஸ்துமஸ் பண்டிகை காலத்தில், தமிழகத்தில் மீண்டும் கன மழைபெய்யலாம்' என, தனியார் வானிலை ஆய்வு மையங்கள் எச்சரித்துள்ளன.

தமிழ்நாடு அரசு மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகங்களில் பல்வேறு பணி

          மாற்றுத்திறனாளிகளுக்கான நல ஆணையரக கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வரும் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகங்களில் காலியாக உள்ள செவித்திறன் நிபுணர் (ம) பேச்சு பயிற்சியாளர், பல்நோக்கு மறுவாழ்வு உதவியாளர் மற்றும் மூடநீக்கு தொழிற்நுட்பர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு மின் வாரியத்தில் 1650 பணியிடங்கள்...

       தமிழ்நாடு மின் வாரியத்தில், உதவியாளர், கணக்கீட்டாளர், பொறியாளர் என, 1.38 லட்சம் பணியிடங்கள் உள்ளன. இதில், 88 ஆயிரம் பேர் பணிபுரிகின்றனர்; எஞ்சிய பணியிடங்கள் காலியாக உள்ளன. இதையடுத்து, 'பொறியாளர்,உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்படும்' என, அரசு தெரிவித்தது.


குமரி மாவட்டத்தில் வருகிற 24-ம் தேதி உள்ளூர் விடுமுறை

        குமரி மாவட்டத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடும் பொருட்டு, பண்டிகைக்கு முதல்நாள், அதாவது வருகிற 24-ம் தேதி மாவட்டம் முழுவதும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும், அரசு அலுவலகங்களுக்கும் உள்ளூர் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

கல்லூரி கட்டடங்களை ஆய்வு செய்ய குழு..

   வெள்ளம் சூழ்ந்த கல்லுாரி கட்டடங்களை ஆய்வு செய்ய, குழு அமைக்கப்படும்' என, உயர்கல்வித் துறை அறிவித்துள்ளது.

பத்தாம் வகுப்பு தனித் தேர்வர்களுக்கு செய்முறை தேர்வு மையங்கள்அறிவிப்பு

     விழுப்புரம் மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு தனித் தேர்வுகளுக்கான செய்முறை தேர்வு நடைபெறும் மையங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து விழுப்புரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சா.மார்ஸ் வெளியிட்ட செய்திக் குறிப்பு:


புதிய பென்ஷன் (CPS)திட்ட பணப்பலன் முதல்வரின் தனிப்பிரிவு கைவிரிப்பு: 4.20 லட்சம் ஊழியர்கள் அதிர்ச்சி

       புதிய பென்ஷன் திட்டத்தில் பணப்பலனுக்கான அரசாணை இல்லை என, முதல்வரின் தனிப்பிரிவு கைவிரித்தது. இதனால் புதிய பென்ஷன் திட்டத்தில் சேர்ந்த 4.20 லட்சம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

அரசு இலவச லேப் டாப்களில் 'விண்டோஸ் 10': விரைவில் வருகிறது தொடுதிரை வசதி

       தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு வழங்கும் இலவச லேப்டாப்களில், விரைவில் 'விண்டோஸ் 10 ஆப்ரேட்டிங் சிஸ்டம்' (ஓ.எஸ்.,) வசதி செய்யப்பட உள்ளது. இதன் தொடர்ச்சியாக 'லேப்டாப்'களில் தொடுதிரை வசதி ஏற்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது.
 

திண்டுக்கல்லில் 20 ஆபத்து பள்ளிகள்

    திண்டுக்கல்லில் இடிந்து விழும் நிலையில் 20 பள்ளிக் கட்டடங்கள் உள்ளன.திண்டுக்கல், பழநி கல்வி மாவட்டத்தில் ஆயிரத்து 426 பள்ளிகள் உள்ளன. சமீபத்தில் தமிழக அரசு, மாவட்ட நிர்வாகங்கள், பள்ளி கட்டடங்கள் நிலை குறித்தும், பள்ளி மைதானங்களில் மழை நீர் தேங்காமல் இருப்பது குறித்தும் ஆய்வு செய்து அறிக்கை அளிக்க உத்தரவிட்டது.

தனித்தேர்வர்களுக்குமதிப்பெண் சான்று

          மதுரை அரசுத் தேர்வுகள் மண்டல துணை இயக்குனர் லட்சுமி அறிக்கை: பத்தாம் வகுப்பு தனித்தேர்வு எழுதிய தேர்வர்கள், அசல் மதிப்பெண் சான்றிதழ்களை டிச.,11 வரை பெறலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதுவரை மதிப்பெண் சான்றிதழ்களை பெறாத தனித்தேர்வர்கள் டிச.,18 வரை தேர்வு மையங்களில் சான்றிதழ்களை பெறலாம் என தெரிவித்து உள்ளார்.

வெள்ள பாதிப்பு இல்லாத, பிற மாவட்ட இன்ஜி., கல்லூரி தேர்வுதள்ளி வைக்க மறுப்பு

       வெள்ள பாதிப்பு இல்லாத, பிற மாவட்ட இன்ஜினியரிங் கல்லுாரிகளில், முதல் செமஸ்டர் தேர்வை தள்ளிவைக்க உத்தரவிட முடியாது' என, சென்னை உயர் நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்தது.

'பள்ளி மதிய உணவை பெற்றோர் சோதிக்கலாம்'

      'நாடு முழுவதும், பள்ளிகளில் மாணவர்களுக்கு வழங்கப்படும் மதிய உணவை, தினமும், ஒன்று அல்லது இரண்டு பெற்றோர் சுவைத்து, சோதித்து பார்ப்பதை கட்டாயமாக்க வேண்டும்' என, மத்திய அரசு கூறியுள்ளது.

எந்த நேரத்திலும் உங்களுடனேயே இருப்பேன்.. கலங்காதீர்கள்: முதல்வர் ஜெயலலிதா உருக்கம்


CLICK HERE TO DOWNLOAD TAMILNADU CHIEF MINISTER'S FULL SPEECH (AUDIO)0.8MB 

      உங்கள் அன்புச் சகோதரியாகிய நான் எந்த நேரத்திலும் உங்களுடனேயே இருப்பேன்; கலங்காதீர்கள் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா உருக்கமான அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளார்.

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive