மழையால் பாட நூல்களை இழந்த மாணவர்களுக்கு,
அவர்களின் வீட்டு முகவரிக்கே அவற்றைப் பெற்றுக் கொள்ள வசதி
செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழக அரசு புதன்கிழமை வெளியிட்ட
அறிவிப்பு:
Half Yearly Exam 2024
Latest Updates
அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை குறைக்கும் திட்டமில்லை: மத்திய அரசு
மத்திய அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை 58 ஆக குறைக்கும் திட்டம் ஏதும்
இல்லை என மத்திய அரசு அறிவித்துள்ளது.மத்திய பணியாளர் துறை இணை அமைச்சர்
ஜித்தேந்திர சிங், மக்களவையில் இன்று அளித்த எழுத்துபூர்வமான பதிலில் இதை
தெரிவித்துள்ளார்.மத்திய அரசு ஊழியர்களின் ஓய்வு வயதை 58 ஆக குறைப்பது,
ஊழியர்களின் பணிக் காலத்தை 33 ஆண்டுகளாக நிர்ணயம் செய்வது உள்ளிட்ட எந்த
திட்டமும் தற்போது அரசின் பரிசீலனையில் இல்லை என்றார்.
Flash News-TNPSC :VAO தேர்வு ஒத்திவைப்பு
பிப்ரவரி14 நடக்கவிருந்த VAO தேர்வு பிப் 28 க்கு ஒத்திவைப்பு.
முதலமைச்சர் உத்தரவை மீறி அரையாண்டு தேர்வை நடத்தினால் தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை: பள்ளிக்கல்வி துறை
வரலாறு காணாத பருவ மழை காரணமாக
தமிழகத்தின் ஒரு சில மாவட்டங்களில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டது.சென்னை,
காஞ்சீபுரம், திருவள்ளூர், கடலூர் மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில்
பொதுமக்களுக்கு பெருமளவு இழப்பு ஏற்பட்டது.இது தவிர பிற மாவட்டங்களில்
இயல்பான அளவு மழை பெய்தாலும் கன மழை காரணமாக தமிழகத்தின் பல மாவட்டங்களில்
பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது.
பள்ளி மாணவர்களுக்கு கிறிஸ்துமஸ் விடுமுறை நாட்கள் குறைகிறது
வெள்ளம் பாதிப்புக்கு பிறகு கடந்த
14–ந்தேதி முதல் சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர், கடலூர் மாவட்டங்களில்
பள்ளிகள் திறக்கப்பட்டு செயல்படுகின்றன. 4 சனிக்கிழமைகள் மற்றும் 24 வேலை
நாட்கள் என மொத்தம் 28 நாட்கள் பள்ளிகள் மூடப்பட்டு இருந்ததால்
பொதுத்தேர்வு எழுதும் 10–ம் வகுப்பு, 12–ம் வகுப்பு மாணவர்கள்
பாதிக்கப்பட்டுள்ளனர். அரையாண்டு தேர்வு நடைபெறுமா? அல்லது ரத்து
செய்யப்படுமா? என்ற கவலையுடன் மாணவர்கள் பள்ளிக்கு சென்று வருகின்றனர்.
அடுத்த வாரம் மீண்டும் கன மழை? தனியார் வானிலை நிறுவனங்கள் எச்சரிக்கை
'கிறிஸ்துமஸ் பண்டிகை காலத்தில், தமிழகத்தில் மீண்டும் கன மழைபெய்யலாம்' என, தனியார் வானிலை ஆய்வு மையங்கள் எச்சரித்துள்ளன.
தமிழ்நாடு அரசு மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகங்களில் பல்வேறு பணி
மாற்றுத்திறனாளிகளுக்கான நல ஆணையரக கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வரும் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகங்களில் காலியாக உள்ள செவித்திறன் நிபுணர் (ம) பேச்சு பயிற்சியாளர், பல்நோக்கு மறுவாழ்வு உதவியாளர் மற்றும் மூடநீக்கு தொழிற்நுட்பர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
குமரி மாவட்டத்தில் வருகிற 24-ம் தேதி உள்ளூர் விடுமுறை
குமரி மாவட்டத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடும் பொருட்டு, பண்டிகைக்கு முதல்நாள், அதாவது வருகிற 24-ம் தேதி மாவட்டம் முழுவதும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும், அரசு அலுவலகங்களுக்கும் உள்ளூர் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
கல்லூரி கட்டடங்களை ஆய்வு செய்ய குழு..
வெள்ளம் சூழ்ந்த கல்லுாரி கட்டடங்களை ஆய்வு செய்ய, குழு அமைக்கப்படும்' என, உயர்கல்வித் துறை அறிவித்துள்ளது.
பத்தாம் வகுப்பு தனித் தேர்வர்களுக்கு செய்முறை தேர்வு மையங்கள்அறிவிப்பு
விழுப்புரம் மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு தனித் தேர்வுகளுக்கான செய்முறை தேர்வு நடைபெறும் மையங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து விழுப்புரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சா.மார்ஸ் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
புதிய பென்ஷன் (CPS)திட்ட பணப்பலன் முதல்வரின் தனிப்பிரிவு கைவிரிப்பு: 4.20 லட்சம் ஊழியர்கள் அதிர்ச்சி
புதிய
பென்ஷன் திட்டத்தில் பணப்பலனுக்கான அரசாணை இல்லை என, முதல்வரின்
தனிப்பிரிவு கைவிரித்தது. இதனால் புதிய பென்ஷன் திட்டத்தில் சேர்ந்த 4.20
லட்சம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
அரசு இலவச லேப் டாப்களில் 'விண்டோஸ் 10': விரைவில் வருகிறது தொடுதிரை வசதி
தமிழகத்தில்
பள்ளி மாணவர்களுக்கு வழங்கும் இலவச லேப்டாப்களில், விரைவில் 'விண்டோஸ் 10
ஆப்ரேட்டிங் சிஸ்டம்' (ஓ.எஸ்.,) வசதி செய்யப்பட உள்ளது. இதன் தொடர்ச்சியாக
'லேப்டாப்'களில் தொடுதிரை வசதி ஏற்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது.
திண்டுக்கல்லில் 20 ஆபத்து பள்ளிகள்
திண்டுக்கல்லில்
இடிந்து விழும் நிலையில் 20 பள்ளிக் கட்டடங்கள் உள்ளன.திண்டுக்கல், பழநி
கல்வி மாவட்டத்தில் ஆயிரத்து 426 பள்ளிகள் உள்ளன. சமீபத்தில் தமிழக அரசு,
மாவட்ட நிர்வாகங்கள், பள்ளி கட்டடங்கள் நிலை குறித்தும், பள்ளி
மைதானங்களில் மழை நீர் தேங்காமல் இருப்பது குறித்தும் ஆய்வு செய்து அறிக்கை
அளிக்க உத்தரவிட்டது.
தனித்தேர்வர்களுக்குமதிப்பெண் சான்று
மதுரை
அரசுத் தேர்வுகள் மண்டல துணை இயக்குனர் லட்சுமி அறிக்கை: பத்தாம் வகுப்பு
தனித்தேர்வு எழுதிய தேர்வர்கள், அசல் மதிப்பெண் சான்றிதழ்களை டிச.,11 வரை
பெறலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதுவரை மதிப்பெண் சான்றிதழ்களை பெறாத
தனித்தேர்வர்கள் டிச.,18 வரை தேர்வு மையங்களில் சான்றிதழ்களை பெறலாம் என
தெரிவித்து உள்ளார்.
வெள்ள பாதிப்பு இல்லாத, பிற மாவட்ட இன்ஜி., கல்லூரி தேர்வுதள்ளி வைக்க மறுப்பு
வெள்ள
பாதிப்பு இல்லாத, பிற மாவட்ட இன்ஜினியரிங் கல்லுாரிகளில், முதல் செமஸ்டர்
தேர்வை தள்ளிவைக்க உத்தரவிட முடியாது' என, சென்னை உயர் நீதிமன்றம்
திட்டவட்டமாக தெரிவித்தது.
'பள்ளி மதிய உணவை பெற்றோர் சோதிக்கலாம்'
'நாடு முழுவதும், பள்ளிகளில் மாணவர்களுக்கு
வழங்கப்படும் மதிய உணவை, தினமும், ஒன்று அல்லது இரண்டு பெற்றோர் சுவைத்து,
சோதித்து பார்ப்பதை கட்டாயமாக்க வேண்டும்' என, மத்திய அரசு கூறியுள்ளது.
எந்த நேரத்திலும் உங்களுடனேயே இருப்பேன்.. கலங்காதீர்கள்: முதல்வர் ஜெயலலிதா உருக்கம்
CLICK HERE TO DOWNLOAD TAMILNADU CHIEF MINISTER'S FULL SPEECH (AUDIO)0.8MB
உங்கள் அன்புச் சகோதரியாகிய நான் எந்த
நேரத்திலும் உங்களுடனேயே இருப்பேன்; கலங்காதீர்கள் என்று தமிழக முதல்வர்
ஜெயலலிதா உருக்கமான அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளார்.
Flood Relief - Vilupuram District School
விழுப்புரம் மாவட்டம்,ஒலக்கூர் ஒன்றிய ஆசிரியர்கள் சார்பாக கடந்த
திங்களன்று வெள்ளம் பாதிக்கப்பட்ட மரக்காணம் பகுதிகளில் உள்ள
பள்ளிமாணவர்களுக்கு நிவாரண உதவிவழங்கப்பட்டது..
கணினிக் கல்வி அரசு பள்ளிகளில் புறக்கணிக்கப்படுவது ஏன்?
தமிழக அரசு கணினியை ஒரு பாடமாக மாண வர்களுக்கு கற்பிக்க
வைப்பதன் ஒரு முயற்சியாக 2011 ஆம் ஆண்டு தமிழ்நாட்டிலுள்ள அனைத்து நகராட்சி
மற்றும் அரசு பள்ளிகளில் 6, 7,8 ,9, 10 ஆகிய வகுப்புகளுக்கு கணிப்பொறி
பாடத்திற் கென புத்தகங்களை அச்சிட்டு தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து
நகராட்சி மற்றும் அரசுப் பள்ளி களில் பயிலும் மாணவர்களுக்கு விநியோகம்
செய்தது.
வைகுண்ட ஏகாதசி: திருச்சியில் வரும் 21ஆம் தேதி உள்ளூர் விடுமுறை
வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு வரும் 21 ஆம் தேதி திருச்சியில் உள்ளூர்
விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள
அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: -
எந்த நேரத்திலும் உங்களுடனேயே இருப்பேன்.. கலங்காதீர்கள்: முதல்வர் ஜெயலலிதா உருக்கம்
உங்கள் அன்புச் சகோதரியாகிய நான் எந்த நேரத்திலும் உங்களுடனேயே இருப்பேன்;
கலங்காதீர்கள் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா உருக்கமான அறிவிப்பு ஒன்றினை
வெளியிட்டுள்ளார்.
டி.என்.பி.எஸ்.சி., பணியிடங்களுக்கு பணம் வசூல்; மாணவர்களே‘உஷார்’.
டி.என்.பி.எஸ்.சி., குரூப்-2, வி.ஏ.ஓ., தேர்வு எழுதும் மாணவர்களிடம்
வேலைவாங்கிதருவதாககூறி ஒரு சிலர் பணம் பறிக்கும் முயற்சியில்
ஈடுபட்டுள்ளதாகபுகார் எழுந்துள்ளது. தமிழக அரசு போட்டித் தேர்வுகள் மூலம்
அரசு பணியிடங்களை நிரப்பி வருகிறது. தற்போது குரூப்-2ஏ மற்றும் வி.ஏ.ஓ.,
பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.